Showing posts with label ஆன்மீக தகவல்கள். Show all posts
Showing posts with label ஆன்மீக தகவல்கள். Show all posts

Thursday, 1 July 2021

எந்த நாள் எந்த திதி என்று தெரிந்துகொள்ள? / Easy way to Calculate Thithi in Tamil

 எந்த நாள் எந்த திதி என்று தெரிந்துகொள்ள?



ஒரு மாதத்திற்கு ஒரு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக்காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள்.


Tamil Tithi Calendar

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை; பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.


2. துவிதை என்றால் இரண்டாம் நாள்; தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.


3. திரிதியை என்றால் மூன்றாம் நாள்; திரி என்றால் மூன்று அல்லவா?


4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள்; சதுரம் நான்கு பக்கங்கள் கொண்டது.


5. பஞ்சமி என்றால் ஐந்தாம் நாள்; பாஞ்ச் என்றால் ஐந்து எனப் பொருள்.


6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.


7. சப்தமி என்றால் ஏழாம் நாள்; சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?


8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள்; அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும், அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.


9. நவமி என்றால் ஒன்பதாம் நாள்; நவ என்றால் ஒன்பது என்றும், நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.


10. தசமி என்றால் பத்தாம் நாள்; தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.


11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள்; ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.


12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள்; தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.


13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள்; திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.


14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள்; சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.


சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இனிமேல் என்ன திதி என்று யாரையும் கேட்கத் தேவையில்லை!