Showing posts with label ஆன்மிகத்தில் அதீத பற்றுக்கு வாஸ்து காரணமா?. Show all posts
Showing posts with label ஆன்மிகத்தில் அதீத பற்றுக்கு வாஸ்து காரணமா?. Show all posts

Friday, 5 January 2018

ஆன்மிகத்தில் அதீத பற்றுக்கு வாஸ்து காரணமா?

ஆன்மிகத்தில் அதீத பற்றுக்கு வாஸ்து காரணமா?

 இந்த பூலோகத்தில் பிறக்கும் அனைவரும் எதுவும் அறியாத நிலையிலிருந்துதான் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கிறோம். நாம் வளரும் விதங்களிலிருந்து தான் நல்ல மற்றும் கெட்ட வியங்களை கற்றுக்கொள்கிறோம். அந்த வகையில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ ஆன்மிகத்தில் அதீத ஈடுபாடுடன் இருப்பதற்கு, அவரது வீட்டு அமைப்பின் வாஸ்துதான் காரணம். இன்றைய நாளில் அதிகப்படியாக, பெண்களை காட்டிலும், ஆண்களே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கிறார்கள். அந்தவகையில்
1. பேரன், பேத்தி எடுத்த பின்பு ஆன்மிகத்தில் ஈடுபடுவது ஒரு சில ஆண்கள் மட்டுமே.
2. திருமணம் முடித்து சில வருடங்களில் இன்ப, துன்பங்களை கண்டுவிட்டு ஆன்மிகத்தில் ஈடுபடும் சில ஆண்கள் உண்டு.
3. திருமணம் செய்து கொள்ளாமலே ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டு தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அற்பணிக்கும் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு.

மேற்கூறிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்பட காரணமான வீட்டு அமைப்புகளை பற்றி இனி பார்ப்போம்.
1. வடகிழக்கு பகுதியில் மூடிய நிலையில் பூஜையறை.
2. தென்மேற்கு பகுதியில் பூஜையறை.
3. தென்மேற்கு மண்டபத்துடன் கூடிய பூஜையறை.
4. தென்மேற்கிலும், வடகிழக்கிலும் சிலையுடன் கூடிய பூஜையறைகள்.
5. வீட்டிலுள்ள சிலைகளுக்கு மூன்று வேளை அல்லது ஐந்து வேளை பூஜைகள் செய்வது.
6. தென்மேற்கு ரோடுகுத்து, ரோடு பார்வை, தெருகுத்து, தெரு பார்வை அமைப்புகள்.
7. தென்மேற்கில் நீர்நிலைகளான கிணறு, ஆறு, ஓடை, குளம், குட்டை, சம்பு, கழிவுநீர்தொட்டி போன்ற அமைப்புகள்.
8. தென்மேற்கு உள்மூளை படி அமைப்புகள்.
9. தென்மேற்கு குடோன் அமைப்புகள்.
10. தென்மேற்கு காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள்.