Showing posts with label ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் !. Show all posts
Showing posts with label ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் !. Show all posts

Friday, 3 November 2017

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் !

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம் !
ஐப்பசி அன்னாபிஷேகம் !



⭐ சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் உலகெங்கும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணம் கூறுகிறது.

⭐ எல்லா சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

⭐ அன்னம் மனிதனுக்கு மிக முக்கியமானதாகும். அரிசியினால் சமைத்த அன்னத்தினை சிவாலயங்களில் அபிஷேகமாக நடத்துகின்றனர்.

சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிக்கின்றனர் ஏன் தெரியுமா?


⭐ அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.

⭐ தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது.

⭐ ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.

⭐ ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனிடத்தில் சேர்கிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக் கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகமாக செய்கின்றனர்.

அன்னாபிஷேகப் பலன்கள்:

⭐ வியாபாரத்தில் பிரச்சனை இருப்பவர்கள் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் செழிக்கும்.

⭐ நீண்ட நாட்களாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தை கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பாக்கியல் கிட்டும்.

⭐ சிவப் பிரசாத அன்னத்தை உண்போர்க்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

குறிப்பு :

⭐ பௌர்ணமி நாளான ஐப்பசி 17ம் நாள் (03.11.2017) அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைப்பெறும்.

⭐ சிறப்புவாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று தங்களது குறைகளை நீக்கி கொள்ளலாம்.