Showing posts with label குரு உபதேசம். Show all posts
Showing posts with label குரு உபதேசம். Show all posts

Sunday, 23 November 2014

குரு உபதேசம்

குரு உபதேசம்



பக்தியால் படிப்படியாக லௌகிக கஷ்டங்களைப் போக்கடித்துக் கொள்ளலாம். அல்லது கஷ்டத்தைப் பொருட்படுத்தாத நிலைக்கு மனோ பாவத்தை உயர்த்திக் கொள்ளலாம்.
மனத்தின் அழுக்கைப் போக்கிக் கொள்ளலாம். அலைகிற மனஸை ஒரு முகப்படுத்தலாம்.
ஈசுவரனின் கல்யாண குணங்களை நாமும் பெறலாம் என்றும் அழிவில்லாத சாசுவதமான அன்பைப் பெற்று ஆனந்திக்கலாம்.

மனஸ் நின்றால் தான் ஆத்மா பிரகாசிக்கும். அதாவது நிஜமான ஆனந்த நிலை தெரியும். மனஸை நிறுத்துவதற்காகத்தான் குருபக்தி வேண்டும். ஈஸ்வர பக்தி வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

அசையாத நம்பிக்கையாகப் பக்தி இருந்தால் அதனாலேயே யோக நிவருத்தி முதலான எதையும் ஸாதித்துக் கொண்டு விடலாம். அல்லது ரோகம் ஆரோக்கியம் எதுவானாலும் வித்யாசமில்லை என்கிற உஸந்த நிலையை ஸம்பாதித்துக் கொள்ளலாம்.

ஸம்சாரத்தில் நமக்கு ஏற்படுகிற துக்கங்களின் நிவிருத்திக்காக என்றில்லாமல் நம்மை நாமே தெரிந்து கொண்டு ஆத்ம சாந்தத்தில் நிறைந்திருப்பதற்கு வழியாகவே ஈசுவர பக்தி வேண்டும்.
அனுக்கிரகத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாசனைக்கே நம்மை அனுக்கிரகிக்கக் கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி அவரிடம் நெஞ்சுருகி அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.

முதலில் பொருள் வேண்டும். பவிஷு வேண்டும் என்று வியாபார ரீதியில் பக்தி செய்ய ஆரம்பித்தாலும் பகவானின் குணவிசேஷம் காரணமாகவே அவனுக்காகவே அவனிடம் அன்பு செலுத்துகிற பக்குவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறுவோம்.
கடைசியில் குணவிசேஷம் எதுவும் இல்லாத பரமாத்ம ஸ்வரூபமாகவே நாமும் அவனில் கரைந்து அவனாகவே ஆவோம்.