ஜாதக ரீதியில் யாரை நண்பர்களாக சேர்த்துக் கொள்ளலாம்?
⭐ நண்பன் என்பது இறைவன் கொடுத்த பரிசு. நல்ல நண்பன் கிடைப்பது
அவன் செய்த அதிர்ஷ்டமே. இன்பம் முதல் துன்பம் வரை நம்முடன் பங்கு
கொள்பவர்கள் நண்பர்கள்.
⭐ ஒருவருக்கு நல்ல நண்பன் கிடைத்தால் அவனது வாழ்க்கை ஏற்றமாக
அமையும். மாறாக ஒருவருக்கு அமையக் கூடிய நண்பர் தீங்கு விளைவிப்பவராக
இருந்தால் கஷ்டங்கள் மிஞ்சும்.
⭐ இங்கு ஜோதிட ரீதியாக ஒருவருக்கு எந்த ராசி நண்பர்கள் நன்மையை செய்வார்கள் என்பதை பார்ப்போம்.
எந்த ராசிக்காரர்கள் யாருக்குப் பொருந்துவார்கள் :
⭐ மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிம்மம், தனுசு, மீனம் ராசிக்காரர்களால் தீமை ஏற்படாது.
⭐ ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள்.
⭐ மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷபம், சிம்மம், துலாம் ராசிக்காரர்கள் சிரமம் ஏற்படுத்த மாட்டார்கள்.
⭐ கடக ராசிக்காரர்களுக்கு மிதுனம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களால் யோகம் ஏற்படும்.
⭐ சிம்ம ராசிக்காரர்களுக்கு விருச்சிகம், தனுசு, கடகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் நன்மையை செய்வார்கள்.
⭐ தனுசு, மீனம் ராசியில் பிறந்தவர்கள் மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களால் மட்டுமே நல்லது நடக்கும்.
⭐ மகரம், கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் நல்லது செய்வார்கள்.