Showing posts with label ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?. Show all posts
Showing posts with label ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?. Show all posts

Thursday, 16 August 2018

ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?

ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா?

1. வீட்டில் தினமும் ஆண்கள் விளக்கேற்றலாமா?
🌟 வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சு+ழலில் மட்டும் ஆண்கள் விளக்கேற்ற வேண்டும்.
🌟 மற்ற காலங்களில் பெண்கள் மட்டுமே வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

2. மாந்திரீகம் என்றால் என்ன?
🌟 மாந்திரீகம் என்பது நமது மனதை ஒரு நிலைப்படுத்தி மந்திரங்களை மனதால் எண்ணி நமக்கு வேண்டிய செயலை அடைவதாகும்.

3. ஆந்தை வீட்டிற்குள் வந்தால் நல்லதா? கெட்டதா?
🌟 ஆந்தை வீட்டிற்குள் வருவது நல்லதல்ல. ஏனெனில் ஆந்தை பழுதுப்பட்ட பகுதியில் வசிக்கக்கூடிய பறவையாகும்.

4. ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள்.
🌟 ஜாதகம் என்பது உண்மையானதாகும். ஆனால், ஜாதகத்தை கணித்து சொல்லும் ஜோதிடர்கள் என்பவர்கள் பல நபர்கள் ஆவார்கள்.
🌟 ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் மாறுபடுவதால் அவர்கள் எடுத்துரைக்கும் விதமும் மாறுபடும்.
🌟 ஆனால், பலரின் கூற்றுகளை கூர்ந்து கவனித்தால் அவர்கள் சொல்லவரும் கருத்தானது ஒன்றாக இருக்கும்.

5. பெண்ணுடைய மேல் உதட்டில் வலப்புறம் மச்சம் உள்ளது. இதற்கு பலன் என்ன?
🌟 தெய்வ பக்தி உடையவர்கள்.
🌟 எடுத்த காரியத்தை சிரம் ஏற்றி முடிக்கக்கூடியவர்கள்.
🌟 எதிலும் கலை ரசனை உடையவர்கள்.
🌟 நேர்மையும், பொறுமையும் உடையவர்கள்.

6. என் மனைவி வெள்ளிக்கிழமையன்று ராமேஸ்வரம் கடலில், காலில் இருந்த மெட்டியை தவறுதலாக விட்டு விட்டார். இதனால் ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா?
🌟 கவனக்குறைவால் தொலைந்தால் எந்தவித தீங்கும் இல்லை.