Showing posts with label வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா?. Show all posts
Showing posts with label வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா?. Show all posts

Thursday, 16 August 2018

வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா?

வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா? 

1. ரிஷப லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருப்பது நன்மையா? தீமையா?
🌟 ரிஷப லக்னத்திற்கு 6ல் சுக்கிரன் இருப்பது நன்மையையும், தீமையையும் கொண்டதாகும்.

2. என் தந்தை கட்டிய வீட்டை நான் இடிப்பது போல் என் அம்மா கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீட்டை இடிப்பது போல் கனவு காண்பது கிடைக்க இருந்த நல்ல வாய்ப்புகளை தவறவிடுவதற்கான சு+ழல் உண்டாகலாம்.
🌟 எதிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்படவும்.

3. வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணியலாமா?
🌟 வெள்ளி மோதிரம் அனைத்து ராசிக்காரர்களும் அணிவதை காட்டிலும்
 ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தவர்கள் அணிவது சிறப்பானதாகும்.

4. எங்கள் வீட்டின் முன் பாம்பு ஒன்று வந்து இறந்து விட்டது. இதனால் தீமை ஏதும் ஏற்படுமா? நாங்கள் அதை அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை. அது இறந்த பின் அதற்கான சடங்குகள் செய்து புதைத்து விட்டோம். இருப்பினும் தீமை ஏற்படுமா? அது கோதுமை சாரை பாம்பு என்று கூறினார்கள்.
🌟 உங்களுக்கு எந்த விதமான கவலைகளும் வேண்டாம். துன்பங்கள் ஏதும் ஏற்படாது.

5. வீட்டில் வளர்க்கும் துளசி செடி காய்ந்தால் என்ன பலன்?
🌟 வீட்டில் வளர்க்கும் துளசி செடி காய்வது என்பது சுபமானது அல்ல.
🌟 எனவே, துளசி செடியை காயாமல் பார்த்துக் கொள்ளவும்.

6. பிள்ளையார் கோவிலில் நின்று கும்பிடும்போது சாமியின் கழுத்தில் உள்ள மாலை கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எண்ணிய காரியத்தில் இருந்து வந்த தடைகள் அகலும்.