Showing posts with label திருக்கதைகள். Show all posts
Showing posts with label திருக்கதைகள். Show all posts

Sunday, 27 December 2020

🐚🌀 #வைகுண்ட_ஏகாதசி | ஏகாதசி விரதம் | Bhakthivlog | Virathangal | திருக்கதைகள்

 🐚🌀 #வைகுண்ட_ஏகாதசி 


🐚🌀🙏🏼   #மகாவிஷ்ணுவுக்கே வரமளித்த இரு அரக்கர்கள்


 🐚🌀#மூன்று கோடி ஏகாதசி திதியில் விரதமிருந்த பலனை கொடுக்கக்கூடியது இந்த வைகுண்ட ஏகாதசி விரதம். அதனால இதுக்கு முக்கோடி ஏகாதசின்னு பேரு. 


🌀🐚#ஏகாதசி விரதம் எப்படி வந்துச்சுன்னு பார்க்கலாம்..


’முரன்’ன்ற  அரக்கன் எப்பவும்போல தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தான்.  ஆஸ் யூஸ்வல் முனிவர்களும், தேவர்களும் பெருமாள்கிட்ட போய் பிராது கொடுத்தாங்க. உடனே, பெருமாளும் முரனுடன் போரிட்டு அவனோட படைகளை அழிச்சுட்டார். எப்பேற்பட்ட கெட்டவனா இருந்தாலும் பகவான் எடுத்த எடுப்பிலேயே  அவனை அழிச்சுடமாட்டார். திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுப்பார். அதனால,  போரிட்ட களைப்பு தீர பத்ரிகாசிரம்’ன்ற இடத்துல போய் ரெஸ்ட் எடுக்குற மாதிரி படுத்துக்கிட்டிருந்தார். 


இந்த விசயம் முரனுக்கு தெரியவர, அந்த இடத்துக்கு போய், பெருமாளை நெருங்கி அவரைக்கொல்ல,  வாளை ஓங்கினான்.  தூக்கத்திலிருந்தபடியே, தன் உடலிலிருந்து ஒரு மோகினியை உண்டாக்கி முரனை கொல்ல அவளை அனுப்பினார். 


 #பெண்ணான உன்னைக்கொல்ல ஒரு அம்பு போதுமென எள்ளி நகையாடி, அம்பை நாணில் பூட்டினான். அந்த நேரத்தில் ஹூம்ன்னு பெருமூச்சு விட்டாள் மோகினி.  மோகினியின் பெருமூச்சில் முரன் எரிந்து சாம்பலானான். முரன் எரிந்து சாம்பலானதும் ஏதுமறியாதவர் போல எழுந்து முரனை எரித்த மோகினியை பாராட்டி,  ஏகாதசின்னு பேர் வச்சார் பெருமாள். ''ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும் அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்'' என்று அருளினார். 



#சித்திரை மாத வளர்பிறை ஏகாதசியின் பெயர் பாபமோகினி.  தேய்பிறை ஏகாதசி  காமாதான்னும் , அழைக்கப்படுது. இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருந்தால் கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். இதேப்போல  வைகாசி வளர்பிரை ஏகாதசி வருதினி,  தேய்பிறை ஏகாதசி மோகினி ன்னு சொல்லப்படுது. இந்த நாளில் விரதமிருந்தால் இமயமலைக்கு  போய் பத்ரிநாத்தை வழிப்பட்ட பலன் கிடைக்கும்.  ஆனி மாசம் அபாரா, நிர்ஜலா ன்னு அழைக்கப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் சொர்க்கம் கிடைக்கும். ஆடி மாசத்தில் யோகினி, சயன ஏகாதசி அழைக்கப்படும் இந்நாளில் விரதமிருந்தால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும்.  ஆவணி மாசத்துல ஏகாதசி காமிகை, புத்திரதான்னு அழைக்கப்ப்படும். இந்நாளில் விரதமிருந்தால் நன்மக்கட்பேறு கிடைக்கும். புரட்டாசி மாச ஏகாதசி,  அஜா, பரிவர்த்தினின்னு அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால்  செல்வ செழிப்பு உண்டாகும். 


#ஐப்பசி மாச ஏகாஷரி இந்திரா, பராங்குசான்னு சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தா நோய் நொடிகள் அண்டாது.  கார்த்திகை மாத ஏகாதசி ரமா, பிரமோதினி அழைக்கப்படும். இந்நாளில் விரதமிருந்தால் கால்நடை பாக்கியம் கிட்டும். 


🐚🌀#மார்கழிமாதஏகாதசி வைகுண்ட ஏகாதசி,  உத்பத்தின்னு அழைக்கப்படுது. மனிதர்களின் ஓராண்டுக்காலம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி பார்த்தால், மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாகும். மகாவிஷ்ணு தூக்கம் களைந்து கண்விழிக்கும் நேரமாகும்.  அதனாலதான் மார்கழி ஏகாதசி நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுது. 


#தைமாதஏகாதசி சுபலா, புத்ரதான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பித்ரு  சாபம் நீங்கும். மாசி மாத ஏகாதசி  ஜெயா, ஷட்திலான்னு சொல்லப்படுது. இந்நாளில் விரதமிருந்தால் பாவம் நீங்கும் பிரம்மஹத்தி தோசம் நீங்கும். பங்குனி மாத ஏகாதசி  விஜயா, விமலகின்னு அழைக்கப்படுது.  ராமபிரான் இலைங்கைக்கு செல்லும்முன் விஜயா ஏகாதசி அனுஷ்டித்ததாய் சொல்லப்படுது.  இந்நாளில் விரதமிருந்தால் பதவி, புகழ் கிடைக்கும்.



#ஏகாதசிக்கு முன் தினம் ஒருவேளை உணவு உண்டு ஏகாதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி பூஜைகளை முடித்து, முறைப்படி விரதம் இருக்கனும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது நலம்.  முடியாதவர்கள் பால் பழம் உண்ணலாம். பகலிலும் உறங்காமல் பெருமாளை எண்ணி பஜனை, கருடப்புராணம் போன்றவை படித்தல் வேண்டும். அன்றி இரவு பரமபதம் விளையாடலாம். சினிமா, டிவி பார்த்தல் தவிர்க்கலாம். மறுநாள் அடியவர்களுக்கு உணவளித்து விரதம் முடிக்க வேண்டும்.


#விஷ்ணுவின் நாபிக்கமலத்திலிருந்து தோன்றியதால் பிரம்மாவுக்கு கர்வம் உண்டானது. அவரின் கர்வத்தை அடக்க நினைத்த விஷ்ணு, தன் காதுகளிலிருந்து மது, கைடபர்கள்ன்ற இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார். அவர்கள் பிரம்மாவைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த  விஷ்ணு, பிரம்மாவை விட்டுவிடும்படியும், அதற்கு கைமாறாக அவர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். அந்த அசுரர்கள் மகாவிஷ்ணுவிற்கு வேண்டுமானால், தாங்கள் வரம் தருவதாகக் கூறினர். மகாவிஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். 


#அசுரர்களானாலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைத்த அசுரர்கள்,  ''பகவானே, ஒரு விண்ணப்பம். தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகே நாங்கள் சித்தி அடைய வேண்டும்''ன்னு வேண்டிக்கிட்டாங்க. பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார். பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தினைக் கேட்டனர்.


#மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலைத் (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் மகாவிஷ்ணு சேர்த்துக்கொண்டார். அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ''பகவானே! தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர். பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுதான் சொர்க்க வாசல் திறப்பு தோன்றிய வரலாறு. 


#தன்னை எட்டி உதைத்த பக்தனின் காலை பரமன் பிடித்துவிட்ட கதைலாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனா, பக்தனுக்கு சிறு கஷ்டம்ன்னா ஓடோடி வருவான். அதன்படி, அம்பரீஷ்ன்ற மன்னன் ஒற்றைக்குடையின் கீழ் இப்பூவுலகை ஆண்டு வந்தான். மன்னாதி மன்னன் ஆனாலும் சிறந்த விஷ்ணு பக்தன்.   


#உபவாசம்ன்னா இறைவனுக்கு அருகில் இருத்தல்ன்னு பொருள். அதன்படி, ஏகாதசி விரதத்தை முறைப்படி அனுஷ்டித்து வந்தான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசி அன்று நீராடி உணவு உட்கொள்ள வேண்டும், இதுதான் முறை. அதன்படி உணவு அருந்த செல்லும்போது, அரண்மனைக்கு வந்திருந்த துர்வாச முனிவரை உணவு உண்ண அழைத்தான். அவரும் இதோ குளித்துவிட்டு வருகிறேன் என சென்றார். நேரம் கடந்தது., ஆனாலும். துர்வாசர் வந்தபாடில்லை. துவாதசி திதிக்குள் விரதம் முடிக்க வேண்டுமென்பதால் துளசி தண்ணீர் மட்டுமாவது அருந்துங்கள்ன்னு சொன்ன வேத விற்பன்னர்களின் பேச்சை கேட்டு துளசி தண்ணீர் மட்டும் அருந்தினான் அம்பரீஷ்.


இதைக்கேள்விப்பட்ட துர்வாசர், அதிதியாக வந்த தன்னை மதிக்காமல் விரதம் முடிக்க உன்டது தவறு என கோவம் கொண்டார். 


இல்லை வெறும் #துளசி_தண்ணீர் மட்டும்தான் குடித்தேன் என அம்பரீஷன் பணிந்து நின்றான். துளசி தீர்த்தம் உண்டதும் உணவு உட்கொண்டதுக்கு சமம். என்னை அவமதித்துவிட்டாய் என கோவம்கொண்டு தன் தலைமுடியிலிருந்து ஒரு முடியை பிடுங்கி, அம்பரீஷ் மீது ஏவினார். அது பூதமாக மாறி அம்பரீஷை துரத்த, அவன் விஷ்ணுவை சரணாகதி அடைந்தான்.  விஷ்ணுபகவான், தன் கையிலிருந்த சக்ராயுதத்தை அப்பூதத்தின்மேல் ஏவினார். அப்பூதம் துர்வாசரை வந்தடைய, அவரையும் சேர்த்து சக்ராயுதம் துரத்தியது. இதனால பயந்துபோன துர்வாசர் மகாவிஷ்ணுவை பணிந்தார்.


#தன்னை பணிவதைவிட, யாரை ஏளனமாய் கருதி பூதத்தை ஏவினாயோ! அவனிடம் சென்று பணிந்து நில்ன்னு துர்வாசருக்கு அறிவுரை கூறினார். ஏகாதசி விரதமிருப்பவர்களை யாராலும் அழிக்க முடியாது, அதனால் அவன் மன்னித்தால் சக்ராயுதம் பழைய நிலைக்கு திரும்பும் என விஷ்ணு சொல்ல, அதன்படி அம்பரீஷை பணிந்தார் துர்வாசர். அம்பரீஷ் அவரை மன்னிக்க சக்ராயுதம் அம்பரீஷை பணிந்து மீண்டும் விஷ்ணுபகவானிடம் சென்றது. பக்தனை காப்பாற்ற இறைவனே ஓடோடி வந்ததால் அவனின் பெருமையை உணர்ந்துக்கொண்ட துர்வாசர் அம்பரீஷுக்கு ஏராளமான வரங்களை அள்ளி வழங்கினார்.


#இத்தகைய மகிமை வாய்ந்த ஏகாதசி பெருமையை உணர்ந்து இந்நாளில் இறைவனை போற்றி துதித்து மோட்சம் அடைவோம். ஏன்னா, வைகுண்ட ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசின்னும் பேரு. 


#இந்நாளில் விரதமிருந்தாலும், இறந்தாலும் மோட்சம் கிடைக்கும். அதுக்காக, மோட்சம் கிடைக்கும்ன்னு ஏடாகூடமா ஏதும் செய்யக்கூடாது. வைகுண்ட ஏகாதசி நாளில் இறந்தாலும் அவரவருக்குண்டான கர்ம வினைப்படிதான் மோட்சம் கிடைக்கும். அதனால நல்லதே செய்வோம். மோட்சம் பெறுவோம்🙏🏼

⭐ "ராம" நாமம் "தாரக" மந்திரம் ⭐ திருக்கதைகள் | bhakthivlog

 ♻ ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம்  ♻

⭐  "ராம" நாமம் "தாரக" மந்திரம் என்று  

                                    கூறப்படுகிறது. ⭐

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

🌺 "தாரக" மந்திரம் என்பதற்கு "உயிர் மூச்சாய் தரித்திருப்பது" என்று ஒரு அர்த்தம் இருந்தாலும்,  "கடத்தல்" என்று மற்றொரு பொருளும் இருக்கிறது..



⚡ எதைக் கடத்துகிறது?..


பிறவிச்சுழலிலிருந்து இந்த ஜீவாத்மாவை கடத்த வல்லதாம் இந்த ராம நாமம்!


🍁 ராம நாம ஜபம் நன்மையும், செல்வமும் நல்குவதாய்ச் சொல்கிறார்கள்..


🍁 என்ன நன்மை?..


🍁 என்ன செல்வம்?..


🍁 "ரா..ம" (ஆன்மாவிற்கான அனுக்ரஹம்)  என்று ப்ரார்த்தித்துக் கொண்டே இருந்தால், தன்னடையே, நமது மனத்தின் மலங்கள் நீங்குகின்றனவாம்!

.....இது நன்மை!


🍁 செல்வமாவது, "பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டுக் கைங்கர்ய ப்ராப்தத்தை அடைவது" என்பதாம்!


விடாமல், "ராம ராம" என்று சொல்லி, ஆன்மாவின் அனுக்ரஹத்துக்காக ப்ரார்த்திக்கும்போது, "ததாஸ்து" தேவதைகள், "ததாஸ்து" (அப்படியே ஆகட்டும்!) என்று சொல்லி அனுக்ரஹிக்கிறார்களாம்!


இதனால் நமது காரியமும், தடைகளைத் தகர்த்தெறிந்து, இலக்கை வெகு எளிதில் அடைகிறதாம்!


🍁 உயிரோடு இருக்கும் போது, "தாரக" மந்திரமாய் ஜபிக்கப் படுகின்ற இந்த "ராம" மந்திரம், உடலை விட்டு உயிர் வெளியேறும் நேரம், "கர்ண" மந்திரமாய், செவியில் ஓதப்படுகிறதாம்.

அந்த நாமத்தைக் கேட்டுக்கொண்டே பிரிகின்ற பிராணனானது, மீண்டும் வேறுடல் புகுவதில்லையாம்!


🍁 காசியின் கங்கைக் கரையில் மரிக்கும் உயிர்களுக்கு சாக்ஷாத் பரமசிவனே கர்ண மந்திரமாய், ராம மந்திரத்தைச் செவிகளில் ஓதி, அந்த உயிர்களுக்கு மோக்ஷ கதி ப்ராப்தமாகும்படி செய்கிறதாக, இன்றும் நம்பப்படுகிறது.


ஆனால், அத்தனைப்பேரும், காசிக்குச் சென்றுவிட முடியாதல்லவா?..


🍁 அதனால் இறக்கும் தருவாயில், செவிகளில் புத்திரன் "ராம"மந்திரத்தைச் சொல்வதால், அந்த ஜீவன் முக்தியடைகிறதாம்!


ஆனால், தசரதனுக்கு இறக்கும் தருவாயில் எந்தப் புத்திரனும் அருகில் இல்லையே...

...எனில் அவரது ஆத்மாவின் நிலை என்ன?..


🍁 "கர்ண" மந்திரம் சொல்வதற்கு எந்தப் புத்திரனும் பக்கத்தில் இல்லாததால், துக்கத்தில் தசரதனையே, "ராமா, ராமா..." என்று கதற வைத்தானாம் எம்பெருமான்!


அப்பேர்ப்பட்ட "ராம" நாமத்தைச் சுமந்திருந்ததால்தான் தசரதன் மைந்தனுக்கே ஏற்றமாம்!


🌞 நாடகத்தில் ஒரு பாத்திரம் கொடுக்கப்படும்போது, எப்படி அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறோமோ, அதுபோலவே, ராமனும், தான் ஏந்திய பெயருக்குத் தகுந்தாற் போலவே நடந்து கொண்டானாம்!..


எப்படி?..


⚡ அவனே சொல்கிறான்...


 "அபயம் ஸர்வ பூதேப்யோ!" என்று..


🍁 தன்னைத் தஞ்சம் அடைந்தவர்களை ஒருபோதும் அவன் தவிக்க விட்டதில்லையாம்!


"சரணாகதி" செய்து விட்டால் போதுமாம்..


     🌺   "ததாமி ஏதத் வ்ரதம் மம"...  🌺


(கொடுப்பதை என் விரதமாகவே வைத்திருக்கிறேன்!) என்கிறான் ராமன்!


பெயருக்கேற்ற குணவானுமாம் ஶ்ரீராமன்!..


"யதி வா ராவண ஸ்வயம்" என்கிறான்...


"ஸ்வயம் ராவணனே என்னிடம் தஞ்சம் புகுந்தாலும், நான் அவனுக்கு அபயமளிப்பேன்!" என்கிறான் ராமன்!


🍁 இப்படி எல்லா ஆன்மாவிற்கும் அனுக்ரஹம் செய்வதையே நோக்கமாகக் கொண்ட திருநாமமாம் "ராம" நாமம்!


அதனால்தான், அயோத்தியிலிருந்து புறப்பட்டுத் தான் விண்ணுலகம் ஏகும்போது,


புற்பா முதலாய் புல்லெறும்பாதி ஒன்றின்றியே, அயோத்திவாழ் அனைவரையும்,

நற்பாலுக்குய்த்தனனாம், நம் நாயகனான ஶ்ரீராமன்!


🍁 "ராம" மந்திரம் காரியம் செய்யும் என்பதற்கு, இப்படிப் பலப்பல ப்ரமாணங்களையும் காட்டித் தருகின்றனர், நம் பெரியோர்..


"ஸஹஸ்ர நாம தத்துல்யம்" என்கிறாரே பரமசிவன்...


🍁 .... எனில், எம்பெருமானின் ஆயிரம் திருநாமங்களுக்கும் இது ஒன்றே சமானமாய் ஆகிறதோ? என்ற விஷய ஞானம் மிக்க பண்டிதர்களின் கேள்விக்கு, பெரியோர்கள் சொல்கின்ற சமாதானம் வெகு அழகு!..


🍁 எம்பெருமானை கோடி நாமங்களைக் கொண்டு துதிக்கின்ற ஸ்துதி ஒன்று இருக்குமானால், "ராம" நாமம், "கோடி நாம" தத்துல்யமாம்!..


🍁 ஸஹஸ்ர கோடி நாமங்களால் எம்பெருமானுக்கு ஒரு ஸ்துதி இருந்தால், "ராம" நாமம் "ஸஹஸ்ர கோடி" தத்துல்யமாம்!


இப்படி, தம்மையே தமர்க்கு நல்கும் "தனிப்பெரும் பதமாம்" இது!


🍁 அந்த மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரமும்

எழுமை நோய்க்கும் மருந்துமாகிய "ராம" மந்திரத்தையே,


🍁 பரமசிவனார், "ஶ்ரீராம ராம ராம" என்று தியானித்து, தாம் ஆனந்தக் கடலில் மூழ்குவதாகச் சொல்கிறார்!


இந்த "ராம" நாமத்தின் பெருமையை வலியுறுத்தவே, மீண்டும் ஒருமுறை,

"ஶ்ரீராமநாம வரானன ஓம் நம இதி" அழுத்திச் சொல்லியாகிறது!


🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺


(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் −பலஸ்ருதி..)


🍎  ப்ரஹ்மோவாச − 🍎


நமோஸ்த்வநந்தாய ஸஹஸ்ரமூர்த்தயே

ஸஹஸ்ரபாதாக்ஷிஸிரோருபாஹவே

ஸஹஸ்ரநாம்னே புருஷாய ஸாஸ்வதே

ஸஹஸ்ரகோடி யுகதாரிணே நம: (28)


ப்ரம்மதேவன் கூறுகிறார்


அனந்தாய − அந்தமில்லாதவனே!


நம: அஸ்து − (உனக்கு) நமஸ்காரம்!


ஸஹஸ்ர மூர்த்தயே − ஆயிரக்கணக்கான திருவுருவங்களை உடையவனே!


ஸஹஸ்ர − ஆயிரக்கணக்கான


பாத: − பாதங்களையும்


அக்ஷி: − கண்களையும்


ஸிர: − தலைகளையும்


ஊரு − தொடைகளையும்


பாஹவே − தோள்களையும்


ஸஹஸ்ர − ஆயிரக்கணக்கான


நாம்னே − திருநாமங்களை உடையவனாயும்

(இருக்கின்றவனும்)


ஸஹஸ்ரகோடி − ஆயிரம்கோடி


யுகதாரிணே − யுகங்களை நடத்திச் செல்பவனாயும்


ஸாஸ்வத புருஷாய − அழிவில்லாத பரம்பொருளுமாகவும் உள்ளவனுக்கு


நம:  − நமஸ்காரங்கள்.


மேல் ஸ்லோகத்தால் ப்ரம்மதேவன் எம்பெருமானான ஶ்ரீமந்நாராயணனைத் துதிக்கின்றார்:−


"அந்தமில்லாதவனுக்கு நமஸ்காரங்கள்.


ஆயிரக்கணக்கான திருவுருவங்களையும்,

ஆயிரக்கணக்கான பாதங்கள், கண்கள், சிரங்கள், தொடைகள், தோள்கள் ஆகியவற்றை உடையவனும்,

ஆயிரக்கணக்கான திருநாமங்களை உடையவனும், ஆயிரம் கோடி யுகங்களை நடத்திச் செல்பவனுமான அழிவில்லாத பரம்பொருளை நமஸ்கரிக்கிறேன்..


இந்த இடத்தில் ப்ரம்மன் பேச வேண்டிய அவசியம் என்ன என்பதை பெரியோர்கள் வெகு அழகாகக் காட்டித்தருகின்றனர்.


🙏  ப்ரம்மன் யார்?..


சாக்ஷாத் எம்பெருமானின் நாபிக் கமலத்தில் உதித்தவன்.


எம்பெருமானுக்குத் தனயன்..


🙏 தனயன், தந்தையைப் புகழ்கிறார்!..


"என் தந்தையின் பெருமைகள் அளவிட முடியாதது!.. 

அவருக்கு வெறும் ஆயிரம் திருநாமங்கள் மட்டுமல்ல..

ஆயிரக்கணக்கான 

திருவுருவங்களும் உண்டு!


🙏 ஆயிரக்கணக்கில் பாதங்களும், கண்களும், சிரங்களும், தொடைகளும், தோள்களும் உடையவர்!


🙏 ஆயிரம்கோடி யுகங்களை அனாயாசமாக நடத்திக் கொண்டு செல்கின்ற பெருமை படைத்த சாஸ்வதமான பரம்பொருள் அவர்!"


அவரை நான் நமஸ்கரிக்கிறேன்.." 

......என்கிறார்.


எதற்கு இத்தனை வர்ணனைகள் என்றால், 

அவரது அத்தனை(தந்தையை) ஆயிரம் திருநாமங்களால் துதிப்பது சாலப் பொருத்தமே என்பதைச் சொல்வதற்காக, அவர் திருவாக்கிலிருந்தே வந்த விஷயமாம் இது!


"நீங்கள் ஆயிரம் நாமங்களால் துதிக்கின்ற எனது தந்தையாகிய பரமபுருஷனின் பெருமைகளைக் காணுங்கள்.. அவற்றுக்கு ஈடுஇணையே இல்லை!"

..... என்கிறபடியுமாம்!


🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


⭐  ஸஞ்சய உவாச:− ⭐


யத்ர யோகேஸ்வர க்ருஷ்ணோ

யத்ர பார்த்தோ தனுர்தர:

தத்ர ஶ்ரீர்விஜயோபூதிர் 

த்ருவாநீதிர் மதிர்மம (29)


(இது பகவத் கீதையின் 18ம் அத்யாயத்தில் வருகின்ற 78வது ஸ்லோகம்.)


🌿 இத்தனை நேரமும் அனைத்தையும் திவ்ய த்ருஷ்டியினால் பார்த்துக் கொண்டிருந்த சஞ்சயன், த்ருதராஷ்டிரனுக்கு மேற்கண்ட உரையாடல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்தன என்பதைத் தெரிவிக்கும்போது கூறியது இது..


யத்ர − எங்கே


யோகேஸ்வர − எல்லா விதமான யோகங்களுக்கும்  ஈஸ்வரனான


க்ருஷ்ணோ − ஶ்ரீக்ருஷ்ணனும்


யத்ர − எங்கே


தனுர் தர: − வில்லேந்திய


பார்த்தோ − பார்த்தனாகிற அர்ஜுனனும்


(இருக்கின்றனரோ)


தத்ர − அங்கே


ஶ்ரீ: − வளம் (செல்வம்)


விஜய − வெற்றி


விபூதி − மங்களம் (செழுமை)


நீதி − நேர்மை

(ஆகியவை)


த்ருவ: − அசைக்கமுடியாமல்  நிச்சயமாய் இருக்கின்றன.


(இது)


மம −என்னுடைய


மதி:− முடிவான கருத்தாகும்.


சஞ்சயன் கூறுகிறான்:−


🌿 "எங்கே யோகேஸ்வரனான ஶ்ரீக்ருஷ்ணனும், வில்லேந்திய அர்ஜுனனும் இருக்கின்றனரோ,  அங்கெல்லாம் வளமும், வெற்றியும், மங்களமும், நீதியும் அசைக்க முடியாமல் நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றன என்பது எனது கருத்தாகும்"


🌿 சஞ்சயன் இதை எதற்காக த்ருதராஷ்டரனிடம் சொல்ல வேண்டும்?..


காரணம் இருக்கிறது..


"உனது மகன் துரியனைப் போல அதர்ம வழியில் செல்லாமல், 

பாண்டு புத்திரனான அர்ஜுனன், "க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்" என்பதை உணர்ந்தவனாய், அந்த ஜகத்காரணனான ஶ்ரீக்ருஷ்ணனையே புகலடைந்திருப்பதால், அவனுக்கே வெற்றி நிச்சயம்" 

என்று த்ருதராஷ்டிரனுக்குத் தெளிவு படுத்துகிறானாம் சஞ்சயன்!


⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய இரண்டு விஷயங்களையும் பெரியோர்கள் நமக்குக் காட்டித் தருகிறார்கள்..


🍁 முதலாவது..


எத்தனைதான் நாம் முயற்சிகளை மேற்கொண்டாலும்,  அதற்கு இறைவனுடைய அனுக்ரஹம் இல்லையெனில், அந்தக் காரியம் பரிமளிப்பதில்லை.


🍁  இரண்டாவது, எவ்வளவுதான் இறைவன் அனுக்ரஹித்தாலும், நமது முயற்சி சிறிதேனும் இல்லையெனின், அங்கும் வெற்றியைக் காணவியலாது.


"நஹி ஸுப்தஸ்ய ஸிம்ஹஸ்ய

ப்ரவிஸந்தி முகே ம்ருகா:"

என்கின்றனர் பெரியோர்..


ம்ருகா : − மிருகங்கள்


ஸுப்தஸ்ய − உறங்குகின்ற


ஸிம்ஹஸ்ய − சிங்கத்தினுடைய


முகே − வாயினுள்


நஹி ப்ரவிஸந்தி − நுழைவதில்லை (சென்று விழுவதில்லை).


சிம்மமே ஆயினும், உறங்கிக் கொண்டிருந்தால், அதனுடைய பசி தீராது.


அது எழுந்து காரியம் செய்ய வேண்டும்!


இப்படி, முயற்சியும் (பார்த்தன்),

தெய்வ அனுக்ரஹமும் (யோகேஸ்வர: க்ருஷ்ண) ஆகிற இருவிஷயமும் ஒன்று சேருமிடத்தில்,


🌿 "ஶ்ரீர்விஜயோபூதிர் த்ருவா நீதி" −


செல்வ வளம், வெற்றி, மங்களம், நேர்மை எல்லாம் நிச்சயம்..


.....என்கிற நெறி மேற்கூறிய ஸ்லோகத்தினால் உணர்த்தப்படுகிறதாம்!


⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

⭐(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் − பலஸ்ருதி..)


♻  ஶ்ரீபகவான் உவாச:−


அனந்யாஸ்சிந்தயன்தோ மாம்

யே ஜனா பர்யுபாஸதே

தேஷாம் நித்யாபியுக்தானாம்

யோகக்ஷேமம் வஹாம்யஹம் (30)


இந்த ஸ்லோகம் பகவத் கீதை 9வது அத்யாயத்தில் வருகின்ற 22வது ஸ்லோகமாகும்.


பகவான் கூறுகிறார்:−


யே ஜனா − எந்த மனிதர்கள்


அனன்யா − வேறு எந்த விருப்பங்களும் இன்றி


மாம் − என் ஒருவனையே


சிந்தயந்தோ − நினைவாலும்


பர்யுபாஸதே − சரணடைகிறார்களோ,


நித்ய −எப்பொழுதும்


அபியுக்தாயாம் − பக்தியில் உறுதிபட இருக்கின்ற


தேஷாம் − அவர்களுக்கு


அஹம் − நான்


யோக − எல்லாவிதமான யோகங்களையும்


க்ஷேமம் − நன்மைகளையும்


வஹாமி − அனுக்ரஹிக்கிறேன்.


இது மேலெழுந்தவாரியான பொருளே.


🌺 "பகவானே திருவாய் மலர்ந்து கூறும்போது வெகுசாதாரணமான யோகங்களையும், நன்மைகளையும் பற்றியா பேசுவான்?..." என வினவுகின்றனர் பெரியோர்.


அவர்களது விளக்கங்களை இப்போது காணலாம்..


"அபியுக்தாயாம்" என்பது உறுதியான பக்தி என்கிற ஒரு பொருளைத் தந்தாலும்,

 

 "யுக்தம்" என்பது "இணைந்திருத்தலை"யே குறிக்கிறதாம்!


யாரோடு இணைந்திருத்தலை?..


வேறு யார்?..


🌺 நம் எம்பெருமானைவிட்டு "அகலகில்லேன்" என்று அவன் திருவடியில் விழுந்து கிடப்பதையே, இந்த "யுக்தம்" என்ற வார்த்தை சொல்கிறதாம்!


நித்ய அபியுக்தாயாம் − எப்பொழுதும் இணைந்திருக்க விழைகின்ற நிலையைச் சொல்கிறது.


இப்படி எம்பெருமானோடு எப்பொழுதும் சேர்ந்திருக்கக்கூடிய நிலையை விரும்புபவர்கள்,


🌺 மற்றெல்லா விருப்பங்களையும் துறந்து, அவன் ஒருவனையே சரணாக அடையும்போது,


அவன், 


யோகம் − (அப்படி) தன்னோடு சேர்ந்திருக்கின்ற ப்ராப்தத்தையும்


க்ஷேமம் − மீண்டும் ஸம்ஸாரத்திற்கு திரும்புதல் இல்லாத க்ஷேமத்தையும்


அனுக்ரஹிக்கிறானாம்!


லௌகீகமான உதாரணத்தாலும் இதை அழகாக விளக்குகிறார்கள் பூர்வர்கள்.


🌺 எல்லாம் தரவல்ல காமதேனுவை வைத்துக் கொண்டிருப்பவன், அதனிடத்தில் "மேலான பொருளை" வேண்டிப் பெறாமல், 

பத்து நாட்களில் அழுகக் கூடிய ஒரு மாங்கனியை வேண்டிப் பெற்றால் எவ்வளவு மடமையாக இருக்குமோ, அவ்வளவு மடமையான செயலாம், சர்வ வல்லமை படைத்தவனிடம், சாதாரண விஷயங்களுக்கு யாசித்து நிற்பது!


🌺 பஞ்சபக்ஷ பரிமாணமாய் சமைத்திருக்கின்ற விருந்தை உண்ணச் சென்றவனுக்கு, வீட்டில் இருக்கின்ற பழைய சோறு சட்டென்று மறந்து போய்விடுவது போல,


எம்பெருமானுடன் சேர்ந்திருக்கின்ற ப்ராப்தம் கிடைத்துவிட்டால்,


இந்த ஸம்ஸாரத்தின் தாபங்கள் சட்டென்று நம்மை விலகிவிடுமாம்!


அதனால், நாம் கேட்டுப் பெறுகின்ற "யோகமும்", "க்ஷேமமும்" உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று காட்டித் தருகின்றனர்.


🌺 பரித்ராணாய ஸாதூனாம்

வினாஸாய ச துஷ்க்ருதாம்

தர்மஸம்ஸ்தாபனார்த்தாய

ஸம்பவாமி யுகேயுகே (31)


இந்த ஸ்லோகம் பகவத்கீதையின் 4வது அத்யாயத்தில் 8வது ஸ்லோகமாக வருகிறது.


ஸாதுனாம் − அடியவர்களை


பரித்ராணாய − ரக்ஷிப்பதற்காகவும்


துஷ்க்ருதாம் − துஷ்ட செயல்களை செய்பவர்களை


வினாஸாய ச − அழிப்பதற்காகவும்


தர்ம − நீதியை


ஸ்ம்ஸ்தாபனார்த்தாய − நிலைநாட்டுவதற்காகவும்


யுகேயுகே − யுகங்கள் தோறும்


ஸம்பவாமி − (நான்) தோன்றுகிறேன்..


மேற்படி ஸ்லோகமும் கண்ணன் எம்பெருமான் திருவாக்கிலிருந்தே வந்தது...


🌺 "சாதுக்களை (அடியவர்களை) ரக்ஷிப்பதற்காகவும், துஷ்டர்களை சிக்ஷிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும்,  யுகங்கள்தோறும் நான் தோன்றுகிறேன்..."


இந்த மேலோட்டமான பொருளிலிருந்து முழுவதும் வித்யாசமாய் நமது பெரியோர்கள் செய்கின்ற வ்யாக்யானம் ப்ரமிக்கத் தக்கதாய் இருக்கிறது!.


ஸாதூனாம் − அடியவர்கள்


துஷ்க்ருதாம் − துஷ்ட செயலைச் செய்பவர்கள்


இருவருமே, நமக்கு  வெளியேயிருந்துதான் வருகிறார்கள் என்பதில்லையாம்!


ஸாத்வீகமான சிந்தனைகளில் இருக்கும்போது, நமது மனம் ஒரு ஸாதுவைப் போன்றும், 

அதுவே, தீய எண்ணங்களுக்கு இருப்பிடமாகும் போது, நமது ஆன்மநாசத்துக்குக் காரணமாகி, "துஷ்க்ருதாம்" (துஷ்ட செயலைச் செய்பவர்) ஆகவும் மாறிவிடுகிறதாம்..


மாறிமாறி அலைக்கழிக்கப்படுகின்ற எண்ணக் கலவைகளினால், ஆத்மாவிற்குக் கிடைக்க வேண்டிய நீதி (தர்மம்) மறுக்கப்படுகிறதாம்!


ஆத்மாவுக்கான நீதியாவது, இறையோடு கலந்திருத்தலாம்...

அந்த நீதியைக் கிடைக்கவொண்ணாது செய்கின்ற துஷ்ட சிந்தனைகளை விலக்கி, ஸத் சிந்தனைகளைப் பாதுகாக்க, நான், உனக்குள்ளேயே அவதரிக்கிறேன் என்கிறானாம் எம்பெருமான்!


இங்கே, "யுகே யுகே" என்பதற்குப் பூர்வர்கள் அருளுகின்ற வ்யாக்யானம், வாஸ்தவமாகவே சிலிர்க்க வைக்கிறது..


தீய எண்ணங்களுக்கு ஆட்ப்பட்டு, 

எம்பெருமானிடமிருந்து விலகுகின்ற ஒவ்வொரு கணமும், அடியவர்களுக்கு ஒரு யுகத்தைப் போன்ற பிரிவுத்துயரை உண்டாக்கவல்லதாம்!..


அந்தமாதிரி வேதனையைத் தருகின்ற அந்த ஒவ்வொரு கணமாகிற யுகத்திலும், நான் உன்னுள் தோன்றி, உனது தீய எண்ணங்களை அழித்து, ஸத்விஷயங்களில் உன்மனம் ஆழ்ந்திருக்கும்படி செய்து, உனது ஆத்மரக்ஷணத்தை (தர்ம ஸமஸ்தாபனார்த்தாய) நிலைபெறச் செய்கிறேன் என்கிறானாம் பகவான்!


இப்படி....பெரியோர்களின் பகவத் அனுபவங்களை எல்லாம் படித்து அறிந்து கொள்வதே, நமக்கு எம்பெருமான் செய்கின்ற பெரிய க்ருபையே அல்லவா?...


🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் − பலஸ்ருதி..)


🦐 ஆர்த்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா

கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா:

ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம்

விமுக்த துக்கா: ஸுகினோ பவந்து ( 32)


பகவான் தொடர்ந்து கூறுகிறார்:−


ஆர்த்தா − துக்கத்தில் இருப்பவனும்


விஷண்ணா − விஷம் போல எரிக்கும் கவலைகளில் ஆழ்ந்தவனும்


சிதிலா ச− மனம் உடைந்து இருப்பவனும்


பீதா: − அச்சமடைந்திருப்பவனும்


கோரேஷு  − அதிபயங்கரமான


வ்யாதிஷு − நோய்களினால்


வர்த்தமானா: ச − பீடிக்கப்பட்டிருப்பவனும்


நாராயண ஸப்தம் −

"நாராயணா" என்ற நாமத்தை


ஸங்கீர்த்ய மாத்ரம் − உச்சரித்த மாத்திரத்திலேயே


துக்கா: விமுக்த − துக்கங்களிலிருந்து விடுதலை அடைந்தவனாய்


ஸுகினோ − சுகத்தை (ஆனந்தத்தை)


பவந்து − அடையப் பெற்றவனாகிறான்.


🍂 துக்கம் கொண்டவனும், பெருங்கவலைகளை உடையவனும், மனமுடைந்தவனும். அச்சமுற்றிருப்பவனும், அதிபயங்கரமான நோயினால் பீடிக்கப்பட்டிருப்பவனும்"நாராயணா" என்று உச்சரித்த மாத்திரத்திலேயே, தமது துக்கங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று, ஆனந்தத்தை அடைகிறான்.


"நாராயணா" என்று உச்சரித்த மாத்திரத்திலேயே, இத்தனை நிவாரணங்களும் கிடைத்து விடுகின்றனவா என்ற ஐயம் எழுவது மனித இயல்பே!


இந்த இடத்தில் ஆழ்வாரின் திருவாக்கை ப்ரமாணமாகக் காட்டுகின்றனர் பெரியோர்..


🍂 "அடியார் படுதுயராயினவெல்லாம்

நிலந்தரச்செய்யும் நீள்விசும்பருளும்..

................

🍂 பெற்றதாயினுமாயின செய்யும்

நலந்தருஞ்சொல்லை நான்கண்டுகொண்டேன்

நாராயணாவென்னும் நாமம்"


இங்கே, பெரியோர்களின் வ்யாக்யானம் நம்மை யோசிக்க வைக்கிறது..


🍂 ஒரு ஜீவனுக்குப் பெற்ற தாயை விட, நன்மை நினைப்பார் வேறொருவர் இல்லை..இது உலக வழக்கு!


அப்படிப்பட்ட அந்தத் தாயினைக் காட்டிலும், நன்மை செய்யவல்லது நாராயண நாமமே என்று எதைவைத்து ஆழ்வார் சொல்கிறார்?..


🍂ப்ரஹலாத சரித்திரத்தைக் கையில் எடுக்கிறார்கள்..


🍂 பெற்ற தாயே தனது கைகளினால், பாலகனுக்கு விஷம் தர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.


ஆனால், அவன் உச்சரித்துக் கொண்டிருந்த நாராயண நாமம், அவனைக் காப்பாற்றிவிடுகிறது.


🍂 பெற்றவள் பார்த்திருக்க, தொடர்ச்சியாக வருகின்ற சோதனை அனைத்திலிருந்துமே, அந்த நாமமே அவனை விடுவிக்கிறது!


அடுத்ததாக துருவ சரித்திரம்...


🍂 துருவனைப் பெற்றவளினால், தன் பாலகனைத் தந்தை மடியில் இருத்திப் பார்க்க இயலவில்லை!


அவளே கைகாட்டுகிறாள்..


"லோகமாதா இருக்கிறான்... அவனது நாம ஜபம், உனக்கு அனைத்தையும் பெற்றுத்தரும். நீ முயன்றுபார் குழந்தாய்!"

...என்கிறாள்.


🍂 பெற்றதாயினுமாயின செய்பவன், அந்தக் குழந்தையின் அழைப்பை ஏற்று, அவனுக்கு அனுக்ரஹிக்க ப்ரத்யக்ஷமாகி விடுகிறான்!


இப்படி, அழைத்தவர் குரலுக்கு வந்துவிடுபவன் அவன்!


இந்தப் பிறவியோடு முடிவடையக்கூடிய, பெற்றவளின் சம்பந்தத்தைக் காட்டிலும், ப்ரளயகாலத்திலும், தனது திருவயிற்றில் வைத்து நம்மை எல்லாம் ரக்ஷிக்கின்ற அந்த லோகமாதாவுடனான சம்பந்தம்

"உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது" என்னுமாப்போலே, அறுகாத சம்பந்தமாகும்!..


🍂 அந்தத் தாயைக் காட்டிலும், நமக்கு ஹிதம் (நன்மை) செய்ய யாரால் ஆகும்?..

....என்கின்றனர் பெரியோர்!


அடுத்ததாக, "ஸப்த மாத்ரம்" என்று சொல்வதும் விமரிசிக்கப்படுகிறது..


🌺  நாராயண நாமத்தை உச்சரிக்கும்போதே துக்கங்கள் விலகுவதும், சுகம் நிறைவதும் எப்படி சாத்யமாகிறது என்று விளக்குகின்றனர் நம்பூர்வர்கள்..


🌺 வேங்குழலின் இசைக்கு, அன்று தம்மை மறந்து, தமது கைக்காரியங்களை மறந்து, சுற்றம் மறந்து, சொந்தம் மறந்து, ஓடிச் சென்றனர் கோபியர்..


வேறு எதையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை!


அதனால், வேறு எதுவும் அவர்களைக் கட்டுப்படுத்தவுமில்லை!


அவர்களை ஆட்கொண்டதெல்லாம், அந்த வேங்குழல் நாதம் ஒன்றே!..


அப்படி வந்தவர்களை, கண்ணனும் குளிரக் கடாக்ஷித்தான்!


குழல் ஊதி அவன் நம்மை அழைத்தாலென்ன? இல்லை, குழலுக்குரியவனை நாம் அழைத்தாலென்ன?..


"ஆட்பட்டுவிட்டால்", மற்றவை எல்லாம் துச்சமே!

என்று நிர்ணயம் செய்கிறார்கள் பெரியோர்!..


அழைக்கின்ற குரலின் ஆதரமாயிற்று, அவன் பார்ப்பது!


ஆத்மார்த்தமாய் அவனைக் கூப்பிட்டால், தன்னையே கொடுத்துவிடக் கூடியவனை, நமக்கு மட்டும் சரியாக அழைக்கத் தெரிந்தால்,  இந்த சம்சாரப் பெருநோயிலிருந்து எளிதில் பிழைத்துக் கொள்ளலாம் என்பது பெரியோர்களின் தீர்மானமாகும்..


நாம் சங்கீர்த்தனம் பண்ணுகிற அந்த "நாராயண" சப்தம், அவனைச் சென்றடையும்படி பார்த்துக்கொள்வது மட்டுமே, நமது காரியமாகும்!..


இடிசப்தத்திற்குப் பிறகு மழை வருவது போல, இந்த நாராயண சப்தம், அவனது அருள்மழையைத் தன்னடையே கொண்டு வருமாம்!


🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝


 (ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பலஸ்ருதி..)


⭐  காயேன வாசா மனஸேந்த்ரியை வா

புத்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத்

கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை

நாராயணாயேதி ஸமர்ப்பயாமி"


காயேன  − உடலாலோ


வாசா −  வாக்கினாலோ


மனஸ் − மனதினாலோ


இந்த்ரியை (வா) − இந்த்ரியங்களினாலோ


புத்தி − அறிவினாலோ


ஆத்மனா (வா) ஆத்மாவினாலோ


ப்ரக்ருதே ஸ்வபாவாத் − 

இயற்கையான குணவிஷேஸத்தினாலோ


யத்யத் − எதுஎதைச்


கரோமி − செய்கின்றேனோ


ஸகலம் − அவை அனைத்தையும்


பரஸ்மை நாராயணா இதி − பரமபுருஷனாகிய நாரயணனுக்கே


ஸமர்ப்பயாமி − ஸமர்ப்பிக்கிறேன் (அர்ப்பணிக்கிறேன்).


⭐ உடலாலும், வாக்கினாலும், மனதினாலும், இந்திரியங்களினாலும், அறிவினாலும், ஆத்மாவினாலும், ஸ்வபாவத்தினாலும் எதுஎதைச் செய்கிறேனோ, அவை அனைத்தையும் பரமபுருஷனாகிய ஶ்ரீமந்நாராயணனுக்கே ஸமர்ப்பிக்கிறேன்.


⭐  இந்த சாதாரண அர்த்தத்திற்கு, நமது பெரியோர்கள் விசேஷமாக உரையிடுகிறார்கள்.


உடலினால் செய்கின்ற, செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகத் தெரிகிறது.


அது என்ன மனம், இந்திரியங்கள், புத்தி, ஆத்மா போன்றவற்றால் செய்கின்ற செய்கை?..


⭐  நமக்குள் இருந்து கொண்டு, இவைகள் அனைத்தும் செய்கின்ற வியாபாரம், மற்றவர்க்கு வேண்டுமானால் தெரியாமல் போகலாம்..

ஆனால், நம்முள் அந்தர்யாமியாக இருக்கின்றவன், நமது ஒவ்வொரு புலனின் அசைவையும், நோக்கத்தையும் நன்றாகவே உணர்பவனாய் இருக்கிறானாம்!


மனத்தால் செய்கின்ற மானஸீக பூஜையையும் இறைவன் மிகவும் சந்தோஷத்தோடு ஏற்கிறானாம்..


⭐  இந்திரியங்கள் என்பது ஐம்பொறிகளான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றைக் குறிக்கிறது..


⭐  இந்த இந்திரியங்களைக் கண்டவிடத்தும் அலையவிடாமல், இறைவன் திருநாமத்தைக் கேட்கவும், சொல்லவும் ஈடுபடுத்தும்போது அவன் வாஸ்தவமாகவே ஆனந்திக்கிறானாம்.


⭐ புத்தியால் அவனை அறிய முற்படும்போது, அந்த முயற்சியில் நாம் பலிதம் அடைகிறோமோ இல்லையோ, நமது அந்த ஈடுபாடு, அவனை ரொம்பவும் சந்தோஷப்படுத்துகிறதாம்..


இப்படி ஆத்மார்த்தமாக அவனை அனுபவிப்பதையே அவன் நம்மிடம் எதிர்பார்க்கிறானாம்!


⭐ ஆக, முக்கரணங்களும் ஒன்றி நாம் அவனைக் குறித்து, எந்தச் செயலைச் செய்தாலும், அவை அந்த முகுந்தனுடைய மனதை மகிழ்விக்கிறதாம்!..


⭐"முக்கரணங்கள் ஒன்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறதே.. என்ன செய்வது?" என்று கேட்பவர்களுக்குப் பெரியவர்கள் சொல்கின்ற சமாதானம், சற்று ஆறுதலாய் இருக்கிறது..


⭐ "ஸகலம் பரஸ்மை நாராயண இதி ஸமர்ப்பயாமி" என்பதை உணர்ந்து சொல்லிக்கொண்டே வந்தோமானால், 

கொஞ்சம் அப்படிஇப்படி அவனை விட்டு நமது நினைவோ, செய்கையோ அகன்று போனாலும், 

நாளடைவில் அந்த வார்த்தைகளின் சக்தி நம்மை வழிக்குக் கொண்டுவந்து விடுமாம்!


அவனைக் குறித்துச் சொல்கின்ற இந்த வார்த்தைகளுக்கே அவ்வளவு வீரியம் இருக்கிறதாம்!


⭐ "அதனால், "ஸகலம் ஸமர்ப்பயாமி"யை ஆத்மார்த்தமாகச் சொல்லிக் கொண்டு அவனை மெல்ல நெருங்கி, அவனால் சகல அனுக்ரஹமும் கிடைக்கப் பெற்று, நம்மை வருத்துகின்ற இந்தப் பிறவிப் பிணியை வெல்வோமாக!.."

.....என்கின்றனர் நம் பூர்வர்கள்...


முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா?..


நாமும் முயற்சிப்போம்!


(ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம பலஸ்ருதி ஸம்பூர்ணம்.)

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  🍁(ஸர்வம் ஶ்ரீ்க்ருஷ்ணார்ப்பணமஸ்து..)🍁




⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் ! | மார்கழி ஸ்பெஷல் ! |bhakthivlog திருக்கதைகள்

 மார்கழி ஸ்பெஷல் !


எல்லா அவதாரங்களும் முடிந்தபின் வைகுந்தத்தில் பள்ளிகொண்டிருந்த பரந்தாமன் தான் உபதேசித்த 'கீதா' சாரத்தினால் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்று எண்ணுகிறான். மஹாலட்சுமியை மீண்டும் அவதாரம் செய்யச் சொல்கிறானாம். அவள் மறுக்க பூமாதேவி அவதரிக்க ஒப்புக் கொண்டு கலி 98, நளவருடம், ஆடிமாதம், சுக்கில பட்ச சதுர்த்தசி, செவ்வாய்க் கிழமை, பூர நட்சத்திரத் திரு நாளில் ஶ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தரின் மகளாய் அவதரித்தாள். அவள்தான் கோதா என்ற கோதை. கோதா என்றால் நல்ல வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். சூடிக் கொடுத்த சுடர்க் கொடி! ஆண்டாள் ! ஸ்ரீ ரங்கனை ஆண்டாள்!


கோதையால் புகழ் பெற்ற ஊர் ஸ்ரீ வில்லிபுத்தூர்.

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடந் தோன்றுமூர்

நீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர்

நான்மறைகள் ஓதும் ஊர்

வில்லி புத்தூர் வேதக் கோனூர்.



கோதையின் தமிழ்ப்பாசுரம் எப்படியானது? 'பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும்.' இதை அறியாதவர்கள் பூமியில் இருக்கவே லாயக்கற்றவர்களாம்! 'கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும்

அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு.'


கோதை இருவிதமான மாலைகளைக் கட்டினாள். ஒன்று பூக்களால் ஆன மாலை. அந்த மாலையின் பூக்களே அவளுடைய தூதுவர்கள் ஆயின. மற்றொன்று பாமாலை! திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற பெயரில் விளங்கும் கொஞ்சும் தமிழ்ப் பாடல்கள்.


திருப்பாவையில் தி என்ற எழுத்து. திருமாலை குறிக்கும். திரு என்ற சொல் மகாலக்ஷ்மியை குறிக்கும்.திருப்பா என்ற சொல் திருப்பாற் கடலை குறிக்கும்.


திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள 

மகாலக்ஷ்மியோடு உறையும் திருமாலை 

பள்ளி எழுப்புவதாக அமைக்கப்பட்ட

பாடல்களை கொண்டது திருப்பாவை



பாற்கடலில் பள்ளி கொண்ட எம்பெருமான் 

இப்பூவுலகில் அறியாமையில் மூழ்கி 

இறைவனை மறந்து கிடந்த காலத்தில் மக்களை தட்டி எழுப்ப புவியன்னையே 

கோதையாக அவதாரம் எடுத்து இந்த மண்ணில் பரந்தாமன் எடுத்த 

அவதாரங்களை மேற்கோள் காட்டியும், 

இறைவனை எப்படி வணங்கவேண்டும், 

அவன் அருளை பெற என்னென்ன 

வழிமுறைகளை அனுசரிக்கவேண்டும் என்றும், அவனை வணங்குவதினால் 

கிடைக்கும் பேறுகள் என்ன என்பதையும், 

அனைவரும் அவன் புகழ் பாடுவதால்இந்த உலகமும், மக்களும் எப்படி செழித்து

வளமோடு இன்பமாக வாழ்வார்கள் 

என்பதையும் முப்பது பாடல்களாக

திருப்பாவை ஆக கோதை தந்தருளினாள்.


வேதங்களின் சாரத்தைத் தன்னுள் அடக்கிய பாடல்கள் திருப்பாவை என்று ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

திருப்பாவை காட்டும் பாவை நோன்பு, ஆத்ம சமர்ப்பணம் செய்தல் என்ற உயரிய வழியைக் காட்டுகிறது.

திருப்பாவையை ஓதுவது மஹா யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !

விஸ்வரூப தரிசனம்... | bhakthivlog |Vishwaroopadharishanam

 -- விஸ்வரூப தரிசனம்...  


சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள்  அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.



தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)


அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.


“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.


எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.


எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.

Thursday, 24 December 2020

மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

 மார்கழி மாதத்தில் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?



👉 மார்கழி மாதம் மிகவும் மகத்துவம் நிறைந்த மாதமாகும். வருடம் முழுவதும் கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள், மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுவதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும்.


👉 மார்கழி மாதம் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது பனி. அதிகாலையில் புகைப்போல் படரச் செய்து, சு ரியன் வருகையை ஸ்பெஷலான காட்சியாக்கிவிடும்.

👉 இவ்வாறு தெய்வீகமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்வோம்...!!


மார்கழியில் செய்யக்கூடியவை :


👉 மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்தத்திலேயே கண் விழிக்க வேண்டும்.


👉 மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும்.


👉 அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, வாசலில் வண்ண கோலமிட்டு இரண்டு அகல் விளக்குகளை வைக்க மகாலட்சுமியின் அருள் அதிகாலையிலேயே கிடைத்துவிடும்.


👉 ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பு  தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும்.


👉 அதிகாலையில் பஜனை பாடுவதுடன், திருப்பாவை, திருவெம்பாவை பாடல் பாடுவதும், கேட்பதும் புண்ணியம். இல்லாவிட்டால் கோலம் போடும் நேரத்தில் மட்டுமாவது பாட வேண்டும்.



👉 மார்கழி மாதத்தில் திருமணத்திற்கு வரன், பொருத்தம் பார்ப்பதோடு ஜாதகம் பரிமாற்றமும், கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தமும் செய்யலாம்.


👉 மார்கழி மாதத்தில் நிலம் மற்றும் வீடு வாங்க முன்பணம் கொடுப்பதோடு பத்திர பதிவும் செய்யலாம்.


மார்கழியில் செய்யக்கூடாதவை :


👉 முதல் நாள் இரவே கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும்.


👉 மார்கழியில் விதை விதைக்கவோ, திருமணம் செய்யவோ கூடாது.


👉 அதிகாலைக்கு பிறகும், சு ரிய உதயத்திற்கு பின்பும் தூங்கக்கூடாது.


👉 மார்கழி மாதம் விரதம் மேற்கொள்ளும் கன்னிப்பெண்கள் நெய், பால் சேர்த்த உணவை சேர்க்கக்கூடாது.


👉 மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா, வாடகை வீடு மாறுதல், அலுவலகம் மாறுதல், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் செய்தல், காது குத்துதல், புதிய வீடு மற்றும் புதிய வாகனமும் வாங்கக்கூடாது.


விஸ்வரூப தரிசனம்... | bhakthivlog | திருக்கதைகள் | Sri Vishnu Temples | Vishvaroopadharishanam

 விஸ்வரூப தரிசனம்...  


சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. ஒரு நாள்  அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.



தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)


அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.

“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.


எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.

எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.

Sunday, 13 September 2020

திருவரங்கத்திலிருந்து ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார் | Bhakthi Vlog | திருக்கதைகள்

 திருவரங்கத்திலிருந்து ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார் .

அப்போது அந்த ஸ்ரீவைஷ்ணவர் ஸ்ரீ.அனந்தாழ்வானிடம்... "ஸ்வாமி ! ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் உண்மையான லக்ஷணங்கள் எவையெவை என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும் “…. என்று வேண்டினார்.


ஸ்ரீ.அனந்தாழ்வானின் விளக்கங்கள் :

1-: கொக்கு போல

2-: கோழி போல

3-: உப்பு போல

4-: உம்மைப் போல…… ஸ்ரீ.வைஷ்ணவனின் லக்ஷணங்கள் இந்நான்கினையும் போலிருக்க வேண்டும் ” என்று கூறி விட்டு , அவைகளுக்கு விளக்கமும் அளித்தருளினார்.


1- கொக்கு போல : ஒரு கொக்கானது, நீரில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு உள்ள மீன் கிடைக்கும் வரை, தனக்குத் தேவையில்லாத மீன்களை புறம் தள்ளி விட்டு காத்திருப்பது போல,ஒரு ஸ்ரீவைஷ்ணவனும்,உலக இன்பங்களில் மனம் ஈடுபடுவதை, புறக்கணித்து விட்டு ,பகவானின் கைங்கர்யத்தையே அனவரதமும் யாசித்து, எதிர் நோக்கியவாறு இருக்க வேண்டும் .


2 – கோழி போல : ஒரு கோழியானது, தன் கால்களில் குப்பைகளைக் கிளறிக் கிளறி, வேண்டாத வஸ்துக்களை ஒதுக்கி விட்டு, இறுதியில் கிடைக்கும் நெல்மணிகளைத் தனக்காகக் கொத்தி எடுப்பது போன்று, ஒரு ஸ்ரீவைஷ்ணவனும், லோகாயதமான வேறு உபாயங்களைத் தொலைத்து விட்டு,இறுதியில் இறைவனின் சரணாரவிந்தங்களைப் பற்றுவதையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் .


3 – உப்பு போல : சமையலில் உப்பு பெரும் பங்கு வகிக்கிறது.’ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’….என்பது பழமொழி அல்லவா! அதே சமயம் சமையலில் நாம் சேர்க்கும் உப்பு நம் கண்களுக்குப் புலனாவதில்லை.ஆனால் சமையலுக்கு ருசியை மட்டுமே கொடுக்கிறது.அது போலவே ஒரு ஸ்ரீவைஷ்ணவனும், தான் சார்ந்திருக்கும் எந்த கோஷ்டியிலும், ஆடம்பரத்துடன் தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும் .அதே நேரத்தில் அவனுடைய நற்செயல்களால், அந்த கோஷ்டிக்கே ஒரு உயர்வை உண்டுபண்ண வேண்டும் .


4 – உம்மைப் போல : என்னைக் காண்பதற்கு வந்து விட்டு நான் வருவதற்கு மிகவும் தாமதமான பின்னரும், அதைப் பொருட்படுத்தாமல் பொறுமை காத்தீர்கள் அல்லவா ! இதுவும் ஸ்ரீவைஷ்ணவனின் லக்ஷணங்களில் மிக முக்கியமான ஒன்று”…….

என்பதாக சொல்லி முடித்தார் .


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!


ஸ்ரீ.அனந்தாழ்வான் திருவடிகளே சரணம்!

Tuesday, 8 September 2020

நாம ரஸம் கிருஷ்ண என்று எப்பொழுதும் சொல்லலாமே !!!!

கலியுக தர்மமான பகவன் நாமத்தை எப்போதெல்லாம் சொல்லலாம்?

நியமங்களே இல்லையாம். எப்போது வேண்டுமானாலும் சொல்லலாமாம்.

நாமம் சொல்வதற்காகத் தனியாக ஒரு நேரம் ஒதுக்க வேண்டியதில்லையாம்.

நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்லவே முடியாதாம். 

அதெப்படி? 

புரந்தரதாஸர் சொல்கிறார்.




நரஜன்ம பந்தாக நாலிகேயிருவாக 

கிருஷ்ணா என பாரதே 

பாரதே! என்று பாரத தேசத்தில் பிறந்த நம்மைத் தான் விளிக்கிறார். அதற்காக மீதி தேசத்திலுள்ளவர்களுக்கெல்லாம் நாமம் கிடையாதா? அவர்களுக்கும் உண்டு. கண்ணெதிரே இருப்பவரைத்தானே அழைத்துச் சொல்லமுடியும்? அதனால் நம்மைக் கூப்பிடுகிறார்.

அரிதிலும் அரிதான மனிதப் பிறவி எடுத்துவிட்டாயல்லவா? அதிலும் பேசும் சக்தி கொண்ட நாக்கு இடுக்கிறதல்லவா? ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே என்று கெஞ்சுகிறார்.

எதற்காகச் சொல்லவேண்டும்?

கிருஷ்ணா எந்தரே ஸகல கஷ்டவு பரிஹார 

கிருஷ்ணா என பாரதே 

உனக்குத்தான் நிறைய கஷ்டங்கள் வரிசையாக வந்துகொண்டிருக்கிறதே. ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ஒவ்வொரு பரிஹாரம், ஒவ்வொரு தெய்வம் என்று எதற்காக அலைகிறாய்?

உன்னால்  அலையமுடியவில்லையா? அதற்காக நீ கஷ்டப்படவும் வேண்டாமே. க்ருஷ்ணா என்று சொல்லிப்பாரேன். எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிடுமே என்கிறார்.

எப்போது சொல்வது?

மலகித்து மைமுரி தேளுத்தலொம்மே க்ருஷ்ணா என பாரதே..

காலையில் உறக்கத்திலிருந்து  விழிக்கிறாயல்லவா? நீ படுக்கையிலிருந்து எழக்கூட வேண்டாம். அப்போது க்ருஷ்ணா என்று சொல்லலாமே. எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே கூட க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

ஸூளி தாடுத மனே, யொளகா தருவொம்மே க்ருஷ்ணா என பாரதே

வீட்டிற்குள் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு எத்தனை நடை நடக்கிறாய்? அப்போது ஒரு முறை க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

ஸ்நான பான ஜப தபகள மாடுதே

கிருஷ்ணா என பாரதே 

குளிக்கும்போது, நீர் குடிக்கும்போது, க்ருஷ்ணா என்று சொல்லலாம். ஒரு கணம் இறைவனை நினைக்கும்போதும் உனக்கு பெரிய ஸ்லோகங்கள் தெரியவில்லை, ப்ரார்த்தனை செய்யத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. க்ருஷ்ணா என்று சொல்லலாம். அதுவே பெரிய உபாசனையாகிவிடுமே.

ஷால்யான்ன ஷட்ரச திந்து த்ருப்தவனாகி 

கிருஷ்ணா என பாரதே 

சாப்பிடத் துவங்குமுன் க்ருஷ்ணா என்று சொல்லிவிட்டு உண்டாயானால், உண்ணும் பொருளில் உள்ள தோஷமெல்லாம் நீங்கி அமுதமாகிவிடும்.

இல்லையென்றால் நன்றாக விருந்து சாப்பிட்டபின், திருப்தியாக ஏப்பம் விடும்போதாவது க்ருஷ்ணா என்று சொல்லலாம்.

உண்ட சோறு உடலுக்கு நன்மை பயக்குமாறு ஜீரணமாகிவிடுமே.

கந்தவ பூசி தாம்பூலவ மெலுவாக க்ருஷ்ணா என பாரதே

கமகமவென்ற வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்ளும்போதும், தாம்பூலத்தை மெல்லும்போதும்கூட  க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

செந்துள்ள ஹாஸிகெயொளு குளிதொம்மெ க்ருஷ்ணா என பாரதே

சுகமான பட்டு மெத்தையில் ஓய்வாக  அமர்ந்திருக்கும் வேளையிலும்கூட க்ருஷ்ணா என்று சொல்லலாமே.

கந்தன்ன பிகிபிகி தப்பி முத்தாடுத

கிருஷ்ணா என பாரதே 

உன் குழந்தையைக் கொஞ்சும்போதும், கன்னத்தைக் கிள்ளி முத்தமிடும்போதும்  க்ருஷ்ணா என்று கொஞ்சலாமே.

மந்தகாமினியொளு சரசவாடுத்தலொம்மே 

கிருஷ்ணா என பாரதே

உன் மனைவியுடன் தனிமையில் இனிமை காணும் நேரத்திலும் அவளைக் க்ருஷ்ணா என்றே அழைக்கலாம். க்ருஷ்ணனை விடவும் ச்ருங்கார ரஸத்தில் சிறந்தவர் யார்? இல்லறம் இனிமையாக இதை விடச் சிறந்த வழி உண்டா?

பரிஹாஸ்யத மாதலாடுத லொம்மே 

கிருஷ்ணா என பாரதே 

யாரையாவது கேலி செய்து பேசும்போது கூட க்ருஷ்ணா என்று சொல்லி கேலி செய்யலாம். கண்ணன் மகிழ்ச்சியடைவான். இப்போதெல்லாம் கேலி செய்ய கோவிந்த நாமத்தைப் பயன்படுத்துகிறார்களே. அதைப் போல. 

பரிபரி கெலசதொளு ஒந்து கெலசவெந்து 

கிருஷ்ணா என பாரதே 

எவ்வளவோ பேசுகிறோம். பேச்சு வாக்கில் அவ்வபோது க்ருஷ்ணா என்று ஒரு வார்த்தை என்று சொல்லக்கூடாதா?

துரித ராசிகளன்னு தரிது பிடிசுவ 

கிருஷ்ணா என பாரதே 

நம்மைப் பீடித்த துஷ்ட கிரஹங்களெல்லாம் விலகி அனுக்ரஹம் நம்மைப் பிடிக்க க்ருஷ்ணா என்று சொல்ல மாட்டாயா?

கருடகமன நம்ம புரந்தர விட்டலன 

கிருஷ்ணா என பாரதே (நரஜன்ம பந்தாக) 

கருடனின் மேல் ஏறி விரைந்து வந்து காக்கும் விட்டல க்ருஷ்ணனின் பெயரை எப்படியாவது சொல்வதை உன் வழக்கமாக்கிக் கொள்ளமாட்டாயா என்று புரந்தரதாஸர் கெஞ்சுகிறார்.

நம்மைக் கரையேற்றுவதில், மஹான்களுக்குத்தான் எவ்வளவு அக்கறை?

Saturday, 1 August 2020

மகாபிரதோஷம்: நந்தி பகவானை வணங்கி நலம்பெற வேண்டிய நாள் இன்று!

மகாபிரதோஷம்: நந்தி பகவானை வணங்கி நலம்பெற வேண்டிய நாள் இன்று!


பிரதோஷ வழிபாடுகளில் முக்கிய இடம் பிடிப்பவர் நந்தி தேவர். அதிலும் மகாபிரதோஷம் என்றால் சிவாலயங்கள் களைகட்டும். நந்திக்கு விஷேஷ அலங்கார அபிஷேகங்கள் நடைபெறும்.

மாதம்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வந்தாலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் முக்கியமானது. இதை சனி மகாபிரதோஷம் என்று போற்றுவர். பொதுவாகவே பிரதோஷ வேளையில் செய்யப்படும் நந்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். சிவாலயங்களில் இந்த நாளில் நந்திபகவானுக்குப் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.


நந்தி பகவான் சிவபெருமானின் கருணையால் தோன்றியவர். கற்களை மட்டுமே உணவாகக் கொண்டு தவம் செய்த சிலாதர் என்பவர் யாகம் செய்வதற்காக பூமியைத் தோண்டியபோது, ஒரு பொற்பெட்டி கிடைத்தது. அதில் அழகிய குழந்தை ஒன்று இருந்தது. அந்தக் குழந்தையை வீரகன் என்னும் திருநாமம் சூட்டி சிலாதர் வளர்த்துவந்தார். வீரகன் அழகிய இளைஞனாக மாறிவரும் காலத்தில் சிலாதரின் முன்பாகத் தோன்றிய மித்ரன், வருணன் ஆகிய தேவர்கள் வீரகன் விரைவில் மரணமடைவான் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்டு சிலாதர் வருத்தமடைந்தார். ஆனால் வீரகனோ, தான் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமானாகிய சிவபெருமானை எண்ணித் தவம் செய்யப் போவதாகக் கூறினார்.
அதே போன்று ஸ்ரீ ருத்ர ஜபத்தை ஏழுகோடிமுறை ஜபம் செய்தார். இளமையில் மனம் கூடி வீரகன் செய்த இந்த ஜபத்தைக் கேட்ட சிவபெருமான் அவருக்குக் காட்சியருளி நந்தி என்று திருநாமமிட்டுத் தன் வாகனமாக ஏற்று, கணங்களுக்கெல்லாம் அவரைத் தலைவராக மாற்றி சாகாவரமளித்தார். சிவபெருமானே ஆசார்யனாக இருந்து அனைத்துக் கலைகளையும் நந்திக்கு அருளிச் செய்தார். பிற்காலத்தில் பூமியில் குருபரம்பரை தொடங்க நந்தியே முதல் காரணமானார்.

இத்தகைய சிறப்புகள் உடைய நந்திபகவானை வணங்க உகந்த தினம் பிரதோஷம். மகாபிரதோஷ தினத்தன்று நந்திக்குக் காப்பரிசி படைத்து வழிபடுவது வழக்கம். தற்காலத்தில் கோயில்கள் சென்று வழிபட முடியாத சூழல் நிலவுவதால், அனைவரும் வீட்டிலேயே சிவபூஜை செய்யவேண்டிய சூழலில் இருக்கிறோம். நந்திபகவான் ருத்ர ஜபம் செய்ததுபோல, ஸ்ரீ ருத்ரத்தின் பொருள் அனைத்தும் பொதிந்த சிவபுராண பாராயணம் செய்வதன் மூலம் சிவனருளையும் நந்திதேவரின் அருளையும் பெறமுடியும். இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வீட்டில் அனைவரும் சிவபுராணம் பாடி சிவபெருமானைத் துதித்து இந்த சனிபிரதோஷ தினத்தைக் கடைப்பிடிக்கலாம்.

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....

சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க.....


சனி கிரகத்தின் பாதிப்பில் இருந்து தப்பிக்க ஓரு சித்தர் எளிய பரிகாரம் ஒன்றை சொல்லியுள்ளார்.அந்த பரிகாரம் வருமாறு: பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும்.
 
அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.
 
பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளூம். இரண்டரை  ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும்.
 
அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். 
 
 
ஒருவருக்கு சனி திசை வந்து விட்டால் கூடவே சந்தேகத்தையும் ஏற்படுத்தி விடுவார். யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டார்கள். அஷ்டமத்து சனி நேரடி சண்டையை உருவாக்காது. நம்மை சேர்ந்த உறவினர்கள் மூலம் பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் வருமாறு....
 
தேவை இல்லாமல் சந்தேகப்படக் கூடாது. உப்பு இல்லாமல் சாப்பிட வேண்டும். சுவையான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க வேண்டும். எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் எள் எண்ணை ஏற்ற வேண்டும். மன நலம் குன்றியவர்களுக்கு உதவ வேண்டும்.
 
பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம்மை மாற்றிக் கொண்டால் சனி பாதிப்பில் இருந்து சற்று தப்பிக்கலாம். 
 
* தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.
 
* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்
 
* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.
 
* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
 
* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
 
* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
 
* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
 
* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
 
* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
 
* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.
 
* கோமாதா பூஜை செய்யலாம்.
 
* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.
 
* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
 
* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
 
* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.
 
* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.
 
* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
 
* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை  கொடுத்து வணங்க வேண்டும்.
 
* தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். 
 
லக்னத்தில் சனி அமர்ந்து உடலில் அபரிமிதமாக ரோமங்கள் காணப்பட்டால் பணம் இல்லாமை, பணமுடை ஏற்படும். அதற்கு
 
* பரிகாரம்,சாதுக்கள் மற்றும் தானம் கேட்போருக்கு ஒரு இரும்பு ஸ்டவ் இனாமாக கொடுக்கலாம்.
 
* சனி இரண்டில் இருந்தால்- நெற்றியில் எள் எண்ணெய் தேய்த்தல் கூடாது.
 
* சனி மூன்றில் இருந்தால்-வீட்டு வாசல் கதவில் மூன்று இரும்பு ஆணி இருக்கச் செய்யவும்.
 
* சனி நான்கில் இருந்தால்- கறுப்பு ஆடைகள், கொள்ளு( தானியம்) தானம் செய்யலாம்.
 
* சனி ஐந்தில் இருந்தால்- வீட்டின் மேற்கு பாகத்தில், செம்பு, வெள்ளி, தங்க உலோகம் இருக்கச் செய்யவும்.
 
* சனி 6-ல் இருந்தால் 40-க்கும் மேல் 48 வாதிற்குள்ள  இடைகாலத்தில்  வீடுகட்டுதல் கூடாது.
 
* சனி7-ல் இருந்தால்- கருப்பு நிற பசுவுக்கு புல் தரலாம். மூங்கில் குழாயில் சர்க்கரையை நிரப்பி வீட்டு வாசலில் பூமியினுள் மூடி வைப்பதுவும் போதுமானது.
 
* சனி 8-ல் இருந்தால்- கல்லில் அல்லது மரப்பலகை நாற்காலியில் அமர்ந்து, தண்ணீரில் ஒரு  ஸ்பூன் பாலை கலந்து குளித்தல் சிறப்பானது.
 
* சனி 9-ல் இருந்தால்-வீட்டின் மொட்டை மாடியில் புல் வளர்த்தல் கூடாது.
 
* சனி 10-ல் இருந்தால்-10-பார்வையில்லாதோருக்கு தானம் செய்யலாம்.
 
* சனி11-ல் இருந்தால்- வீட்டை நீண்ட நாள் பூட்டி செல்லும் போது வீட்டு வாசலில், சிறு குடம் தண்ணீரை வைத்து செல்வது தீமையை அகற்றும்.
 
* சனி 12-ல் இருந்தால்-வீட்டின் கடைசி இருட்டறையில் 12-ம் பாதாம் பருப்பை கறுப்பு துணியில் முடித்து வைப்பது நன்மையூட்டும்.
 
சனியை முறையோடு வணங்கினால் தொல்லைகளை அகற்றிவிடுவார். 
 
 
ஏழரைச் சனி நீங்கும் போது அந்த ராசிக்காரர்கள் அன்றைய தினம் புண்ணிய நதிகள், சமுத்திரம், நீர்த்தடாகங்கள், குளம் போன்றவற்றில் நீராட வேண்டும். இயலாதவர்கள் வீட்டில் உள்ள கிணற்றில் குளிக்கலாம். சமுத்திர ஸ்நானம் செய்யாதவர்கள் நல்லெண்ணை தலையில் வைத்து குளிப்பது சிறப்பு.
 
குலதெய்வ வழிபாடு செய்த பின்பு சிவதரிசனம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் நவக்கிரக சூக்தம் ஜெபம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பசுவிற்கு அகத்திக்கீரை உண்ணத் தருவது மிகவும் சிறப்பு.
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும் தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங்களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான் என்று புலம்புவது உண்டு.
 
அது போன ஜென்மத்து பாவங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர். சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக் கொண்டு தான் இருப்பார், அவரது நேரடிப்பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
 
ஏழரை நாட்டுச் சனி, அஷ்டமச் சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி திசை நடக்கும் போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு. சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும்.
 
உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது. ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ, வைத்து விடிந்த பின் சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும். 
 
சனி பகவான் கால் ஊனமுற்றவர், ஆதலால், உடல் ஊனமுற்றவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது. விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும். கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
 
வாதம் நீக்குபவர்........
 
இந்த சனி பிடித்தவன் சந்தைக்கு போனாலும், கந்தலும் அகப்படாது....
 
இந்த சனியின் பிறந்த நாளிலிருந்து குடும்பத்தை பாடாய்படுத்துகிறது. இப்படியாக சனியை பல கோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
 
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73,000 மைல். குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலையா கோவிலில் கற்சிலையாக தூணில் பெண் உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்திலும் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார். மனித உடலில் தொடைகளுக்கு உடையவர்.
 
குடல் வாத நோய் இவரால் ஏற்படும். மேலும் முதுகு வலி,  முடக்கு வாதம், யானைக் கால், பேய் தொல்லை, மூலநோய், மன தளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பாதித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்

தென்முக தெய்வம்! - தட்சிணாமூர்த்தி தரிசனம்

தென்முக தெய்வம்! - தட்சிணாமூர்த்தி தரிசனம்


தெற்கு முகம் நோக்குவது ஏன்?
ஞானாசாரியனாக- ஞான திருவடிவாக வழிபடப்படும் சிவ பெருமானின் திருக்கோலமே ஶ்ரீதட்சிணாமூர்த்தி திருவடிவம்.

‘தட்சிணம்’ என்பதற்கும் ‘தென்னன்’ என்ற தமிழ்ச் சொல்லுக்கும் தெற்கு, ஞானம், சாமர்த்தியம், ஆற்றல், ஆளுமை, யோகம் மற்றும் வீரம் என்று பல பொருள்கள் உண்டு. இவை யாவற்றையும் உடையவர் ஆதலால் ஶ்ரீதட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர்.

தெற்கு- அழிவைக் குறிப்பது; வடக்கு- அழியாத அமுத வாழ்வைக் குறிப்பது. ஆன்மாக்கள் அமுத வாழ்வை வேண்டி வழிபட ஏதுவாக, இறைவன் தெற்கு நோக்கி அமர்ந்து அமரத் தன்மையை அருளுகிறார். ஆனந்த வடிவினான ஆடல்வல்லானும், சாந்த வடிவினரான ஶ்ரீதட்சிணாமூர்த்தியும் தெற்கு நோக்கியே விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. அஞ்ஞானமாகிய அறியாமையைப் போக்கி ஞானத்தை போதிக்கும் திருவடிவே ஶ்ரீதட்சிணாமூர்த்தி.







சிவனிடத்தில் சக்தி அடங்கிய வடிவம்!
ஆலமர்ச் செல்வனாக- ஆலமரத்தின் அடியில்... சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் மௌனமாக- சொல்லாமல் சொல்லி உபதேசிக்கும் ஞான வடிவம் இது.

சிவனிடத்தில் சக்தி அடங்கிய வடிவமும் இதுவே. ஆம், வெளித் தோற்றத்தில் சலனம் அற்ற சிவ வடிவமாகத் திகழ்ந்தாலும் உள்ளே ஞானமே வடிவான அருட்சக்தி நிறைந்து விளங்கும் சச்சிதானந்த வடிவம் இது.

திருக்கோலத் தத்துவம்...
மோனம் (மௌனம்) நிலை: மோனம் என்பது ஞான வரம்பு. தனது மோனத்தால் நம்மை அழைத்து, திருக்கண் பார்வையிலேயே சிவஞானத்தை தந்தருளும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் வடிவமே பெரும் தத்துவ விளக்கமாக அமைந்துள்ளது.

திருமேனி: பளிங்கு போன்ற வெண்ணிறம். இது தூய்மையை உணர்த்தும்.






முயலகனை மிதித்திருக்கும் வலப் பாதம்: ஆணவ மலம் ஆகிய அறியாமையை நீக்கி ஞானத்தை அளிக்கும் ஆற்றல். அறிவுப் பிழம்பாகிய வடிவம்.

திருக்கரத்தில் உள்ள நூல்: இது சிவஞான போதம். ஞானங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு திகழ்கிறது. ஞானத்தாலேயே வீடுபேறு கிட்டும். நோயாளி யைக் குணப்படுத்தும் மருத்துவர் மருந்துப் பெட்டியைக் கைக்கொண்டு சுமப்பது போல, உயிர்களை உய்விக்க சிவஞான போதத்தைத் தன் கையில் ஏந்தியுள்ளார் இவர்.

திருக்கரத்தில் ருத்ராட்ச மாலை: இது 36 அல்லது 96 தத்துவங்களை உணர்த்துவது. இந்த மாலையைக் கொண்டு பஞ்சாட்சரத்தை பன்முறை எண்ணி, பலகாலும் உருவேற்றி தியானிப்பதே, ஞானம் பெறுவதற்கான நெறி என்பதை உணர்த்துகிறது.

சின் முத்திரை ஞானத்தின் அடையாளம். பெரு விரலின் (கட்டை விரலின்) அடிப் பாகத் தைச் சுட்டு விரல் தொட... ஏனைய மூன்று விரல்களும் விலகி நிற்கும் முத்திரை இது.

அமிர்தக் கலசம்: அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் அளிக்க வல்லது.

தீ அகல் அல்லது தீச்சுடர்: உயிர்களது பிறவித் தளைகளை (பிறப்பு இறப்பு வட்டத்தை) நீக்கும் பொருட்டு ஈசன் செய்யும் சம்ஹாரத் தொழிலைக் காட்டுவது.



நெற்றிக் கண்: காமனை எரித்த கண்ணுதல்.

ஞானமும் வீடுபேறும் அடைய விரும்புவோர், புலன் அடக்கம் உடையவராகி, ஐம்பொறி களைக் கட்டுப்படுத்துதல் வேண்டும்; இதுவே துறவின் சிறப்பு. இதை உணர்த்துவது.

ஆலமரமும், அதன் நிழலும்: மாயை மற்றும் அதன் காரியமாகிய உலகத்தை உணர்த்துவன.

தென்முகம்: நாம் வடக்கு முகமாக சிவனாரை நோக்கி தியானிக்க வேண்டும் என்பது குறிப்பு.

சூழ்ந்துள்ள விலங்குகள்: பசுபதித்தன்மை. அதாவது அனைத்து உயிர்களுக்கும் அவரே தலைவர் என்பதைக் குறிக்கும்.

வெள்விடை: தருமத்தைக் குறிப்பது.

ஆகமங்கள் போற்றும் மூர்த்தங்கள்
ஆகமங்கள், சிற்ப நூல்களில் ஶ்ரீதட்சிணா மூர்த்தியின் பல்வேறு வகைகள் குறிப்பிடப் பெறுகின்றன. ஆகமங்களில் இவரது சக்தி, ‘மேதா ப்ரஞ்யா ப்ரதாயினி’ என்று அழைக்கப் பெறுகிறார்.



ஆகமங்கள் மற்றும் சிற்ப நூல்களில் குறிப்பிடப்படும் ஶ்ரீதட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள்: 
  • ஞான தட்சிணாமூர்த்தி, 
  • யோக தட்சிணா மூர்த்தி, 
  • வீணாதர(கேய) தட்சிணாமூர்த்தி, 
  • மேதா தட்சிணாமூர்த்தி, 
  • வியாக்யான தட்சிணா மூர்த்தி, 
  • வீர தட்சிணாமூர்த்தி, 
  • லட்சுமி தட்சிணாமூர்த்தி. 
  • ராஜ தட்சிணா மூர்த்தி, 
  • கீர்த்தி தட்சிணாமூர்த்தி, 
  • சக்தி தட்சிணா மூர்த்தி, 
  • பிரம்ம தட்சிணாமூர்த்தி, 
  • சுத்த தட்சிணாமூர்த்தி, 
  • திவ்ய தட்சிணாமூர்த்தி.


கேய தட்சிணாமூர்த்தி !

இசை வல்லுனராக, வீணாதர வடிவில் இருப்பவரே வீணாதர தட்சிணாமூர்த்தி.

சிவபெருமான் மீட்டும் வீணையின் நாதமே உயிர்களுக்கு ஆத்ம ஞானத்தை அளிக்கிறது. இவரை ‘கேய தட்சிணாமூர்த்தி’ என்று உத்தர காமிக ஆகமம் கூறுகிறது.

‘கேயம்’ என்பதற்குப் பாடுதல், இசைக்கருவி வாசித்தல் என்றும் பொருள். இந்த வடிவில் முன் இரண்டு கரங்களும் வீணை மீட்டிக் கொண்டிருக்க, பின்னிரு கரங்களில் அட்ச மாலையும், தீ அகலும் உள் ளன.

இவரது இடது கால், ‘உத்குடிகாசன’ அமைப்பு கொண்டதாக இருக்கும்.

சுகர், நாரதர், கந்தர்வர்கள், கின்னரர்கள் ஆகியோருடன் பிராணிகள், விலங்குகள் மற்றும் பூதங்கள் ஆகியனவும் இவரைச் சூழ்ந்திருக்கும்.

இவர் நின்ற அல்லது அமர்ந்த கோலத்திலோ, முனிவர்களால் சூழப்பட்டோ அல்லது அவர்கள் இல்லாமலோ, முயலகன் மீது கால் பதித்தோ அல்லது பதிக்காமலோ ஆல மரத்தின் கீழோ அல்லது ஆலமரமே இல்லாமலோ காட்சி தருவார்.

திருமறைக்காடு (வேதாரண்யம்), நாகலாபுரம், திருப் பாற்றுறை, பெருவேளூர் (மணக்கால் ஐயன்பேட்டை) ஆகிய தலங்களில் இந்த வடிவத்தைக் காணலாம்.

திருப்பூந்துருத்தி- புஷ்பவனேஸ்வரர் கோயிலில் உள்ள வீணாதர தட்சிணாமூர்த்தியை அப்பர் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.

திருத்தரும புரத்தில் உள்ள ‘யாழ்மூரிநாதர்’ வடிவம், வீணாதர தட்சிணாமூர்த்தியின் வடிவமே! ரிஷபத்தின் மீது அமர்ந்து வீணை வாசிக்கும் விமலனை திருவலம் மற் றும் அதன் அருகில் உள்ள மேல்பாடி சிம்மேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கண்டு இன்புறலாம்.

நம் சிந்தை மகிழ்விக்கும் சிவவடிவங்களில் ஶ்ரீதட்சிணாமூர்த்தியை தியானித்து வழிபட, ஞானம் ஸித்திக்கும்; குருவருள் கைகூடும்; தோஷங்கள் அனைத்தும் விலகியோடும்.

பாலும் மலர்களும்!
ஒரு முறை குருநானக், புண்ணிய ஸ்தலங் கள் நிறைந்த ஓர் ஊருக்குச் சென்றிருந்தார். யாத்ரீகர்களால் ஊர் நிரம்பி வழிந்தது.

குருக்கள் தங்கும் மடத்துக்குச் சென்று தங்குவதற்கு இடம் கேட்டார் குருநானக்.

மடம் ஏற்கெனவே நிரம்பி வழிந்தது. எனவே, ‘இடம் இல்லை’ என்று குருநானக்கிடம் எப்படிச் சொல்வதென தவித்தார் மடத்தின் தலைமைத் துறவி.

ஆகவே, குருநானக்கிடம் வாயால் சொல்லாமல், ஒரு டம்ளர் நிறைய பாலை வழிய வழியக் கொண்டு வந்து கொடுத்தார். ‘அதாவது மடம் நிரம்பி வழிகிறது, சிறிதும் இடம் இல்லை’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.


குருநானக் புரிந்து கொண்டார். அவர் தன்னிடம் இருந்த மல்லிகை மலர்களை எடுத்து அந்தப் பால் டம்ளரில் போட்டார். பாலில் அவை மென்மையாக மிதந்தனவே தவிர, பால் வழிந்து சிதறவில்லை.

‘தங்குவதற்குச் சிறிது இடம் கொடுத்தாலே போதும்... எந்த விதத்திலும் உங்களுக்குத் தொந்தரவு தர மாட்டேன். நான் மிக எளியவன். அதே நேரம் மல்லிகையின் வாசனையைப் போல புகழ் சேர்ப்பேன்’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார் குருநானக்.

அதைப் புரிந்துகொண்ட தலைமைத் துறவி, குருநானக்கை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.

Sunday, 5 July 2020

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் | ஆன்மிக செய்திகள் / திருக்கதைகள் / Bhakthi Vlog

ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும் 
ருத்ராட்ஷத்தின் - மகிமை
ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது?
              சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார்.  எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முகம் ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும்
ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா?
                ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.  எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம்.  நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.


                     சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.  ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.  இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில்  வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.  ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்கிறார்களே? 
                          குளித்தவர்கள்தான் சோப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா? ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அது போலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும்.
                          ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும்.  எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம்  அணிந்து கொள்ளுங்கள். எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல  ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,

ருத்ராட்ஷத்தில் முகமா? அப்படியென்றால் என்ன?  யார், யார் எத்தனை முகம் கொண்ட ருத்ராட்ஷம் அணியலாம்?
                        ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம்,  இதற்குத்தான் முகம் என்று பெயர்.  ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.  ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான்.  எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க  எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
                           அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது. பகவானின் திருமுகம் ஐந்து.  நமச்சிவாய ஐந்தெழுத்து.  பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்).நமது கை கால் விரல்கள் ஐந்து.  புலன்கள் ஐந்து.  ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.  ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு.  இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம்.  ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.


பெண்கள் ருத்ராட்ஷம் அணியக்கூடாது என சிலர் சொல்கிறார்களே?
                    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம்.  பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.  எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  மேலும்,                 சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.

எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாமா?

                   பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர்.  அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும்  எப்போதும் அணிந்திருப்பதுண்டே? இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல.  உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.

 ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டுமா?
                  இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.  ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே.  ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்,  அதைப் பொருட்படுத்தக் கூடாது.  இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும்.  

ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில்  இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.  ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார்.  சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?.  அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.  ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது.  நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை.  நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.

Also Read :  சிவா ரூபமின்றி, லிங்க ரூபமாக காட்சியளிக்கும் சிவனும், லிங்க வகைகளும்  |  ஆன்மிக செய்திகள்

நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?

                  முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே.  இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.  நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார்.  இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம்.  அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

சரி ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டேன், இதன் பலன்கள் தான் என்ன?  
நிராடும் போது ருத்ராட்ஷம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.  பாவங்களினால் தான் நமக்குக் கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்ஷம் அணிவதால் கொடிய பாவங்கள் தீரும்.  இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும்.

                    மேலும் ருத்ராட்ஷம் அணிபவருக்கு லஷ்மி கடாஷ்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வர்யங்களும் ஏற்பட்டு பகவானின் பேரின்பமும், ஆனந்தமும் கிடைக்கும் என்று சிவ மஹா புராணம் அறுதியிட்டுக் கூறுவதையும் கருத்தில் கொள்க.

                   இது மட்டுமல்ல ருத்ராட்ஷம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய்  போன்றவற்றின் தீவிரம் குறைவதாக வெளிநாட்டவர்களின் ஆய்வுகள் கூறுகின்றன.  எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்ஷத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது.  திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிந்து தினந்தோறும் 108 முறை எழுத்தாலோ  மனதலோ பஞ்சாட்சரத்தை சொல்லிவந்தால் 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும்.

ருத்ராட்ஷம் அணிவதால் கடவுளின் கருணை கிட்டுமா?

                  சர்வ நிச்சயமாக அவன் அருளாலே அவன் தால் வணங்கி அவர் கருணை செய்தால்தான் அவருடைய நாமத்தைக்கூட நாம் சொல்ல முடியும்.  அப்படியிருக்க அவர் ருத்ராட்ஷத்தையே நமக்கு அளித்துள்ளாரே அதனால் திருநீறு தரித்தல், ருத்ராட்ஷம் அணிதல், பஞ்சாட்சர மந்திரமான "ஓம் நமசிவாய"  உச்சரித்தல், இம்மூன்றும் ஒரு சேரச் செய்து வந்தால் முக்தி எனும் மஹா பேரானந்தத்தை  அடைவீர்.  இம்மூன்றும் இந்து தர்மங்கள், தர்மத்தை விடாதவர்களை இறைவன் கைவிடமாட்டார்.  

மேலும் நவகிரஹங்கள் நன்மையே செய்யும், (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, ராகு-கேது)  தோஷத்தின் தாக்கங்கள் குறையும்.  ருத்ராட்ஷம் அணிந்திருக்கும் வேலையில் உயிர் பிரிந்தால் சிவபெருமான் திருவடியை அடைந்து நற்கதி எற்படும்.  பேய், பிசாசு, பில்லி, சூனியம், மந்திரம், தந்திரம், இவை அனைத்தும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது.  ஆகையால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும். ஒருவர் ஏழுஜென்மங்கள் தொடர்ந்து புன்னியம் செய்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு ருத்ராட்ஷம் அணியும் மஹா பாக்கியம் கிடைக்கும்,.


நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

     இத்தனை மேன்மைகள் இருந்தும் சிலர் திருநீறு, ருத்ராட்ஷம் அணியத் தயங்குகிறார்களே?

                     உலகில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் அவர்களின் மத சின்னங்களை அணிய வெட்கப்படுவதில்லை.  நாம் நமது மதச் சின்னங்களாகிய விபூதி, ருத்ராட்ஷம் மற்றும் நமசிவாய என்ற ஜபம் ஆகியனவற்றை ஏன் விடவேண்டும்? இதற்காக யாராவது நம்மைக் கேலி பேசினாலும் பொருட்படுத்தக்கூடாது.  அப்படிப் பேசுகிறவர்களா நமக்குச் சோறு போடுகிறார்கள்?  அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்?  ஆனால் மதச் சின்னங்களை அணிந்து நமசிவாய என்று எல்லாக் காலத்திலும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள சிவபெருமான் நிச்சயம் காப்பாற்றுவார்.  அவரவர், தங்கள் வாழ்க்கையிலேயே இதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.  ருத்ராட்ஷம் அணிபவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும், ருத்ராட்ஷதைக் கழற்றவே கூடாது.  யார் என்ன சொன்னாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.  சிவபெருமானின் அனுக்கிரஹமும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு ருத்ராட்ஷம் கிடைக்கும். இத்தனை மேன்மைகள் இருந்தும் இதனைப் படித்துப் பார்த்துத் தெரிந்த பின்பும் மனிதராகப் பிறந்தவர்கள் ருத்ராட்ஷம் அணியவில்லை என்றால் அவர்கள் இப்பிறப்பிற்கே பிரயோஜணமில்லாமல் போய்விடுவார்கள் ஆகையால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் இந்த ருத்ராட்ஷ சேவையை என் உயிரினும் மேலாக கருதி இலவசமாக செய்கிறேன் அதனால் தயுவு செய்து ருத்ராட்ஷம் வாங்கி ஒரு விநாடி நேரம் கூட கழற்றாமல் எப்பொழுதும் அனிந்திருப்பவர்கள் மட்டுமே உங்கள் முகவரியை SMS செய்யவும் ருத்ராட்ஷத்தை வாங்கி வீட்டு பூஜை அறையிலோ, சுவாமி படத்திலோஅணிந்துவிட்டால் மஹா பாவம் ருத்ராட்ஷத்தை அணிந்துவிட்டு கழற்றிவிட்டால் மிக மஹா பாவம். உங்களால் அணிய முடியவில்லை என்றால் எங்கள் முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும் மற்றவர்களுக்காவது உதவும் ஒம் நமசிவாய
"திருச்சிற்றம்பலம்"
                                                           
பத்ம புராணம் கூறவது:
"எவன் ஒருவன் சைவனானாலும், வைஷ்ணவனானாலும், சாக்தனானாலும், காணாபத்யனானாலும், சௌரனானாலும் இறக்கும் தருவாயில் சிரசில் ருத்ராட்ஷத்தை தரித்திருப்பானாகில், எல்லா பாபங்களினின்றும் விடுபட்டு மறு பிறவியில் சகல சுகங்களையும் அனுபவித்து மோக்ஷத்தை கிரமமாய் பெறுவான்"..                                                     

பத்ம புராணத்தில் பரமேஸ்வரன் தன் குமாரனாகிய கார்திகேயனுக்கு ருத்ராக்ஷத்தின் மகிமையை வர்ணிக்கிறார். ருத்ராக்ஷத்தைப் பார்ப்பது லக்ஷம் பங்கு புண்ணியாமானால், அதனை அணிவது அதினினும் 10 கோடி பங்கு புண்ணியத்தைப் பயக்கும்.
ருத்ராக்ஷம் தீர்த்தங்களிலும் விசேஷமான தீர்த்தம் என கருதப்படுவதால் அதை அணிந்து கொண்டு செய்யும் பூஜை, ஜபம், தானம், பிதுர்கடன்கள் எல்லாம் நூறு மடங்கு விசேஷ பலனைக் கொடுக்கும். ருத்ராக்ஷத்தால் புனிதமாக்கப்பட்ட நீரை உடலில் தெளித்துக்கொள்ளவேண்டும். ஆகர்ஷண சக்தி பெற்ற இந்த ருத்ராக்ஷம் அணிபவருக்கு அவர்கள் நல்ல மனிதர்களைச் சந்திக்கையில் அவர்களது நல்ல சக்திகளை ஆகர்ஷிக்கும் சக்தி உண்டாகும்.