Showing posts with label நவகிரகங்கள். Show all posts
Showing posts with label நவகிரகங்கள். Show all posts

Sunday, 12 November 2017

இன்று சந்திர பகவானின் மகனான புதனை பற்றி காண்போம் !!

இன்று சந்திர பகவானின் மகனான புதனை பற்றி காண்போம் !!
புதன் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ?

 நவகிரகங்களில் செவ்வாய்க்கு அடுத்தபடியாக வருபவர் புதன் பகவான். மனிதனாக பிறந்து மனோதிடம் மற்றும் உடல் வலிமையுடன் இருப்பது மட்டும் போதாது. மனிதர்களுக்கு வரமாக இருக்கும் இவற்றை, அவர்கள் பயன்படுத்தி தன் இனத்தின் முன்னேற்றத்திற்கும், மற்ற இனத்தின் அழிவில் இருந்தும் அவைகளை காப்பாற்ற வேண்டும்.

🌟 அதற்கு அவர்கள் மதிநுட்பத்துடன் செயல்பட வேண்டும். மதிநுட்பம் பெருக வேண்டுமாயின் பல கலைகளை கற்று தேர்ச்சி பெற வேண்டும். சில கலைகளை குருவில்லாமலும், பல கலைகளை குருவிடம் இருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

🌟 எந்த குருவினுடைய உதவி இல்லாமலும், இறைவனின் அருளால் பல கலைகளை கற்று, இன்று கலைக்கு அதிபதியாக உள்ள புதன் பகவானைப் பற்றி காண்போம்.

🌟 புதனுக்குரிய மலர் - வெண் காந்தள்

🌟 புதனுக்குரிய நிறம் - பச்சை

🌟 புதனுக்குரிய உலோகம் - பித்தளை

🌟 புதனின் நவரத்தினம் - மரகதப்பச்சை

🌟 புதனின் வடிவம் - அம்புக்குறி வடிவம்

🌟 புதனின் வாகனம் - குதிரை

🌟 புதனின் ஆதிக்க எண் - 5

புதன் பகவானின் இயல்புகள் :

🌟 புதன் சுய ஒளி அற்றவர்.

🌟 பச்சை நிறம் கொண்டவர்.

🌟 புதன் மதி நுட்பத்திற்கு காரணமானவர்.

🌟 உறவு முறைகளில் தாய்மாமன் மற்றும் பங்காளிகள் உறவுகளை குறிப்பவர்.

புதனின் காயத்ரி மந்திரம் :

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்

- நவகிரகங்களில் ஒருவரான புதன் பகவானின் வரலாற்றைப் பற்றி நாளை காண்போம்...



Related Articles :)

செவ்வாய் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ?


Saturday, 11 November 2017

செவ்வாய் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ?

செவ்வாய் பகவானைப் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா ? 



 நவகிரகங்களில் சந்திரனுக்கு அடுத்தபடியாக வருபவர் செவ்வாய் பகவான். பிறவியிலே சிறந்த பிறவி மானுடப் பிறவி. அந்த மானுடப் பிறவியில் உடலில் இரத்தமும், எலும்பும் நன்றாக இருக்க வேண்டும்.

ஏனெனில் எலும்புகள் பலவீனமானால் மனிதனால் எந்த வேலையும் செய்ய முடியாது. இரத்தம் சுண்டினாலும் உடல் பலவீனம் அடையும். இப்படி மனிதனுடைய உடலில் முக்கிய பங்காக விளங்கும் இரத்தத்திற்கும், எலும்பிற்கும் அதிபதியான செவ்வாய் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

செவ்வாய்க்கு உரிய மலர்கள் - செண்பகம், செவ்வரளி

செவ்வாய்க்கு உரிய நிறம் - சிவப்பு

செவ்வாய்க்கு உரிய உலோகம் - செம்பு 

செவ்வாய்க்கு உரிய நவரத்தினம் - பவளம்

செவ்வாயின் வடிவம் - முக்கோணம் 

செவ்வாய்க்கு உரிய வாகனம் - ஆட்டுக்கடா

செவ்வாயின் ஆதிக்க எண் - 9

செவ்வாய் பகவானின் இயல்புகள் :

செவ்வாய் சுய ஒளி அற்ற கிரகம். 

செவ்வாய் மனித உடலில் உள்ள எலும்புக்கும், மஜ்ஜைக்கும் காரணமாவர்.

இவர் சிவப்பு நிறத்தை தன்னகத்தே கொண்டவர். 

மனைக்கு அதிபதி செவ்வாய் ஆவார். 

இவர் கோபமும், வைராக்கியமும் கொண்டவர். 

செவ்வாயின் காயத்ரி மந்திரம் :

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்


- நவகிரகங்களில் ஒருவரான செவ்வாய் பகவானின் வரலாற்றைப் பற்றி நாளை காண்போம்...