Showing posts with label Raghu Kalam. Show all posts
Showing posts with label Raghu Kalam. Show all posts

Tuesday, 24 May 2016

ராகு காலம் நினைவில் வைத்துக்கொள்வது எப்படி

எளியமுறையில் ராகு காலம், எமகண்டத்தை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?

*திருவிழா * சந்தையில் *வெளியே *புறப்பட்டு *விளையாடச் *செல்வது *ஞாயமா?

*விளையாட்டாய் *புண்ணியம் *செய்தாலும் *திருவருளை *ஞானமும் *சத்தியமும் *வெளிப்படுத்தும்!

எப்போதும் எந்தச் செயலைச் செய்யும் போதும் ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டரைப் புரட்டுபவரா நீங்கள்? அப்படியானால் மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களையும் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். அப்புறம் உங்களுக்கு ராகுகாலம், எமகண்டம் பார்க்க காலண்டர் தேவைப்படாது.

எப்படி?

திங்கட்கிழமை 7.30-9 ராகுகாலம்,

அடுத்து சனிக்கிழமை 9-10.30,

வெள்ளிக்கிழமை 10.30-12,

புதன் கிழமை 12-1.30,

வியாழக்கிழமை 1.30-3,

செவ்வாய்க்கிழமை 3-4.30,

ஞாயிற்றுக்கிழமை, 4.30-6.

இதில் முதல் நாளுக்கு உரிய நேரமான 7.30-9 மட்டும் நினைவில் இருந்தால் போதும்,

வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையிலும் முதலில் உள்ள எழுத்துகளை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால் அடுத்தடுத்த ஒன்றரை மணி நேரம் ராகுகாலம் என எளிதாகத் தெரிந்துகொண்டுவிடலாம்.


இரண்டாவது வாக்கியம் யம கண்டத்திற்கு வியாழக்கிழமை 6-7.30 எமகண்டம். அடுத்தடுத்து வாக்கியத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையின் முதலெழுத்தை கிழமையின் முதலெழுத்தாகக் கொண்டால்,

அடுத்தடுத்து புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு, சனி, வெள்ளிக் கிழமைகள் அடுத்தடுத்த ஒன்றரை மணிநேரம் எமகண்டம் என்பதைக் கணக்கிட்டுவிடுவது சுலபம்தான்!


Also Read

நவகிரக தோஷத்தை நீக்கும் நவதானியங்கள்
 நாள்தோறும் சொல்ல நவகிரக துதி!