Showing posts with label குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிறந்த திதிக்கேற்ற பூஜைகள்!. Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிறந்த திதிக்கேற்ற பூஜைகள்!. Show all posts

Friday, 3 November 2017

குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிறந்த திதிக்கேற்ற பூஜைகள்!

குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய பிறந்த திதிக்கேற்ற பூஜைகள்!
அமாவாசை மற்றும் சதுர்த்தி திதியில் குழந்தை பிறந்தால் செய்ய வேண்டியவை ?


திதிகள் என்பது அண்டத்துள் அடைந்து இருக்கும் சூரிய குடும்பம் அதை பிரபஞ்ச ஞானத்தால் புரிந்து அவைகளை உணர்ந்து அதற்கு ஒரு பெயர் வைத்து அவைகளை எல்லாம் தொகுத்து அதற்கு வான சாஸ்திரம் என்று பெயர் வைத்து மக்களுக்கு தரப்பட்டது. இதில் நாள் (கிழமை), நட்சத்திரம், திதி, யோகம், கரணம் ஆகும். அதில் குழந்தை பிறந்த திதிக்கேற்ற பூஜைகள் செய்தால் வாழ்க்கை சிறப்பானதாக அமையும். அதைப் பற்றி பார்ப்போம்.....

அமாவாசை :


🌟 அமாவாசையன்று பிறந்த குழந்தைக்கு சூரிய - சந்திர மந்திரங்களைக் கூறி கலச பூஜை செய்வது,

🌟 தங்கம், வெள்ளி, பசு தானமாக தருவது சிறப்பான வாழ்க்கை மற்றும் எதிர்காலம் அமைய வழிவகுக்கும்.

கிருஷ்ண சதுர்தசி : (சதுர்த்தி)


சிவபெருமானின் உருவச்சிலையை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

🌟 நெற்றியில் பூர்ண சந்திரன்

🌟 வெண்மை நிற பூக்களால் ஆன மாலை அணிவிக்க வேண்டும்.

🌟 நெற்றிக் கண் இருக்க வேண்டும். வெள்ளை நூல் கயிரை ஆடையாக அணிவிக்கவும் ரிஷபத்தின் மேல் நிறுத்தி, கலசம் வைத்து மந்திரங்கள் கூறி பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்த கலச நீரை குழந்தையின் மீதும், பெற்றோர்கள் மேலும் தௌpத்து, பிரம்மனை போஜனம் செய்ய வேண்டும்.

பத்ரை கர்ணம் : (துவிதியை, சப்தமி, துவாதசி)
🌟 மகாவிஷ்ணு பூஜை செய்ய வேண்டும்

🌟 சிவன் கோவிலில் தீபம் ஏற்றலாம்

🌟 சிவனுக்கு அபிஷேகம் செய்தல்

🌟 108 தடவை அரச மரத்தை சுற்றுதல்

🌟 பிராமண போஜனம் செய்தல் ஆகியவை நல்ல வாழ்க்கையை அமைத்து தரும்.