Showing posts with label Vibuthi. Show all posts
Showing posts with label Vibuthi. Show all posts

Wednesday, 25 May 2016

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? 
எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது?


கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது,

அங்கே அர்ச் ச‍கர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார்.

அப்ப‍டி அளிக்க‍ப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்ப‍டி, எந்தெந்த‌ விரல்களால் எடுத்து நெற்றியில் இடுகி றோம் என்பதை நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

விபூதியை எடுக்க‍ சில‌ விரல்களை பயன் படுத்தும் போதும் தீமையும், சில விரல்களை பயன்படுத்தும்போது அதீத நன்மைக ளும் ஏற்படும்.

ஆகவே விபூதியை எடுக்கும்போது, கீழே குறிப்பி ட்டுள்ள‍ வரிகளில் உள்ள‍ முறைகளை பயன்படுத்தி, மிகவும் கவனமாக எடுத்து அணியவேண்டும்.

கட்டை விரல்

கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.

ஆள் காட்டி விரல்

ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட் கள் நாசம்.

நடுவிரல்

நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக்கொண்டால் அணிந்தா ல் நிம்மதியின்மை.

மோதிர விரல்

மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.

சுண்டு விரல்

சுண்டு விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.

மோதிர விரல் – கட்டை விரல்

மோதிர விரலாலும், கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விர லால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.