Showing posts with label ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாமா?. Show all posts
Showing posts with label ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாமா?. Show all posts

Tuesday, 5 December 2017

ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாமா?

ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களிலும் விரதத்தை முடிக்கலாமா?





🌹 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர். மாலை அணிந்து சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்,

பிரம்மச்சார்யம் :

🌹 சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவில் திறக்கப்படும் நாள் முதல் அறுபது நாட்கள் கழித்து மகரவிளக்கு பூஜை நடக்கும். இந்த 60 நாட்களும் பிரம்மச்சாரிய விரதம் பூண்டு உணவைக் குறைத்து, ஐயப்பன் புகழ்பாடி விரதம் இருக்க வேண்டும்.

🌹 41 நாளிலும் விரதத்தை முடிக்கலாம். மண்டல பூஜைக்கு செல்பவர்களுக்கு 41 நாட்கள் விரதம் போதுமானது. ஆனால் கோவிலுக்கு சென்று திரும்பிய பிறகும் மகர விளக்கு பூஜை வரை பிரம்மச்சார்ய விரதத்தையும், பிற கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் ஐயப்பனின் அருளை முழுமையாகப் பெறலாம்.

வாபர் வழிபாடு :

🌹 ஐயப்பன் கோவில் 18ம் படிக்கு கீழாக கிழக்கு பக்கத்தில் வாபரை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர். இங்கே ஒரு இஸ்லாமியர் பூஜை வழிபாடுகளை செய்வார். வாபருக்கு நெல், நல்லமிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தலாம்.
ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் :
🌹 சபரிமலையில் பதினெட்டாம்படியின் கீழே ஒரு புறத்தில் எரியும் ஆழித்தீயில் போடப்படும் நெய் தேங்காய் ஐயப்பனுக்கு உரியது என பலரும் கருதுகின்றனர். உண்மையில், இது ஐயப்பன் சன்னதியின் இடதுபுறமுள்ள கன்னிமேல் கணபதிக்கு உரிய வழிபாடாகும்.
🌹 சபரிமலை கோவிலில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஏற்றுதல், பாயசம் வைத்தல், வெள்ளை நைவேத்யம், திரிமதுரம், பஞ்சாமிர்தம், அப்பம், எள்உருண்டை, பழம், பானகம், இளநீர், நெய்விளக்கு, புஷ்பாஞ்சலி, சந்தனம் சார்த்துதல் ஆகியவை முக்கிய வழிபாடுகளாக உள்ளன. இவற்றில் நெய் அபிஷேகம், கணபதி ஹோமம், கற்பூர தீபம் ஆகியவை தினமும் செய்யப்படும் வழிபாடுகளாகும்.
ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :
ஓம் ஹhலாஹல தராத்மஜாய நம
ஓம் அர்ஜுநேசாய நம
ஓம் அக்னிநயநாய நம
ஓம் அநங்க மதனாதுராய நம
ஓம் துஷ்டக்ரஹhதிபாய நம
ஓம் ஸ்ரீ தாய நம
ஓம் சிஷ்டரக்ஷண தீக்ஷ தாய நம
ஓம் கஸ்தூரி திலகாய நம
ஓம் ராஜசேகராய நம
ஓம் ராஜ ஸத்தமாய நம.