Showing posts with label பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?. Show all posts
Showing posts with label பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?. Show all posts

Friday, 29 June 2018

பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?

ஜோதிடர் பதில்கள் - பகுதி 2 !!

1. தண்ணீரில் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 தண்ணீரில் இறப்பது போல் கனவு கண்டால் மனதில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

2. பேருந்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 பேருந்தை கனவில் கண்டால் தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.

3. என் நண்பனின் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 உங்கள் நண்பனின் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வது போல் கனவு கண்டால் ஏற்ற, இறக்கமான சு+ழல் உண்டாகும்.

🌟 நிதானமான பேச்சுகளால் நன்மை உண்டாகும்.

4. இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இறந்தவர்களை வீட்டுக்கு அழைத்து வருவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.

5. தேங்காய் தலையில் விழுந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 தேங்காய் தலையில் விழுந்தது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவேண்டும்.

🌟 குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

6. கொதிக்கும் எண்ணெயை அடையாளம் தெரியாத நபர்கள், என் மீது ஊற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பந்துக்களால் (உறவினர்கள்) ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கும்.
🌟 தடைபட்ட காரியம் இனிதே நடைபெறும்.

7. கோவிலில் கிடைத்த பணத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக கனவு கண்டால் என்ன பலன்?
🌟 கோவிலில் கிடைத்த பணத்தை திருப்பதி உண்டியலில் போடுவதாக கனவு கண்டால் மேன்மையான சு+ழல் உண்டாகும்.

8. திருமணம் முடிந்து பெண்ணை அழைத்து செல்வதாக கனவு கண்டால் என்ன பலன்?
🌟 திருமணம் முடிந்து பெண்ணை அழைத்து செல்வதாக கனவு கண்டால் எண்ணிய காரியம் நிறைவடைய சிறிது காலதாமதம் உண்டாகும்.