Showing posts with label Shape of Temples. Show all posts
Showing posts with label Shape of Temples. Show all posts

Thursday, 30 June 2016

கோயிலின் அமைப்பு! - Shape of Temples

கோயிலின் அமைப்பு!



நம் நாட்டுக் கோயில்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

முதலில் கோபுர வாசல், பின்பு வெளிப் பிரகாரம், இன்னும் சற்று உள்ளே போனால் ஒரு மண்டபம் வரும். 

அதற்கு முன்பாக ஒரு கொடி மரம், அதனை அடுத்து பலிபீடம், பின்பு மண்டபம், அதன் முடிவில் இரண்டு துவார பாலகர்கள், பின்பு கர்ப்பக்கிரகத்திற்கு போகும் முன் இருக்கும் ஒரு ஒடுங்கிய இடம், பின்பு கர்ப்பக் கிரகம் – இறை உறையும் இடம்.

 கிட்டத்தட்ட எல்லாக் கோயில்களும் சிறிய, பெரிய கோயில்கள் எதுவானாலும், கட்டமைப்பு இப்படித்தான் இருக்கும்.

நம் முன்னோர்கள் இந்தக் கட்டமைப்பை எப்படித் தீர்மானித்தார்கள் என்று பார்த்தால், அது நமது மனித உடல் அமைப்பைச் சார்ந்திருப்பது தெரிய வரும். ஒரு மனிதன் தன் இரண்டு பாதங்களையும் சேர்த்து தரையில், வானம் பார்த்துப் படுத்திருப்பதை வாசகர்களே நீங்கள் சற்று நினைவில் கொள்ளுங்கள்.


நாம் வானம் பார்த்து தரையில் படுத்து, இரண்டு பாதங்களையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது இரண்டு பெரிய விரல்களும் சேர்ந்து ஒன்றாகி மொத்தம் ஒன்பது விரல்கள் மேல்நோக்கிக் கொண்டிருப்பதையும், இரண்டு பாதங்களும் சேர்ந்து மேல்நோக்கி இருப்பதையும் உற்றுநோக்கினால், உச்சியில் 9 கலசங்கள் கொண்ட கோயில் கோபுரம் தெரியவரும். பின்பு உள்ள நீண்ட, நெடிய கால்களே வெளிப்பிரகாரம், வெளிப்பிரகாரம் ஒட்டி உள்ள கொடி மரம் நம்முடைய மர்மஸ்தானம். உள்வாங்கிய வடிவிலுள்ள பலிபீடம் – நமது தொப்புள் – நாடி. உள்மண்டபம் நமது வயிறு மற்றும் மார்புப் பகுதிகள். மண்டப முடிவில் உள்ள இரண்டு துவார பாலகர்கள் – இரண்டு மார்பு காம்புகள். 

பின்வரும் ஒடுங்கிய இடம் நமது கழுத்து. கடவுள் வீற்றிருக்கும் கார்ப்பக்கிரகமே நமது மூளை இருக்கும் தலைப்பகுதி.
என்ன ஓர் அற்புதமான படைப்பு. நம் முன்னோர்கள் இதனை மனதில் வைத்ததால்தான் திருமூலர் தன் திருமந்திரத்தில், “”உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்போலும். உற்றுநோக்க உவகை கொள்கிறோம்.


Related Articles :)

புண்ணிய நதிகளில் நீராடும் போது கூறவேண்டிய ஸ்லோகம்

கோவில் அதிசயங்கள்..!