Showing posts with label Temples. Show all posts
Showing posts with label Temples. Show all posts

Tuesday, 1 November 2022

கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்! | அருள்தரும் எட்டு லட்சுமிகள்

 கண்ணாகக் காக்கும் கண்ணிறைந்த பெருமாள்!🔴🔴

==================

🔵🔵  புதுக்கோட்டை மாவட்டம்

மலையடிப்பட்டிக்குச் சென்றால் ஐந்து கோலங்களில் பெருமாளையும், எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் மலையடிப்பட்டியில் இருக்கிறது. 


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து கிள்ளுக்கோட்டை வழியாகச் சென்றால் 17-வது கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோயில் அமைந்துள்ளது.


அருள்தரும் எட்டு லட்சுமிகள்


நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும், கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சிதருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா, சுற்றிலும் அஸ்வினி, தேவர்கள், கின்னரர், கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ திவாகரமுனிக்குக் காட்சிகொடுத்தபடி இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார்.


அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும், புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி-பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும், லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும், தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும், தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீபலட்சுமியுமாக எட்டு லட்சுமிகளை ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்!


சாட்சியாக நிற்கும் தூண்கள்


திருமால் கண்மூடித் தூங்கும் பாவனையை அறிதுயில் என்பார்கள். கண் மூடி இருந்தாலும் நடக்கும் எல்லாச் செயலும் அவன் அறிந்தவாறே நடைபெறுகிறது என்பது இதன் பொருள். அரங்கருக்கு முன்புறம் உள்ள இரண்டு தூண்கள் அரி நேத்ர தூண்கள் என்றும் திருநேத்ரத் தூண்கள் என்றும் சொல்லப்படுகின்றன. நடைபெறும் அனைத்தையும் அந்தத் தூண்களின் வழியே அறிந்தவாறு திருமால் கண் துயில்கிறார் என்று சொல்லப்படுகிறது. நம் வருகை முதல், பிரார்த்தனைவரை அனைத்தையும் அந்தத் தூண்கள் மவுன சாட்சியாக நின்று பெருமாளிடம் பரிந்துரைத்துக்கொண்டிருக்கின்றன என்பது ஐதீகம்.


திருமாலின் திருவிளையாடல்


திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே, தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார்.

#ஆனந்த்ஜோதிடர்

“பேர் தெரியாது சாமி. அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு, மாடுகளைக் காப்பாத்தறதனால ‘பட்டிசாமி’ன்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு” என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.


சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக்கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர், கிம்புருடர், வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார்.

#ஆனந்த்ஜோதிடர்

ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து, “இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்?”. “இதுதான் நாங்க கும்படற சாமி” என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய், “அரங்கா இது என்ன சோதனை” என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் பூஞ்சையாய் சிரித்தான். அவன் யார் என உணர்ந்தார். மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார்.

#ஆனந்த்ஜோதிடர்

பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும், அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர், நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி, கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார்.


நாமெல்லாம் ஆடு, மாடுகள்


பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில், கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.


கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள்கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன.


தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி, மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது.


திவாகர முனி வரலாற்றோடு தொடர்புடைய குகைக்கோவில் என்பதால் திருவனந்தபுரத்துக்கு முன்னாலேயே தோன்றிய குடைவறைத் திருக்கோயில் மலையடிப்பட்டி அருள்மிகு கண்ணிறைந்த பெருமாள் திருக்கோயில்.


திருமாலே மலை. அவர் அடியில் நம்மை சரணாகதி செய்து கொண்டு பட்டியில் அடைபட்ட ஆடு, மாடுகளாக இருப்பவர்கள் நாம். நமக்கு வேண்டுவனவற்றை அவ்வப்போது தந்து நம்மைக் காப்பவன் அவன் என்பதை உலகுக்கு உணர்த்துபவர் திருமலையடிப்பட்டி பெருமாள்.


அருகிலேயே சிவபெருமானுக்கு என ஒரு குடைவறைக் கோவில் குடையப்பட்டு சப்தமாதர்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். குடைவறையின் அமைப்பைக் கொண்டு கி.பி. எட்டாம் நூற்றாண்டு வாக்கில் குடையப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.


திருமங்கை ஆழ்வார், உடையவர், நாதமுனிகள், விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். பொதுவாக கண் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்காக வேண்டிக்கொண்டு தரிசனம் செய்வதும் சரியானவுடன் தரிசனம் செய்து காணிக்கைப் பிரார்த்தனை செய்து விட்டுச் செல்வதும் இங்கு மரபாக உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், ஏகாதசி மாதப்பிறப்பு நாட்கள், சிரவணம், ஆகிய நாட்களிலும் தரிசனம் செய்தால் அல்லல் நீங்கி குபேர சம்பத்துக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


தீபாவளி கார்த்திகை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் மிகச்சிறந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.


தினமும் காலை ஏழு மணி முதல் பன்னிரண்டு மணி வரையும், மாலை நான்கு முதல் 6.30 மணிவரையும் தரிசனத்திற்காகக் கோயில் திறந்திருக்கும்.🌺

Sunday, 12 November 2017

ஆண்டுக்கு ஒருமுறை தங்க நிறத்தில் ஒளிரும் அதிசய நந்தி பகவான் !! சூரிய ஒளிக்கதிரால் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்!

ஆண்டுக்கு ஒருமுறை தங்க நிறத்தில் ஒளிரும் அதிசய நந்தி பகவான் !!
சூரிய ஒளிக்கதிரால் தங்க நிறமாக மாறும் நந்தீஸ்வரர்!


  பொதுவாக ஒவ்வொரு கோவில்களிலும் ஒரு அதிசயம் இருக்கும். ஆனால் அவை நமக்கு தெரியமாலிருக்கும். அப்படி நமக்கு தெரியாத நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு கோவில் தான் அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோவில்.....!!

🌞 இக்கோவில் எழில்மிகு அழகுடன் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்துள்ளது.

🌞 ஸ்ரீ அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோவில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழைமை வாய்ந்த கோவிலாகும்.

🌞 இந்த கோவிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, பாலமுருகன், நவகிரகம் மற்றும் கோயில் வளாகத்தில் மிக பெரிய நந்தி உள்ளது.

🌞 கோவில் ராஜகோபுரத்தை கடந்து, நந்தீஸ்வரர் மீது, சூரிய ஒளிக்கதிர்கள் பட்ட, சிறிது நேரத்தில் தங்க நிறமாக, நந்தீஸ்வரர் காட்சியளிப்பார்.

🌞 ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம், 3ம் தேதியன்று, சூரிய ஒளியானது, கோவிலின் ராஜகோபுரம் மீது பட்டு, பின், நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரம் நந்தீஸ்வரர் தங்க நிறமாக ஒளிர்கிறார்.

🌞 ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

Tuesday, 20 June 2017

மேளதாளம் இல்லாமல் செல்லும் ஏழுமலையான்:

மேளதாளம் இல்லாமல் செல்லும் ஏழுமலையான்: 


திருப்பதி அருகிலுள்ள மங்காபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி இருந்தாள். அவளது பெயர் கங்கம்மா. சுண்டல் விற்பது அவளுக்குத் தொழில். அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் வாழ்க்கை நடத்தினாள். கணவர் போய்விட்டார். பிள்ளைகளும் இல்லை. "ஏண்டா பிறந்தோம்" என்று அடிக்கடி புலம்புவாள்.
அந்தக் காலத்தில், காட்டுப்பாதையில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்துதான் திருமலைக்குச் செல்வார்கள். அப்படி ஒருநாள் பக்தர்கள் கூட்டம் அதிகாலைப் பொழுதில் மலையேறிக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தை மலை அடிவாரத்தில் கண்ட பாட்டி, மலையேறுபவர்களிடம் சென்று, "ஐயா! நீங்க எல்லாரும் மலைக்கு எதற்காகச் செல்கிறீர்கள்?'' என்று ஒன்றும் அறியாதவளாய்க் கேட்டாள்.
அவளுடையஅப்பாவித்தனமான கேள்வியைக் கேட்டதும் அவர்கள் சிரித்து விட்டனர். "என்ன பாட்டி இது கேள்வி? திருமலையின் அடிவாரத்தில் இப்படியும் ஒருத்தி இருக்கியே! மேலே பெருமாள் கோயில் இருப்பது திருப்பதிகாரியான உனக்கே தெரியாதா?'' என்று கோபித்துக் கொண்டனர்.

உண்மையில், மலையில் கோயில் இருப்பதைக் கூட அறியாமல் இருந்தாள் அவள். ஒரு பக்தர் மட்டும் அவள் மீது இரக்கம் கொண்டு, "அம்மா! மலை மேல் ஒரு சுவாமி இருக்கிறார். அவனைப் போய் தரிசித்தால் இனிமேல் இப்படி பிறந்து சுண்டல் விற்கும் நிலை இருக்காது. அவனை "கோவிந்தா" எனச் சொல்லி கும்பிட வேண்டும். அப்படி செய்தால் நீ செய்த பாவங்களெல்லாம் தீர்ந்து விடும்,'' என்று அவளுக்குப் புரியும் வகையில் எளிமையாக எடுத்துச் சொன்னார். இதைக் கேட்டாளோ இல்லையோ! சுண்டல் கூடையோடு திருமலைக்கு ஏறினாள். ஏழுமலையப்பனைக் கண்குளிரக் கண்டாள். "அப்பனே! கோவிந்தா, உன்னை வணங்கினால் இனி பிறக்கவே மாட்டேனாமே! அந்த பக்தர் சொன்னாரே! எனக்கும் இனி பிறவி வேண்டாமையா'' என்று மனம் உருகிச் சொன்னாள்.

தரிசிக்க வந்த பக்தர்கள் மலையை விட்டுக் கிளம்பினார்கள். அவள் மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது, ஒரு வயோதிகர் அங்கு வந்தார். "அம்மா! சுண்டல் கொடு'' என்று கேட்டார். அவளும் கொடுக்க, சாப்பிட்டு விட்டு நடையைக் கட்டினார்."ஐயா! சுண்டலுக்கு காசு கொடுத்துட்டு போங்க,'' என்றாள் பாட்டி."அம்மா! நான் ஒரு கடன்காரன், கல்யாணத்துக்குக் கடன் வாங்கிவிட்டு, வருமானத்தையெல்லாம் வட்டியாகக் கட்டிவிட்டு கஷ்டப்படுகிறேன். சுண்டலுக்கு கூட பணமில்லை. நாளை இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேனே!'' என்றார் கெஞ்சலாக."சரி, நாளை கொண்டு வாங்க,'' என விட்டுவிட்டாள் மூதாட்டி. 
தன் முன்னால் வந்து நின்றது உலகிற்கே படியளக்கும் ஏழுமலையான் என்பதைப் பாமரப் பெண்ணான கங்கம்மா எப்படி அறிவாள்!

மறுநாள், சொன்னபடி அந்த வயோதிகர் வரவில்லை. "இப்படி ஏமாற்றி விட்டாரே கிழவர்" என அவள் பொருமிக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் இறந்தும் போய்விட்டாள். பாட்டிக்கு பணத்துக்கு பதிலாக, மேலான வைகுண்டத்தையே கொடுத்து விட்டார் பரந்தாமன். ஆனாலும், அவர் மானிடப்பிறப்பெடுத்து சீனிவாசனாக பூமிக்கு வந்தவர் இல்லையா! பாட்டிக்கு மறுநாள் காசு கொடுப்பதாக வாக்களித்து விட்டு, கொடுக்கவில்லையே! 
இதனால் தெற்குமாடவீதியிலுள்ள அசுவ சாலையில், இப்போதும் விழாக்காலங்களில் ஏழுமலையான் பவனியாக வரும் போது, பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் அவர் ஒளிந்து கொண்டு செல்கிறார்.

ஸ்ரீநிவாச சரணம் சரணம் பிரபத்யே!

ஆலய அதிசயங்கள்!!

ஆலய அதிசயங்கள்!! 

 

  1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
  2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
  3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
  4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
  5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே. 
  6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
  7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
  8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
  9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
  10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
  11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
  12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
  13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
  14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
  15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
  16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
  17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
  18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
  19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
  20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
  21. தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.
  22.  அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.

Monday, 17 April 2017

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்





சிவஸ்தலம் பெயர்   
திருந்துதேவன்குடி (தற்போது நண்டாங் கோயில் என்று வழங்குகிறது)
 

இறைவன் பெயர்    
கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
 

இறைவி பெயர்    
அருமருந்துநாயகி, அபூர்வநாயகி

பதிகம்    

திருஞானசம்பந்தர் - 1

எப்படிப் போவது    


கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.


ஆலய முகவரி    

அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில், நண்டாங்கோவில்,
திருந்துதேவன்குடி, திருவிசலூர் அஞ்சல், கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் - PIN - 612105.

இவ்வாலயம் காலை 8-30 மணி முதல் மாலை 6-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.




தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி உமாதேவி ஒரு சமயம் கைலாயத்தில் இருந்து இத்தலத்திற்கு வந்து நண்டு உருவத்தில் இறைவனை வழிபட்டாள். 

கோவிலைச் சுற்றி உள்ள அகழியில் இருந்த நீரில் பூத்துக் குலுங்கிய தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். தேவேந்திரனும் அதே சமயம் இத்தலத்து இறைவனை வழிபட்டு வந்தான். அகழியில் தன்னால் பயிரடப்பட்ட தாமரை மலர்களை நண்டு கொண்டு வந்து இறைவனுக்கு சாத்தி வழிபடுகிறதே என்று கோபம் கொண்டான். 

நண்டு உருவத்தில் இறைவனை வழிபடுவது பார்வதி தேவியே என்று அறியாத இந்திரன் லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. 

அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது. நண்டு உருவில் இருந்த உமாதேவியைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான் லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி நண்டு உருவில் இருந்த சக்தியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். 

உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். எனவே இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. நண்டு சிவனை வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.
கற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. 

டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர் ஒரு நிறப்பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.
 
கோவில் நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. 

திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு கோபுரமும் வாயிலும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வீநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். 

முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன என்று நம்பப்படுகிறது. கோவிலில் இந்த அபிஷேக தீர்த்தம் விலைக்கு விற்கப்படுகிறது.
 
இரண்டாம் கட்ட கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை மேற்கு உட் பிரகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. 

கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சினாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட் பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். 

இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். எல்லா வகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக கடகராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் அனைத்து தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

1. மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை
திருந்துதேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே. 

2. வீதிபோக்கு ஆவன வினையை வீட்டுவ்வன
ஓதியோர்க்கு அககப்படாப் பொருளையோ விப்பன
தீது இல் தேவன்குடித் தேவர் தேவு எய்திய
ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே. 

3. மானம் ஆக்குவ்வன மாசு நீக்குவ்வன
வானை உள்கச்செலும் வழிகள் காட்டுவ்வன
தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி
ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே. 

4. செவிகளார் விப்பன சிந்தையுட் சேர்வன
கவிகள்பா டுவ்வன கண்குளிர் விப்பன
புவிகள்பொங் கப்புனல் பாயும் தேவன்குடி
அவிகளுய்க் கப்படும் அடிகள் வேடங்களே. 

5. விண்ணுலா வுந்நெறி வீடுகாட் டுந்நெறி
மண்ணுலா வுந்நெறி மயக்கந்தீர்க் குந்நெறி
தெண்ணிலா வெண்மதி தீண்டு தேவன்குடி
அண்ணலான் ஏறுடை யடிகள் வேடங்களே. 

6. பங்கமென் னப்படர் பழிகளென் னப்படா
புங்கமென் னப்படர் புகழ்களென் னப்படுந்
திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி
அங்கமா றுஞ்சொன்ன அடிகள் வேடங்களே. 

7. கரைதலொன் றும்மிலை கருதவல் லார்தமக்
குரையிலூ னம்மிலை உலகினின் மன்னுவர்
திரைகள் பொங்கப் புனல் பாயும் தேவன்குடி
அரையில் வெண் கோவணத் தடிகள் வேடங்களே.

8. உலகமுட் குந்திறல் லுடையரக் கன்வலி
விலகுபூ தக்கணம் வெருட்டும் வேடத்தின
திலகமா ரும்பொழில் சூழ்ந்த தேவன்குடி
அலர்தயங் கும்முடி யடிகள் வேடங்களே. 

9. துளக்க மில்லாதன தூய தோற்றத்தன
விளக்கமாக் குவ்வன வெறிவண்டா ரும்பொழில்
திளைக்கும் தேவன்குடித் திசைமுகனோடு மால்
அளக்கவொண் ணா வண்ணத் தடிகள் வேடங்களே. 

10. செருமரு தண்துவர்த் தேரமண் ஆதர்கள்
உருமரு வப்படாத் தொழும்பர்தம் உரைகொளேல்
திருமருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி
அருமருந்தாவன அடிகள் வேடங்களே. 

11. சேடர் தேவன்குடித் தேவர் தேவன்தனை
மாடமோங்கும் பொழில் மல்கு தண் காழியான்
நாடவல்ல தமிழ் ஞானசம்பந்தன
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லையாம் பாவமே.

Friday, 27 January 2017

Arupadai Veedu Murugan Temples

Arupadai Veedu Murugan Temples

There are about six arupadai veedu murugan temples situated in Tamilnadu.
1. Thiruchendur Murugan Temple
2. Palani Murugan Temple
3. Swamimalai Murugan Temple Thanjavur
4. Thiruthani Murugan Temple Chennai
5. Pazhamudhircholai Madurai, Tamilnadu
6.Thiruparamkundram temple Madurai Tamilnadu

Friday, 13 January 2017

Mangalvar Vrat Katha – Story of Tuesday Fasting in Hinduism

Mangalvar Vrat Katha – Story of Tuesday Fasting in Hinduism

Tuesday fasting, or Mangalvar Vrat, is dedicated to Lord Hanuman and to Mangal Grah. In Hinduism, every fast has one or more story associated with it and those people observing the Vrat read or listen to the story on the fasting day. There are several stories associated with Tuesday fasting. This particular Mangalvar Vrat Katha is associated with Lord Hanuman.

Once there was an old lady who was an ardent devotee of Lord Hanuman. She used to observe Mangalvar Vrat. On Tuesday, the old lady used to break her fast at a Hanuman Temple. She used to share whatever food she had with Lord Hanuman.

The old lady was living with her daughter-in-law and she used to get four chappatis on Tuesday from her daughter-in-law. The old lady used to offer two chappatis to Lord Hanuman and eat the other two.



One day the daughter-in-law found out that the old lady was offering chappatis to Hanuman and not eating it fully and wasting them. Next Tuesday she only gave two chappatis. The old lady gave one to Lord Hanuman and ate the other one.

When the daughter-in-law came to know about this she was very angry and on next Tuesday she only gave one chappati.

The old lady split the chappati into two and gave a part to Lord Hanuman and ate the other part.


The daughter-in-law thought that there is no point in feeding the old lady as she was wasting food at her family’s expense. So on next Tuesday she did not give any food to the old lady.

The old lady reached the temple empty handed and started praying to Hanuman.

Soon a young boy appeared there and asked her why is not breaking the fast and sharing her food with Hanuman.

The old lady told what happened and that today she has nothing to share with Hanuman.

The young boy invited the old lay to his home and promised her that he will provide her daily with milk, chappati, sugar and butter and she can share it with Lord Hanuman.

The old lady was very happy and the young boy asked her to stay with him. The daughter-in-law never bothered about her as she considered the old lady to be a burden.

But soon things began to change at the daughter-in-law’s home. There were diseases, accidents and other misfortunes at her home and they became extremely poor that they could not afford even a single meal.
The daughter-in-law soon realized that all this was due to her denying food to the old lady. She then decided to bring back the old lady. She went to the young boy’s home and asked the old lady to pardon her for her mistakes.

The old lady pardoned her and told the young boy that it is time for her to leave. She wanted the young boy to come with her. The young boy said that whenever she wants to see him she can come to the Hanuman Temple.

That night the old lady had a dream in which she saw that the young boy was in reality Lord Hanuman. Tears trickled from the old lady’s eyes. She could not ask for more – It was Hanuman that was protecting her and feeding her.

Soon the old lady narrated the incident to the family members.

The daughter-in-law then started to observe Mangalvar vrat and the family was soon blessed with prosperity.

You may also like to read

How to observe Mangalvar Vrat?
Hindu Fasting Dates

Thursday, 13 October 2016

ராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி!

ராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி!

கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கு திசையில், சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது பட்டீஸ்வரம்.

இந்தத் தலத்தில் சிவனைக் குறித்து பராசக்தி தவம் புரிந்தபோது, காமதேனு தனது மகளான ‘பட்டியை’ தேவிக்கு உதவி செய்யும் பொருட்டு இவ்விடத்துக்கு அனுப்பினாள். அந்தப் பட்டி, தன் வாழ்நாள் முழுவதும் ஈசனைப் போற்றி, மனமுருகி சேவைகள் பல புரிந்து மோட்சத்தைப் பெற்றாள். பட்டி என்பவள் ஈஸ்வரனைச் சரணடைந்த இடமென்பதால், பட்டீச்சுரம் என்றானது;  இங்கே கோயில் கொண்டிருக்கும் தேனுபுரீஸ்வரருக்கும் ‘பட்டீச்சுரர்’ என்றும் திருப்பெயர் ஏற்பட்டது. பட்டீச்சுரம் என்பது மருவி, காலப்போக்கில் பட்டீஸ்வரம் ஆனது என்கிறார்கள்.

ராமர் பிரதிஷ்டை செய்த சிவபெருமான் சோழ, பல்லவ, நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட திருக் கோயில் இது. 4 வாயில்களும், 7 கோபுரங்களும், ஞானவாவி, ராமர் தீர்த்தம், தபஸ் கேணி, தெப்பக் குளம், காயத்ரி குளம் உட்பட 5 தீர்த்தங்களையும் கொண்ட திருக்கோயில் இது.

கருவறையில் பட்டீச்சுரர் இருக்க, கிழக்கு திசையில் ஞானாம்பிகை, மேற்கில் முருகன், வடக்கில் துர்கை, தெற்கில் விநாயகர் என நான்கு தெய்வங்களின் சந்நிதிகளையும் நான்கு திசைகளில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

ராமர், விஷ்ணுவின் அவதாரம் என்றபோதிலும், மூன்று மகாக்ஷேத்திரங்களில் மட்டும், ராமரே சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். அவற்றில் ஒன்று, இந்தப் பட்டீஸ்வரம் திருக்கோயில். வாலியை மறைந்திருந்து அழித்து, யுத்த தர்மத்தை மீறியதால், சாயஹத்தி தோஷம் பெற்ற ராமபிரான், அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இத்திருக்கோயிலில் சிவனை பிரதிஷ்டை செய்துள்ளார். தான் பிரதிஷ்டை செய்த சிவனுக்கு அபிஷேகம் செய்ய தன்னுடைய வில்லைக் கொண்டு ‘கோடி தீர்த்தம்’ உருவாக்கியிருக்கிறார்.

இங்கு இருக்கும் நந்தி, பட்டீஸ்வரருக்கு நேர் எதிரே இல்லாமல், சற்று ஒதுங்கியவாறு உள்ளது. குழந்தை ஞானசம்பந்தர் இக்கோயிலின் உள்ளே வரும்போது, வாட்டும் வெயிலால் அவரின் பாதங்கள் சுடாமல் இருக்க, நிழல் தந்தார் இந்தப் பட்டீஸ்வரர். முத்துப் பந்தலில் குழந்தை ஞானசம்பந்தர் நடந்து வரும் அழகைக் காண சிவனே நந்தியை சற்றுத் தள்ளி நிற்கச் சொன்னதாக ஐதீகம்.

பட்டீஸ்வரத்தின் நாயகி!

தேனுபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவனுக்கான திருக்கோயில் இது என்றபோதிலும், இங்கு வீற்றிருக்கும் நாயகி துர்கையின் பெருமைகளால் பட்டீஸ்வரம் துர்கை திருக்கோயில் என்றுதான் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

சோழ மன்னர்கள் போற்றி வழிபட்ட அம்பிகை இவள். இங்குள்ள துர்கை, தனது இடது தொடையில் கையை ஊன்றியபடி, ஒரு காலை சற்று முன் நிறுத்திக் காட்சியளிக்கிறாள். தொடையில் இருக்கும் அவளது கையில் கிளி ஒன்றையும், பிற கைகளில் வில், அம்பு, சங்கு, கத்தி, கேடயம் ஆகியவற்றையும் கொண்டு, காலால் மகிஷாசுரனை மிதித்தவாறு காட்சியளிக்கிறாள். பொதுவாக துர்கையின் வாகனமான சிங்கம், தன் தலையை வலதுபுறம்தான் வைத்திருக்கும். ஆனால், இங்கு சிங்கம் தனது தலையை இடதுபுறமாகத் திருப்பியிருப்பது ஒரு தனிச் சிறப்பு. இந்த வடிவம், துர்கையின் சாந்த நிலையைக் குறிக்கிறது.

பொதுவாக ஒரு மனிதனை ராகுவும் கேதுவும்தான் ஆட்சி செய்வதாகக் கூறுவோம். அந்த ராகுவையே ஆட்சி செய்பவள் இந்தப் பட்டீஸ்வரம் துர்கை. அவ்வகையில், ராகு தோஷம் உள்ளவர்கள், ராகு காலத்தில் இத்திருக்கோயிலுக்கு வந்து, துர்கையை மனமுருகி தரிசித்தால், தோஷங்கள் நிவர்த்தியடைந்து நற்பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களில், சுப்ரமணியம்- ஷ்யாமளா தம்பதியரிடம் பேசினோம். “மன உளைச்சல் அதிகமானால் உடனடியாகக் குடும்பத்துடன் கிளம்பி இந்த துர்கையைக் காண வந்துவிடுவோம். சங்கடங்கள் ஏற்படும்போது, ‘எல்லாம் நன்மைக்கே! பட்டீஸ்வரம் துர்கை துணை இருப்பாள்’ என்று மனதில் நினைத்தோமேயானால், நிச்சயம் மன அமைதி கிடைத்துவிடும்” என்று நம்பிக்கை மிளிரச் சொல்கிறார்கள்.

“மன அமைதி மட்டுமன்றி, திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இங்கு வந்து துர்கையை முழுமனதுடன் வேண்டிக்கொண்டால், நினைத்தது நிச்சயம் நிறைவேறும்” என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார், இந்தக் கோயிலின் சித்தானந்தா சிவாச்சார்யர்.

இவர்களின் இந்த நம்பிக்கையையும் சரணாகதியையும் தாயுள்ளத்துடன் ஏற்று, அருள்மழைப் பொழிந்து வருகிறாள், பட்டீஸ்வரத்தின் நாயகியாம் துர்கை. அதற்கு சாட்சியாகத் திகழ்கின்றன, அனுதினமும் இந்த ஆலயத்தை தேடிவரும் பக்தர்களின் கூட்டமும், அவர்களது வழிபாடுகளும்.
நாமும் நம் மனத்துயரங்கள் நீங்க, மங்கலநாயகியாம் பட்டீஸ் வரம் துர்கையை வழிபட்டு வரம்பெற்று வருவோம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை; மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

பிள்ளை வரம் அருளும் பாலைவனேஸ்வரர் திருகோவில்

பிள்ளை வரம் அருளும் பாலைவனேஸ்வரர்

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்திலிருந்து சுமார் 1.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருபாலைவனநாதர் திருக்கோயில். அப்பரால் பாடப்பெற்ற தேவாரத் திருத்தலங்களுள் 27 தலங்கள் சோழவள நாட்டில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று இந்த பாலைவனேஸ்வரர் திருக்கோயில் ஆகும்.

இத்திருத்தலத்தில் ஸ்வாமியும் அம்பாளும் திருமணக்கோலத்தில் காட்சியளிப்பதாக ஐதீகம். அதாவது, ஸ்வாமி சந்நிதியின் வலப் புறம் அம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. இப்படி, அம்பாள் ஸ்வாமியின் வலப்பாகத்தில் சந்நிதி கொண்டிருப்பதை, கல்யாண கோல அமைப்பு என்று சிறப்பிப்பார்கள். ஆகவே, இந்த ஆலயத்துக்கு வந்து அம்மையையும் அப்பனையும் மனமுருகி வழிபட்டுச் செல்ல, தடைகள் யாவும் நீங்கி, விரைவில் கல்யாணம் கைகூடும் என்கிறார்கள், பக்தர்கள்.

இக்கோயிலின் சிறப்பம்சம் இது மட்டும்தானா? இல்லை. வேறு சிறப்புகளும் இவ்வாலயத்துக்கு உண்டு.

ஒரு முறை தாருகாவனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடவுளைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்தது. மேலும் தவத்தில் தாங்களே சிறந்தவர்கள் என்றும், தங்கள் மனைவிமார்களாகிய பத்தினி பெண்களின் கற்பே பெரிதென்றும் அவர்கள் கர்வம்கொண்டிருந்தனர். அந்தக் கர்வத்தின் காரணமாக கடவுளை நினைக்கவும், வழிபடவும் மறந்து போனார்கள்.

அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து அந்த ரிஷிகள் தவம் புரியும் தாருகாவனத்துக்கு அனுப்பினார். அதேபோல் தானும் பிச்சாடனர் வடிவம்கொண்டு அந்த முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி அவதாரம்கொண்ட திருமால், முனிவர்கள் அனைவரையும் தன் அழகால் மயக்கி, அவர்களின் தவத்தையும், அதன் பயனாகப் பெற்ற உயர்வையும் கெடுத்தார். இந்த நேரத்தில் சிவபெருமான் முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் மனைவியரிடம் பிச்சை வேண்டினார். அவரின் அழகில் மயங்கிய ரிஷி பத்தினிகள் சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் துவங்கினர்.

தாங்கள் வந்த வேலை முடிந்ததால் சிவபெருமானும், திருமாலும் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்றனர். இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள் தங்கள் மனைவிகள் ஒரு அந்தணரின் அழகில் மனம் மயங்கியதை எண்ணி கோபம்கொண்டனர். இதற்கெல்லாம் காரணம் சிவபெருமான்தான் என்பதை அறிந்த அவர்கள் அனைத்துலகுக்கும் தலைவனான சிவபெருமானை தண்டிக்க எண்ணினர்.

அதன்படி விஷ விருட்சங்களை யாகப் பொருட்களாக்கி, வேம்பு, நெய் போன்றவற்றை தீயிலிட்டு வேள்வி ஒன்றை நடத்தினர். அந்த வேள்வியில் இருந்து பல ஆயுதங்கள் தோன்றின. அந்த ஆயுதங்களை ஈசனைக் கொல்ல ஏவிவிட்டனர். அவற்றைத் தடுத்த சிவனார் யாகத்தில் இருந்து தோன்றிய புலியைக் கொன்று தன் ஆடையாக்கிக் கொண்டார். இந்த அற்புத நிகழ்ச்சி நடந்தது இத்திருத்தலத்தில் ஆகும்.

பாலைவனம், புன்னாகவனம், பிரம்மவனம், அரசவனம் போன்ற பல பெயர்களைக்கொண்ட இத்திருத்தலத்தில்தான் பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் வனவாசத்தின்போது தௌமிய மகரிஷியின் ஆலோசனையின் பேரில் வந்து வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை அறிந்து உணர்ந்து, அதன் பயனாக பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்றும் கூறப்படுகிறது.

இத்திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 370 அடி நீளமும், 260 அடி அகலமும் உடையது. முன்புறத்தில் 70 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை கோபுரமும், அதன் பின் 45 அடி நீளம் கொண்ட மூன்று நிலை கோபுரமும் அமைந்துள்ளன.

மூன்று நிலை கோபுரத்தைக் கடந்து சென்றால், மகா மண்டபம் அமைந்துள்ளது. அதன் இடப்புறம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இதற்கு நேர் எதிரில் நால்வர் சந்நிதி வடக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது.

மூலஸ்தானத்தில் பாலைவனநாதர் லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார். ஆலயத்தின் வடக்குப்புறத்தில் அழகே வடிவான தவளவெண்ணகை அம்பிகை சந்நிதி தனிக்கோயிலாக அமைந் துள்ளது. வரம் வேண்டி வந்தாருக்கு குறைவின்றி அருள்புரிந்து வாழவைக்கும் கற்பகத்தருவாய் காட்சி தருகிறாள், இந்த அம்பிகை. இந்த அன்னையை ஒரு கணம் தரிசித்தாலே போதும்; நம் கவலைகள் யாவும், இருந்த இடம்தெரியாமல் பறந்தோடிவிடும். அவ்வளவு சாந்நித்தியம் அம்பாளின் திருமுகத்தில்!

கருவறையில் இருந்து துவங்கி வலமாக வந்தால், கருவறை கோஷ்ட மூர்த்தங் களாக அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன்,
துர்கை, பிட்சாடனர் ஆகியோ ரைத் தரிசிக்கலாம். இவை மட்டுமன்றி, உட்பிராகாரத்தின் மேற்புறத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் ஸதல விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. தொடர்ந்து, வசிட்டர் பூஜித்த ராமலிங்கம்; மகாலட்சுமி, அர்ஜுனன் பூஜித்த அர்ஜுன லிங்கம், மலையத்துவசன் பூஜித்த மலையத்துவச லிங்கம் ஆகிய சந்நிதிகளையும் தரிசிக்கலாம்.

மேலும் வடக்குப்புற மண்டபத்தில் 63 நாயன்மார்கள் சந்நிதியும், வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும், கோயில் தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளன. வடகிழக்கு திசையில் நவகிரகங்கள், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் சந்நிதிகள் அமைந்துள்ளன. மற்றொரு சிறப்பாக உட்பிராகாரத்தின் வலப்புறத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

திருமண பாக்கியம் மட்டுமன்றி குழந்தை பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது இந்த ஆலயம். இதுகுறித்து பேசிய கோயிலின் நீலகண்ட சிவாசார்யர், ‘‘குழந்தை வரம் வேண்டுவோர், தொடர்ந்து 11 செவ்வாய்க்கிழமைகள் இங்கு வந்து, அம்பாளையும் ஸ்வாமியையும் வேண்டிக் கொண்டு, நெய் தீபம் ஏற்றி வழிபடவேண்டும். 11-வது வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டுச் சென்றால், பாலைவனேஸ்வரரின் திருவருளால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்றார்.

அப்படி, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மீண்டும் கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் வஸ்திரம் சமர்ப் பித்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

நாமும் ஒருமுறை பாலைவனேஸ்வரரைத் தரிசித்து, அவரின் திருவருளால் வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.

Tuesday, 11 October 2016

திராத கடன் தொல்லைகள்,நீக்கும் அற்புத திருத்தலங்கள்

  • மிகக்கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரை வழிபடுவதும் மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவதும் மிக சிறந்த பரிகாரமாகும்.
  • ஹோமங்களில் சிறப்பு வாய்ந்தது மிருத்யுஞ்ஜய ஹோமம்.சிவாலயங்களில் ஈசான்ய பகுதியில் வீற்றிருக்கும் காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00. மணி ராகு காலத்தில் வழிப்பட்டு மிருத்யுஞ்ஜ ஹோமம் நடத்துவதால் பெறும் பயனைப் பெற்று நோய்,மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.
  • குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்படும் போதும் உடனடியாக அருகிலுள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பது அந்த விநாடியே கஷ்டங்கள் குறைவதற்கு மகரிஷிகள் கூறிய ரகசிய பரிகாரமாகும்.
  • வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிசேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்.கடன் தொல்லைகள் அகலும்.
  • வெள்ளெருக்கு விநாயகரை விட்டு அறைகளில் உயரத்தில் வைக்க வீட்டில் ஏதும் பூத கண சேஷ்டைகள் இருந்தால் விலகி விடும்
  • சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட தொழில்,வழக்கு சாதகமாகும்.21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகும்.
  • இரண்டு சர்ப்பங்கள்  இணைந்தது போல உள்ள நாகராஜ சிலைக்கு வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்கு ராகு காலத்தில் அபிசேகம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து செவ்வரளி  பூக்கள் சாற்றி நெய்தீபம் ஏற்றி தம்பதியினர் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதியினர் ஓற்றுமையுடன் அன்னியோன்யமாக வாழ்வார்கள்.
  • பித்ரு தோசம் உள்ளவர்கள்  தொடர்ந்து அமாவாசைக்காலங்களில் நெய்தீபம் ஏற்றி பெருமாளை சேவிக்க பித்ரு தோசம் விலகும்.
  • வெள்ளிக்கிழமை நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்துவேறுபாடு நீங்கும்.
  • திங்கள் கிழமை காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள் நந்திக்கு ஜோடி அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர. குடும்பத்தில் அமைதி பிறக்கும்.
    வாழ்க வளமுடன் எளிய பரிகாரங்கள்.!!
  • எழரை சனி,அஷ்டமத்து சனி நடப்பவர்கள் தீய பலன்களை குறைய திங்கட்கிழமை சிவபெருமானுக்குப் பால் அபிசேகம் செய்து வழிபட கெடுபலன்கள் நீங்கும்.வேத சாஸ்திரத்தில் சொல்லபட்டது.சனிபகவான் சன்னதியில் தேங்காய் உடைத்து இரண்டு முடியிலும் நல்லெண்ணெய்யில் தீபம் போடுவது சக்தி வாய்ந்த பரிகாரம்.
  • சிவன்கோவிலில் அமைந்துள்ள வன்னிமரம்,வில்வமரத்தினை 21  முறை வலம் வந்து நமது குறைகளை கூற உடனடியாக பலன் கிடைக்கும்.
  • ஹஸ்தம் நட்சத்திரம் வரும் நாளில் துர்க்கைக்கு சிகப்பு பட்டு துணி வாங்கி சாற்றி 27 எலுமிச்சை கனி மாலை சாற்றி,சிகப்பு தாமரையை பாதத்தில்  வைத்து துர்க்கையை குங்குமம் வைத்து அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர திருமணத்தடை அகன்று விரைவில் திருமணம் நடக்கும்.
    விழப்புரம் அருகே சிங்கிரி கோவில்,பூவரசங்குப்பம்,பரிக்கல் ஓரே நேர்கோட்டில் அமைந்த இம்மூன்று நரசிம்மர்களை ஓரே நாளில் தரிசித்தால் தீராத பணகஷ்டமும் கடனும் தீரும்,
  • புத்திர பாக்கியமில்லாத தம்பதியினர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.
  • கலியுகத்தில் காரியசித்திக்கு துர்க்கையை இராகு காலங்களில் வழிபட காரியசித்தி உண்டாகும்.
  • மதுரை ராமநாதபுரம் சாலையில் உள்ள இடைகாட்டூர் ஸ்தலத்தில் நவகிரகங்கள் முதன் முதலில் இந்த பூமிக்கு வந்ததால் இங்கு வந்து வழிப்பட்டால் நவகிரக தோஷம்
    நீங்கும்.
  • ராமேஸ்வர ஆலயத்தில் இருப்பவை 22 தீர்த்தங்கள்.இவை எல்லாவற்றிலும் தீர்த்தமாட இயலாதவர்கள்,கடல்நீரின் பகுதியாக இருக்கும் அக்னி தீர்த்தத்திலும்,ஸ்ரீ ராமன் உருவாக்கிய கோடி தீர்த்தத்திலும் நீராடினால் பாவங்கள் அகலும்.
  • சிவன் கோவிலில் காலபைரவரையும்,விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டால் செய்வினை தோசம் விலகும்.
  • ஆயிரமாயிரம் தேவதைகள் உறைந்து அருள்பாவிக்கும் கோயில் அபிசேக கோமுக தீர்த்தத்தை விசாக நட்சத்திரம் வரும் நாளில் தங்கள் வியாபார தலங்களில் தெளித்து வர வியாபார விருத்தி ஏற்படும்.
  • பிரதோச காலத்தில் ரிஷிபாரூட மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய. மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையைக் கண்டால் எல்லா நோய்களும் வறுமையும் நீங்கும்.
  • மாதா மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.
  • ஓவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின் வாகனமான எருமை மாடுகளுக்கு கொடுது வழிபட மரண பயம் நீங்கும்.
  • பஞ்சகவ்ய கலவையை பால்,தயிர்,நெய்,கோமூத்திரம்.,சாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்
  • நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் எளிய பரிகாரங்கள்.!!
  • பிரதோச காலத்தில் ரிஷிபாரூட மூர்த்தியான மகேசனை தேவியுடன் வழிபடுவோர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்த பலனடிவார்கள்.குறிப்பாக ஈசான்ய. மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாரதனையைக் கண்டால் எல்லா நோய்களும் வறுமையும் நீங்கும்.
  • மாதா மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்ய விரைவில் திருமணம் நடைபெறும்.
  • ஓவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்று அகத்தியரிடம் ஆசி பெற்ற அகத்திய கீரையை எமதர்மனின் வாகனமான எருமை மாடுகளுக்கு கொடுது வழிபட மரண பயம் நீங்கும்.
  • பஞ்சகவ்ய கலவையை பால்,தயிர்,நெய்,கோமூத்திரம் சாணம்,வாரம் ஓரு முறை தெளிக்க தீட்டு தோசம்,நிக்கி லட்சுமி கடாட்சம் கிட்டும்.
  • நூறு வருஷம் வாழ நினைப்பவர்கள் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து அதற்குறிய மந்திரங்களை சொல்லி வர நூறு வருஷம் வாழ வாய்ப்புண்டு.
  • சிறிது பச்சரிசியும் சிறிது எள்ளையும் சிறிது தினையும் சேர்த்து மாவாக்கி எறும்பு புற்றுகளில் தூவ வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழம் போது அவற்றின் வயிறு வாழ்ந்த புண்ணிய லோகத்தை அடையலாம்.,
  • கொடுத்த கடன் திரும்பி வர அருகில் உள்ள பைரவர் சன்னதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமை நெய்தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடவும்,
  • உயிரையும் உடலையும் பாதுகாக்கக் கூடிய உடனடி நிவர்த்தி பரிகாரங்கள்,1,மகாமிருத்யுஞ்ஜய ஹோமம் திருக்கடையூரில் செய்வது,2,ஸ்ரீவாஞ்சியம் சென்று வாஞ்சிநாதரை வழிபடுவது,3,லட்சுமி நரசிம்மரை வழிபடுவது,யோக நரசிம்மரை வழிபடுவது,ஆஞ்சிநேயரை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.
  •  ஈசான்ய மூலையில் ஓரு செம்பில் நீர் ஊற்றி அதன் மேல் ஓரு தேங்காயை வைத்து கலசம் ஏற்றி வைக்க வீட்டின் வாஸ்து குறைபாடு நீங்கும். 
  • இராகு காலத்தில் கடைசி அரைமணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறந்த பரிகார நேரம்,துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்ற சகல கஷ்டங்களும் மறையும்..!!
  • சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும்.
  • அருகிலுள்ள ஆஞ்சநேயரை 27 நாட்கள் 9 முறை வலம் வந்து முடியும் அன்று வடை மாலை சாற்ற வேலை வாய்ப்பு கிட்டும்.
  • செவ்வாய்க்கு அதிபதியான முருகனை செவ்வாய் தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட 3 மாதத்தில் வேலை கிடைக்கும்.
  • வெள்ளிகிழமை காலை 10.30 முதல் 12.00 மணி ராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரைத்தண்டு திரி கொண்ட நெய் தீபம் ஏற்றி வழிபட தெய்வ குற்றம் குடும்ப சாபம் அகலும்..
  • இரட்டை பிள்ளையாருக்கு ரோகினி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.
  • வாகன விபத்து வாகனம் வைத்து தொழில் செய்பவர்கள் அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் முருகனுக்கு வேலில் எலுமிச்சை பழம் சொருகி அர்ச்சனை வழிப்படலாம்.
    ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் வலது திருவடி கால் விரலில் அதர்வண வேத மந்திரம் அனைத்தும் அடங்கியுள்ளதால் அவரை உள்ளன்புடன் பூஜிப்பவர்கள் வீட்டிலிருந்து 5 மைல் சுற்றளவிற்கு செய்வினை மந்திரங்கள் செயல்ழந்து நிற்கும்.
  • அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாள் லட்சுமி நரசிம்மர்,லட்சுமி ஹயக்ரீவர் ஆகியோரை தரிசித்து கேசரி,பாயாசம்,நைவேத்யம் செய்ய தொழில் வியாபாரம் நிரந்தர வேலை லட்சுமி கடாட்சம் கிட்டும்.
  • விஷ்ணுபதி புண்ணிய காலமான வைகாசி,ஆவணி, கார்த்திகை,மாசி மாத பிறப்பு நாளன்று தேவர்களும்,அசுரர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கும் காலமாவதால் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிப்பட்டால் நாம் செய்யும் பிரார்த்தனை  உடனே நிறைவேறும்..
  • தரித்திரருக்கு அளிக்கும் தானம்,பூஜை நடக்காமலிருக்கும் கோயிலுக்கு பூஜை ஏற்பாடு செய்தல்,அநாதைப் பிணங்களின் தகனத்துக்கு உதவுதல் ஆகிய மூன்றும் அசுவமேத யாகம் செய்வதற்கு சமமாகும்.
  • ஆலயத்தில் உள்ள திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சை பழத்தை சொருகினால் திருஷ்டி செய்வினை தோசங்கள் நீங்கும்..
  • பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதியை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட சர்ப்ப தோசம்,கால சர்ப்பதோசம்,நீங்கும்.
  • வியாழக்கிழமை ஓரு வேளை விரதமிருந்து மாலையில் ஆலயத்தில் தட்சிணாமுர்த்திக்கு நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வர 6 மாதத்திற்கு மேல் கருத்தரிப்பு ஏற்படும்.
  • ருத்ராட்சம்,சாளகிராமம் துளசி,வில்வம்,உள்ள இடத்தில் இருந்து 10 கி.மீ க்கு துரத்திற்க்கு செய்வினை அணுகாது.
  • ஞாயிற்றுகிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் துர்க்கையை வழிப்பட்டால் நாம் பிரார்த்தனை உடனே நிறைவேறும்.
  • வாழைத்தண்டு நூல் திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும்,குலதெய்வ சாபமும் நீங்கும்.
  • புதன்கிழமை காலை 6.00 மணிமுதல் 7.00 மணிக்குள் புதன் ஹோரையில் ஓரு தட்டில் பாசிப்பயிறு வைத்து அதன் மேல் கற்பூரம் வைத்து 17முறை வலம் வந்து வழிபட கல்வித்தடை நீங்குவதுடன் நினைவாற்றல் பெருகி கல்வியில் மிகுந்த நாட்டம் ஏற்படும்.
    எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாத்தைப் பாராயணம் செய்தால் தோசங்கள் விலகும்.
  • ஸ்ரீ நரசிம்மரின் எந்த கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள் பில்லி,சூன்யம்,திருஷ்டி,திருமணத்தடை,விலகி நன்மை பெறலாம்.
  • தேங்காயை வாங்கி நன்றாக கழவி மஞ்சள் பூசி வீட்டிலுள்ள பூஜை அறையில் வைத்து தினமும் சூடம்,சாம்பிராணி.,பத்தி காண்பித்து வழிபட்டு வந்தால் திருஷ்டி,வாஸ்து தோசம் நிவர்த்தியாகும்..!!
  • ஸ்ரீ முஷ்ணம் பூவாரக முர்த்தி பூ தேவியுடன் எழந்தருளியுள்ள சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட கடுமையான புத்திர தோசம் நீங்கி புத்ர பாக்கியம் கிட்டும்.
  • சுகப்பிரசவமாக திருச்சி தாயுமானவர் மலைக்கோவிலுக்கு நேர்ந்து சுகப்பிரசவமானவுடன் நேர்த்தி கடன் செலுத்த வேண்டும்.
  • திங்கள்கிழமை வரும் அமாவாசை அமாசோம வாரமாகும். அன்று மரங்களுக்கு சிறந்ததாக கருதப்படும்.அரச மரத்தை அபிசேகம் செய்து அலங்கரித்து பூஜித்து 108 முறை வலம் வர புத்திர பாக்கியம் கிட்டும்.
  • நினைத்த காரியம் நடக்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துர்க்கை சன்னதி அருகில் உள்ள சித்தர் சன்னதியில் 11 நாட்கள் தொடர்ந்து சூடம் ஏற்றி வழிப்பட்டு நினைத்த காரியம் நடந்தவுடன் சித்தருக்கு மலர் கீரிடம் வைக்க வேண்டும்.
  • மாரகம் அல்லது அதற்கு இணையான கண்டம் ஏற்படும் காலங்களில் திருச்சி அருகே திருபைஞ்சீலி திருக்கோவிலுக்கு சென்று அங்குள்ள எமதர்மனுக்கு மகம் நட்சத்திரம் வரும் நாளில் அபிசேகம் செய்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்..மரணப்படுக்கையில் அவதிப்படுபவர்களுக்கு இக்கோயிலில் உள்ள காணப்படும் மணிகர்ணிகை தீர்த்தத்தை தந்தால் வேதனை இன்றி
  • திருக்கடவூர் பெருமைக்கு இணையானது திருவீழிமிழலை என்ற புகழ் பெற்ற திருத்தலம்.மார்க்கண்டேயர் மட்டுமா.?என் திருவடியை பற்றிய எவருக்கும் எம பயம் இல்லை.!! என்று காட்டியருளிய தலம்.திருவீழிமிழலை திருத்தலம் ஆயுள் பாவ தோஷத்தை போக்குவதில் முதன்மையான திருத்தலம்.
  • நாச்சியார்கோவிலில் பூர்விக சொத்து விவாகரம்,பங்காளி பகை,தொழில் இழப்பு,அவப்பெயர்,கனவு பயம்,நாகதோச பாதிப்பு நீங்கவும்,நாச்சியார்கோவில் ஸ்ரீ நிவாச பெருமாள் ஸ்தலத்தில் உள்ள கல் கருடனுக்கு 7 வியாழக்கிழமை  அர்ச்சனை செய்தால் பிரார்த்தனை நிறைவேறும்.
  • மணப்பாறை குளித்தலை சாலையில் ஜயர் மலையடிவாரத்தில் உள்ள கம்பத்தடியில் கட்டுக் கட்டினால் பில்லி,சூனியம்,ஏவல்,செய்வினை முதலியவை நீங்கி நலம் கிட்டி வருகிறது என்பது நம்பிக்கை..
  • திருவண்ணாமலையில் சதுர்த்தி திதியன்று திருவண்ணாமலையை கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் காமக்காட்டை கடந்தவுடன் அங்குள்ள தேயு நந்தீஸ்வரரின் கொம்புகள் வழியாக அருணாசல ஈசனை தரிசனம் செய்வது சதுர்முக தரிசனம் ஆகும்.இவ்வாறு செய்துவந்தால் விரைவில் நல்ல வேலை கிடைக்கும்.
  • இராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமி தீர்த்தத்தில் நீராடிய பிறகுதான் குபேரன் அளவிலாச் செல்வம் அடைந்ததாக வரலாறு..அமாவாசை அன்று நீராடினால் வறுமைகள் அகலும்
    சிதம்பரம் தில்லை வடக்கு பார்த்து அமர்ந்துள்ள தில்லை காளியை நல்லெண்ணெய் குங்குமம் வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி அபிஷேகம் செய்தால் கடன்,பிணி,ரோகம்,நீங்கும்,
  • திருத்தேங்கூர் வெள்ளிமலை நாதரை வழிபட்டால் ஜாதகத்தில்  உள்ள அனைத்து தோசங்களும் நீங்கும்.செல்வம் சேரும்.
  • செய்த பாவத்திற்க்கும்,செய்யாத பாவத்திற்கும் பரிகாரமாக காஞ்சீபுரம்.சித்ரகுப்தர் கோயிலுக்கு கொள்ளு உளுந்து அவல் படைத்து அவற்றை பசுக்களுக்கு அளித்தால் பாவங்கள் நீங்கும்.
  • இராமேஸ்வரம் திருத்தலத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் குளித்து ராமநாத சுவாமியை வழிபாடு செய்தால் சர்ப்பதோசம்.,செவ்வாய் தோசம்,புத்திரதோசம்,களத்திரதோசம்,யாவும் விலகி வீடும் 
  • திருமோகூர் சக்கரத்தாழ்வாருக்கு 21 செவ்வாய் கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபடக் கொடுத்த கடன் திருப்பி வரும்.
  • ஞாயிற்றுகிழமை மாலை ராகு காலத்தில் அருகில் உள்ள ஆலயத்தில் காலபைரவருக்கு செவ்வரளி மாலை நெய் தீபம் 27 வாரம் ஏற்றிவர திருமணம் நடக்கும்.48 வாரம் நெய்தீபம் ஏற்ற எதிரி,பில்லி,சூன்யம்,சனி நாகதோசம்,மரணபயம் நீங்கும்.
    எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
  • சனிதிசை  ஏழரைசனி,அஷ்டமத்து சனி நடப்பவர்கள் தொடர்ந்து 7 வாரம் அருகில் உள்ள ஆஞ்சிநேயர் கோயிலில் வென்னெய் சாற்ற சனியால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
  • ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமபிரான் தனக்கு ஏற்பட்ட சனிதோசம் நீங்க கடல் நடுவே அமைத்த நவகிரகங்கள் உள்ள ஸ்தலம் தேவிப்பட்டினம்.இந்த நவபாஷாண சிலைகளுக்கு 9 நவதானியங்கள் கொண்டு வழிபாடு செய்தால் நவகிரக தோஷம் நீங்கும்.
  • கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு அபிசேகம் செய்தாலும் அரிசி மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் விரைவில் கடன்கள் அடைப்படும்.குறிப்பாக தெட்சிணாமுர்த்திக்கு மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும்.கடன் தொல்லை நீங்கும்.
  • கும்பகோணம் சுவாமிமலை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் உள்ள கபர்தீஸ்வரர் கோயிலில் சூரியன் சனி நேருக்கு நேர் ஓரே நேர்கோட்டில் உள்ளது. இங்கு வந்து அர்ச்சனை செய்தால் தந்தை மகன் கருத்து வேறுபாடு நீங்கும்.
  • எந்த திசை நடந்தாலும் ஏற்ற பலன்களை அடைய திருவாரூர்..குன்றக்குடி ஓரே திசையில் உள்ள நவக்கிரக வழிபாடு செய்வது நல்லது.
  • நேரம் காலம் சரியில்லாதவர்கள் தஞ்சாவூர் அருகிலுள்ள திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டிஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்வது உத்தமம்.
  • மாரடைப்பு இதய சம்பந்தமாக நோய்கள் நீங்க சென்னை பூந்தமல்லியிருந்து 54 ஏ பஸ். இராமர் கோயில் ஸ்டாப் திருநன்றவூர் இருதயபாலீஸ்வரர்.
  • பதவி உயர்வு காஞ்சிபுரம் ஸ்ரீ வாமன உலகளந்த பெருமாள் விழப்புரம் அருகிலுள்ள பரிக்கல் நரசிம்மர் ஆலயம்.
  • விரும்பிய இடத்திற்க்கு இடம் மாறுதல் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி ஆஞ்சிநேயர் ஆலயம்.
  • கடன் நிவர்த்தி ஸ்தலம் கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ருண விமோசன லிங்கேஸ்வரர் 11 திங்கள் கிழமை அர்ச்சனை.!!
    எளிய பரிகார ஸ்தலங்கள்.!!
  • திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் உள்ள ருண விமோசன.லிங்கேஸ்வரர்.
    மதுரை ஓத்தக்கடை நரசிங்கம் யோக நரசிம்மர்.
  • திண்டுக்கல் தாடி கொம்பு சௌந்திரராஜ பெருமாள் கோயில் ஸ்வரன ஆகர்ஷன பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாடு.
  •   வேலூர் மாவட்டம் சோளிங்கபுரம் யோக நரசிம்மர் வழிபாடு.
  •   திருவாரூர் கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ருண விமோச லிங்கேஸ்வரர்  11 திங்கள் கிழமை அர்ச்சனை.  வாழ்க வளமுடன்

Sunday, 9 October 2016

"ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் "

ஒப்பிலியப்பனா? உப்பிலியப்பனா?


        கும்பகோணத்திற்க்கு அருகில் உள்ள திவ்யதேசம் “உப்பிலியப்பன் கோயில்,” இங்குள்ள பெருமாளை “உப்பிலியப்பன்“ என அழைக்கக் கூடாது என்றும் “ஒப்பிலியப்பன்” என மட்டுமே அழைக்கவேண்டும் என்றும் 30 வருடங்களுக்கு முன் நடுநிலைப்பள்ளி தமிழ் பாடநூல்களில் ரா.பி. சேதுப்பிள்ளை என்னும் தமிழறிஞரின் கட்டுரை பாடமாக இருந்தது.
        ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் கோயில்கள் திவ்யதேசங்கள் என அறியப்படுகின்றது. நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், மற்றும் பேயாழ்வார் என நான்கு ஆழ்வார்களாலே மங்களாசாசனம் செய்யப்பட்ட சன்னதி  உப்பிலியப்பன் கோயில்.
        பிரும்மாண்டபுராணத்தில் இக்கோயிலின் வரலாறு இவ்வாறு காணப்படுகிறது “ம்ருகண்ட மகரிஷியின் புதல்வர் மார்க்கண்டேயர்” இத்தலத்தில் பெருமாளைக் குறித்து தவம் செய்யும்போது... துளசி செடியின் கீழே சிறு குழந்தையாய் ஸ்ரீ மகாலக்ஷ்மியை கண்ட மார்க்கண்டேயர் குழந்தையை எடுத்து வளர்க்க... பின்பு ஸ்ரீ மகாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்ள பெருமாள் வயோதிக பிராமண வடிவில் பங்குனி மாதம், ஏகாதசி, திருவோணம் கூடிய சுபதினத்தில் வந்து மார்க்கண்டேயரிடம் பெண் கேட்க மார்க்கண்டேயரோ “என் பெண்ணோ சிறுகுழந்தை அவள் சமையலில் லவணம் (உப்பு) சேர்க்க மறந்துவிட்டால் நீரோ கோபம் கொள்வீர் என தயங்க...
                        
        வயோதிக பிராமண வடிவில் வந்த பெருமாள் உம்பெண் உப்பு சேர்க்காமல் சமைத்தாலும் கூட நான் அதை அமுதமாக ஏற்றுக்கொள்வேன் என பெருமாள் பதிலுரைக்க, வந்திருப்பது மகாவிஷ்ணு என பின்பு அறிந்து மார்க்கண்டேயர் பெருமாளுக்கு தன் பெண்ணை திருமணம் செய்துகொடுத்த ஸ்தலம் இது .
        பெருமாள் வாக்குக்கிணங்க இன்றும் இந்த சன்னதி பிரசாதங்களில் உப்பு சேர்ப்பதில்லை எனவே உப்பு சுவையை நீக்கிய பெருமாள் என்பதால் ” லவண வர்ஜித வேங்கடேசன்” (லவணத்தினை -உப்பினை விலக்கிய) என்கிறது புராணம். உப்பு இல்லாத பெருமாள் - உப்பில்லா அப்பன் – உப்பிலியப்பன் என்று அழைக்கிறோம். 108 திவ்ய தேசங்களில் இந்த திவ்ய தேசத்தில் மட்டும் தான் உப்பில்லாத பிரசாதம்.
        நம்மாழ்வார் தனது திருவாய்மொழி (6-3-9) மங்களாசாசனத்தில் தன்னொப்பாரில்லப்பன் என பாடுகிறார். இதனால் தனக்கு ஒப்பார் இல்லாத அப்பன் – ஒப்பில்லா அப்பன் – ஒப்பிலில்லாத அப்பன் - என்பதால் ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கிறோம். 
        உப்பிலியப்பன் சன்னதியில் எழுந்தருளியிருந்த ஆச்சார்யஸ்வாமியும், ஸ்ரீவைஷ்ணவ பேரறிஞருமாகிய, வைகுண்டவாசி ஸ்ரீ உ.வே. ஸ்ரீராம தேசிகாச்சார் என்னும் ஸ்வாமி ஒப்பிலியப்பன் உப்பிலியப்பன் என்னும் இரண்டும் சரியே எனக் கடிதம் எழுதி அதனை ஏற்றுக்கொண்டு ரா.பி.சேதுபிள்ளையும் பதில் எழுதியதையும் ஸ்ரீ ராம தேசிகாசார் ஸ்வாமிகளின் குமாரரரும் ஆச்சார்யன் ஸ்வாமியும், போற்றுதலுக்குரியவரும் நமது பேரன்பிற்குரியவருமாகிய, ஸ்ரீ. உ..வே. வ.ந. கோபால தேசிகாசார்ய ஸ்வாமி உறுதி செய்கிறார்.
ஆச்சார்யன் ஸ்வாமி ஸ்ரீ. உ..வே. வ.ந. கோபால தேசிகாசார்ய ஸ்வாமி
        பொதுவாக தமிழ் அறிஞர்கள் சிலர் சமய விஷயத்தில் தமிழ் மொழி பற்று என்னும் ஆர்வத்தினால், ஆய்வு இன்றி சமய விஷயங்களில் கருத்துகளை பதிவு செய்வது குழப்பத்தினை உண்டாக்குகிறது. ரா.பி. சேதுப்பிள்ளையின் கருத்து மாறிவிட்டது ஆனால் அது வெளியில் பரவலாக வெளிவராததால் பாடப்புத்தகத்தில் படித்த பலரின் நிலை ஒப்பிலியப்பன் என்பதே சரி உப்பிலியப்பன் என்பது தவறு என எண்ணும்படி செய்துவிட்டது. இனியாவது.... வடமொழி புராணத்தில் உள்ள உப்பிலியப்பனையும் திராவிட வேதமான ஆழ்வார்கள் வாக்கின்படி ஒப்பிலியப்பன் என்பதையும் பொருள் உணர்வோம். 
"ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருவடிகளே சரணம் "

Wednesday, 5 October 2016

Kanipaka Shri Varasiddhi Vinayaka Temple

Kanipaka Shri Varasiddhi Vinayaka Temple 
 
The Moola Vigraha of Ganesha is considered to be a Swayambhu murti (self-originated or of divine origin and not man made).Sri Varasiddhi Vinayaka as up-holder of 'Truth' The swayambhu idol of Kanipakam is the up-holder of truth. Day to day disputes between people is resolved by taking a 'special oath'. The people in the dispute take a holy dip in the temple tank and swear before the lord. It is taken as gospel truth. 

The Kanipaka Shri Varasiddhi Vinayaka Temple located at Kanipakam in Chittoor district in Andhra Pradesh. The Moola Vigraha of Ganesha is considered to be a Swayambhu murti (self-originated or of divine origin and not man made).

The temple was constructed in the early 11th century CE by the Chola king Kulothunga Chola I and was expanded further in 1336 by the Emperors of Vijayanagara dynasty.

"Kani" means wetland and "Pakam" means flow of water into wetland. According to the legend of the temple there were three brothers and each one had a handicap. Viz., Dumb, Deaf and Blind. They were earning out their livelihood by cultivating a small piece of land.

In olden days water was drawn from the well by way of 'Piccota System'. As one of them used to irrigate the field through the channels, the other two used to ply on the Piccota. On one such operation they found that the water in the well got dried up and they could no longer continue their job. One of them got into the well and started digging it up. He was taken aback to see the iron implement hitting a stone like formation.

Later, he was shocked to see blood oozing out from it. Within in a few seconds the entire water in the well, turned blood red in colour. Thus, startled by this divine sight, all the three became normal getting rid of their deformities. As soon as the villagers came to know about this miracle, they thronged to the well and tried to deepen the well further. But their attempt proved futile because the 'swayambhu' idol (the self-manifested) of Lord Vinayaka emerged from the swirling waters.

Another striking and strange feature of the idol is that it is still growing in size. At present, we can see the knees and the abdomen of the idol. Smt. Lakshmamma, an ardent devotee had offered a 'Kavacham' (Armour) to the Lord, fifty years ago but today it is out of size and doesn't fit the idol. The holy water from the well is offered to the devotees as theertham.

Sri Varasiddhi Vinayaka as up-holder of 'Truth' The swayambhu idol of Kanipakam is the up-holder of truth. Day to day disputes between people is resolved by taking a 'special oath'. The people in the dispute take a holy dip in the temple tank and swear before the lord. It is taken as gospel truth.

Thus the glory of Sri Varasiddhi Vinayaka spread far and wide and the honorable courts uphold the 'special oath' in their judicial pronouncements.


Monday, 1 August 2016

Sri Vaidhya Veeraraghava Swamy Temple

Sri Vaidhya Veeraraghava Swamy Temple

KSHETHIRA DETAILS

Kshethram               ..    Punyaavartham
Aranyam (Forest)     ..    Veeksharanyam
Vimanam                 ..    Vijayakoti Vimanam
Theertham               ..    Hrith-thapa-Nasini Pushkarani
Perumal Thirunamam    ..    Sri Evvulkidanthan, Sri Veeraraghavan
Thirukolam               ..    Bujangasayanam
Prathyaksham            ..    Sri Salihothra Maharishi
ThayarThirunanam    ..    Sri Kanakavalli/Sri Vasumathi
Mangalaasasanam      ..    Thirumazhisai Azhwar &Panchakam
Thirumangai Azhwar  ..    Swami Vedantha Desikan
Verses in Praise      ..    Vadalur Ramalinga Adikalar


KSHETHRAM (Sthala Puranam)
 

The legend connected with this temple says, that  one Thai Amavasyai day a wandering sage named Salihothran reached Thiruvallur where he met a congregation of sages. They were engaged in taking bath in the tank Hrith-Thapa-Nasini and he was also advised to take bath before performing his daily rituals. The bath changed the mind and Sri Salihotran decided to stay at the bank of that Holy tank and start a penance without food or water for one year. 

The next year on the same Pushya Amavasya day he completed his penance and took a holy dip in the Hrith-Thapa-Nasini tank and observed his morning prayers. As he was fasting for one year without food and drink, he collected on that day some paddy and prepared prasadam using rice flour.
 

At this juncture Lord Narayana took the form of an old Brahmin and came the way where Salihotran was waiting to offer a share to a guest. He immediately offered the food to the Brahmin who ate up the offering. Salihotran understood that the old Brahmin was very hungry and immediately offered his share also to the guest too. The guest was satisfied and left the place. Another one year of penance continued without any food and drink. Again on the day of Pushya Amavasya Salihotran took his holy bath and after his prayers prepared food as he did the previous year. He offered the food to Sri Narayana and was waiting for a guest. This time also Lord Narayana took the form of an old Brahmin and he was welcomed by Salihotran to his hermitage.
 


The old Brahmin expressed that he was feeling extremely hungry and thirsty and needed a place to rest. After taking prasadam the old Brahmin expressed to Salihotran, 'where is the place for me to lie down?' (Evvul?) 'In this hermitage', (Ivvul), answered Salihotran. The old man was pleased at this offer and stretched his body in the hermitage putting his head towards south. Immediately the old Brahmin transformed himself into the form of Sri Narayana and Adisesha appeared with his thousand hoods to serve as couch and canopy.
On request from Salihotra Maharishi, the Lord promised that he would permanently stay there and that he would bless and relieve everyone who prays to him after taking bath in the tank of his/her diseases and miseries. Hence He is called Sri Vaidhya Veeraraghava Swamy.


TEMPLE TANK

Hrith-thapa-Nasini

Located on the southern side of the temple, spread over an area of 7.35 acres,the sacred tank of Tiruvallur is known as Hrith-Thapa-Nasini. The tank is one of the most sacred tirthas of Sri Vaishnava sthalas. Tradition attaches greater importance to this tank than even sacred Rivers the Ganga and the Godavari.



On the new moon day, every month thousands of people take a dip in this holy tirtha and pray to Lord Vaidhya Veeraraghava Swami to cure any of their illness. . In order to provide continuous water supply to this tank, Government of Tamilnadu has taken up a project for bringing water from other sources to fill the tank and protect it. 


AAYARPADI - GOSALA
The temple has developed a sprawling well-maintained Gosala. Named as 'Aayarpadi', it is well equipped and is located in an excellent environment, away from the temple .The Gosala is located opposite to R.T.O office on Tirupathy Highway, around 3kms from the temple. As of December 2014 the Gosala has around 80 cattles including 30 cows, 15 calfs and 20 bulls. The milk output from the Gosala is used for the temple puja and for annadanam conducted by the Devasthanam.



Bakthas desiring to donate a cow for the temple can contact the Devasthanam office. Procedure for donation of Cow:
Only milch cows with few weeks old calf can be donated.
The cow should not have delivered more than two calves.
Certificate from a Vet is to be submitted by the Donor
Devasthanam also gets the cow examined by its own Vet who will certify its fitness on receipt.


DAILY DARSHAN DETAILS
MORNING
Viswaroopam                                 ..    06.30 a.m.
Sevarthi Darshan                           ..    06.30 a.m. to 07.30 a.m.
Kaalasandhi Pooja
*                         ..    07.30 a.m. to 09.00 a.m.
Sevarthi Darshan                           ..    09.00 a.m. to 12.00 noon
 

EVENING
 

Sevarthi Darshan                          ..    04.00 p.m. to 06.30 p.m.
Pooja
*                                           ..    06.30 p.m. to 07.15 p.m.
Sevarthi Darshan                          ..    07.15 p.m. to 08.00 p.m.
Cleaning of Sannithies                  ..    08.00 p.m. to 08.30 p.m.
Pooja
*                                           ..    08.30 p.m. to 08.45 p.m.
Bedtime Seva                               ..    09.00 p.m.
 

AMAVASYA DARSHAN

Morning                                       ..    05.00 a.m. to 01.00 p.m.
Uchikala (Noon) Pooja*                ..    01.00 p.m. to 01.30 p.m.
Afternoon Darshan                       ..    01.30 p.m. to 08.30 p.m.
Cleaning of Sannithies                 ..    08.00 p.m. to 08.30 p.m.
Pooja*                                        ..    08.30 p.m. to 08.45 p.m.
Bedtime Seva                             ..    09.00 p.m.
Note: Timings may change on some days due to Thirumanjanam and other special events. (and on festival days also.)
*- No darshan during these hours.




 

*தீராத நோயையும் தீர்க்கும் வைத்தியர்! திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மகிமை!*

*தீராத நோயையும் தீர்க்கும் வைத்தியர்!*
*திருவள்ளூர் வீரராகவ பெருமாள் மகிமை!*

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது திருவள்ளூர்.  இங்கே, அழகுற கோயில் கொண்டு, அற்புதமாக சேவை சாதிக்கிறார் ஸ்ரீவீரராகவ பெருமாள்.
சுமார் 1,500 வருடங்கள் பழைமை வாய்ந்த ஆலயம். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் ஒன்று எனப் பெருமை கொண்டதும் கூட! தொண்டை நாட்டு திவ்விய தேசத்தில் 22&-வது தலம் என வீரராகவ பெருமாள் கோயிலின் பெருமைகள் சொல்லிக் கொண்டே போகலாம்!
திருமழிசை ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இந்தத் தலத்துக்கு வந்து, மங்களா சாசனம் செய்து உள்ளனர்.  ஸ்ரீவேதாந்த தேசிகர் சம்ஸ்கிருதப் பாடல்களை மெய்யுருகப்பாடியுள்ளார்.
ஒரு தை அமாவாசை நன்னாளில்,  சாலிஹோத்ர முனிவர் இந்தத் தலத்துக்கு வந்தார். இங்கே உள்ள ‘ஹ்ருத்தாப நாசினி’ எனும் தீர்த்தத்தில் நீராடினால், நம் இதயத்தில் உள்ள துர்சிந்தனைகள், கெட்ட விஷயங்கள் அனைத்தும் நீங்கும் என்று அவரின் உள்ளுணர்வு சொல்லிற்று. குளக்கரையில் அமர்ந்த சாலிஹோத்ர முனிவர், அங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் நீராடுவது கண்டு வியந்து போனார். குளத்தின் சிறப்பு குறித்து அவர்களிடம் விவரம் கேட்டார்.
அப்போது, பிருத்யும்னன் எனும் மகாராஜா இங்கே வந்து தவமிருந்து, இந்தக் குளத்தில் நீராடியதாகவும், அவனுக்குப் பெருமாளே நேரில் தரிசனம் தந்து வரம் அருளினார் என்றும், கங்கைக்கு நிகரான இந்தத் குளத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்றும் தேவர்கள் தெரிவித்தார்கள்.
தான் நினைத்தது சரிதான் என உணர்ந்து சிலிர்த்த முனிவர், அங்கே குளத்தில் நீராடி, கடும் தவத்தில் மூழ்கினார். அதில் மகிழ்ந்த பெருமாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அங்கேயே தங்கி, கோயில் கொண்டு, இன்றளவும் அருள்பாலித்து வருகிறார் என்கிறது ஸ்தல புராணம்!
எனவே, இங்கு நீராடி பெருமாளைத் தரிசித்தால், புண்ணியங்கள் பெருகும்! முக்கியமாக, தை அமாவாசை நாளில் நீராடி, பெருமாளை ஸேவித்தால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்!
தன் வலது கரத்தால் முனிவர் சிரசில் பெருமாள் சத்தியம் செய்யும் சிற்பமும், நாபிக்கமலத்தில் இருக்கிற ஸ்ரீபிரம்மாவுக்கு வேதோபதேசம் செய்தபடி சயனத் திருக்கோலத்திலும்  அற்புதமாகக் காட்சி தருகிறார் வீரராகவ பெருமாள். அரக்கர்களை வதம் செய்ததால் ஸ்ரீவீரராகவ பெருமாள் என்றும் ராமலிங்க அடிகளாரின் வயிற்று வலியைப் போக்கியதால், ஸ்ரீவைத்திய வீரராகவர் என்றும் திருநாமங்கள் அமைந்ததாகச் சொல்வர்!
இங்கு அருளும் ஸ்ரீநவநீத கிருஷ்ணர் வரப்பிரசாதி. இங்கு வரும் பக்தர்களுக்குத் தேன் கலந்த தினைமாவுப் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதை உட்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்! 
இங்கு, மூன்று அமாவாசை தினத்தில், வெல்லம் மற்றும் பால் கொண்டு தீர்த்தக் குளத்தில் கரைத்துப் பிரார்த்திக்கின்றனர். அதேபோல், உப்பு மற்றும் மிளகு சமர்ப்பிக்கும் வழிபாடும் உண்டு. அப்படிப் பிரார்த்தித்தால், நம் துயரங்கள் யாவும் விலகும் என்கின்றனர். உறுப்புக் காணிக்கை பிரார்த்தனையும் உண்டு.
தாயாரின் திருநாமம்- ஸ்ரீகனகவல்லித் தாயார். தை மாத பிரம்மோத்ஸவம் இங்கு பிரசித்தம். அந்த நாளில், கனகவல்லித் தாயாரின் தந்தையிடம் சென்று, வேஷ்டி- புடவை வாங்கி வரும் வைபவம் சிறப்புற நடைபெறும். எனவே, ஸ்ரீகல்யாண வீரராகவர் என்றும் இந்தத் தலத்துப் பெருமாளுக்கு பெயர் உண்டு! ஆகவே இந்தத் தலத்துக்கு வந்து, பெருமாளை மனதாரப் பிரார்த்தித்துக் கொண்டால், ஞானம் பெறலாம். தீராத நோயும் தீரும். கல்யாண யோகம் கைகூடி வரும் என்பது ஐதீகம்!
மார்கழியில் தினமும் பெருமாளின் திவ்விய தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு என விழாக்கள் நிறைந்த வீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து தரிசியுங்கள். குடும்பம் செழிக்க, சந்ததி சிறக்க இனிதே வாழலாம்!
நடை திறந்திருக்கும் நேரம் :
காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரை.
மாலை 4 முதல் இரவு 8.30 மணி வரை.

Lakshmi Narasimha Swamy Temple at Sholingur in Vellore District of Tamil Nadu

Lakshmi Narasimha Swamy Temple at Sholingur in Vellore District of Tamil Nadu

Lakshmi Narasimha Swamy Temple at Sholingur is dedicated to Narasimha Avatar of Vishnu. Legend has it that Narasimha Swamy gave darshan to Saptarishis here for a split of second and they attained moksha. It is also believed that Prahlada had darshan of Yoga Narasimha Murti here.

There is also a shrine dedicated to Hanuman here. Anjaneya helped a king and saved his kingdom by annihilating a demon on a Sunday. Sunday is therefore great importance at the shrine of Hanuman here.

The water in Chakra Teertham here contains medicinal properties.

The temple is divided into three separate shrines:

Big Hill Temple – shrines of Yoga Narasimha Swamy Shrine and Amirthavalli is located here.
Small Hill temple – Murti of Hanuman is located here.
Town Shrine – Shrines of Adi Keshava, Bakhtositha Swamy, Alwars and Andal are located here.

Tuesday, 26 July 2016

Anjaneyar Temple – Ananthamangalam

Anjaneyar Temple – Ananthamangalam

About Temple
Ananthamangalam Anjaneya temple is located in Tamilnadu, India in the East Coast Road in between Chidambaram and karaikal. Anjaneya temple is facing towards east. The Uthswar is inside the temple. Opposite to this temple the Three Nethra Chathurbuja Veera Anjaneyar Moolava Sannathis is situated outside this temple.

Speciality

Anjenayar has God Face with 3 eyes. His 10 hands holds with Conch (Sangu), Chakram, Soolam, Kabalam, Madhatchagam, Pasamankusam, Bow, Arrow, Sattai, Navaneetham and has two feathers in both side . You can reach the temple direct by bus(route) from Mayiladuthurai, Sirkali and Nagapattinam. Train (route) services are available upto Mayiladuthurai.

History:

After the death of Ravanan in the battle of Srilanka, Sri Ramar was returning to Ayothi along with Seetha, Lakshmanan Anjenayar. They stayed in the house of Bharathwaja Maharishi. After sometime Narathar come to the house. Sri Ramar prayed to Narathar. So narathar blessed and then Narathar told Ramar that the Srilanka battle is over but it was not stopped and he told that there is still more to do with your bow and arrow. But Sri Ramar asked to explain it clearly.

Narathar explained everything, Ravanan has died but the Demons generations are living. Their generations are vowed to revenge for the war. Asuras namely Ragtha Bindhu, Ragtha Rakshagan are doing penance under the sea. If their penance is completed, they will get the strong powers to destroy the world. So you must kill the Asuras. But Sri Ramar told that now he cannot delay to go to Ayothi, because Bharathan would take the ‘Firegundam’. Narathar asked Rama, to send his brother Lakshmanan but Sri Ramar said that Lakshmanan is my shadow, so he must be with me. Then Ramar, ordered Sri Hanuman to kill those two Asuras.

Lord Vishnu offers his ‘Conch’ and ‘Chakra’ and Goddess Sakthi offered her ‘Thirusoolam’, Lord Brahma offered ‘Bramakapalam’, ‘ pasangusam’ and Manthrashtakam’, Lord Ramar offered his bow and arrow and Lord Krishna offered ‘Sattai and Butter’ to Sri Hanumam to kill the Demons. Sri Hanuman shows all his powers with 10 hands. Finally Lord Shiva offered his ‘Netrikan’. With this skills Sri Hanuman killed those two Asuras and danced with joy in this place. Hence this place is called ‘ Ananthamangalam’.

Temple Timings:

Morning 8.00 am to 12.30 noon and Evening 4.00 p.m. to 8.00 p.m.Every Saturday Morning 5.00 a.m. to 1.00 p.m. and 3.00 p.m. to Night 9.30 p.m.On New Moon days temple will remain opening all the times upto 10 p.m.

Festivals:
Every year ‘Sri Vaikunda Ekadesi’ Festival during ‘Margazhi’ month and ‘Deepa Uthsavam’ during ‘Karthigai’ month are Celebrated in a grand manner

During ‘Adi’ and ‘Thai’ Month every Friday Abhisheka Aradhana is being conducted to Goddess

In ‘Puratasi’ month Navarathiri (Nine night) festival is being celebrated for Ten days ending in ‘Vijaya Dhasami’

Every month on all Saturdays and on the ‘New Moon’ day special ‘Abisheka Aradhanai’ pooja is being done

During ‘margazhi’ month ‘Hanuman Jayanthi’ is being celebrated in a grand manner with ‘Special Abhishekam’ and ‘Annathanam’ (Free meals) to public

On Every Thursday special ‘Abhishekam’ is being done to Lord Garudan

On Every New Year special Archanai is conducted. On that day temple is opened from Morning 5.00 a.m to 1.00 p.m and evening 3.00 p.m. to 9.00 p.m.

Holy Water:

Temple Holy Water is pushkarani (Annumar Theertham), Which is located opposite to this Moolavar temple

Fasting :
Devotees took fasting for 48 days and at two time a day. They read Hanuman Thudhi and Hanuman Kavasam for 48 days. On the 48th day the devotees go to Ananthamangalam and pray God. If they do the fasting truly they would be successful in all the things, which they prayed for.

Benefits:
If the devotee go to Ananthamangalam they will get happiness. Defects will be eradicated

Sins will fade away
Sufferings will disappear
Generations will flourish by santhanakrishna prartham
All the wealth will come
Unmarried girls there will be getting the chances of marriage at once
Business will grow up
Since all the Navagrahas are in the tail of Anjaneyar so the devotees pray Lord Anjeneyar and get relieved dosams.

If the devotee prayh whole heartedlyh and pray continuously they will get all knowledge. They will improve their confidence and they will be relieved from fear and disease. And they will speak fluently. Devotees praying Lord Anjeneyar is equal to praying all the Gods.

“Puthirpalam Yaso tharyham nirpayatwam Arokatha
Ajatyam vakpaduth vamsa Hanumath samarnath paveth”

Offerings


The devotees can pray Lord Anjaneya all the time like Ragu Kalam, Emakandam, Astami and Navami

The devotees can start the Anumar Pooja on New moon day and Kettai and Moolam star especially on Wednesday and Saturday

Anjaneyar Avadhara day in the month of Margazhi (December) and New Moon day of Moola star. It is a famous festival

The devotees offer betel leaves, flower garland, Tulasi garland, Vada Malai and Butter. The devotees do Kumkuma pooja in Anjaneyar foot, the devotees will get many benefits.

Contact:

The Executive Officer
Arulmigu Rajagopalaswamy temple
Ananthamangalam – 609307
Kazhiappa Nallur Post
Tranquebar Tk
Nagapattinam Dt
Tamilnadu, India.
Phone: 04364 289888
Email: tajapuja@sancharnet.in


Lalithambigai temple, thirumeyachur

*திருமீயச்சூர்... லலிதாம்பாள்..*
  *லலிதா சகஸ்ர நாமம்!*   

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருமீயச்சூர் தலம். இந்தத் தலத்துக்கு ஏகப்பட்ட பெருமைகள் உள்ளன. ஸ்ரீசனீஸ்வரர், எமதருமர், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகிய ஆறு பேரின் அவதாரத் திருத்தலம் இது!

திருமீயச்சூர் தலத்துக்கு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் என எங்கிருந்தெல்லாமோ ஏராளமான அன்பர்கள், தினமும் வந்தபடி இருக்கின்றனர். சிலிர்ப்பும் பக்தியும் பொங்க, தரிசித்துச் செல்கின்றனர்.  காரணம்... இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீலலிதாம்பாள்!

உலகின் எல்லா இடங்களில் இருந்தும், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, அவளை அனுதினமும் மனமுருகிப் பிரார்த்திப்பவர்கள் மிக மிக அதிகம்! அதனைப் பாராயணம் செய்தாலே, மன பாரமெல்லாம் போய்விடும்.  அப்பேர்ப்பட்ட, சக்தியும் சாந்நித்யமும் கொண்ட ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் உருவான திருத்தலம், திருமீயச்சூர்!

பண்டாசுரன் எனும் அரக்கனால், துன்பங்களுக்கு ஆளான தேவர்கள், ஈசனின் திருவடியைச் சரணடைந்து கதறினர். அரக்கனை அழிக்க, ஸ்ரீபார்வதியை ஸ்ரீலலிதையாக அவதரிக்கச் செய்தார் ஈசன். கடும் உக்கிரத்துடன் தோன்றிய ஸ்ரீலலிதை, சகஸ்ர கோடி வருடங்கள், அரக்கனுடன் யுத்தம் செய்தாள்.  அவனை அழித்தொழித்தாள். 

  ஆனாலும் அவளது உக்கிரம் தணியவில்லை. ‘இந்தக் கோபம், பூமிக்கும் மக்களுக்கும் நல்லதல்ல’ என்பதால், ‘ஸ்ரீபுரத்தில் தவம் செய்தால், உனது உக்கிரம் தணியும்’ என அருளினார் சிவபெருமான். இதையடுத்து 

ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அவளுக்குள்ளிருந்து ‘வாக் தேவதைகள்’ எட்டுப்பேர் வெளிவந்தனர். ஸ்ரீலலிதையைச் சுற்றி வட்டமாக நின்றனர். ஸ்ரீலலிதையின் கூந்தல், கண்கள், கன்னம், நெற்றி, திருப்பாதம் என அவளது அழகை வியந்து பாடினர்.

  ‘அடடா... இத்தனை அழகா எனது கண்கள்? பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாகப் பார்க்கவேண்டும்! என் கன்னமும் நெற்றியும் அழகு பொருந்தியிருக்கிறதா? அப்புறம் எதற்காக, முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்? நெடுநெடுவென, கரிய நிறத்தில் வளர்ந்திருக்கிறதாமே கூந்தல்? அந்தக் கூந்தலை தலைவிரி கோலமாகவா வைத்திருப்பது!’ என யோசித்தாள். எட்டுத் தேவதைகளும் அந்த ஸ்தோத்திரத்தைப் பாடப்பாட... அவளது உக்கிரம் காணாமல் போனது. அவளுக்குள் சாந்தமும் கருணையும் பொங்கிப் பிரவாகித்தன! அதே தலத்தில் இருந்தபடி, அன்பர்களுக்கு அருட்கடாட்சத்தை அள்ளித்தர திருவுளம் கொண்டாள்.

  இதோ... இன்றளவும், உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர்களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்கிறாள். மகிழ்விக்கிறாள்.  இங்கே, ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்ரத்தில் நின்றபடி, அகில உலகையும் ஆட்சி செய்கிறாள், ஸ்ரீலலிதாம்பிகை!

  இங்கே, ஸ்ரீலலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சார்த்தும் வைபவம், வருடத்தில் மூன்று முறை நடைபெறுகிறது. நவராத்திரியில்... விஜயதசமியிலும், மாசி மாதத்தின் அஷ்டமி நாளிலும், வைகாசி - பௌர்ணமியின் போதும் அன்னப்பாவாடை சார்த்தும் வைபவத்தைக் காண, வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

  சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், பட்சணங்கள், பழ வகைகள் என வைத்து, நெய்யை ஊற்றிக் குளம் போலாக்கிவிடுவார்கள். அம்பிகையின் சந்நிதிக்கு முன்னேயுள்ள அர்த்த மண்டபத்தில் இதனை வைத்திருக்க... குளம் போல் ததும்பியிருக்கும் நெய்யில், அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகே அழகு!

மகா பெரியவா, ‘’இது சாதாரண தலமல்ல; மிக உன்னதமான புண்ணிய க்ஷேத்திரம். பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால்தான், இங்கு வரமுடியும்; அப்படி வந்து தரிசித்தீர்கள் என்றால், ஏழேழு ஜென்மத்துக்கும் உங்களைக் காப்பாள், ஸ்ரீலலிதாம்பிகை!’’ என அருளினாராம்!
 
அம்பாளுக்கு புடவை சார்த்தியும் கொலுசு காணிக்கை செலுத்தியும் தரிசிப்பார்கள் பக்தர்கள்! 

  நடை திறந்திருக்கும் நேரம் :
  காலை 7 முதல் 12.30 மணி வரை.
  மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.