Showing posts with label அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில். Show all posts
Showing posts with label அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில். Show all posts

Friday, 3 November 2017

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்


மூலவர் : ரங்கநாத பெருமாள்.

தல விருட்சம் : புன்னாக மரம் உள்ளது.

பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு.

ஊர் : ஆதி திருவரங்கம்.

மாவட்டம் : விழுப்புரம்.

தல வரலாறு :


☀ முன்னொரு காலத்தில் சந்திரன் தனது மனைவிகளின் சாபத்தினால் கலைகள் குறைந்து ஒளி மங்கி பொலிவு இழந்து வருந்தினான். பின்பு தேவர்களின் அறிவுரையின் படி இத்தலம் வந்து பெருமாளை வணங்கி தனது குறைகள் நீங்கப்பெற்றான்.

☀ தென்கிழக்கிலுள்ள தீர்த்தத்தில் நீராடி தவம் செய்ததால் இந்த தீர்த்தத்திற்கு சந்திர புஷ்கரணி என்ற பெயர் உண்டாயிற்று. சிறிது காலம் சென்ற பின் தேவர்கள் மீண்டும் பெருமாளை இதே இடத்தில் எப்பொழுதும் எழுந்தருளியிருக்க வேண்டும் என்று வேண்ட, பெருமாளும் கருணைகூர்ந்து தேவ தச்சன் விஸ்வகர்மாவை அழைத்து தன்னைப்போலவே ஒரு விக்ரகத்தை நியமிக்கும்படி கூறினார்.

☀ தேவதச்சனும் மிகப்பெரிய பள்ளி கொண்ட பெருமாளை வடிவமைத்து ஒரு ஆலயத்தை நிர்ணயித்து அதில் பிரதிஷ்டை செய்து விட்டார்.
பெருமாளும் தேவர்களுடைய வேண்டுகோளின் படி இத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க ஓவியங்களைப் பெற கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஸ்ரீசசி ஆர்ட் மேக்கர்ஸ்,
ழெ31.நட்சத்திர நகர்,
தஞ்சாவூர; - 613005.


📞 82202-54120
தல பெருமை :

☀ தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பெருமாளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமானை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் பெரிய பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :


☀ கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வேண்டுகிறார்கள். நேர்த்திக் கடனாக பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி அர்ச்சனை செய்கிறார்கள்.

திருவிழா :

☀ புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மற்றும் பவுர்ணமிகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மேலும் வைகுண்ட ஏகாதசி நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திறக்கும் நேரம்:

☀ இத்தலம் காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி :

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் கோவில்,
ஆதி திருவரங்கம் - 605 802,
விழுப்புரம் மாவட்டம்.
போன் - + 91-4153-293677

செல்லும் வழி :

☀ விழுப்புரம் மாவட்டத்தின் அருகேயுள்ள திருக்கோவிலு}ரிலிருந்து 16 கி.மீ தொலைவில் ஆதி திருவரங்கம் கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலு}ரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.