Showing posts with label ஆச்சரியம்... தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !. Show all posts
Showing posts with label ஆச்சரியம்... தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !. Show all posts

Monday, 29 January 2018

ஆச்சரியம்... தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !

ஆச்சரியம்... தினமும் ஐந்து முறை நிறம் மாறும் சிவலிங்கம் !

ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசன்...!

 உலகிலே அதிகமாக அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த நிறம் மாறும் சிவலிங்கம். இக்கோவில் இந்தியாவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

🌟 ஐந்து நிறங்களில் அருள்பாலிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லு}ர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

🌟 திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான இத்திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கோவிலின் முன்புறம் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

🌟 மூலவர் - பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு) மலைமீது உள்ளார். இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.

🌟 தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சியளிக்கிறார்.

🌟 காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சியளிக்கிறது.