Showing posts with label பிரச்சனைகளும். Show all posts
Showing posts with label பிரச்சனைகளும். Show all posts

Monday, 11 December 2017

பிரச்சனைகளும், பரிகாரங்களும் !

பிரச்சனைகளும், பரிகாரங்களும் !

🌟 வாழ்வில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்த கடவுளை வணங்கலாம் என்று பார்ப்போம்.

அரசுப் பணி கிடைப்பதற்கான பரிகாரம்!
🌟 கும்பகோணத்திற்கு அருகிலுள்ள பட்டீஸ்வரத்தில் வடக்கு நோக்கி நிற்கும் அஷ்டபுஜ துர்க்கையை தரிசித்து வாருங்கள். துர்க்கையை சிவப்பு வஸ்திரம், எலுமிச்சைப்பழ மாலையால் அலங்கரித்து வில்வத்தால் சகஸ்ரநாம பூஜை செய்து, ரவாகேசரியைப் படைத்து பக்தர்களுக்கு கொடுங்கள்.

ஆரோக்யம் பெற செய்ய வேண்டிய பரிகாரம்!
🌟 மூன்று செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து காளஹஸ்திக்குச் சென்று சிறப்பு வழிபாடு செய்து வாருங்கள். அபிஷேகம் செய்தால் இன்னும் நல்லது. பால், இளநீர், கரும்பு, தேன் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜையை நடத்தி வெள்ளி நாகரை பூஜை செய்து அந்தணருக்கு தானம் கொடுங்கள்.

மன நிம்மதி பெற பரிகாரம்!
🌟 மனநிம்மதிக்கு மயிலாடுதுறை அருகாமையிலுள்ள தருமபுரம், பாழ்மூரி நாதர் - தேன் அமுதவல்லி அருள்பாலிக்கும் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துங்கள்.

எந்த வரனும் அமையவில்லையா!
🌟 கர்நாடக மாநிலம் திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர், கோகர்ண நாயகியை மகாப்பிரதோஷ நாளன்று தரிசியுங்கள். சிறப்பாக வழிபட்டு பாலபிஷேகம் செய்து, 21 நெல்பொறி உருண்டைகளை படைத்து பூஜிக்கவும்.
சொந்தமாக தொழில் செய்ய பரிகாரம்!

🌟 சிதம்பரம், சேத்தியாதோப்பு அருகேயுள்ள திருக்கூடலையாற்று}ர் ஈசனை நந்தனவல்லபேஸ்வரரை ரோகிணி நட்சத்திரத்தன்று தரிசித்து வரவும். சந்தனக்காப்பு, கொன்றைப் பூ, நாகலிங்கப் பூ, மந்தாரப் பூ ஆகியவற்றால் அலங்கரித்து அர்ச்சகரை கொண்டு பூஜித்து முடித்து தயிர்சாதம் படைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பக்தர்களுக்கும் கொடுங்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்க!

🌟 குருவாயூர் கிருஷ்ணர் படத்தை அலங்கரித்து வைத்து அவல், வெண்ணெய் நிவேதித்து தாமரை மாலையை அலங்கரித்து பூஜித்து செய்யவும்.