Showing posts with label அனுஷ்டாணங்கள். Show all posts
Showing posts with label அனுஷ்டாணங்கள். Show all posts

Sunday, 27 December 2020

சாந்தி கர்மா ( சதாபிஷேகம்…)

 சாந்தி கர்மா ( சதாபிஷேகம்…) 


#சாஸ்த்ரக் #கணக்கு:


விகனஸ மகரிஷி அருளிய வைகானஸக்ருஹ்ய ஸ¨த்ரத்திற்கு ஸ்ரீநிவாஸமகி என்பவரின் தாத்பர்ய சிந்தாமணி என்ற வ்யாக்யானத்தில் (இரண்டாம் பாகம் மூன்றாம் ப்ரச்னம் 21ஆவது கண்டத்தில்) பின் வருமாறு உள்ளது.


“அஷ்டமாஸ அதிக அசீதி வர்ஷாணாம் மாஸ ஸங்க்யா க்ரமேண அஷ்டாதி கஷஷ்ட்யுபேத நவசதம் (968) இந்தவோ ஜாயந்தே |


பஞ்சமே பஞ்சமே வர்ஷே த்வெள மாஸெள அதி மாஸகொ இதி (மஹாபாரத) வசனாத் த்வாத்ரிம் சத் அதிக மாஸா: (32) ஸந்தி |


தாவந்த இந்த வச்ச பவந்தி | அத: ஸ த்ருஷட ஸஹஸ்ர சந்த்ரோ (968+32=1000) ப வதி |”

ஆக வைகானஸ க்ருஹ்ய ஸ¨த்ரப்படி 80 வருஷங்களும் 8 மாதங்களும் நிறைந்தவர் ஸஹஸ்ர சந்திர தரிசனம் செய்தவர் ஆவார். மேலும் காலவிதானம் என்ற ஜ்யோதிஷ சாஸ்த்ர நூல் சதாபிஷேக காலத்தை முடிவாக நிர்ணயிக்கிறது.

“தசஹதவஸ§ ஸங்க்யே சார்கவர்ஷே அஷ்டமாஸே


தசசத சசி த்ருஷ்டிர் ஜாயதே மானவானாம் |


ரவி சசி கதிபேதை: பஞ்சமே பஞ்சமே அப்தே


பவதி யததிமாஸ த்வந்த் வமேதத் ப்ரமாணம் ||

மாதம் ஒரு பௌர்ணமி வீதம் 80 வருடங்களுக்கு 80ஜ்12 =960 பௌர்ணமிகள்.


ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு 2 அதிமாஸங்கள் ஏற்படும். (மஹாபாரதவசனம்; காலவிதான ஜோதிட நூல் நிர்ணயம்) 80 வருடத்தில் 16 ஐந்து வருடங்கள் உள்ளன. எனவே 16ஜ்2=32 அதிகப்படி பௌர்ணமிகள், மேலும் 8 மாதங்களுக்கு 8 பௌர்ணமிகள்,


ஆக: 80 வருடம் 8 மாதம் =(80ஜ்12)+(16ஜ்2)+8


=960+32+8=1000 பௌர்ணமிகள் (சந்த்ரதர்சனங்கள்).

விஞ்ஞானக் கணக்கு:


இரு பௌர்ணமிகளுக்கிடையே உள்ள காலம் 29.5306 நாள்கள். 1000 பௌர்ணமிக்கு 29530.6 நாள்கள். ஒரு வருஷத்திற்கு 365.256 நாள்கள். 80 வருடத்திற்கு 80ஜ்365.256 =29220.48 நாள்கள்.


1000 பௌர்ணமிக்கு 80 வருடத்தை விட அதிகப்படியான நாள்கள் =29530.0 -29220.48 =310.12 நாள்கள்.


எனவே 1000 பௌர்ணமி காண 80 வருடமும் 310 நாள்களும் அதாவது 80 வருடம் 10 மாதம் ஆகிறது.


சிசு பிறந்து மூன்றாம் மாதத்தில் சூர்யனையும், நான்காம் மாதத்தில் சந்திரனையும், பசுவையும் காட்ட வேண்டுமென்கிறது ஜோதிடநூலாகிய காலவிதானம்.

துண்டு விழும் இந்த 4 மாதத்தை 80 வருடம் 8 மாதத்துடன் கூட்டினால் 81 வயது நிறையும் போது சதாபிஷேக காலம் சரியாக வரும்.


எண்பத்தொன்றில் நூறும்! ஆயிரமும்!!


81 வயது பூர்த்தி ஜன்ம நக்ஷத்ரத்தில் செய்வதானால் விசேஷமாக கவனிக்க வேண்டாம். திதி, வார, நக்ஷத்ர தோஷங்கள் இல்லை. 80 வருடம் 8 மாதங்களில் ஆயிரம் பௌர்ணமி கண்டபின், உத்தராயணத்தில் சுக்ல பக்ஷத்தில் (காலவிதான வாக்யப்படி)


ரோஹிணி, உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி, ரேவதி, சதயம், திருவோணம், ஹஸ்தம் ஆகிய 8 நக்ஷத்ரங்களில் 


ஏதாவதொன்றில் சுபவாரத்தில் சுப திதியில் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம். 81ஆவது வயதில் அல்லது பின்னர் சதாபிஷேகம் செய்யலாம். இதற்கு முன்னர் செய்யவே கூடாது. ஸஹஸ்ர சந்தரதர்சி ஆகமாட்டார்.


(இந்த சாஸ்த்ர, விஞ்ஞானக் கணக்குகளை நம்பாதவர் பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, தான் பிறந்தத்திலிருந்து ஒவ்வொரு பௌர்ணமியாக ஆயிரம் பௌர்ணமி எண்ணிச் சரிபார்க்கலாமே! நாம் நம் கண்களால் ஆயிரம் முழுநிலவைப் பார்த்தோமா என்கிற சந்தேக ப்ராணிகளுக்கு ஒரு வார்த்தை. நாம் பார்க்காவிட்டாலும், சர்வ வ்யாபியும் ஸாக்ஷியுமான சந்திர பகவான் நம்மை எப்போதும் பார்க்கிறாரே!)


சதாபிஷேகச் சிறப்பு:


த்வாரகாபுரியில் ருக்மிணி தேவி ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மாவிடம் “தங்களை எல்லாரும் வணங்குகிறார்கள்; தாங்கள் யாரை வணங்குகிறீர்கள்?” என்று கேட்க, பகவான், தான் தினமும் ஆறு பெரியவர்களை வணங்குவதாகக் கூறியுள்ளார்.

Sunday, 5 July 2020

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை. | ஆன்மிக செய்திகள் / Bhakthi Vlog

சைவப் பெருமக்களுக்குத் திருநீறு, உருத்திராட்சம், ஐந்தெழுத்து என்ற மூன்றும் இன்றியமையாதவை.


  • திருநீறு, விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்ற பல பெயர்களை உடையது திருநீறு. ஆன்மாக்களின் பாவங்களையெல்லாம் நீறு செய்வதனால் திருநீறு; பஸ்மம்.
  • விமேலான; பூதிஐஸ்வர்யம். மேலான ஐஸ்வர்யத்தை தருவதால் விபூதி. அறியாமை அழியும்படி சிவஞானமாகிய சிவ தத்துவத்தை விளக்குவதால் பசிதம். ஆன்மாக்களின் மல மாசினைக் கழுவுவதால் சாரம். ஆன்மாக்களைத் துன்பத்தினின்றும்  நீக்கி  ரட்சிப்பதனால் ரட்சை.
  • ""நீறில்லா நெற்றி பாழ்'' என்று அவ்வையார் கூறுகிறார். திருநீற்றை அன்புடன் பூசுவோர், எல்லா நோய்களும் நீங்கப் பெறுவர். அவ்வாறு பூசாதோர்  நோய்வாய்ப்பட்டு செத்துப்பிறந்து உழலுவார்கள்.


  • "நோய்களுக்கும் அஞ்சேன்; பிறப்புக்கும், இறப்புக்கும் அஞ்சேன்; திருநீறு பூசாதவர்களைக் கண்டால் அஞ்சுகிறேன்'' என்கிறார் பாண்டிநாட்டு முதலமைச்சராகிய மாணிக்கவாசகர்.
  • மனிதனுக்கு மிகவும் தேவையானவை ஐந்து பொருட்கள். 1. நல்வாக்கு. வாக்கு செல்வாக்குடையதாகவும், இனிமையுடையதாகவும் அமைதல் வேண்டும். 2. இனிய பால்சோறு. 3. நல்லார் இணக்கம். 4. உயர்ந்த நற்குணங்கள். 5. குறைவில்லாத செல்வம். இந்த ஐந்தும் ""சிவாய நம'' என்று ஜெபித்து திருநீறு தரிப்பதனால் எளிதில் கிட்டும்.
  •  திருநீற்றை ஒருவருக்குத் தரும்போதும், நம் பூசிக்கொள்ளும்போதும் சிவபெருமானுடைய ஐந்தெழுத்தை அன்புடன் ஓதுதல் வேண்டும். இந்தக் காரணத்தினால் திருநீற்றுப் பஞ்சாட்சரம் என்ற ஒரு பெயரும் அமைந்தது.

Wednesday, 1 July 2020

பரிசேஷணம் பற்றிய ஓர் பதிவு

பரிசேஷணம் பற்றிய ஓர் பதிவு :-


சாப்பிடுவதற்கு முன்பு பரிசேஷணம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும்.

பரிசேஷணம் ஒரு மகத்தான சம்ப்ரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக்கூடியது.

ஆரோக்யத்தையும் நற்சிந்தனையும் தரவல்லது. இப்போதெல்லாம் இந்த ‘பரிசேஷணமானது’ ஒரு யந்த்ரத்தனமாக பலரால் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு தரப்பட வேண்டிய முக்கியத்வம் அனேகமாக தரப்படுவதில்லை என்பதுதான் வாஸ்தவம். யதார்த்தம்.

பலர் பரிசேஷணம் செய்வதே இல்லை அப்படி செய்தாலும் ஜலத்தை எடுத்து இலையை(அல்லது தட்டை) சும்மாவானும் ஏதோ பிறருக்காக சுற்றவேண்டியது, தொடர்ந்து இரண்டு மூன்று தடவை பருக்கைகளை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டியது. அவ்வளவுதான் அவர்களை பொறுத்த வரையில் பரிசேஷணம் முடிந்துவிட்டது.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

முன்பெல்லாம் பரிமாறுவதற்காக அன்னம் கொண்டு வருவதை பார்த்ததுமே நம் பெரியோர்கள் 'இந்த அன்னம் நமது சரீரத்திற்குள் சென்று நமக்கு நற்சிந்தனையையும் நல்ல ஆரோக்யத்தையும் வழங்க வேண்டும்’ என பயபக்தியுடன் மனதிற்குள் வேண்டிக் கொள்வார்கள்.

ஒரு சிலர் சுத்த அன்னத்தை பார்த்ததும் அன்னத்தை இலையில் வைக்கும் முன் “ நமஸ்தே அன்ன, என்று கைகூப்பி வணங்கி ‘அஸ்மாகம் நித்யமஸ்து ஏதத்’ என்றும் சொல்லுவர் பிறகு பரிசேஷணம் செய்வார்கள் இந்த பரிசேஷணத்தை நாம் ஒழுங்காக எப்படி செய்ய வேண்டுமோ அப்படி செய்வோம். நமது குழந்தைகளையும் பழக்குவோம்.

பரிசேஷணம் எப்படி செய்வது?

ஒரிரு வார்த்தைகளில் விவரிப்பதற்கு முயற்சி செய்கிறேன் இங்கே :-

பொதுவாக எல்லா மந்த்ரங்களும் பரிசேஷண சமயத்தில் மனதில்தான் சொல்ல வேண்டும். உரக்க சொல்வது பழக்கத்தில் இல்லை.

சாதம் வைக்கும்போது நமது வலது கையால் உட்கலனை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அன்னம் வைத்து நெய் விட்டதும் ப்ரணவம் வ்யாஹ்ருத்தியால் சாப்பாட்டை ஸ்வாகதம் செய்து காயத்ரி மந்த்ரத்தால் சுத்தப்படுத்தி ‘ஸத்யம் த்வா ருதேண (ராத்ரியில் 'ருதம் த்வா ஸத்யேண’) என இலையை (அல்லது தட்டை) பரிசேஷணம் செய்ய வேண்டும்.

ஆபோஜனம் :-

பிறகு சாப்பிடப்போகும் உணவிற்கு ஆதாரமாகும்படி ‘அம்ருதோபஸ்தரண மஸி’ என்ற மந்திரத்தை சொல்லியப்படி வலது கையில் ஜலம் விட்டு பருக வேண்டும். இதை ‘ஆபோஜனம்’ என்று சொல்வார்கள்.


Also Read  : ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை

ப்ராணாஹுதி :-

தொடர்ந்து நெய் இடப்பட்ட அன்னத்தை மூன்று விரல்களால் (கட்டை விரல், நடு விரல், பவித்ர விரல்) கொஞ்சம் அன்னத்தை எடுத்து அதற்கான மந்திரங்களை சொல்லியப்படி ’ப்ராணாய ஸ்வாஹா, அபானாய ஸ்வாஹா, வ்யானாய ஸ்வாஹா, உதானாய ஸ்வாஹா, ஸமானாய ஸ்வாஹா, ப்ரஹ்மணே ஸ்வாஹா’ முதலிய ஆறு ஆஹுதிகளாக வாயில் போட்டுக்கொள்ள வேண்டும். இதை ப்ராணாஹுதி என்று சொல்லுவார்கள்.

ப்ராணஹுதிக்கான அன்னத்தை பற்களால் மென்று சாப்பிடக்கூடாது. அதாவது பல்லால் கடிக்காமல் முழுங்கவேண்டும. நமது உடலில் ப்ராணன், அபானன், வ்யானன், உதானன், ஸமானன் ஆகியவை ஐந்து வாயுக்கள் ஆகும்.

உடலில் ஜடராக்னியாக இருந்து நாம் சாப்பிடும் பொருளை ஜீர்ணம் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்ல.
ஜீர்ணம் ஆன உணவின் சத்தை உடலில் சேர்ப்பதற்கும், அதன் மூலம் நம் உடல் வலிமை பெறுவதற்கும், தேவையில்லாத கழிவுப்பொருள் அகற்றப்படுவதற்கும், ரத்த ஓட்டம் சீராக ஆவதன் மூலம் சரீரத்தின் வளர்ச்சிக்கும், சம நிலைக்கும் பகவான் உதவுகிறான் என பெரியோர்களின் அபிப்ராயம்.

பிறகு இலையில் வைத்திருந்த இடது கையை சுத்த ஜலத்தால் அலம்பி மார்பில் வைத்து ‘ப்ரும்மணீம் ஆத்மா அம்ருதத்வாய’ என்று பகவானை த்யானம் செய்ய வேண்டும்.

அப்படி வலிவான இந்த ஜீவன் அழியா நிலை பெறுவதற்காக பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதே ‘ப்ரும்மணீம் ஆத்மா’ என்ற மந்த்ரத்தின் அர்த்தம்.

உத்ராபோஜனம் :-

சாப்பிட்டு முடிந்ததும் உத்ராபோஜனம் செய்ய வேண்டும். அதாவது வலது உள்ளங்கையில் சிறிது ஜலத்தை வாங்கிக்கொண்டு ‘அம்ருதோபிதரண மஸி’ என்று பருகி மீதி ஜலத்தை தரையில் விட வேண்டும்.
இதுதான் பரிசேஷணம் செய்ய பொதுவான விதி.

இந்த பதிவு ஒரு வழிகாட்டிதான்.

இதை பார்த்து மாத்திரம் ஒருவர் பரிசேஷணம் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். தெரியாதவர்கள் வாத்யார் உதவியுடன் நன்கு கற்றுக்கொள்வோம். தொடர்ந்து பரிசேஷணம் செய்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.

மேலும் இரண்டு அம்சங்கள் (options) :-

பரிசேஷண சமயத்தில் மேலும் விசேஷமான இரண்டு அம்சங்கள் உண்டு. விருப்பமுள்ளவர்கள் இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இவைகள் நிர்பந்தம் கிடையாது.

குறிப்பு :-

இல்லங்களில் சாப்பிடும்போதும், சுத்தமான இடங்களில் சாப்பிடும்போதும் மட்டும் இவைகளை அனுஷ்டிக்கலாம்.
பொது இடங்களிலோ அல்லது ஆச்சாரக் குறைவான இடங்களிலோ சாப்பிடும்போது இந்த அம்சங்கள் தேவையில்ல

1. ஆபோஜனத்திற்கு முன்பு செய்ய வேண்டியது :-

இலையின் வலது புறத்தில் பரிஷேசண ஜலத்திற்கு வெளியே “யமாய நம: சித்ரகுப்தாய நம: ஸர்வபூதேப்யோ நம:” (அல்லது ”அன்னபதயே நம: புவநபதயே நம: பூதாநாம்பதயே நம:”)
என்று கூறி மூன்று சிறிய அன்னப்பிடியை வைத்து அதன்மேல் “யத்ரக்வசன ஸம்ஸ்த்தானாம் க்ஷுத் த்ருஷ்ணோ பஹதாத்மநாம், பூதாநாம் த்ருப்தயே தோயம் இதமஸ்து யதாஸுகம்” என்று கூறியப்படியே சிறிது ஜலம் விடுவர். இதன் பொருள் என்னவென்றால் “எங்கோ இருந்துகொண்டு பசியாலும் தாகத்தாலும் வாடி வதங்கும் உயிரினம் அனைத்தின் திருப்திக்கு இந்த ஜலம் உதவட்டும்” என்பதே.

2. உத்ராபோஜனத்திற்கு பின் செய்ய வேண்டியது :-

சாப்பிட்டு முடிந்ததும் உத்ராபோஜனம் செய்யும் நீரை வலது கையில் வாங்கி பருகுவோம் அல்லவா, அந்த ஜலத்தில் மீதி சிறிது ஜலத்தை வலது கையின் கட்டை விரலின் வழியாக இலையின் வெளியே தரையில் விட வேண்டும்.

அது சமயம் மனதில் ப்ரார்த்தனை செய்ய வேண்டிய மந்த்ரம் :-

”ரவுரவேபுண்யநிலையே, பத்மார்புத நிவாஸினாம், அர்சினாம் உதகம் தத்தம், அக்ஷயமுபதிஷ்டது”. நரகம் போன்ற இடங்களில் வசிக்கும் பித்ருக்கள் இந்தச் செயல் மூலம், இந்த தீர்த்தத்தினால், த்ருப்தியடைகிறார்கள்.

Sunday, 6 January 2019

🤚ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை🤚

🤚ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை🤚

ஜகத்குரு மகா பெரியவாள் உபதேசித்தது


 ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது

. சென்னையை சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் துறை  பிரசுரித்திருக்கும் பதிவுகள்..

 இந்தக்கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார்.

அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம்
பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தகாலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல முடியாமல், தானம் வாங்கவந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள்.

கன்னடியர்என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யா வந்தனகர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள் முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது. அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார்.

அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்று விரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகு இரண்டு விரல்களைக் காட்டியது.
அதற்கும் முடியாது என்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரிஎன்றார்.

 தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு, கால
புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும் அந்தப் பிராமணர் வாங்கிக்கொண்டார்.

 மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும் ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள், காலை மாலை
இருவேளைகளின் ஸந்த்யாவந்தனபலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவதுமாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன்
உருவம் கேட்ட கேள்விகளின் அர்த்தம்.

ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக்கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம் வாங்கியதன் மூலமும்
பிராம்மணருக்குப் பாபம் சம்பவித்துவிட்டது.

Also Read :  பரிசேஷணம் பற்றிய ஓர் பதிவு 

அந்தப் பாபத்தைப்போக்கிக்கொள்ள வேண்டிய வழியைத்தெரிந்துகொள்ள அகத்திய
முனிவர் தவம் செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும் மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன், தம்மிடமிருந்த தனத்தைப்
பாது காக்கும்படி, கோவில்பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார். எங்கே சென்றாலும் அகத்திய முனிவர்
காணப்படவில்லை.

முனிவரைக் காணாமையால், அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்தியமுனிவர் ஓர் கிழ வடிவத்துடன்
பிராம்மணர் முன்தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச்சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு
பசுமாடு உமக்குத் தென்படும்.

அந்த இடத்திலிருந்து நீ ஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடு எவ்வளவு தூரம் சென்று
நிற்கின்றதோ அவ்வளவுதூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும்.

நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில், சாணிபோட்ட இடத்தில் மடை
அமைக்கவும், மூத்திரம் பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும்.இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம்
போய்விடும் என்று கிழவர் சொன்னார்.

 கன்னடியர் அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு, திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக
குருக்களிடம் சென்றார்.

குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின்மீது மோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம்துவரம் பருப்பை
ஒத்திருக்குமாதலால், குருக்கள் பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர்கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக்
கொள்ளும்” என்றார்.

 குருக்களின் வஞ்சகச் செயலை அறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்தது இதுவல்ல, நான்
கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்.

 எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே,
ராஜாவிடம் சென்று முறையிட்டுக்கொண்டார். குருக்களும் தருவிக்கப்பட்டார்.

ஆனால் குருக்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று பிராமணர்
கூறினார்.

 அவ்விதம் செய்வதாகக் குருக்களும் சம்மதித்துவிட்டார்.
குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால், லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம்
செய்துவிட்டார்.

இதை ஸ்வாமி, பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச்சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம்
சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டு பிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக்கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்.

ராஜாவிடவில்லை. மரத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம் செய்யுமாறு ஆணையிட்டார் ராஜா. குருக்கள் மரத்தைக்கட்டிக்கொண்டு
பிரமாணம் செய்தார். உடல்எரிந்துபோய்விட்டது.

‘எரிச்சுக்கட்டி ஸ்வாமி’ என்பது அந்த ஆலயமூர்த்தியின்பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் அந்த ஆலயம்இருக்கிறது.
பிறகு, பிராமணர் தம் தனத்தை எடுத்துக்கொண்டு கிழவர் சொல்லியபடி பசுமாட்டைக்கண்டு கால்வாய் வெட்டினார்.

‘கன்னடியன் கால்வாய்’ என்பது அதன் பெயர். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கின்றது. அந்தக்கால்வாயின் பிரதேசங்கள்
இன்றைக்கும் செழித்திருக்கின்றன. இந்தக் கதையினால் ஸந்த்யாவந்தனத்தின் பெருமை நன்கு விளங்குகிறது.

எனவே ஸந்த்யா வந்தனம் ஒரு கடமை. அதுசெய்வதால் உலக க்ஷேமம் ஏற்படுகின்றது. ச்ரத்தையுடன் செய்தால்
மோக்ஷம் லபிக்கின்றதுஎன்பதைத் தெரிந்துகொண்டு, நமது கடமைகளில்ஒன்றாகச் செய்து வரவேண்டும் என்று உங்கள்எல்லோரிடமும் தெரிவிக்கின்றேன்” என்று

 ஸ்ரீ மகா பெரியவாள் அருளினார்கள்…

ஹர ஹர சங்கர..  ஜெய ஜெய சங்கர..