Showing posts with label இந்த ராசிக்காரர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி விடுவார்கள் !. Show all posts
Showing posts with label இந்த ராசிக்காரர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி விடுவார்கள் !. Show all posts

Thursday, 16 August 2018

இந்த ராசிக்காரர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி விடுவார்கள் !

இந்த ராசிக்காரர்கள் பகைவர்களையும் நண்பர்களாக்கி விடுவார்கள் !!

மகர ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனி தேவருடன் புதன் நண்பன் என்ற முறையில் சமம் என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை விரிவாக காண்போம்.
🌟 தந்தையாருடன் சுமூகமான உறவு நிலையும், ஆதரவும் கிடைக்கும்.
🌟 சிறந்த கல்வியும், எதிலும் சிந்தித்து முடிவெடுக்கும் திறனையும் கொண்டவர்கள்.
🌟 எதிர்காலம் பற்றிய எண்ணமும், அதற்கு உண்டான முடிவுகளையும் தீர்க்கமாக எடுத்து செயல்படக்கூடியவர்கள்.
🌟 ஆன்மீக வாழ்க்கையின் மீது ஈர்ப்பும், பற்றும் கொண்டவர்கள்.
🌟 வேதங்களில் குறிப்பிடப்படும் வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படக்கூடியவர்கள்.
🌟 எதிலும் நியாயத்துடனும், தர்மத்துடனும் நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 கொடுக்கல் - வாங்கலில் உள்ள சூட்சமங்களை அறிந்தவர்கள்.
🌟 அனைவரிடமும் கனிவுடனும், அதே சமயம் அவர்களால் இன்னல்கள் ஏற்படாதவாறு நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதை பேசி தீர்க்கவே முயல்வார்கள்.
🌟 எடுத்த செயலை எண்ணிய காலத்திற்குள் செய்து முடிப்பார்கள்.
🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினம்.
🌟 எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும், அதைப் பற்றிய நுட்பமான செயல்களையும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள்.
🌟 எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் எடுத்த முடிவில் உறுதியாக செயல்படக்கூடியவர்கள்.
🌟 தனக்கு தகுந்தவாறு சூழ்நிலைகளை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 பகைவர்களை நண்பர்களாக்கும் சாதுர்யமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 அனைவரிடம் நேர்மையாக நடந்துக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 மற்றவர்கள் நேர்மை தவறும் பட்சத்தில் அவர்களுடனான தொடர்பை தவிர்த்துக் கொள்ளக்கூடியவர்கள்.
தொடரும்...!