Showing posts with label ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?. Show all posts
Showing posts with label ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?. Show all posts

Thursday, 12 October 2017

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?


மனதில் புது புது எண்ணங்கள்

ஆடைகளில் புது புது வண்ணங்கள்

நாவில் புது புது இனிப்புகள்

கையில் பளபளக்கும் பட்டாசுகள்

இவையாவும் சேர்ந்து தரும்

தீப ஒளி திருநாளான

தித்தித்கும் தீபாவளி..!

💣 தீபாவளி என்பது தீப ஒளியின் வெளிச்சம் வீடுகளில் பரவுவதற்கு ஏற்ற காலமாகும். இருண்டு கிடக்கும் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த தீப ஒளி திருநாள் வருகிறது.

💣 ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தீய எண்ணம் இருக்கும். அந்த தீய எண்ணங்கள் இருட்டு போல மனதில் இருக்கும். தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த இது சிறந்த நாளாக அமைகிறது.

💣 பொதுவாக தீபாவளி ஐப்பசி மாதம் தான் கொண்டாடுகிறோம். ஏன் ஐப்பசியில் கொண்டாடுகிறோம்? அதை பற்றி இங்கு தெரிந்துக் கொள்வோம்.

🎉 இரண்டு பேருக்கு இடையில் பிரச்சனைக்கு தீர்வு சொல்பவர் தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு.

🎉 தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு துலா மாதம் என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல், எவன் இருக்கிறானோ அவனே நீதிமான்.

🎉 அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது.

🎉 பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் கொண்டாடுவதின் நோக்கம் ஆகும்.

தீபாவளி திருநாளில் தீப ஒளியினை ஏற்றி ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுவோம்.

உங்கள் வீட்டுக் குழந்தைகள் இந்த தீபாவளிக்கு வித விதமான பட்டாசுகளை பைசா செலவில்லாமல் உங்களின் ஸ்மார்ட் போனிலேயே வெடித்து மகிழ நமது நித்ராவின் தீபாவளி கிராக்கர்ஸ் செயலியை இங்கே கிளிக் செய்து இலவசமாக டவுன்லோடு செய்யுங்கள்.