Showing posts with label ஆன்மிகம். Show all posts
Showing posts with label ஆன்மிகம். Show all posts

Saturday, 4 July 2020

நோய் நீங்கி மரணபயம் போக்கும் ஸ்ரீ பைரவ மூர்த்தி வழிபாடு...!

நோய் நீங்கி மரணபயம் போக்கும் ஸ்ரீ பைரவ மூர்த்தி வழிபாடு...!





நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாக பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும் தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத்  தருபவர் என்பது நம்பிக்கை.

செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது  போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி  மரணபயம் போகும்.

இன்று அனைவரும் தெரிந்தோ தெரியாமலோ காலத்தை (நேரத்தை) பலவிதங்களிலும் வீணடிக்கின்றார்கள். அதனால் அனைவருக்கும் தோஷம் ஏற்படுகின்றது. காலத்தால் ஏற்படும் தோஷம் தீர கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்ட லட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் அள்ளி தரும் காமதேனு வழிபாடு...!!

எல்லா நன்மைகளையும் செல்வங்களையும் அள்ளி தரும் காமதேனு வழிபாடு...!!

காமதேனுவில் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டிருப்பதால் காமதேனுவை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒருசேர வணங்கிய பெரும் பேறை அடைகிறோம். காமதேனுவிற்கு சுரபி என்றும் நந்தினி என்றும் வேறு இரு பெயர்களும் உண்டு.
நம்முடைய வீடு பூஜையறையில் ஒரு சில பொருட்களை வைத்து வழிபாடு செய்யும் பொழுது வீடு சுபிட்சமாக இருக்கும். நல்லது எல்லாம் நடக்கும். நினைத்தது நிறைவேறும் கேட்டது எல்லாம் கிடைக்கும்.





காமதேனு பசு கன்றுடன் கூடிய ஒரு சிலை. இந்த சிலையை உங்கள் வீட்டில் வாங்கி வையுங்கள். சிலை வாங்க முடியாதவர்கள் காமதேனு படத்தை வாங்கி பிரேம் செய்து உங்கள் பூஜையறையில் வையுங்கள். இந்த பசுவுடன் கூடிய கன்றை பூஜையறையில் வைத்து தினமும் பாலபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த பசுமாட்டின் கொம்பு, நெற்றி, கால்கள், கன்று , பசுமாட்டின் மடி இவற்றிற்கு சந்தன குங்குமம் வைத்து மல்லிகை பூவை காமதேனுவிற்கு சமர்ப்பிக்க
வேண்டும். அதன் பிறகு இந்த காமதேனுவை தொட்டு வணங்கி உங்களுடைய கோரிக்கையை வைக்க வேண்டும். நியாயமாக நீங்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடக்கும்.

இந்த காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வநிலை உயரும். பணவரவு அதிகமாகும். பல நல்ல விஷயங்கள் நடக்கும். மேலும் இந்த மந்திரம் சொல்லி வழிபாடு செய்ய அதிக நன்மைகள் நடக்கும்.

மந்திரம்:

ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்திரியை
சதீமஹி தந்னோ தேனு
ப்ரசோதயத்

இந்த மந்திரத்தை தினமும் 54 முறை காமதேனு சிலை மீது உங்கள் கைகளை வைத்து சொல்லிவர வேண்டும். எல்லா நன்மைகளும் செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

Friday, 13 January 2017

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்



அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷ மும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டிய வாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர்.
இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடி வில் ஒருங்கிணைந்து உள்ளார்.

கிழக்கு முகம் ஹனும னாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.
தெற்கு முகம் நரசிம்ம முகம்.

இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.


வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவ ற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

வேதத்திற்கு நிகரான மந்திரம்

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
-திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.

பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை.

சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம்.  ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம்.

 இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.

இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.
நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.


ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.
சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.

சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.
சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.

இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்

அருள்மிகு பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயில்

மூலவர் : பிரசன்ன வெங்கடேசர்
உற்சவர் : வெங்கடேசப்பெருமாள்
தாயார் : அலர்மேலுமங்கை
தீர்த்தம் : வராக புஷ்கரிணி
ஆகமம்/பூஜை : வைகானஸம்
பழமை : 500 வருடங்களுக்குள்
ஊர் : சவுகார்பேட்டை
மாவட்டம் : சென்னை

திருவிழா:

சித்திரையில் 10 நாட்கள் உடையவர் உற்சவம், வைகாசியில் வரதர் உற்சவம் 10 நாட்கள், ஆடிப்பூரம், புரட்டாசியில் பிரம்மோற்ஸவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ராமநவமி.

தல சிறப்பு:

பெண் கருட வாகனம் இத்தலத்தின் சிறப்பு.

பொது தகவல்:

இத்தலத்தின் விமானம் பத்ம விமானம் எனப்படுகிறது.
பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நேர்த்திக்கடன்:

புத்திர பாக்கியம் அடைந்தவர்கள் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தலபெருமை:

சுவாமி தரிசனம் இல்லாத நாள்: திருப்பதியில் நடக்கும் பூஜை முறையிலேயே இங்கும் பூஜை நடக்கிறது. மூலஸ்தானத்தில் பஞ்ச பேரர்கள் என்னும் ஐந்து பெருமாள் இருக்கின்றனர். சுவாமி திருமார்பில் 108 லட்சுமி திருவுருவம் பொறித்த மாலை அணிந்திருக்கிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு பச்சைக்கற்பூரம் சார்த்தி விசேஷ பூஜை நடக்கிறது. இவரது சன்னதி முன்மண்டபத்தில் ரங்கநாதர், காட்சி தருகிறார்.புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் முதல் நாளில் ராமானுஜரும், சக்கரத்தாழ்வாரும் கொடியேற்ற செல்வது விசேஷம். விழாவின் 5ம் நாளில் சுவாமி அணிந்திருக்கும் லட்சுமி மாலையை, தாயாருக்கு அணிவிக்கும் வைபவம் நடக்கிறது. அப்போது, சுவாமியை தரிசிக்க முடியாதபடி சன்னதியை சாத்தி விடுகிறார்கள். பெருமாளை லட்சுமியுடன் மட்டுமே தரிசிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். அன்று இரவில் கருடசேவை நடக்கிறது.பங்குனி உத்திரத்தன்று சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி, அலர்மேலுமங்கை தாயார், ஆண்டாளுடன் சேர்ந்து காட்சி தருகிறார்.

தாயார் கருடசேவை: 

அலர்மேலு மங்கை தாயார் தனிச்சன்னதியில் இருக்கிறார். சுவாமிக்கு அணிவிக்கப்படும் மாலையே, இவருக்கும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.வழக்கமான பெருமாள் கோயில்களில் சுவாமி மட்டும் கருடன் மீது எழுந்தருளி சேவை சாதிப்பார். ஆனால் இக்கோயிலில் தாயார், கருடசேவை சாதிக்கிறார். கார்த்திகையில் 9 நாட்கள் தாயாருக்கு தீர்த்த உற்சவம் நடக்கிறது.இவ்விழாவின்போது கருட வாகனத்தில் எழுந்தருளி, பிரகாரத்தை சுற்றி வருகிறார். இதற்கென தனியே பெண் கருட வாகனம் இருக்கிறது.

உற்சவர் சிறப்பு: 

லால்தாஸ் கோயில் கட்டியபின்பு, சுவாமியை வழிபட்டு வந்தார்.ஒருசமயம் அவரது கனவில் தோன்றிய பெருமாள், அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் தான் விக்கிரகமாக இருப்பதாக உணர்த்தினார். அதன்படி சிலையை எடுத்த அவர், இங்கு பிரதிஷ்டை செய்தார். புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது இந்த உற்சவரை, பூமிக்கடியில் கிடைத்த இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது இந்த பெருமாளை, "பிறப்பிடம் செல்லும் பெருமாள்' என்று அழைக்கின்றனர்.அங்கு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. வைகாசியில் 3 நாட்கள் சயனபேரருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. இந்த பூஜை நடக்கும்போது யாரும் பார்க்க முடியாதபடி 7 திரைகளை கட்டி மறைத்து விடுவர். அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு இவரை உற்சவமூர்த்திக்கு அருகில் வைத்து, 7 வகையான கனிகளை நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். அப்போதுதான் இவரை தரிசிக்க முடியும்.

தீர்த்த விசேஷம்: 

லட்சுமி நரசிம்மர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். இவரது திருவடியில் நரசிம்மர் யந்திரம் இருக்கிறது. பொதுவாக கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை, கையில் கொடுப்பார்கள். ஆனால் இவரது சன்னதியிலுள்ள தீர்த்தத்ததை பக்தர்கள் மீது தெளிக்கிறார்கள். இதனால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. வரதராஜர், ராமர், வராகர், ஆண்டாள், ரங்கநாதருக்கு சன்னதிகள் இருக்கிறது. திருமங்கையாழ்வார் தனிச்சன்னதியில் மனைவி குமுதவல்லியுடன் காட்சி தருகிறார். கோயில் முகப்பு மண்டபம் தேர் போன்ற அமைப்பில் வடிக்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் "பைராகி' என்றால் "சந்நியாசி' என்று பொருள்.சந்நியாசிக்காக பெருமாள் காட்சி தந்த தலமென்பதால் இக்கோயில் "பைராகி வெங்கடேசப்பெருமாள் கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.

தல வரலாறு:

பல்லாண்டுகளுக்கு முன்பு லால்தாஸ் என்ற பெருமாள் பக்தர் இப்பகுதியில் வசித்து வந்தார். சந்நியாசியான இவர் தினமும் திருப்பதி பெருமாளை மனதில் நினைத்து வணங்கியபின்பே, பணிகளை துவக்குவார். இவ்வழியாக தலயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்வதையும் வழக்கமாககொண்டிருந்தார்.அவருக்கு திருப்பதி சென்று பெருமாளை வணங்க வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் நீண்டநாட்களாக அந்த ஆசை நிறைவேறவில்லை. நாளடைவில் அந்த ஆசையே ஏக்கமாக மாறியது. அவருக்கு அருள்புரிய எண்ணினார் திருமால். ஒருநாள் இரவில் லால்தாஸின் கனவில் தோன்றிய சுவாமி, தனக்கு அவரது இருப்பிடத்திலேயே கோயில் எழுப்பி வழிபடும்படி கூறினார். மகிழ்ந்த சந்நியாசி, கோயில் கட்ட ஆயத்தமானார். ஆனால், அவரிடம் பணமில்லை. எனவே மக்களிடம், கோயில் கட்ட உதவும்படி கேட்டார். யாரும் பணம் கொடுக்க தயாராக இல்லை. எனவே தனக்கு தெரிந்த வித்தையை பயன்படுத்தி செம்பை, தங்கமாக மாற்றினார். அதை விற்று கிடைத்த பணத்தில் கோயில் கட்டும் பணியை தொடங்கினார்.அவரது மகிமையை அறிந்த மக்கள் கோயில் கட்ட பணம் கொடுத்தனர். அதன்பின்பு இவ்விடத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியைப் போலவே சுவாமி சிலை அமைத்து, கோயில் எழுப்பப்பட்டது.அலர்மேலுமங்கை தாயாருக்கும் சன்னதி அமைக்கப்பட்டது. சுவாமி, லால்தாஸின் மனதில் பிரசன்னமாக தோன்றி காட்சி கொடுத்தருளினார். பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்றும் பெயர் பெற்றார்.


சுயம் அறிதல்

சுயம் அறிதல்
ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான்.
கடவுள் அவன் தவத்தை மெச்சி , ‘என்ன வரம் வேண்டும் பக்தா ?’ என்றார்.
‘மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி’ என்றான்.
கடவுளும் ‘வரம் தந்தேன்’ என்றார்.
சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து ,’தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றான்.
‘ஏன்?’ என்றார் கடவுள்.
‘அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் என்னால் தாங்க முடியவில்லை’ என்றான்.
‘அப்படியா, இந்த ஆலமரத்தின் அடியில் கண்களை மூடிப் படுத்துக் கொள் என்ன நடக்கிறது என்று கவனி’ என்றார் கடவுள்.
அப்படியே செய்தான் பக்தன்.
அப்போது ஒரு குடிகாரன் வந்தான் ,’யார்ரா இவன் நினைவே இல்லாம படுத்திருக்கான் குடிகாரப் பயல் ‘என்று சொல்லி விட்டுப் போனான்.
பிறகு ஒரு திருடன் வந்தான் ‘ராத்திரி பூரா கொள்ளையடிச்சுட்டு வந்து எவனோ இங்க படுத்து கிடக்கான்‘ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு நோயாளி வந்தான் ‘பாவம் வயித்துவலி போல சுருண்டு கிடக்கான்’ என்று சொல்லிவிட்டுப் போனான்.
ஒரு துறவி வந்தார், ‘யாரோ முற்றும் துறந்தவர் போல, அனைத்தையும் மறந்து உறங்குகிறார்’ என்று சொல்லி விட்டுப் போனார்.
சிறிது நேரம் கழிந்தது. கடவுள் பக்தனிடம் வந்தார்.
‘பார்த்தாயா உன்னைப் பற்றி அவரவர் அவரவர் கோணங்களில் புரிந்து கொள்கிறார்கள். இனியாவது உன்னைப் பற்றிய மற்றவர் விமர்சனத்தை பொருட்படுத்தாதே! ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு புரிதல் இருக்கும். உன்னுடைய சரியான பாதையில் தைரியமாக செல் வெற்றி உனக்குத்தான்’ என்றார்.
பக்தன் தெளிவடைந்தான்
நாமும் தெளிவடைவோம்.

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
ஒரு முறை சிலர்  சென்று நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம் சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ, இப்போது வருவதற்கான  சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு, அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து, ''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.
''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம்
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம்
திரும்ப கொண்டு வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது !
*தித்திக்கும்னிங்க கசக்குதே...!*
*என்றார்கள் ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*
"பார்த்தீர்களா? பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்  அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே *நாம் நமது அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்*,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும், மாற்றங்கள் மனங்களிலும் குணங்களிலும் வருவதே இனிதாகும் !*

Chhat Puja – Important festival and Vrat dedicated to Surya in Bihar and Jharkhand - Chath Puja

Chhat Puja – Important festival and Vrat dedicated to Surya in Bihar and Jharkhand - Chath Puja


Chhat or Dala Chath Vrat is an important and popular ritual observed by people of Bihar and Jharkhand in India and in the Terai Region of Nepal after Diwali. Chhat is dedicated to Lord Surya and Lord Kartik. It is observed for four days in the month of Kartik (October – November). Chhat fasting, also known as Surya Sashti, is also observed in eastern parts of Uttar Pradesh and in some parts of Chhattisgarh, Madhya Pradesh and Bengal.

Chhat vrat is dedicated to Lord Surya (Sun), Agni (fire) and Lord Kartikeya or Muruga. People undertake this Vrat for the well being of the family. It is believed that people get their wishes fulfilled, if they observe Chhat Puja. There is a popular belief that worshiping Surya will help in curing diseases like leprosy and also ensure longevity and prosperity of the family. The fast is mainly kept by women, in many places men also join in the ritual and observe fast.

During the Chhat puja devotees cook food with dry wood on new oven made of brick and soil and the cooked food is ‘Prasad’ or offerings to Sun God. Garlic and Onions are not used during Chhat period.

In 2017, the date of main Chhath puja is October 26 and October 27. Chhat Sandhya Argh (Chhat Dala Evening puja) is on October 26 and Chhath Suryodaya Argh (Chhath Dala Morning puja) is on October 27. Nahai Khai is on October 24 and Kharna is on October 25, 2017. 

Nahai Khai first day of Chhat

The first day of Chhat is dedicated to cleaning, preparation and purification and is known as Nahai Khai. Thousands of devotees have an early morning bath in Ganga River on the day. The main food cooked on the day is rice, chana dal, and green gourd (lauki). Lauki is an important preparation on the day and therefore the cooking and the day is also referred as Lauki Bhat.

Kharna fasting second day of Chhat
Fast or Upvaas begins on the second day and this is referred as Kharna. The fast is broken after performing a puja at home in the evening. Kheer, sweets and fruits are offered to deities and then the whole family shares the Prasad. Another round of fasting begins after the prasad is shared. This fast is usually broken on the fourth day morning.

Chhat Sandhya Argh third day of Chhat

 On the third day in the evening, Chhat Sandhya Argh is offered. Devotees offer ‘Argh’ to setting sun (Lord Surya) along with ‘soop’ at a pond, seashore or riverbank. ‘Argh’ and ‘soop’ are offerings and consists of flowers, fruits, sprouted grains, dry coconut, sugarcane, white radish, sweets and khajurees. The offering is made to Surya by standing in knee-deep water.

In the evening pujas are performed at home and a special puja is done for Agni – fire god. This puja is performed in a special area cordoned off by four sugarcane sticks.

Chhath Sooryodaya Argh fourth day of Chhat

On the fourth day morning, Chhath Sooryodaya Argh is performed. Devotees repeat the rituals performed on the third day evening for rising sun. What is left after offering to Lord Surya is shared as Prasad and the Chhat Puja comes to an end.

Related Articles

Origin of Chhath
Parvaitin – Person Fasting During Chhath
Chhath Sandhya Argh

சாபங்களைப் போக்கும் மங்களநாதர்

சாபங்களைப் போக்கும் மங்களநாதர்

உலகில் உள்ள எந்த நாட்டிற்கும் இல்லாத சிறப்பு, நமது பாரத தேசத்திற்கு உண்டு. இந்தியாவை புண்ணிய பூமி, புனித பூமி, ஞான பூமி என்று எல்லோரும் அழைக்க காரணம், நம் நாட்டில்தான் பல்வேறு புண்ணிய ஷேத்திரங்களும், தீர்த்தங்களும், மூர்த்திகளும் உள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்கள் அவதரித்த அற்புத பூமியும் இதுதான்.

தமிழகத்தில் சிறப்பு பெற்ற பல ஸ்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘உத்திர கோச மங்கை’ என்ற திருத்தலம். ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது. ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம்         பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக வரலாற்று தகவல் காணப்படுகிறது.

அதே போல ராவணனுக்கும், மண்டோதரிக்கும் திருமணம் முடிந்த பின்னர், புத்திர பாக்கியத்திற்காக காத்திருந்தனர். அப்போது ராவணனின் வழிகாட்டு தலின்படி, மண்டோதரி இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு புத்திரப் பேறு அடைந்தார். பிரம்மஹத்தி தோ‌ஷத்தை நீக்கக் கூடிய ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தோன்றுவதற்கும், முன்னரே தோன்றிய ஆலயம் இது. இதனை ‘மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது’ என்ற சொல் மொழியின் மூலமாக அறியலாம்.

உத்திர கோச மங்கை என்று தற்காலத்தில் அறியப்பட்டாலும், இத்தலத்தின் முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும். ‘திரு’ என்றால் அழகு மற்றும் சிறந்த என்று பொருள். ‘உத்திரம்’ என்பதற்கு ரகசியம் என்றும், ‘கோசம்’ என்பதற்கு சொல்லுதல் என்றும் பொருள்படும். ‘மங்கை’ என்பது அம்பாளைக் குறிக்கும். அம்பாளுக்கு ‘ஓம்’ என்றும் பிரணவ மந்திர விளக்கத்தை, இறைவன் விளக்கும் இடம் என்பதே இதற்கு சரியான பொருளாகும். அம்பாளுக்கு மட்டுமின்றி, மாணிக்கவாசகர் அடங்கிய ஆயிரவருக்கும், பிரணவப் பொருளை இங்கு இறைவன் உபதேசித்து உள்ளார்.

இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன் ‘மங்களநாதர்’ என்றும், இறைவி ‘மங்கள நாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். எல்லாத் தலங்களிலும் இறைவனும், இறைவியும் சமேதராக இருப்பார்கள். இங்கு இருவருக்கும் தனித்தனி சன்னிதியும், தனித்தனி விமானமும், ராஜகோபுரமும் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரானது, இறைவன் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பெயராகும். ராவணனுக்கு மங்கள நாண் அணிவிக்கும் பாக்கியத்தை, இத்தலத்தில் இருந்தே அருள்பாலித்தமையால், இறைவன் ‘மங்களநாதர்’ ஆனார்.

மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி இத்தல இறைவனை நோக்கி தவம் இருந்தாள். பரிவு கொண்ட சிவபெருமான், அவளுக்கு புத்திரப் பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கைக்கு எழுந்தருள எண்ணினார். அதற்கு முன்பாக தன் அடியார்கள் ஆயிரவர்களிடம், ‘எனது திரு மேனியை ராவணன் தீண்டும் போது, இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் எழுந்தருளிய இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு குழந்தையாக உருவெடுத்து வரமளித்தார்.

அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் அழகைப் பார்த்து, அதனை தன் கைகளால் அள்ளி எடுத்து கொஞ்சி மகிழ்ந்தான். ராவணன் தீண்டியவுடன் உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக் குளத்தில் அக்னி வளர்ந்தது. பிரணவப் பொருளை உபதேசம் பெற்ற ஆயிரவரும் அந்த அக்னியில் இறங்கி கயிலாயம் சென்றனர். ஆனால் இறைவன் அவர்கள் அனைவரையும் மீண்டும் அழைத்து அருள்பாலித்தார். இந்த ஆயிரவரும், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனோடு கலந்து விட்டனர். அதனை இங்குள்ள சகஸ்ர லிங்கத்தில் காணலாம். திருக்கோவில் குளத்தின் கரையில் வேதாகம சுவடிகளுடன் கோவில் கொண்டுள்ள மாணிக்கவாசகர் தனிச்  சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

முற்காலத்தில் இந்தப் பகுதி இலந்தை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. ஆலயத்தின் தல விருட்சமும் இலந்தை மரம்தான். இங்குள்ள இலந்தை மரம் பல நூற்றாண்டைக் கடந்தது என்று கூறுகிறார்கள்.
இந்த ஆலயம் முற்பிறவி பாவங்கள், சாப–விமோசனங்கள், ஜாதகத்தில் உள்ள தோ‌ஷங்களை போக்கும் தலமாக விளங்குகிறது. சிவன் கோவில்களிலும், சிவ வழிபாடுகளிலும் சிவபெருமானுக்கு, தாழம்பூ படைத்து வழிபாடு நடைபெறுவதில்லை. ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் சிவபெருமானுக்கு, தாழம்பூவைக் கொண்டு பூஜிக்கப்படுகிறது.

ஒருமுறை நான்முகனுக்கும், திருமாலுக்கும் ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி நிலவியது. சிவபெருமான் அக்னி பிழம்பாக உயர்ந்து நிற்க, ஒருவர் அடியையும், மற்றொருவர் முடியையும் தேடிச் செல்வது என்றும், யார் முதலில் அடியையோ, முடியையோ பார்த்து வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது. பிரம்மன் முடியைத் தேடியும், விஷ்ணு அடியைத் தேடியும் புறப்பட்டனர். அப்போது ஈசனின்  முடியில் இருந்து பல நூற்றாண்டு காலமாக தாழம்பூ ஒன்று கீழே வந்து கொண்டிருந்தது. வழியில் அந்த தாழம்பூவை சந்தித்த பிரம்மன், ஈசனிடம் வந்து தான் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி சொல்லும்படி கூறினார். தாழம்பூவும் இறைவனிடம் வந்து பொய் சாட்சி சொன்னது. இதையடுத்து இறைவன், தாழம்பூ தன்னுடைய பூஜையில் இடம்பெறாது என்று சாபம் கொடுத்தார்.

அந்த சாபம் நீங்குவதற்காக தாழம்பூ, உத்தர கோச மங்கை திருத்தலத்தில் உள்ள இறைவனை நினைத்து தவம் இருந்து பூஜை செய்தது. இதையடுத்து அதன் சாபத்தை நீக்கி, ‘இத்தலத்தில் தாழம்பூ பூஜையில் பயன்படுத்தப்படும்’ என்று இறைவன் அருளியதாகவும் தல வரலாறு தெரிவிக் கிறது.

முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ளது உத்தர கோச மங்கை ஆலயம்


 மரகத  நடராஜர்




இங்குள்ள நடராஜர் திருமேனி, மரகதத்தால் ஆனது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார். எனவே வீதி உலா வருவதற்கும், நித்திய அபிஷேகத்திற்காகவும், பஞ்சலோகத்தால் ஆன மற்றொரு நடராஜர் திருமேனி இங்கு இருக்கிறது. ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜர், இங்கு தனது பள்ளியறையில் அம்பாளுக்காக தனிமையில் நடனம் ஆடினார் என்பது தல வரலாறு. இதன் பிறகே சிதம்பரத்தில் நடராஜர், நடனக்காட்சியை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. வாழ்வில் ஒரு முறையேனும், இந்த மரகத மேனியனை தரிசனம் செய்து வருவது வாழ்வில் சிறப்பு தருவதாக இருக்கும்.