குபேர மூலையால் ஏற்படும் நன்மை, தீமைகள் ?
தென்மேற்கு பகுதியின் நன்மை, தீமைகள்..!
தென்மேற்கு பகுதியின் நன்மை, தீமைகள்..!
ஒரு ஆண்மகனை அல்லது அந்த வீட்டின் கணவனை மனிதனாக
மதிக்கக்கூடிய சூழலை ஏற்படுத்துவதே இந்த தென்மேற்கு பகுதிதான்.
உத்யோகம்தான் புருஷலட்சணம் என்போம்.
அப்படி சிறப்பை கொடுப்பதும், பெயர்
புகழைக் கொடுப்பதும், குழந்தை பாக்கியத்தை கொடுப்பதும், பெயர் புகழை
கொடுப்பதும் இந்த தென்மேற்கின் தன்மையே.
இவ்வளவு தன்மை வாய்ந்த இந்த இடத்தை எப்படி பயன்படுத்துவது அல்லது எப்படி வைத்துக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.
1. மொத்த வீட்டு அமைப்பில் தென்மேற்கு பகுதி எப்பொழுதும் மாஸ்டர் பெட்ரூமாக இருப்பது சிறப்பு.
2. மொத்த கட்டிட அமைப்பு எப்பொழுதுமே சதுரம் அல்லது செவ்வகமாக இருப்பது.
3. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதியில் எந்த ஒரு காலியிடமும் வரக்கூடாது. அதாவது வாசல் வரக்கூடாது.
4. மொத்த இடத்தில் தென்மேற்கு பகுதி வளைந்த நெலிந்த அமைப்பில் கட்டிடங்கள் இருக்கக்கூடாது.
5. தென்மேற்கில் பு+ஜை அறை கூடாது.
6. தென்மேற்கில் சமையலறை கூடாது.
7. தென்மேற்கில் கார்பார்க்கிங், போர்டிகோ அமைப்பு கூடாது.
8. தென்மேற்கு டாய்லெட், பாத்ரூம் அமைப்பு கூடாது.
9. தென்மேற்கு உள்மூலை படி அமைப்பு கூடாது.
10. தென்மேற்கு பெட்ரூமை இளம் தம்பதியினருக்கு கொடுப்பது சிறப்பை தரும்.
11. தென்மேற்கு மாஸ்டர் பெட்ரூமை குடும்ப உறுப்பினர்களை தவிர
மூன்றாவது நபர்களை தங்க வைத்தால், அந்த வீட்டில் பல குழப்பங்கள் வந்து
சேரும்.
12. தென்மேற்கு பகுதியே ஒரு வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அந்த பகுதி எப்பொழுதுமே மூடிய அமைப்பில் இருப்பது சிறப்பு.