Showing posts with label Sri Vishnu Sahasranamam. Show all posts
Showing posts with label Sri Vishnu Sahasranamam. Show all posts

Sunday, 13 September 2020

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 47 | ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 17 | Bhakthi Vlog

 ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் 47


ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 17



உபேந்த்ரோ வாமந: ப்ராம்சு : அமோகஸ் சுசிரூர்ஜித:

அதீந்த்ரஸ் ஸங்க்ரஹஸ் ஸர்கோ த்ருதாத்மா நியமோ யம:


153. உபேந்த்ர: இந்திரனுக்குத் தம்பியானவன் (வாமனன்)


154. வாமனன்: ஒப்பற்ற குறள்வடிவினன் (குள்ளன்)


155. ப்ராம்சு: உயர்ந்தவன் (திரிவிக்ரமன்)


156. அமோக: பழுது படாதவன்.


157. சுசி - தூயவன் (அமலன்)


158. ஊர்ஜித: வல்லமை படைத்தவன்.


159. அதீந்த்ர: இந்திரனுக்கு மேம்பட்டவன்.


160. ஸங்க்ரஹ: எளிதில் கிரகிக்கப்படுபவன் (எளிவரும் இயல்பினன்)


161. ஸர்க - (தன்னைத் தானே பல உருவங்களில்) படைத்துக் கொள்பவன்.


162. த்ருதாத்மா-ஆன்மாக்களைத் தரித்திருப்பவன்.


163. நியம: அடக்குபவன். (அடக்கி அருள்புரிபவன்)


164. யம: (அனைத்தையும்) ஆள்பவன்.


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 46 | Bhakthi vlog | ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 16

 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 46 



ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 16


ப்ராஜிஷ்ணுர் போஜநம் போக்தா ஸஹிஷ்ணுர் ஜகதாதிஜ:

அநகோ விஜயோ ஜேதா விஸ்வயோநி : புநர்வஸு


143. ப்ராஜிஷ்ணு: நான்கு திருக்கைகளுடன் கூடிய உருவத்துடன் பக்தர்களுக்குத் தன்னை ஒளிரச் செய்பவன்.


144. போஜநம் - உணவு, (அநுபவிப்பதற்குப் பொருளாய் இருப்பவன்.)


145. போக்தா - உண்பவன் (அநுபவிப்பவனாக இருப்பவன்,)


146. ஸஹிஷ்ணு: மன்னிப்பவன். (எல்லாப் பாவங்களையும் பொறுத்து அருள்பவன்.)


147. ஜகதாதிஜ: உலக ஆரம்பத்தில் இருப்பவன்.


148. அநக: குற்றமற்றவன்.


149. விஜய: வெற்றியை உடையவன் (வெற்றியை அருள்பவன்)


150. ஜேதா - வெற்றி பெறுபவன்.


151. விச்வ யோநி: உலககாரணன்.


152. புநர்வஸு: (எல்லாத் தேவர்களிடத்தும் அந்தராத்மாவாக வசிப்பவன்) வாழ்பவன்.


ஓம் நமோ நாராயணா !