Showing posts with label இன்றைய இராசிபலன்கள் - (28.10.2017). Show all posts
Showing posts with label இன்றைய இராசிபலன்கள் - (28.10.2017). Show all posts

Saturday, 28 October 2017

இன்றைய இராசிபலன்கள் - (28.10.2017)

இன்றைய இராசிபலன்கள் - (28.10.2017)


♈ மேஷ ராசி :
நேற்று வரை பலவிதமான இன்னல்களையும், போராட்டங்களையும் சந்தித்த நீங்கள் இனி மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வாகன யோகம் ஏற்படும். வாடகை இனம் சார்ந்த வருமானம் தரும் சொத்துகளை வாங்குவீர்கள். டிராவல்ஸ் வைத்திருப்பவர்களுக்கு அனுகூலமான தினம்.

அசுவினி : சிறப்பான நாள்.
பரணி : மகிழ்ச்சிகரமான நாள்.
கிருத்திகை : அனுகூலமான நாள்.

♉ ரிஷப ராசி :
கண்டக சனி விலகி, அஷ்டம சனி ஆரம்பமாகிறது. ஆகவே, வாகன பயணங்களில் விழிப்புணர்வு அவசியம். வாகன பழுது ஏற்படும். காவல் துறையினரிடம் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். இளைய சகோதரியிடம் அன்பைக் காட்டவும். வேலைப்பளு அதிகமாகும். காது சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

கிருத்திகை : மிகச்சிறப்பான பலன் கிடைக்கும்.
ரோகிணி : வாகனம் பழுது பார்க்க வேண்டியிருக்கும்.
மிருகசீரிடம் : பொருள் சேர்க்கை ஏற்படும்.

♊ மிதுன ராசி :
நினைத்ததை நினைத்தப் படி வெற்றி கண்ட உங்களுக்கு சனிபகவான் இன்றுமுதல் கண்ட சனியாக மாறி உள்ளார். கணவன் - மனைவி உறவில் அன்பை பகிர்ந்து கொள்ளவும். சோம்பலை கைவிடுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் உங்களின் புகழ் சற்று குறையும்.

மிருகசீரிடம் : கனவு பலிக்கும்.
திருவாதிரை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் : சந்திராஷ்டம தினம் என்பதால் பொறுமையை கடைபிடிக்கவும்.

♋ கடக ராசி :
திருமண முயற்சிகள் கைகூடும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட கால கடன்களை அடைப்பீர்கள். காலில் வீக்கம் ஏற்படும். உடலில் நீர்ச்சத்து குறையும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. திடீர் யோகம் ஏற்படும். எதிர்பார்க்காத திருப்பு முனைகள் ஏற்படும்.

புனர்பூசம் : சந்திராஷ்டம தினம் என்பதால் பயணங்களில் எச்சரிக்கை தேவை.
பூசம் : திடீர் யோகம் ஏற்படும்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

♌ சிம்ம ராசி :
வெளிநாட்டு தகவல்கள் நன்மை தரும். சளி, ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும். வேலைப்பளு அதிகரிக்கும். திருமண யோகம் கூடும். இளைய தலைமுறையினருக்கு காதல் உருவாகும். மனதை இனம்புரியாத கவலை ஆட்கொள்ளும். எனவே தூக்கம் கெடும். பயணங்களில் அலைச்சல் உருவாகும். ஆரோக்கியம் சீர்பெறும்.

மகம் : மன சஞ்சலம் ஏற்படும்.
பூரம் : நன்மை தரும் சம்பவம் நடைபெறும்.
உத்திரம் : வேலைப்பளு அதிகரிக்கும்.

♍ கன்னி ராசி :
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பு+ர்வீக சொத்துகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். சேமிப்பு நிலை உயரும். மூத்த சகோதரி அல்லது அத்தையின் ஆதரவு கிடைக்கும். பொதுநல தொண்டில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள்.

உத்திரம் : சேமிப்பு நிலை உயரும்.
அஸ்தம் : குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.
சித்திரை : நீண்ட கால கனவு நிறைவேறும்.