Showing posts with label ஸ்ரீம‌ந் நாராயணீயம். Show all posts
Showing posts with label ஸ்ரீம‌ந் நாராயணீயம். Show all posts

Friday, 18 January 2019

ஸ்ரீம‌ந் நாராயணீயம்

ஸ்ரீம‌ந் நாராயணீயம்

 பகுதி _-42


 த3ச’கம் 42

 ச’கட அஸுர நிக்3ரஹம்

कदापि जन्मर्क्षदिने तव प्रभो निमन्त्रितज्ञातिवधूमहीसुरा ।
महानसस्त्वां सविधे निधाय सा महानसादौ ववृते व्रजेश्वरी ॥१॥ 42/1

கதா3பி ஜன்மதி3னே தவ ப்ரபோ4
நிமந்த்ரித ஞாதி வதூ4 மஹீ ஸுரா |
மஹனஸஸ்த்வாம் ஸவிதே4 நிதா4ய ஸா
மஹானஸாதௌ3 வவ்ருதே வ்ரஜேச்’வரி ||
(42 – 1)

பிரபுவே! ஒரு முறை தங்களுடைய பிறந்த நாள் அன்று கோகுல நாயகியாகிய அந்த யசோதை பந்துக்களையும், பெண்களையும், அந்தணர்களையும் வீட்டுக்கு அழைத்தாள். ஒரு பெரிய வண்டியின் பக்கத்தில் தங்களைப் படுக்க வைத்துவிட்டு அடுக்களையில் வேலை செய்து கொண்டு இருந்தாள். ( 42 – 1)

kadaa(a)pi janmarkshadine tava prabhO
nimanitrataj~naati vadhuu mahiisuraa .
mahaanasastvaaM savidhe nidhaaya saa
mahaanasaadau vavR^ite vrajeshvarii ..
42/1

O Lord! Once on Thy birth star day, Yashoda, the queen of Vraja, who had invited the relatives and their wives and the Braahmins, for the occasion, placed Thee near a big cart and got busy in the kitchen organising the feast.
42/1

ततो भवत्त्राणनियुक्तबालकप्रभीतिसङ्क्रन्दनसङ्कुलारवै: ।
विमिश्रमश्रावि भवत्समीपत: परिस्फुटद्दारुचटच्चटारव: ॥२॥ 42/2

ததோ ப4வத் த்ராண நியுக்த பாலக
ப்ரபீ4தி ஸம்க்ரந்த3ன சங்குலாரவை:|
விமிச்’ர மச்’ராவி ப4வத் சமீப :
பரிஸ்புடத்3தா3ரு சடச்சடாரவ:||(42 – 2)

அப்போது சட சட என்ற மரம் உடையும் பெரும் சப்தம் கேட்டது. தங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட கோகுலச் சிறுவர்களின் பயந்த குரல் எழுப்பிய ஆரவாரமும் உடன் கேட்டது. (42 – 2)

tatO bhavattraaNa niyukta baalaka prabhiiti
sankrandana sankulaaravaiH .
vimishramashraavi bhavatsamiipataH
parisphuTaddaaru chaTachchaTaaravaH .. 42/2

Then from near Thee, was heard the fearful cries and confused voices of various boys who were appointed to protect Thee, which was mingled with the sound of the crackling and breaking sound of wood. 42/2

ततस्तदाकर्णनसम्भ्रमश्रमप्रकम्पिवक्षोजभरा व्रजाङ्गना: ।
भवन्तमन्तर्ददृशुस्समन्ततो विनिष्पतद्दारुणदारुमध्यगम् ॥३॥ 42/3

ததஸ்ததா3 கர்ணன ஸம்ப்3ரம ச்’ரம
ப்ரகம்பி வக்ஷோஜப4ரா வ்ரஜாங்க3னா:|
ப4வந்த மந்தர் த3த்3ருஷுஸ் ஸமந்ததோ
விநிஷ்பதத் தா3ருண தா3ருமத்3யக3ம்||
(42 – 3)

அப்போது அந்த ஆரவாரத்தைக் கேட்டு பரபரப்புடன் ஓடி வந்ததால் உண்டான சிரமத்தால் அசைகின்ற ஸ்தனங்களை உடைய கோபஸ்திரீகள் நான்கு புறங்களிலும் பயங்கரமாக வீழ்ந்திருக்கும் மரங்களையும் அவற்றின் நடுவில் இருக்கும் தங்களையும் கண்டனர்.
(42 – 3)

tatastadaakarNana sambhrama shrama prakampi
vakshOjabharaa vrajaanganaaH .
bhavantamantardadR^ishussamantatO
viniShpataddaaruNa daarumadhyagam .. 42/3

Then hearing the terrific sound, frightened, the Gopikas came running with their heavy breasts heaving because of the effort and anxiety. They saw Thee lying amongst the frightful big pieces of broken wood strewn all around. 42/3

शिशोरहो किं किमभूदिति द्रुतं प्रधाव्य नन्द: पशुपाश्च भूसुरा: ।
भवन्तमालोक्य यशोदया धृतं समाश्वसन्नश्रुजलार्द्रलोचना: ॥४॥ 42/4

சி’சோ’ரஹோ கிம் கிமபூ4தி3தி த்3ருதம்
ப்ரதா4வ்ய நந்த3: பசு’பாச்’ச பூ4ஸுரா: |
ப4வமந்த மலோக்ய யசோ’தா3 க்4ருதம்
ஸமாச்’வஸன்னச்’ரு ஜலார்த்ர லோசனா: ||(42 – 4)

“கஷ்டம்! குழந்தைக்கு என்ன நேர்ந்தது? என்ன நடந்தது?” என்று கேட்டுக் கொண்டே நந்தகோபனும், இடையர்களும், அந்தணர்களும் கண்ணும் கண்ணீருமாக ஓடிவந்து, யசோதையின் கைகளில் தங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்தனர். (42 – 4)

shishOrahO kiM kimabhuuditi drutaM pradhaavya
nandaH pashupaashcha bhuusuraaH .
bhavantamaalOkya yashOdayaa dhR^itaM
samaashvasannashru jalaardra lOchanaaH .. 42/4

Alas! What! What has happened to the child!' thus crying, Nanda, the Gopas and the essembled Braahmins rushed to the spot. Finding Thee in Yashoda's arms, they felt relieved and shed tears of joy seeing that the child was safe. 42/4

कस्को नु कौतस्कुत एष विस्मयो विशङ्कटं यच्छकटं विपाटितम् ।
न कारणं किञ्चिदिहेति ते स्थिता: स्वनासिकादत्तकरास्त्वदीक्षका: ॥५॥ 42/5

கஸ்கோ நு கௌதஸ்குத ஏஷ விஸ்மயோ
விச’ங்கடம் யச்சகடம் விபாடிதம் |
ந காரணம் கிஞ்சிதி3ஹேதி தே ஸ்தி2தா:
ஸ்வநாஸிகாத3த்த கராஸ்த்வ தீ3க்ஷகா: ||(42 – 5)

“இது என்ன? இது என்ன? எங்கிருந்து உண்டானது? விசாலமான வண்டி உடைந்தது மிகவும் ஆச்சரியமே! இதற்கு இந்த இடத்தில ஒரு காரணமும் இல்லை!” என்று கூறி அவர்கள் தங்கள் மூக்கின் மேல் விரலை வைத்து அதிசயித்துத் தங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அல்லவா? ( 42 – 5 )

kaskO nu kautaskuta eSha vismayO vishankaTaM
yachChakaTaM vipaaTitam .
na kaaraNaM ki~nchidiheti te sthitaaH
svanaasikaadatta karaasvadiikshakaaH .. 42/5

What ! What happened and how! This is a wonder! This huge cart is shattered! There seems to be no explanation for this', thus exclaiming, they looked at Thee, awstricken, with their fingers placed on their noses. 42/5

कुमारकस्यास्य पयोधरार्थिन: प्ररोदने लोलपदाम्बुजाहतम् ।
मया मया दृष्टमनो विपर्यगादितीश ते पालकबालका जगु: ॥६॥ 42/6

குமாரகஸ்யாஸ்ய பயோத4ரார்தி2ன:
ப்ரரோத3னே லோல பதாம்புஜாஹதம் |
மயா மயா த்3ருஷ்ட மனோ விபர்யகா3த்
இதீச’ தே பாலக பா3லகா ஜகு3: ||
(42 – 6)

“பால் குடிக்க விரும்பிய இந்தக் குழந்தை அழுதது. அழும் போது அசைகின்ற தாமரை போன்ற காலினால் உதைக்கப்பட்ட வண்டி தலை கீழாக விழுந்ததை நான் பார்த்தேன்; நான் பார்த்தேன்!” என்று தங்களுக்குக் காவலாக இருந்த குழந்தைகள் சொன்னார்கள் அல்லவா? (42 – 6)

kumaarakasyaasya payOdharaarthinaH prarOdane
lOlapadaambujaahatam .
mayaa mayaa dR^iShTamanO viparyagaaditiisha te
paalaka baalakaa jaguH .. 42/6

O Lord! The children who were gaurding Thee, declared 'This child who was desirous of being breast fed, moved his lotus like legs, and hit the cart which overturned. I saw, even I saw.' 42/6

भिया तदा किञ्चिदजानतामिदं कुमारकाणामतिदुर्घटं वच: ।
भवत्प्रभावाविदुरैरितीरितं मनागिवाशङ्क्यत दृष्टपूतनै: ॥७॥ 42/7

பி4யா ததா3 கிஞ்சித3ஜானதாமித3ம்
குமார காணா மதி து3ர்க4டம் வச: |
ப4வத் ப்ரபா4வா விது3ரை ரிதீரிதம்
மனாகி3வாச’ங்க்யத த்3ருஷ்ட பூதனை : ||(42 – 7)

அப்போது பயத்தினால் கூறும் இந்தச் சிறிய குழந்தைகளின் சொற்கள் பொருத்தம் அற்றவை என்றே எல்லோரும் எண்ணினார்கள். அவர்கள் தங்களின் மகிமையை அறியாதவர்கள். ஆனால் பூதனையின் கதியைக் கண்டிருந்த நந்தகோபன் முதலானவர்கள் சிறிது சந்தேகம் அடைந்தார்கள் அல்லவா?( 42 -7)

bhiyaa tadaa kinchidajaanataamidaM
kumaarakaaNaaM atidurghaTaM vachaH .
bhavatprabhaavaavidurairitiiritaM
manaagivaashankyata dR^iShTapuutanaiH .. 42/ 7

Then to the people who knew nothing of Thy prowess, the words of the frightened children were entirely baseless. But to those who knew of even a bit of Thy prowess and had witnessed the incident of Pootanaa, could not reject their statement altogether.42/7

प्रवालताम्रं किमिदं पदं क्षतं सरोजरम्यौ नु करौ विरोजितौ।
इति प्रसर्पत्करुणातरङ्गितास्त्वदङ्गमापस्पृशुरङ्गनाजना: ॥८॥ 42/8

ப்ரவால தாம்ரம் கிமித3ம் பத3ம் க்ஷதம்
ஸரோஜ ரம்யௌ நு கரௌ விரேஜிதௌ |
இதி ப்ரஸர்பத் கருணா தரங்கி3தா:
த்வத3ங்க3 மாபச்’ப்ருஷுரங்க3னா ஜனா:||(42 – 8)

“பவழம் போன்று சிவந்த இந்தக் கால்கள் அடிபட்டனவா? தாமரை போல் இருக்கும் இரு கைகளும் புண்பட்டனவா?” என்று கருணை வெள்ளம் பெருகிய கோப ஸ்திரீகள் தங்கள் திருமேனியைத் தொட்டுத் தொட்டுத் தடவினார்கள் அல்லவா? ( 42 – 8 )

pravaalataamraM kimidaM padaM kshataM
sarOjaramyau nu karau virOjitau .
iti prasarpatkaruNaatarangitaa
stvadangamaapaspR^ishuranganaajanaaH ..42/ 8

Pink like tender leaves, these legs, have they been hurt? These hands, charming like the lotuses, have they been injured?' Thus with overflowing sympathy and moved with such concern, the women folk stroked Thy body gently. 42/8

अये सुतं देहि जगत्पते: कृपातरङ्गपातात्परिपातमद्य मे ।
इति स्म सङ्गृह्य पिता त्वदङ्गकं मुहुर्मुहु: श्लिष्यति जातकण्टक: ॥९॥ 42/9

அயி ஸுதம் தே3ஹி ஜக3த்பதே: க்ருபா
தரங்க3 பாதாத்பரிபாதமத்3யமே |
இதி ஸ்ம ஸம்க்3ருஹ்ய பிதா த்வத3ங்க3கம்
முஹூர் முஹு :ச்’ளிஷ்யதி ஜாத கண்டக : ||
( 42 – 9 )

ஏ கோபியே! ஜகதீசனுடைய கிருபா கடாக்ஷத்தால் ரக்ஷிக்கப்பட்ட என் குழந்தையை என்னிடம் கொடு.” தங்கள் தந்தை தங்களைக் கையில் எடுத்துக் கொண்டு ரோமாஞ்சனம் அடைந்து தங்களுடைய சிறிய சரீரத்தை அடிக்கடி ஆலிங்கனம் செய்துகொண்டார் அல்லவா? (42 – 9)

aye sutaM dehi jagatpateH kR^ipaa
tarangapaataatparipaatamadya me .
iti sma sangR^ihya pitaa tvadangakaM muhurmuhuH
shliShyatijaatakaNTakaH ..  42/9

O Yashoda! Give me my son. By the Lord's showers of mercy today my son was saved!' Thus saying and collecting Thee in his arms, Thy father embraced Thee again and again, whose body was full of horripillations. 42/9

अनोनिलीन: किल हन्तुमागत: सुरारिरेवं भवता विहिंसित: ।
रजोऽपि नो दृष्टममुष्य तत्कथं स शुद्धसत्त्वे त्वयि लीनवान् ध्रुवम् ॥१०॥ 42/10

அனோநிலீன: கில ஹந்து மாக3த:
ஸுராரிரேவம் ப4வதா விஹிம்ஸித: |
ரஜோபி நோ த்3ருஷ்டமமுஷ்ய தத்கத2ம்
ஸ சு’த்த ஸத்வே த்வயி லீனவான் த்4ருவம் || (42 – 10)

வண்டியில் ஒளிந்து கொண்டு தங்களைக் கொல்ல வந்த அசுரன் தங்கல்ல இந்த விதத்தில் கொல்லப் பட்டான் அல்லவா? அந்த அசுரனின் பொடி கூட காணப் படவில்லை. (அந்த அசுரனின் ரஜோ குணம் காணப் படவில்லை). நிச்சயமாக அந்த அசுரன் சுத்த சத்துவ ஸ்வரூபியாகிய தங்களிடம் லயித்துவிட்டான். ( 42 – 10)

anOniliinaH kila hantumaagataH suraarirevaM
bhavataa vihimsitaH .
rajO(a)pi nO dR^iShTamamuShya tatkathaM sa
shuddhasattve tvayi liinavaan dhruvam .. 42/ 10

The Asura who had come to kill Thee, disguised as a cart, was destroyed by Thee. But even a trace of his body or evil nature (Rajas) was not seen. How can that be? Certainly, he became pure (by coming in contact with Thee) and merged in Thy pure Sattvic Self. 42/10

प्रपूजितैस्तत्र ततो द्विजातिभिर्विशेषतो लम्भितमङ्गलाशिष: ।
व्रजं निजैर्बाल्यरसैर्विमोहयन् मरुत्पुराधीश रुजां जहीहि मे ॥११॥ 42/11

ப்ரபூஜிதைஸ்தத்ர ததோ த்3விஜாதி3பி4 :
விசே’ஷதோ லம்பி4த மங்க3லாசி’ஷா:|
வ்ரஜன் நிஜைர் பா3ல்யரசை விமோஹயன்
மருத்புராதீ4ச’ ருஜாம் ஜஹீஹி மே ||
(42 – 11)

குருவாயூரப்பா! அதன்பின் அங்கு பிராமணர்கள் நன்கு பூஜிக்கப்பட்டார்கள். தங்களை அவர்கள் விசே ஷமாக மங்கள ஆசீர்வாதம் செய்தார்கள். தங்களுடைய பால்ய சேஷ்டைகளால் கோகுலத்தைக் குதூகலிக்கச் செய்த தாங்களே என் ரோகத்தைப் போக்கி அருள வேண்டும். ( 42 – 11)

prapuujitaistatra tatO dvijaatibhiH visheShatO
lambhita mangalaashiShaH .
vrajaM nijaiH baalyarasaiH vimOhayan
marutpuraadhiisha rujaaM jahiihi me .. 42/11

The Braahmins who were invited and were well honoured specially conferred their auspicious blessings on Thee. With Thy captivating childish sweet ways, Thou delighted the whole of Vraja. O Lord of Guruvaayur! May Thou sheer away my sufferings. 42/11

 தொடரும் தசகம் - 43

ஸ்ரீம‌ந் நாராயணீயம்

ஸ்ரீம‌ந் நாராயணீயம் 

 த3ச’கம் 43 




 த்ருணாவர்த்த வத4ம் 

त्वामेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं
गाढाधिरूढगरिमाणमपारयन्ती ।
माता निधाय शयने किमिदं बतेति
ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का ॥१॥ 43/1

த்வாமேகதா3 கு3ருமருத் புரநாத2 வோடு4ம்
கா3டா3திரூட4 க3ரிமாண மபாரயந்தி |
மாதா நிதா4ய ச’யனே கிமித3ம் ப 3தேதி
த்4யாயந்த்ய சேஷ்ட க்3ருஹேஷு நிவிஷ்ட ச’ங்கா ||
(43 – 1)

குருவாயூரப்பா! கரிமா என்ற யோகா சித்தியை ஒரு நாள் நீங்கள் ஏற்று மிகவும் கனமாகிவிட்டீர்கள். தாய் யசோதை உங்கள் கனத்தைத் தாங்கமுடியாமல் கீழே இறக்கிப் படுக்கையில் விட்டு விட்டு தங்களை எண்ணிக் கவலை கொண்டவளாக தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ( 43 – 1)

tvaamekadaa gurumarutpuranaatha vODhuM  
gaaDhaadhiruuDha garimaaNamapaarayantii .  
maataa nidhaaya shayane kimidaM bateti  
dhyaayantyacheShTata  
gR^iheShu niviShTashankaa .. 43/1

Once, O Lord of Guruvaayur! Thou who had very much increased in weight, Thy mother not being able to carry Thee, placed Thee on the bed. What indeed was the cause of this, thus overcome with misgivings, she kept busy carrying out her duties in the house. As she did so, she was constantly thinking of Thee and praying for Thy welfare. 43/1

तावद्विदूरमुपकर्णितघोरघोष-
व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताश: ।
वात्यावपुस्स किल दैत्यवरस्तृणाव-
र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम् ॥२॥ 43/2

தாவத்3 விதூ3ரம் உபகர்ணித கோ4ர கோ4ஷ
வ்யாஜ்ரும்பி4 பாம்ஸுபடலி பரி பூரிதாச’:|
வாத்யாவபு: ஸ கில தை3த்யவரஸ்த்ருணாவ
தார்க்2யோ ஜஹாரா ஜனமானஸ ஹாரிணீம் த்வாம் ||(43 – 2)

அப்போது வெகு தூரத்தில் பயங்கர சப்தத்துடன், உயரக் கிளம்பிய தூளிப் படலத்தால் திக்குகளை மறைத்துக் கொண்டு, சுழல் காற்றின் வடிவம் கொண்ட திருணாவர்த்தன் என்னும் பெயருடய அசுரன் ஜனங்களின் மனத்தைக் கவரும் தங்களை கவர்ந்து சென்று விட்டான் அல்லவா? (43 – 2)

taavadviduuramupakarNita ghOra ghOSha  
vyaajR^imbhi paamsupaTalii paripuuritaashaH .  
vaatyaavapuH sa kila daityavarasitraNaava-  
rtaakhyae jahaara janamaanasahaariNaM  
tvaam .. 43/2

Then the well known Asura Trinaavarta, came disguised as a whirl wind. All the quarters were filled with thick dust and a terrific sound arose and spread all around by the impact of his arrival. He carried Thee away, who carries away the minds of people.43/2

उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते
द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके ।
हा बालकस्य किमिति त्वदुपान्तमाप्ता
माता भवन्तमविलोक्य भृशं रुरोद ॥३॥ 43/3

உத்3தா3ம பாம்ஸு திமிராஹத த்3ருஷ்டிபாதே
த்3ரஷ்டும் கிமப்ய குச’லே பசு’பால லோகே |
ஹா பா3லகஸ்ய கிமிதி த்வது3பாந்த மாப்தா
மாதா ப3வந்தமவிலோக்ய ப்4ருச’ம் ருரோத3 ||(43 – 3 )

எல்லையற்ற புழுதிப் படலத்தால் கண்கள் மறைக்கப்பட்ட இடையர்கள், ஒன்றையும் காண முடியாமல் இருந்த போது, உங்களைக் காணாத யசோதை, “ஐயோ என் குழந்தைக்கு என்ன நேர்ந்தது ?” என்று கதறி உரக்கக் அழுதாள் அல்லவா? (43 – 3)

uddaamapaamsu timiraahata dR^iShTipaate  
draShTuM kimapyakushale pashupaala lOke .  
haa baalakasya kimiti tvadupaantamaaptaa  
maataa bhavantamavilOkya bhR^ishaM rurOda .. 43/3

The immense dust caused intense darkness due to which the vision was obstructed. All the cowherds and everyone were unable to see anything. Thy mother was full of worry as to what had happened to Thee. She ran in distress towards Thee and not finding Thee at the spot, she began to wail and cry loudly. 43/3

तावत् स दानववरोऽपि च दीनमूर्ति-
र्भावत्कभारपरिधारणलूनवेग: ।
सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे
घोषे व्यतायत भवज्जननीनिनाद: ॥४॥ 43/4

தாவத்ஸ வரோபி ச தீ3ன மூர்த்தி :
பா4வத்க பா4ர பரிதா4ரண லூன வேக3 : |
ஸங்கோச மாப தத3னு க்ஷத பாம்ஸு கோ4ஷே
கோ4ஷே வ்தாயாத ப4வஜ்ஜனனி நிநாத3 : ||(43 – 4)

அப்போது அந்த வலிய அசுரனும் உங்கள் பாரத்தைச் சுமக்க முடியாமல் வேகம் குன்றினான். பிறகு அசைவற்று நின்றுவிட்டான். அதன் பின் புழுதியும், சப்தமும் அடங்கிய கோகுலத்தில் தங்கள் தாயின் அழுகுரல் ஓசை பெருகியது அல்லவா? ( 43 – 4)

taavatsa daanavavarO(a)pi cha diinamuurti-  
rbhaavatka-bhaara paridhaaraNaluuna vegaH .  
sankOchamaapa tadanu kshatapaamsughOShe  
ghOShe vyataayata bhavajjananii ninaadaH .. 4 3/4

Then that great demon weakened in power, shrank in size and his speed was diminished because of carrying Thy weight. So the dust storm and the fierce whirling sound had also subsided, and so in the cowherd village Gokula, Thy mother's cries were clearly heard everywhere. 43/4

रोदोपकर्णनवशादुपगम्य गेहं
क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीन: ।
त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु-
स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात् ॥५॥ 43/5

ரோதோ3ப கர்ணன வசா’து3பக3ம்ய கே3ஹம்
க்ரந்த3ஸ்து நந்த3முக கோ3ப குலேஷு தீ3ன : |
த்வாம் தா3னவஸ்த்வகி2ல முக்திகரம் முமுக்ஷு :
த்வய்ய ப்ரமுஞ்சதி பாபாத வியத் ப்ரதே3சா’த் ||(43 – 5 )

அழுகுரல் ஓசையைக் கேட்டு வீட்டுக்கு ஓடி வந்த நந்தன் முதலிய கோபர்களும் அழுது கொண்டு இருக்கும் போது, அந்த அசுரன் மிகவும் சோர்வடைந்து, எல்லோருக்கும் முக்தி அளிக்கும் தங்களை விட்டு விட விரும்பினான். ஆனால் தாங்கள் அவனை விடாததால் ஆகாயத்தில் இருந்து கீழே விழுந்தான் அல்லவா?( 43 – 5

rOdOpakarNana vashaadupagamya gehaM  
krandatsu nandamukha gOpa kuleShu diinaH .  
tvaaM daanavastvakhilamuktikaraM mumukshu-  
stvayyapramu~nchati papaata  
viyatpradeshaat .. 43/5

On hearing the wailings of Yashoda, Nanda and the other gopas rushed inside the house crying. Meanwhile, the Asura who had become weak by carrying Thy weight, wanted to release Thee, who releases everyone's bondages. But when Thou did no let go of Thy hold of him, he fell down from the skies. 43/5

रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ-
पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् ।
प्रैक्षन्त हन्त निपतन्तममुष्य वक्ष-
स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम् ॥६॥ 43/6

ரோதா3குலஸ் தத3னு கோ3ப க3ணா ப3ஹிஷ்ட
பாஷாண ப்ருஷ்ட பு4வி தேஹமதி ஸ்த4விஷ்டம் |
ப்ரக்ஷைந்த ஹந்த நிபதந்த மமுஷ்ய வக்ஷஸி
அக்ஷிண மேவ ச ப4வந்தமலம் ஹஸந்தம் ||( 43 – 6 )

அதற்குப் பிறகு அழுது கொண்டு இருந்த இடையர்கள் வெளியில் பாறை மேல் விழுந்த மிகப் பெரிய சரீரத்தையும், அதன் மார்பில் சிறிதும் களைப்படையாமல் நன்றாகச் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் தங்களைக் கண்டு அதிசயத்தில் மூழ்கினார்கள் அல்லவா?(43 – 6)

rOdaakulaastadanu gOpagaNaa bahiShTha-  
paaShaaNapR^iShThabhuvi dehamatisthaviShTham .  
praikshanta hanta nipatantamamuShya vaksha-  
syakshiiNameva cha bhavantamalaM hasantam .. 43/6

The gopas were exhausted by their crying and wailing. Then outside the house, they saw a huge and heavy body falling on the rock. What a wonder! On the chest of the dead body, they found Thee with a soft smile lying unscathed.43/6

ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह-
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥ 43/7

க்3ராவ ப்ரபாத பரிபிஷ்ட க3ரிஷ்ட தே3ஹே
ப்4ரஷ்டாசு து3ஷ்ட த3னுஜோபரி த்4ருஷ்ட ஹாஸம் |
ஆக்4னான மம்பு3ஜ கரேண ப4வந்த மேத்ய
கோ3பா த3து4ர்கி3ரிவரா திவ நீலரத்னம் ||
(43 – 7)

பாறையின் மேல் விழுந்ததால் சிதைந்த பெருத்த சரீரத்திலிருந்து பிராணன் பிரிந்து போன துஷ்ட அசுரன் மேல் தாமரை போன்ற கையால் அடித்துக் கொண்டும், உரக்கச் சிரித்துக் கொண்டும் இருந்த தங்களை கோபர்களும், கோபிகைகளும் பெரிய மலையில் இருந்து ஒரு நீல நிற ரத்தினத்தை எடுப்பது போல எடுத்து வந்தார்கள் அல்லவா? (43 – 7)

graavaprapaata paripiShTa gariShThadeha-  
bhraShTaasu duShTadanujOpari  
dhR^iShTahaasam .  
aaghnaanamambujakareNa bhavantametya  
gOpaa dadhurgirivaraadiva niilaratnam .. 43/7

The wicked demon had died by falling on the rock and his huge body was smashed. Wearing a smile Thou played on that dead body beating about with Thy lotus like hands. The gopas picked Thee up from there as one would pick a blue gem from a big mountain. 43/7

एकैकमाशु परिगृह्य निकामनन्द-
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिताङ्गम् ।
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥ 43/8

ஏகைக மாசு’ பரிக்3ருஹ்ய நிகாமனந்த3
நந்தா3தி3 கோ3ப பரிரப்3த4 விசும்பி3தாங்க3ம் |
ஆதா3து காம பரிச’ங்கித கோ3பநாரீ
ஹஸ்தாம்பு3ஜ ப்ரபதிதம் ப்ரணுமோ ப4வந்தம் || ( 43 – 8)

மிகவும் சந்தோஷம் அடைந்த நந்தன் முதலிய கோபர்கள் ஒவ்வொருவராக சீக்கிரம் எடுத்து ஆலிங்கனம் செய்தும் முத்தமிட்டும் மகிழ்ந்தார்கள். தங்களை எடுத்துக் கொள்ள விரும்பிய கோபிகைகளின் தாமைரைப் பூ போன்ற கரங்களில் தாவி விழுந்த தங்களைத் துதிக்கின்றோம்.
( 43 – 8)

ekaikamaashu parigR^ihya nikaamananda-  
nnandaadi gOpa parirabdha vichumbitaangam .  
aadaatukaama parishankita gOpanaarii-  
hastaambujaprapatitaM praNumO bhavantam .. 43/8

One by one, Nanda and the other Gopaas with great joy took hold of Thee quickly and embraced and kissed Thy limbs.The Gopikaas were also desirous of taking Thee, but did not do so out of shyness. We praise Thee, who then, as a honey beetle jumped into their lotus like hands. 43/8

भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥ 43/9

பூ4யோபி கின்னு க்ருணும:ப்ரணதார்த்திஹாரீ
கோவிந்த3 ஏவ பரிபாலயதாத் ஸுதம் ந : |
இத்யாதி3 மாதர பித்ரு ப்ரமுகைஸ் ததா3னீம்
ஸம்ப்ரார்திதஸ் த்வத3வனாய விபோ4 த்வமேவ ||(43 – 9 )

“நாங்கள் என்ன செய்வோம்?தன்னை வணங்கிய அடியவர்களின் துயரங்களைப் போக்கும் மஹா விஷ்ணுவே ! எங்கள் குழந்தையை நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று அப்போது தாய், தந்தை முதலிய கோபர்கள் தங்களைக் காப்பதற்கு தங்களையே பிரார்த்தித்தார்கள் அல்லவா? (43 – 9)

bhuuyO(a)pi kiM nu kR^iNumaH praNataartihaarii  
gOvinda eva paripaalayataat sutaM naH .  
ityaadi maatarapitR^i pramukhaistadaaniiM  
sampraarthitastvadavanaaya vibhO tvameva ..43/ 9

Thy mother and father and the others wondered as to what could they do for Thy protection. Again and again, at that time, they said that only Govinda could protect their son. O Lord! The redeemer of Devotees! So they prayed to Thee alone for Thy wefare. 43/9

वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन्
वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि ।
किं वा करोमि पुनरप्यनिलालयेश
निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम् ॥१०॥ 43/10

வாதாத்மகம் த3னுஜ மேவமயி ப்ரதூ4ன்வன்
வாதோத்3ப4வான் மம க3தா3ன் கிமி நோ து3னோஷி |
கிம்வா கரோமி புனரப்யநிலாலயேசா’
நிச்’சே’ஷ ரோக ச’மனம் முஹூரர்த2யே த்வாம் ||(43 – 10)

பகவானே! வாத ரூபியான (சுழலக் காற்று ரூபியான) அசுரனை இவ்விதம் சம்ஹாரம் செய்த தாங்கள் வாதத்தினால் உண்டான எனது ரோகங்களை ஏன் நாசம் செய்வதில்லை? என்னால் வேறு என்ன தான் செய்ய முடியும்? ஹே குருவயூரப்பா! மீண்டும் மீண்டும் நான் மிச்சமில்லாத ரோக நிவாரணத்தையேத் தங்களிடம் வேண்டுகிறேன்.
( 43 – 10)

vaataatmakaM danujamevamayi pradhuunvan  
vaatOdbhavaanmama gadaan kimu nO dhunOShi .  
kiM vaa karOmi punarapyanilaalayesha  
nishsheSha rOgashamanaM muhurarthaye  
tvaam .. 43/10

Thus Thou killed the Asura who was in the form of the wind. Why do not Thou kill and remove my ailments which also arise from the wind. What else can I do? O Lord of Guruvaayur! I again and again beseech Thee for the eradication of all my internal and external ailments. 43/10

 தொடரும் தசகம் - 44

Sunday, 6 January 2019

ஸ்ரீம‌ந் நாராயணீயம்

ஸ்ரீம‌ந் நாராயணீயம்

 த3ச’கம் 31 :

 வாமன சரித வர்ணனம்

 प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि
त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।
मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं
वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥ 31/1

ப்ரீத்யா தை3த்யஸ்தவ தனுமஹ: ப்ரேக்ஷணாத் ஸர்வதா2Sபி
த்வாமராத்4யன்னஜித ரசயன்னஞ்ஜலிம் ஸஞ்ஜகா3த3 |
மத்த: கிம் தே ஸமபி4லஷிதம் விப்ரஸூனோ வத3 த்வம்
வ்யக்த ம் ப4க்தம் ப4வனமவனீம் வாSபி ஸர்வம் ப்ரதாஸ்தே || (31 – 1)

யாராலும் வெல்லப்படாதவரே! தங்களின்சரீர காந்தியைக் கண்டவுடன் உண்டான் பிரீத்தியால் மஹாபலி எல்லா விதங்களிலும் தங்களை ஆராதித்தான். அஞ்சலி செய்தாவாறு தங்களிடம், ” பிராம்மண குமாரரே! என்னிடமிருந்து எதை விரும்புகின்றீர்கள் என்று தெளிவாகக் கூறுங்கள். அது அன்னம், வீடு, பூமி அல்லது அவை அனைத்துமே தேவை என்றாலும் நான் அவற்றைத் தருகின்றேன்!|” என்றான். 31/1

priityaa daityastava tanumahaH prekshaNaat
sarvathaa(a)pi
tvaamaaraadhyannajita rachayanna~njaliM
sa~njagaada .
mattaH kiM te samabhilaShitaM viprasuunO vada
tvaM
vyaktaM bhaktaM bhavanamavaniiM vaa(a)pi sarvaM
pradaasye .. 31/1

Impressed on seeing Thy glorious majestic sight, the Asura Bali honoured and worshipped Thee in every way. He said with folded palms 'What do you desire from me? O Braahmin boy, you say, is it wealth, food, house or land or everything. I shall give you all.' 31/1

तामीक्षणां बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-
प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।
भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं
सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥ 31/2

தாமக்ஷீணாம் ப3லிகி3ர முபாகர்ண்யா காருண்ய பூர்ணோSபி
அஸ்யோத்ஸேகம் ச’மயிதுமனா தை3த்ய வம்ச’ம் ப்ரச’ம்ஸன் |
பூ4மிம் பாத3த்ரய பரிமிதாம் ப்ரார்த்த2யாமாஸித த்வம்
ஸர்வம் தே3ஹீதி து நிக3தி3தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் ​|| (31 – 2)

ஒரு குறையும் இல்லாத பலியின் வார்த்தைகளைக் கேட்ட தாங்கள், கருணை நிரம்பியவராக இருந்த போதிலும், அவன் கர்வத்தை அடக்க விரும்பினீர்கள். அசுர வம்சத்தைப் புகழ்ந்துவிட்டு மூன்றடி மண் வேண்டும் என்று வேண்டினீர்கள். ” எல்லாவற்றையும் கொடு!” என்று கேட்டிருந்தால் எத்தனை நகைப்புக்கு இடமாக அது ஆகி இருக்கும்!31/2

taamakshiiNaaM baligiramupaakarNya
kaaruNyapuurNO-
(a)pyasyOtsekaM shamayitumanaa daityavamshaM
prashamsan .
bhuumiM paadatrayaparimitaaM
praarthayaamaasitha tvaM
sarvaM dehiiti tu nigadite kasya haasyaM na vaa
syaat .. 31/2

On hearing those bold words of Bali, though filled with compassion Thou were desirous of curbing his pride. Speaking highly of the generosity of the Asura clan, Thou asked for earth measureable by Thy three steps. To ask for all, would have invited sneer from everyone.31/2

विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं
सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।
यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्
बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥ 31/3

விச்’வேச’ம் மாம் த்ரிபத3மிஹ கிம் யாசதே பா3லிச’ஸ்தவம்
ஸர்வாம் பூ4மிம் வ்ருணு கிமுமனோத்யாலபத்தவாம் ஸ த்3ருப்யன்|
யஸ்மாத்3 த3ர்பாத் த்ரிபத3 பரிபூர்த்யக்ஷம: க்ஷேப வாதா3ன்
பந்த4ம் சாஸாவக3மத3தத3ர்ஹோSபி கா3டோ4ப சாந்த்யை || (31 – 3)

” சிறு பிள்ளைத்தனமாக உலகங்களுக்கு எல்லாம் அதிபதியாகிய என்னிடம் வெறும் மூன்றடி மண் மட்டும் நீ யாசிக்கின்றாய்! அதனால் என்ன பயன்? இந்த பூமி முழுவதையுமே வாங்கிக் கொள்!” என்று கர்வத்தோடு மஹாபலி தங்களிடம் சொன்னான் அல்லவா ? பிறகு அவன் அந்த மூன்றடி மண் கூடக் கொடுக்க முடியாமல் இகழ்ச்சியையும், அவன் கர்வம் முற்றிலுமாக அடங்குவதற்குச் சிறையும் ( அவன் அவைகளை அடைவதற்குத் தகுதி இல்லாதவனான போதிலும்) அவன் கர்வத்தின் காரணமாக அடைந்தான் அல்லவா! 31/3

vishveshaM maaM tripadamiha kiM yaachase
baalishastvaM
sarvaaM bhuumiM vR^iNu kimamunetyaalapattvaaM sa
dR^ipyan .
yasmaaddarpaat tripadaparipuurtyakshamaH
kshepavaadaan
bandhaM chaasaavagamadatadarhO(a)pi
gaaDhOpashaantyai .. 31/3

To me, who is the lord of all the three worlds how do you ask for mere three paces of earth? You simpleton! Of what use is this? Ask for the whole earth.' Thus he proudly told Thee. Because of this pride he failed to give fully even three paces of earth and invited ridicule and bondage. Bali did not deserve it but he was subjected to all this for acquiring complete detachment.31/3

पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-
दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।
दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं
मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥ 31/4

பாத3த்ரய்யா யதி3 ந முதி3தோ விஷ்டபைர் நாபி துஷ்யேத்
இத்யுக்Sதேஸ்மின் வரத3 ப4வதோ தா3து காமேSத2 தோயம் |
தை3த்யாசார்யஸ் தவ க2லு பரீக்ஷார்த்தி2ன: ப்ரேரணாத்தம்
மாமா தே3யம் ஹரிரயமிதி வ்யக்தமேவா ப3பா4ஷே || (31 – 4)

“மூன்றடி மண்ணைக் கொண்டு சந்தோஷம் அடையாதவன் மூன்று உலகங்கள் கிடைத்தாலும் சந்தோஷம் அடைய மாட்டான்!” என்று தாங்கள் மஹா பலியிடம் கூறினீர்கள். எல்லா வரங்களையும் தரும் வரதா! அந்த மஹாபலி கமண்டல நீர் வார்த்துத் தங்களுக்குத் தானம் அளிக்க விரும்பினான். அப்போது தங்கள் பிரேரணையாலேயே மஹா பலியைப் பரீட்சித்தார் குல குரு சுக்ராச்சாரியார். மஹாபலியிடம் “கொடுக்காதே! கொடுக்காதே! இவன் எல்லாவற்றையும் அபகரிக்கும் மஹா விஷ்ணு!” என்றார் அல்லவா?31/4

paadatrayyaa yadi na muditO viShTapairnaapi
tuShye-
dityukte(a)smin varada bhavate daatukaame(a)tha
tOyam .
daityaachaaryastava khalu pariikshaarthinaH
preraNaattaM
maa maa deyaM harirayamiti
vyaktamevaababhaaShe .. 31/4

O Bestower of Boons! When Thou told him that he who is not satisfied with three steps of land will not be satisfied even by the three worlds, Bali was about to pour the pre-gift oblation water to Thee. To test Bali's integrity, and so by Thy prompting the Guru of Asuras, Shukraachaarya, told him clearly to refrain from giving the gift since Thou were Hari.31/4

याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं
दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।
विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं
चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥ 31/5

யாசத்யேவம் யதி ஸ ப4க3வான் பூர்ணகாமோSஸ்மி ஸோSஹம்
தா3ஸ்யாம்யேவ ஸ்தி2ரமிதி வத3ன் காவ்யச’ப்தோSபி தை3த்ய: |
விந்த்4யாவல்யா நிஜத3யிதயா த3த்த பாத்3யாய துப்4யம்
சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோய பூர்வம் || ( 31 – 5 )

“ஐஸ்வர்யங்கள் எல்லாம் நிறைந்துள்ள அந்த பகவானே என்னிடம் யாசிக்கின்றான் என்றால் அவன் விருப்பத்தை நான் நிறைவேற்றியவன் ஆகின்றேன். நான் தானம் கொடுக்கத் தான் போகின்றேன்!” என்று உறுதியாகக் கூறிய மஹாபலியைச் சுக்கிராச்சாரியார் கோபத்தால் சபித்தார். பத்தினி விந்தியாவளி பாதநீர் அளிக்கத் தங்களுக்குத் தானநீர் வார்த்து அனைத்தையும் அர்ப்பணம் செய்தான் அசுர அரசன்! ஆச்சரியம்! ஆச்சரியம்! 31/5

yaachatyevaM yadi sa bhagavaan puurNakaamO(a)smi
sO(a)haM
daasyaamyeva sthiramiti vadan kaavyashaptO(a)pi
daityaH .
vindhyaavalyaa nijadayitayaa dattapaadyaaya
tubhyaM
chitraM chitraM sakalamapi saH
praarpayattOyapuurvam .. 31/5

Bali firmly said that he would consider himself blessed if the Lord himself comes begging to him thus, and so he would certainly make the gift. For such a disobedience Kaavya, (Shukraachaarya) cursed him. Then, to Thee whose feet had already been washed by the waters poured by Bali's wife Vindhyaavali, he proceeded to offer everything with the pouring of the water. How wonderful! 31/5

निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-
व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।
दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-
मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥ 31/6

நிஸ்ஸந்தே3ஹம் தி3திகுலபதௌ த்வய்ய சேஷார்ப்பணம் தத்
வ்யாதன்வானே முமுசுர் ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம் |
திவ்யம் ரூபம் தவ ச ததி3த3ம் பச்’யதாம் விச்’வ பா4ஜாம்
உச்சைருச்சை ரவ்ருத4த3வதீ4க்ருத்ய விச்வாண்ட3 பா4ண்ட3ம் || (31 – 6)

அசுர அரசன் மஹாபலி, சந்தேகத்துக்கு இடமின்றித் தங்களிடம் மிச்சமின்றி அனைத்தையும் அர்ப்பணம் செய்தபோது, தேவர்களும் ரிஷிகளும் பூமாரி பொழிந்தனர். திவ்யமான வாமன ரூபமும் பிரபஞ்சவாசிகள் காணும்போதே பிரம்மாண்டம் வரையிலும் மேலும் மேலும் வளர்ந்தது அல்லவா? 31/6

nissandehaM ditikulapatau tvayyasheShaarpaNaM
tat
vyaatanvaane mumuchurR^IShayaH saamaraaH
puShpavarSham .
divyaM ruupaM tava cha tadidaM pashyataaM
vishvabhaajaa-
muchchairuchchairavR^idhadavadhiikR^itya
vishvaaNDabhaaNDam .. 6
When the Asura king Bali, without any doubt and hesitation offered and gave to Thee everything, the sages and the Devas shed a rain of flowers. As all the inhabitants of the three worlds looked on, that divine form of Thine as Vaamana, increased higher and higher extending to the dimension of the cosmic sphere.31/6

त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ
कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।
हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्
भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥ 31/7

த்வத் பதா3க்3ரம் நிஜபத3க3தம் புண்டரீகோத்3ப4வோசௌ
குண்டீ3 தோயை ரஸிசத3புனாத்யஜ்ஜலம் விச்’வலோகன் |
ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப3ஹு நன்ருதே கே2சரைருத்ஸவேsஸ்மின்
பே4ரி நிக்4னன் பு4வனமசரஜ் ஜாம்பவான் ப4க்திசாலி || (31 – 7)

பிரம்ம தேவன் தனது இடமாகிய சத்திய லோகத்தை அடைந்த தங்கள் திருவடியின் நுனியைக் கமண்டல ஜலத்தால் அபிஷேகம் செய்தான். அந்த ஜலம் எல்லா உலகங்களையும் புனிதமாக்கியது. மகிழ்ச்சியில் கந்தர்வர்கள் கானம் செய்தனர். பக்திமானாகிய ஜாம்பவான் பேரிகையை முழக்கிக் கொண்டு உலகை வலம் வந்தார் அல்லவா?31/7

tvatpaadaagraM nijapadagataM
puNDariikOdbhavO(a)sau
kuNDiitOyairasichadapunaadyajjalaM
vishvalOkaan .
harShOtkarShaat subahu nanR^ite
khecharairutsave(a)smin
bheriinnighnan bhuvanamacharajjaambavaan
bhaktishaalii .. 31/7

As the tip of Thy feet reached its own realm, the Satyalok, Brahmaa washed the foot with the water from his kamandalu-jug. That water, which became Aakaash Ganga, purified all the worlds. The Gandharvaas danced and danced in ecstasy. On this auspicious occassion the great devotee Jaambavaan went around the world beating the drum.31/7

तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा
देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।
कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:
किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥ 31/8

தாவத்3தை3த்யாஸ் த்வனு மதிம்ருதே ப4ர்த்துராரப்3த4 யுத்3தா4:
தே3வோபேதைர் ப4வத3னுசரைஸ் ஸங்க3தா ப4ங்க3மாபன் |
காலத்மாsயம் வஸதி புரதோ யத்3வசா’த் ப்ராக்3ஜிதா: ஸ்ம:
கிம் வோ யுத்3தை4ரிதி ப3லிகி3ரா தேsத2 பாதாளமாபு: ||
(31 – 8)

அதற்குள் அங்கிருந்த அசுரர்கள் அரசனின் அனுமதி இல்லாமலேயே யுத்தம் செய்யத் தொடங்கினர். தங்களின் பணியாட்கள் அந்த அசுரர்களை வென்று விட்டனர். அப்போது பலி,” யாருடைய பிரபாவத்தால் நாம் முன்பு ஜெயிக்கப்பட்டோமோ அதே பகவான் காலஸ்வரூபியாக இங்கே நிற்கின்றார். யுத்தம் செய்வதால் என்ன பயன்?” என்று கூறவும் அந்த அசுரர்கள் பாதாளம் சென்றுவிட்டனர்.31/8

taavaddaityaastvanumatimR^ite
bharturaarabdhayuddhaaH
devOpetairbhavadanucharaissangataa
bhangamaapan .
kaalaatmaa(a)yaM vasati puratO yadvashaat
praagjitaaH smaH
kiM vO yuddhairiti baligiraa te(a)tha
paataalamaapuH .. 31/8

O Lord! The Asuras started to fight with the Devas without their master Bali's permission.They were defeated by Thy emissaries who had come there and were fighting on the Deva's side. Bali told them that the Lord in the form of Time was standing before them by whose grace they had won earlier, and was now against them. So it was no use to fight. At this the Asuras went away to Paataala.31/8

पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-
स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।
पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं
प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥ 31/9

பாசை’ர் ப3த்3த4ம் பதக3பதினா தை3த்ய முச்சைரவாதீ3:
தார்தீயீகம் தி3ச’ மம பத3ம் கின்ன விச்’வேச்’வரோஸி |
பாத3ம் மூர்த்த்4னி ப்ரணய ப4க3வன்னித்யகம்பம் வத3ந்தம்
ப்ரஹ்லாத3ஸ்தம் ஸ்வயுமுபக3தோ மானயன்னஸ்தவீத்வாம் || (31 – 9)

கருடானால் வருண பாசத்தில் கட்டப்பட்ட மஹாபலியைப் பார்த்து ” எனக்கு மூன்றடி மண்ணைக் கொடு! நீ உலகங்களுக்கு எல்லாம் அதிபதி அல்லவா?” என்றீர்கள். “பகவானே! என் தலை மீது தங்கள் திருவடியை வையுங்கள்!” என்று சிறிது நடுக்கம் இல்லாமல் கூறிய மஹாபலியை பாராட்டிய வண்ணம் அங்கு வந்த பிரஹ்லாதன் தங்களைத் துதித்தான் அல்லவா? 31/9

paashairbaddhaM patagapatinaa
daityamuchchairavaadii-
staarttiiyiikaM disha mama padaM kiM na
vishveshvarO(a)si .
paadaM muurdhni praNaya bhagavannityakampaM
vadantaM
prahlaadastaM svayamupagatO
maanayannastaviittvaam .. 31/9

Garuda, Thy attendent had tied Bali with ropes by this time. Thou asked him loudly, 'Show me the place for my third step. Are you not the lord of the three worlds?' Without any hesitation Bali requested Thee to place Thy foot on his head to measure the third step. Prahlaad himself appeared by Bali's side, praised him and sang hymns of praises to Thee.31/9

दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-
र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।
मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं
विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥ 31/10

த3ர்போச்சி2த்யை விஹிதமகி2லம் தை3த்ய ஸித்3தோ4sஸி புண்யை:
லோகஸ்தேsஸ்து த்ரிதி3வவிஜயீ வாஸவத்வம் ச பச்’சாத் |
மத்ஸாயுஜ்யம் ப4ஜ ச புனரித்யன்வக்3ருஹ்ணா ப3லிம் தம்
விப்ரை: ஸந்தாநிதமக2வர: பாஹி வாதாலயேசா’ || (31 – 10 )

“மஹாபலி! உன் கர்வத்தைப் போக்குவதற்காகவே நான் இதைச் செய்தேன். புண்ணிய கர்மங்களால் நீ ஒரு சித்தன் ஆகிவிட்டாய்! உனக்காக ஸ்வர்க்கத்திலும் மேலான ஒரு உலகம் ஏற்படட்டும். பிறகு இந்திரப் பதவியும், அதன் பின்னர் என் ஸாயுஜ்யமும் நீ அடைவாய்!” என்று அவனை அனுக்ரஹித்தீர்கள் குருவாயூரப்பா ! பிராமணர்களைக் கொண்டு அந்த யாகத்தைப் பூர்த்தி செய்த தாங்கள் என்னை காப்பாற்ற வேண்டும். 31/10

darpOchChittyai vihitamakhilaM daitya siddhO(a)si
puNyai-
rlOkaste(a)stu tridivavijayii vaasavatvaM cha
pashchaat .
matsaayujyaM bhaja cha punarityanvagR^ihNaabaliM
taM
vipraissantaanitamakhavaraH paahi
vaataalayesha .. 31/10

"O Asura! In order to curb your pride completely, all this was done. You are blessed by your many good deeds. You will rule your region Sutala, which will be superior even to heaven. Later, in the next Manvantra you will become Indra and ultimately you will attain union with me." Blessing Bali thus, Thou had the priests complete the great Vishwajit Yanjya. O Lord of Guruvaayur! protect me. 31/10

 தொடரும் தசகம் - 32