Showing posts with label ஜோதிடம் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?. Show all posts
Showing posts with label ஜோதிடம் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?. Show all posts

Monday, 29 January 2018

ஜோதிடம் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?

ஜோதிடம் பற்றிய இந்த தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?


ஜோதிடம் என்பது ராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து விடுபட பரிகாரங்களை கண்டறியவும் பயன்படும் கணிப்பு முறையாகும். அத்தகைய ஜோதிடத்தில் இருந்து சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

🔯 உடலாதிபதி என்பவர் சந்திரன் தான். இவர் தான் முகத்தோற்றம், முகப்பொலிவு போன்றவற்றை கொடுப்பவர்.

🔯 அங்க லட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத் தான் இருப்பார்கள்.

🔯 மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். துலாம், சிம்மம், மகரம் ராசிக்காரர்களுக்கு மூக்கு நீளமாக இருக்கும்.

🔯 சனி லக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறார் என்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்துவிடும்.

🔯 புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய மற்றும் நீளமான விரல்களாக இருக்கும்.

🔯 ஒரு மனிதனை அறிமுகம் செய்வது நட்சத்திரம். இந்த உலகத்திற்கு நான் இந்த நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்துள்ளேன் என்று உரைப்பது ஒருவருடைய நட்சத்திரம் தான்.

🔯 திருமணத்திற்குப் பார்க்கப்படும் பொருத்தங்களில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், யோனிப்பொருத்தம், ராசிப்பொருத்தம், ரஜ்ஜூப்பொருத்தம் ஆகிய ஐந்தும் தான் அடிப்படையானது. இதன் அடிப்படையில் தான் மற்ற பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. 

🔯 ஒரு மனிதனின் ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் நன்றாக இருந்தால், அவர் வாழ்வில் நல்ல நிலைக்கு எளிதாக வந்துவிட முடியும். 

🔯 களஸ்திர ஸ்தானமும், பூர்வ புண்ணிய ஸ்தானமும் வலுவாக இருந்தால் நெருங்கிய உறவிலேயே திருமணம் நடைபெறும்.

🔯 ஜோதிடத்தில் ஆணாதிக்கக் கிரகங்கள், பெண் ஆதிக்கக் கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. குரு, செவ்வாய், சு+ரியன் ஆகியவை முழுமையான ஆணாதிக்கக் கிரகங்கள். சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டும் முழுமையான பெண் ஆதிக்கக் கிரகங்கள்.