Showing posts with label நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?. Show all posts
Showing posts with label நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?. Show all posts

Tuesday, 24 October 2017

நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி? நாக தோஷப் பொருத்தம்

நாக தோஷம் இருப்பவர்களுக்கு திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
நாக தோஷப் பொருத்தம்


நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன. அவைகளுக்குச் சொந்த வீடு கிடையாது. எந்த வீட்டில் இருக்கிறார்களோ, அந்த வீட்டுக்குரியவனின் ஆற்றலை அதிகப்படுத்துவார்கள் அல்லது குறைப்பார்கள். இதனைத்தான் உச்ச, நீச்ச வீடு என்று குறிப்பிடுவார்கள். ராகு, கேதுவினால் ஏற்படும் தோஷம், நாக தோஷமாகும்.

நாகங்களுக்கு கேடு விளைவித்தால் ஏற்படும் தோஷமாக நாகதோஷம் அறியப்படுகிறது. ஜாதகப் பொருத்தம் பார்ப்பதற்கு நாக தோஷ விதி முறைகளையும் அனுசரிப்பது அவசியமாகும். நாக தோஷமானது, ராகு தோஷம், கேது தோஷம், சர்ப்ப தோஷம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஜனன கால ஜாதகத்தின்படி, லக்னம் இருக்கும் இடம், முதலாம் இடம். முதலாம் இடத்திலோ, குடும்பஸ்தானம் என்று சொல்லப்படும் 2-ஆம் இடத்திலோ, பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்திலோ, களத்திர ஸ்தானமான 7-ஆம் இடத்திலோ, ஆயுள் ஸ்தானமான 8-ஆம் இடத்திலோ, விரைய ஸ்தானமான 12-ஆம் இடத்திலோ, ராகுவோ, கேதுவோ இருந்தால் நாகதோஷம் என்று அர்த்தம்.

ஆண், பெண் இருவரது ஜாதகத்திலும் நாக தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம் இது உத்தமம் ஆகும்.

ஆண் ஜாதகத்தில் நாக தோஷம் இருந்து, பெண் ஜாதகத்தில் நாக தோஷம் இல்லாதிருந்தால் திருமணம் செய்யக்கூடாது. இது அதமம் ஆகும்.

2-ல் ராகு அல்லது கேது இருந்தால் மார்பு வலி, இதய வலி, சொத்து பிரச்சனை, மனைவி உடல் நலக்குறைவு, குடும்ப வாழ்க்கையில் போராட்டம் போன்றவை இருக்கும்.

4-ல் இருந்தால் கணவன் - மனைவி பிரிவினை ஏற்படுத்தும், குடும்ப வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருக்கும்.

5-ஆம் இடத்தில் ராகு இருந்தால் பித்ரு சாபம், புத்திர தோஷம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

7-ல் இருந்தால் அடிக்கடி உடல் உபாதைகள், கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு பிரியும் நிலை உண்டாகும்.

8-ல் இருந்தால் ஆயுள் தோஷம் உண்டாகும். குடும்பத்தில் அதிக பணவிரையம், விஷக்கடி தொல்லையும் ஏற்படக்கூடும்.

12-ல் மோசமான பலன்கள் கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுபர் பார்த்தாலோ அல்லது 12 ம் அதிபதி பலமாக இருந்தாலோ பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

அதனால் நாக தோஷப் பொருத்தம் கவனமாக ஆராய்ந்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்யலாம். இந்த ஜாதகர்களுக்கு, வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் மிகுந்த ஆன்மீக ஈடுபாடு தோன்றும். மேலே கூறியவை அனைத்தும் பொதுப்பலன்கள் பிற கிரகங்களின் அமைப்பு, சேர்க்கை, பார்வை, நடக்கக்கூடிய தசை, நடக்கக்கூடிய புத்தி இதனை வைத்துத்தான் முழுப்பலனையும் கணிக்க முடியும்.

திருவாதிரை, சுவாதி, சதயம், ஆகிய மூன்றும் ஜென்ம நட்சத்திரமாக வருபவர்களுக்கு, லக்னத்தில் அல்லது 2-வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்றும் ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.