Showing posts with label நவகிரக தோஷத்தை நீக்கும் நவதானியங்கள். Show all posts
Showing posts with label நவகிரக தோஷத்தை நீக்கும் நவதானியங்கள். Show all posts

Tuesday, 24 May 2016

நவகிரக தோஷத்தை நீக்கும் நவதானியங்கள்

சூரியன்
சூரிய பகவானுக்கு உரியது கோதுமை. கோதுமையால் தயாரித்த சுண்டலோ அல்லது உணவையோ படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும். அரசாங்க தொல்லை தீரும். கண்பார்வை வலு பெறும். அரசாங்க ஆதரவும் கிடைக்கும்.

சந்திரன்
சந்திர பகவானுக்கு உரியது நெல். அதனால், அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கும். வாழ்நாள் முழுவதும் இன்னல்கள் ஏற்படாது. முகத்தில் தேஜஸ் கிடைக்கும். தேய்பிறையாக இல்லாமல், வாழ்க்கை வளர்பிறையாக பிரகாசிக்கும்.

செவ்வாய் 
செவ்வாய் பகவானுக்கு உரியது துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடை நீங்கும். சொத்து சேரும்.

புதன்
புதனுக்குரியது பச்சை பயிறு. இத்தானியத்தை வைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம். ஜோதிட கலையில் புகழ் பெறலாம்.

குரு
குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும். மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமணம் விரையில் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தங்க நகை வியபாரத்தில் ஜொலிக்கலாம்.

சுக்கிரன்
சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம். கலைதுறையில் சாதிப்பார்கள். பணவரவு சுலபமாக அமையும். திருமண பாக்கியம் அமையும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

சனி
சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எந்த தடையும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். கஷ்டங்கள் நீங்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். இரும்பு வியபாரம், கனரக தொழில்சாலை, எண்ணெய் வியபாரத்தில் அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்க்கலாம். நோய் தீரும். ஆயுள் அதிகமாகும்.

இராகு
இராகு பகவானுக்கு உரியது உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். துர்கை அம்மனின் அருளாசி பரிபூணமாக கிடைக்கும். திடீர் பணக்காரனாக்கும் தன்மை இராகு பகவானுக்கு உண்டு. கேளிக்கைகளில் பொருள் சேரும். சொகுசான வாழ்க்கை அமையும். வெளிநாடு தொடர்புகளால் முன்னேற்றம் தரும்.

கேது
கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய் தீரும். மருத்துவ செலவுகள் பெரிய அளவில் குறையும். மனதில் உற்சாகமும், தெம்பும் கிடைக்கும். விநாயகப் பெருமானின் அருள் கிடைக்க வழி பிறக்கும். கல்வி ஞானம் அதிகரிக்கும். பெயர்-புகழ் கிடைக்கும். வெளிநாடு பயணங்கள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உயர் அந்தஸ்து கிடைக்கும். திருமண தடையும், புத்திர பாக்கிய தடையும் நீக்கும். கௌரவமான வாழ்க்கை தரும்.