Showing posts with label எந்த கிரகநிலை இருந்தால் பயணத்தில் கவனம் தேவை?. Show all posts
Showing posts with label எந்த கிரகநிலை இருந்தால் பயணத்தில் கவனம் தேவை?. Show all posts

Tuesday, 24 October 2017

எந்த கிரகநிலை இருந்தால் பயணத்தில் கவனம் தேவை? எந்த மாதிரியான கிரக நிலை விபத்துகளை ஏற்படுத்தும்?

எந்த கிரகநிலை இருந்தால் பயணத்தில் கவனம் தேவை?
எந்த மாதிரியான கிரக நிலை விபத்துகளை ஏற்படுத்தும்?


 மனிதர்களுக்கு இருக்கும் யோகங்களில் வாகன யோகமும் ஒன்று. பொருள் ஈட்டுவதற்கு ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வாகனங்கள் இன்றைக்கு அவசியமானதாகிவிட்டன. வாகனங்கள் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்களும் சர்வ சாதாரணமாகிவிட்டன. இதை தடுக்க செய்ய வேண்டியவைகள்.....

🌺 ஒரு ஜாதகத்தில் ஆயுளைக் குறிக்கும் கிரகங்கள் இரண்டாகும். ஒன்று சனி, மற்றொன்று குரு.

🌺 காயங்கள் மற்றும் ரத்தப் போக்கைக் குறிக்கும் கிரகம் செவ்வாய். விபத்துக்களைக் குறிக்கும் கிரகம் ராகு ஆகும். எனவே குரு மற்றும் சனியோடு ராகு அல்லது செவ்வாய் கூட்டு சேர்ந்தாலோ குரு இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் செவ்வாயும், ராகுவும் இருந்தாலோ அல்லது பார்த்தாலோ வாகன விபத்து ஏற்படும். அந்த விபத்தால் காயம் அல்லது மரணம் ஏற்படுவது திசாபுத்திகளின் அடிப்படையில் தான்.

வாகன விபத்துக்களை தடுக்க செய்ய வேண்டியவை :

🌺 இத்தகைய விபத்துக்களைத் தடுக்க கடாட்சர மந்திரத்தையோ, கார்த்த வீர்யார்ஜூன யந்திரத்தையோ பயணப்படும் வாகனங்களில் வைத்து பு+ஜிக்கலாம். அப்படி பு+ஜிக்கும் போது அந்த வாகனத்தில் அசைவம் வைத்திருக்க கூடாது.

🌺 வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க, குலதெய்வ வழிபாடு, முன்னோர்கள் வழிபாடு மிகவும் அவசியம். அவைகளை முறைப்படி செய்து வந்தாலே, பெரிய விபத்துகள் தடுக்கப்படும்.

🌺 சனி பகவானின் அதிபதி மஹhவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். பிரதோஷம், மற்றும் சனிபிரதோஷம் சிறந்த வழிபாடு ஆகும். சனி ஷேத்திரம் திருநள்ளாறு கோவில் மற்றும் திருப்பதி சென்று வழிபட்டு வரவும். இது சிறந்த பரிகாரம் ஆகும்.

🌺 சனி பகவானுக்கு சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து சனி காயத்ரி மந்திரம் அல்லது ஸ்லோகம் சொல்ல வேண்டும்.

சனி காயத்ரி மந்திரம் :

சனைச்சராய வித்மஹே சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்

ஸ்லோகம் :

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன: