குழந்தைகளை பாடாய் படுத்தும் ஏழரைச் சனி !!
உங்கள் ராசிக்கு முன்னும், உங்கள் ராசிக்குள்ளும், அடுத்துள்ள ராசியிலும்
சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். அதாவது, முந்தைய
ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2.5
வருடம் ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கின்றோம்.
ஏழரை சனியின் போது சனி, பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார்.
அந்த சமயத்தில் ஏழரை சனியால் பெறும் அனுபவங்களும், அவமானங்களும்,
காயங்களும் வாழ்க்கை முழுவதும் மறக்காதபடி இருக்கும்.
குழந்தைகளுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இன்று பார்ப்போம்.
குழந்தைகளுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது அவர்களின் உடல்நலம் பாதிப்படையும். அதனால் அதிகப்படியான மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
மேலும் குழந்தைகள் படும் சிரமத்தால் குடும்பத்தில் மனக்கவலை உண்டாகும்.
இக்காலகட்டத்தில் குழந்தைகளை அதிகம் கண்டிக்காமல் இருப்பது நல்லது.
இல்லையெனில், அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவார்கள். சிறு குழந்தைகள் எனில் அடிக்கடி உடல்நலக்குறைவு உண்டாகும்.
10 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் எனில் அதிக பிடிவாத குணத்துடனும்,
படிப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாகவும், பள்ளியில் குறும்பு செய்து
கெட்ட பெயரை எடுக்கும்படியான சு+ழலையும் சனிபகவான் ஏற்படுத்துவார்.
எனவே குழந்தைகளுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது அவர்களை விட்டுப்
பிடியுங்கள். நீ இப்படி செய்தால் இதுதான் ரிசல்ட் என்று பொறுமையாகவும்,
அன்பாகவும் எடுத்துக்கூறி அவர்களுக்கு புரிய வையுங்கள்.
இவ்வாறு ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சனிக்கிழமைகளில் அருகில்
இருக்கும் சிவன் கோவிலுக்கு அழைத்து சென்று அங்குள்ள நவகிரகங்களில் சனி
பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.
பரிகாரங்கள் :
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது,
காக்கைக்கு சாதம் வைப்பது.