Showing posts with label கடன் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பரிகாரங்கள்......!!!. Show all posts
Showing posts with label கடன் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பரிகாரங்கள்......!!!. Show all posts

Friday, 27 October 2017

கடன் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பரிகாரங்கள்......!!! கடன் பிரச்சனை தீர பரிகாரம் !!

கடன் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் பரிகாரங்கள்......!!!
கடன் பிரச்சனை தீர பரிகாரம் !!


 கடன் வாங்கிவிட்டு அதை கட்ட இயலாமல் தவிப்பது மிக கஷ்டமானது. கடன் நிறைய இருக்கு வட்டி கட்டிக்கிட்டே இருக்கோம். எப்போ இதை அடைப்போம் என தவிப்போம். பொதுவாக ஒரு நல்ல நாள் பார்த்து கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்க மாட்டோம் என்பது நம்பிக்கையாகும். அதற்காக சில பரிகாரங்கள் உள்ளது அது பற்றி இங்கு பார்ப்போம்.

கடன் பிரச்சனை தீர சில பரிகாரங்கள் :


🌟 ஒவ்வொரு வெள்ளியும் காலை குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மஹhலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹhலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.

🌟 வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

🌟 வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்சனை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

🌟 எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்ளோர் தங்களின் உடைகள் வைக்கும் பீரோ மற்றும் பணம் வைக்கும் இடங்களில் கரு நீல துணியை விரிப்பாக உபயோகித்து வர பண விரயம் நிற்கும்.

🌟 பண பிரச்சனைகளால் மிகுந்த அவதிக்கு ஆளானோர், ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு மூடி விடவும். முன்னேற்றம் பின்பு கண் கூடாக தெரியும்.

🌟 நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

🌟 காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

🌟 கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

🌟 எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள்பாலித்துவரும் காமாட்சி அம்மனை, ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து மீட்டு, மன நிறைவான வாழ்க்கை உருவாகும்.

🌟 புளிய மரத்தின் சிறு கிளையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில், வியாபார இடத்தில், பண பெட்டியில் வைத்து வரவும்.

🌟 வெல்லத்தால் பாயசம் செய்து தொடர்ந்து 5 நாட்களுக்கு உங்களின் கையால் பசுவிற்கு வழங்கி வரவும். தொடர்ந்து 5 நாட்களுக்கு பசியால் வாடும் ஒருவருக்கேனும் உணவு உங்கள் கையால் வாங்கி கொடுக்கவும்.

🌟 வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் கொடுத்து வரவும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும்.

🌟 கோதுமையை அரைக்க கொடுக்கும் பொழுது அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்கவும்.