Showing posts with label அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபடவேண்டும். Show all posts
Showing posts with label அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபடவேண்டும். Show all posts

Monday, 26 October 2015

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபடவேண்டும்

அன்னாபிஷேகம் – உணர்ந்து வழிபடவேண்டும்



ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறும் வரும் 26.10.15 இரவுமுதல்  27.10.15 மாலைக்குள்,  இந்த அன்னாபிஷேக நிகழ்வை உணர்ந்து அனுபவித்து வழிபடவேண்டும்.

நமச்சிவாய

உணராமல் வழிபடுவதைவிட உணர்ந்து வழிபடவேண்டி, எதோ அன்னாபிஷேகம் பார்த்தால் நல்லது என்று யாரோ சொல்வதை கேட்டு வழிபடுவதை காட்டிலும், அந்த நிகழ்வு எதனால் நிகழ்கிறது அதன் உட்கருத்து உணர்ந்துகொண்டு வழிபட்டால், அதன் பயன் நாம் நன்றாக பெற முடியும்.

அன்னாபிஷேகம் – அன்னமாகிய அரிசியை சமைத்து அதை சிவனுக்கு அபிஷேகம் செய்வது.

அன்னம் – அரிசி நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு அளிக்கிறது, அந்த அரிசின் ரூபம் பாணலிங்கம் என்று சொல்லக்கூடிய சிவருபமே, ( நங்கள் வெளிநாட்டில் உள்ளோம் இங்கு அரிசி கிடையாது என்று சொல்வது கேட்கிறது கோதுமையும் அதே ரூபம்தான் ).

நமக்கு அனுதினமும் அன்னம்பாலிக்கும் (உணவு அளிக்கும்) இறைவன் கருணையை உணர்ந்து அவருக்கு அந்த அன்னத்தை கொண்டு செய்யப்படும் அபிஷேகம்.

இந்த அபிஷேகதின் உட்பொருளை பார்த்தால்,

பல லட்சம் லிங்கம் கொண்டு ஒரு லிங்கத்திற்கு அபிசேகம்,

லிங்கத்தை உணவாககொண்டு,

லிங்கமாகிய கருவில் இருந்து உறுப்புகொண்டு உருவம் பெற்ற ஆன்மா,
தான் இன்று ஜீவிக்க காரணமான அன்னாமாகிய ( லிங்கத்தை – சிவத்தை ) கொண்டு தன்னை ஒரு உருக்கொண்டு வாழ்விக்கும் சிவத்திற்கு நன்றியுடன் செய்யவேண்டிய அபிசேகம்.

எப்படி செய்வது :

தம்மை தூய்மைப்படுத்தி கொண்டு சிவநாமம் சொல்லிக்கொண்டு அரிசியை அன்னமாகி சுடு ஆரியாவுடன் சிறிது தண்ணீர்விட்டு நாம் இல்லத்தில் உள்ள லிங்கதிருமேனிக்கு அந்த அன்னதைகொண்டு அபிஷேகம் செய்து திருமுறைகள் பாடி வழிபாடு செய்தபின்பு அந்த அபிசேகம் செய்த அன்னத்தை அனைவருக்கும் வழங்கி சிவத்தை சுவையுங்கள்.

திருக்கோவில் செய்யப்படும் அன்னாபிஷேகம் நிகழ்வில் பங்குகொண்டு, அன்னாபிஷேக நிகழ்வுக்கு தங்களால் முடிந்த உதவிசெய்து, பலலட்சம் சிவத்தை கொண்டு ஒரு சிவத்திற்கு செய்யப்படும் அபிசேகத்தை மனதார கண்டு பயன்பெற வேண்டுகிறேன்.

எல்லாம் வல்லவன் கருணையால் எந்த ஆகம விதியும் அறியாத அடியேன் எண்ணத்தில் ஈசன் திருவருளால் தோன்றிய பதிவு.

திருச்சிற்றம்பலம்