Showing posts with label Spirituals. Show all posts
Showing posts with label Spirituals. Show all posts

Thursday, 16 August 2018

🙏 Our focus with god 🙏





I Won’t Go To The Temple Again...

A daughter went to her father and said... 
“I won't be going to temple anymore..”

The father said:
“may I ask why?”

She said:
“when I go there All I see is people on their mobile phones during service & bhajan, some are gossiping, some just are not living with integrity, they are all just hypocrites...”

Father became silent, and then said:
“OK... can I ask you to do something for me before you make your final decision?”

She said:
“Yes.. what's that?”

He said:
“Plz take a glass of water and walk around the temple 2 times; but you mustn’t let any water fall out the glass.”

She said:
“yes... I can definitely do that.”

Then...
She came back and said
“it's done and here is the Glass Of Water”

He asked her 3 questions:
1.  Did you see anybody on their phone?
2. Did you see anybody gossiping?
3. Was anybody living without Integrity?

She Said:
“How could I have seen anyone else?.... I didn't see anything; All I was focused on was the glass and the water within it., making sure the water never dropped.”

He told her,
“when you go to temple, this is what you should Do... you should be simply focusing, thinking and connecting on  God, and how you can progress and help yourself to help others.. this is so that YOU don’t ever FALL in life. 🙏🏻🙏

The Daughter thanked her father for helping her understand the inner learning of the essence of Our focus with god🙏

Sunday, 12 November 2017

#தீர்க_சுமங்கலி_பவா ...! #அறிந்துகொள்ளுங்கள் !!.

#தீர்க_சுமங்கலி_பவா ...!
#அறிந்துகொள்ளுங்கள் !!.

🌼 தீர்க சுமங்கலி பவா ...!
என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம்
5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.

🌼 திருமணத்தில் ஒன்று,

🌼 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,

🌼 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,

🌼 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று,

🌼 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று!.

#இவைகள்_பற்றி_ஒரு_சிறு_விளக்கம் ;

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. 

🌼 பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது. 

🌼 இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன. 

🌼 சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன. 

🌼 உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.

🌼 நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும். 

🌼 பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. 

🌼 இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு ⚜சூரியனுக்கு ஓர் ஆண்டும்,
⚜செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், ⚜சந்திரனுக்கு ஒரு மாதமும்,
⚜புதனுக்கு ஒரு வருடமும்,
⚜வியாழனுக்கு 12 வருடங்களும்,
⚜வெள்ளிக்கு ஒரு வருடமும்,
⚜சனி பகவானுக்கு 30 வருடங்களும், ⚜ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், ⚜கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன. 

🌼 இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும். 

🌼 மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும். 

🌼 ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.

🌼 பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும். 

🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது. 

🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும். 

🌼 அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன? 

🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம். 

🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...
⚜அக்னி,
⚜சூரியன்,
⚜சந்திரன்,
⚜வாயு,
⚜வருணன்,
⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,
⚜அமிர்த கடேஸ்வரர்,
⚜நவநாயகர்கள்..
சேர்த்து குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம். 

🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,
🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,
🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,
🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..
அதிபதிகள் ஆவார்கள். 

🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும். 

🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். 

🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். 

🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும். 

🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். 

🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.

🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.

🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும் 

🌼 இறையோடு இரண்டரக் கலந்து
இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு
96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
 
🌼 #தீர்க_சுமங்கலி_பவா ...!
#என்ற_ஆசிக்கு_மனைவி_கணவனிடம்... #ஐந்து_மாங்கல்யம்_பெற_வேண்டும்!.

படித்தேன்! பகிர்ந்தேன்!! நன்றி.  நன்றி..

Saturday, 11 November 2017

ஆதிசங்கரரும் செந்திலாண்டவனின் நீறும் !

ஆதிசங்கரரும்
செந்திலாண்டவனின் நீறும் !

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், செய்வினை செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.

அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்தது சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள்.
பாம்பு போன்று ஊர்ந்து செல்வதைப் போன்ற அமைப்புடன் சொற்றொடர்களை அமைத்துப் பாடும் வடமொழி யாப்பு இப்புஜங்கம். 

 பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.

25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.

சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.

முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.

2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.

3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர்.

 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.

5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.

6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார்.

 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.

மூன்றாம் பாடல்:

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம்

மகாதேவரின் திருகுமாரனே! அழகிய மயிலேறும் செந்தில் வேலவனே! மகாவாக்கியங்களின் சாரமாக விளங்குபவனே! பேரழகுப் பொலிவுடன் கூடிய திவ்யத் திருமேனியை உடையவனே! மாமுனிவர்களின் இதயத்தில் உறைந்தருள்பவனே! நால்வேதத்தின் கருப்பொருளாய் விளங்குபவனே! தாமே அண்டகோடிகள் அனைத்திற்கும் இறைவனாவீர்!

தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.

Friday, 20 January 2017

Rath Yatra 2017 date – Puri Jagannath Rath Yatra - Puri Rath Yatra Chariot Festival 2017 date in Puri in India

Rath Yatra 2017 date – Puri Jagannath Rath Yatra - Puri Rath Yatra Chariot Festival 2017 date in Puri in India



Puri Rath Yatra, the world famous chariot or car festival, at the Puri Jagannath Temple in Orissa. Puri Rath Yatra 2017 date is June 25. It is celebrated on the second day of the Shukla Paksha (waxing phase of moon or bright fortnight) Ashadh month as per traditional Oriya Calendar. On the day of the Ratha Yatra (car festival), chariots (Rath) carrying Lord Jagannath, Balabhadra and Subhadra is pulled to the nearby Gundicha Temple.

The return journey of the chariots or Bahuda Jatra is on July 3, 2017.

At the world famous Puri Jagannath Temple in Orissa, Lord Krishna is worshipped as ‘Jagannath’ – ‘master of the universe.’ Balabhadra is the elder brother of Lord Krishna and Subhadra is his younger sister.
The making of the Rathas for the annual festival begins on the Akshaya Tritiya day. The main rituals associated with Puri Rath Yatra festival is spread over a month and several rituals, like Snana Purnima and Anasara, take place during this period.
The Snana Yatra or Snana Purnima (Bathing Festival) takes place on the full moon day in the month of Jyestha (May – June). On this day, the three deities are bathed in 108 pitchers of water.

After the elaborate Snana Yatra festival, the three deities stay away from public view and this is known as ‘Anasara.’ It is believed that after such elaborate ritualistic bath the deities catch fever and therefore they do not return to the sanctum sanctorum of the temple.

The idols of the three deities then make an appearance after 15 days of ‘anasara’ in a new appearance known as ‘Navaya Yauvana Vesha.’ The wooden idols of the deities are given a fresh coat of paint.
Next auspicious ceremony is the world famous Ratha Yatra. On this day, thousands of devotees pull the three huge chariots carrying Lord Jagannath, Balabhadra and Subhadra through the grand road (Bada Danda) to the Gundicha Temple. The deities visit their aunt here.


The three deities enter the temple of their aunt on the next day and stay there for seven days.

On the fifth day, Goddess Lakshmi, wife of Lord Jagannath, comes in search of him to the Gundicha temple.

On finding his chariot there, she damages Jagannath’s chariot and returns back in anger.

After the week-long stay, the three deities return and the journey is known as Bahuda Yatra.
During the return journey, the chariot of Jagannath stops at the Ardhasani Temple (Mausa Ma temple). Here, Lord accepts his favorite rice cake known as Poda Pitha from his aunt who is the presiding deity of the temple.

The deities reach the Puri Jagannath Temple in the evening and wait outside for the day.
On the next day, the deities are attired in new costumes and this new form of the idols is known as ‘Suna Vesa.’

The following day, the deities move into the sanctum sanctorum of the temple and the Rath Yatra festival comes to an end.

Friday, 13 January 2017

சிவ விஷ்ணு தத்வம்

சிவ விஷ்ணு தத்வம்

ம்ருத்யஞ்சய மந்த்ரம் ஜபிப்பதால் மரணம் விலகுமா, அவ்வாறு விலகினால் அது ப்ரபஞ்சத்தின் தத்வத்திற்கு எதிர்மறை ஆகிவிடுமே, அவ்வாறு இருக்க மார்கண்டேயருக்கு சிவன் எவ்வாறு அவரை காப்பாற்ற முடியும்.

குருநாதரின் பதில் பின்வருமாறு.

மரணம் என்பதை யாராலும் தடுக்கமுடியாது, பரமேஸ்வரனாலும் தடுக்க முடியாது, ஆனால் ஆயுளை நீட்டிப்பு செய்துகொள்ள முடியும், அது ஒவ்வொரு மனிதனாலும் சாத்தியமானதுதான் என்றார். 

மார்க்கண்டேயரின் கதை எல்லோருக்கும் தெரியும், அவர் ம்ருத்யஞ்ச ஜபம் இடைவிடாது செய்ததால் அவரது சரீரமே லிங்க ரூபமாகிவிட்டது. நாம் கதைகளில் படித்ததுபோல மார்கண்டேயர் லிங்கத்தை ஆலிங்கனம் செய்துகொண்டார் என்பது கதை ஆனால் இதன் உட்கருத்து இதுதான், அவரது சரீரமே லிங்கஸ்வரூபமாகியது என்பதுதான் உண்மை.
லிங்க ஸ்வரூப மார்கண்டேயரை எம தூதர்கள் நெருங்க முடியவில்லை, அதனால் எமனே அங்கு வர நேரிட்டது. எமன் வீசிய பாசக்கயிறு (NOOSE) அந்த லிங்க சரீரத்தை தாக்கியதால் யமன் தூக்கி எறியப்பட்டான், ஆயினும் பரமேஸ்வரனே யமனை எழுப்பி நான் இப்போது மார்கண்டேயரை காப்பாற்றி விட்டேன், அது நீடிக்காது, நீ பின்னால் உனது    
கடமையை செய்வாயாக என்றுகூறி யமனை அனுப்பிவிட்டு; மார்கண்டேயரை நோக்கி இப்போது அந்த ம்ருத்யஞ்சய மந்த்ரத்திற்க்கான பலனை உனக்கு நான் கொடுத்துவிட்டேன் இனி உனது ஆயுள் நீட்டிப்பை நீதான் தேட வேண்டும் என்று கூறி மறைந்தார்.
இனி வரும் கதை மார்கண்டேய புராணத்திலும் பாகவதத்திலும் வருவதாகும்.
பரமேஸ்வரனால் காப்பாற்றப்பட்ட மார்கண்டேய மஹரிஷி ப்ரளயகாலத்தில் அகப்பட்டுக்கொண்டார். அந்த ப்ரளயத்தில் ஆலிலையில் ஒரு குழந்தை மிதந்து வந்துகொண்டிருந்தது. இந்த ப்ரளயகாலத்தில் ஒரு குழந்தை எவ்வாறு வரமுடியும் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும்போது அந்த குழந்தையின் மூச்சுக்காற்றில் மகரிஷியே குழந்தையின் நாசிகாவின் வழியாக உள்ளே சென்றுவிட்டார், உள்ளே ப்ரபஞ்சத்தையே கண்டுவிட்டார், மூச்சு வெளிவரும்போது அவரும் வெளியே வந்தார். ஆம் இது சாதாரண குழ்ந்தை அல்ல என்பதனை உணர்ந்த மார்கண்டேயரிடம் அந்த குழந்தையே பதில் கூறியது. நான் கால தேவதை, ஸ்ருஷ்டியை துவக்க ஆயுத்தம் செய்கிறேன் என்று கூறி ஆதிஜகந்நாத ரூபத்தைக் காண்பித்தார். அப்போது மார்கண்டேய மகரிஷி பாடியதுதான் பாலமுகுந்தாஷ்டகம்.
முனிவரின் அஷ்டகத்தைக்கேட்ட மகிழ்ந்த மஹாவிஷ்ணு அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயுளாகக் கொடுத்தார்.
இந்த மார்கண்டேய முனிவர்தான் பின்னாளில் தனது புதல்வியான பூமி தேவியை ஒப்பிலியப்பனுக்கு மணமுடித்துக்கொடுத்தார்.
இவ்வாறாக பரமேஸ்வரனால் தடுத்தாளப்பட்டவர், விஷ்ணுவினால் ஆயுள் நீட்டிப்பு செய்து கொண்டு சிவ விஷ்ணு தத்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தார்.

Mangalvar Vrat Katha – Story of Tuesday Fasting in Hinduism

Mangalvar Vrat Katha – Story of Tuesday Fasting in Hinduism

Tuesday fasting, or Mangalvar Vrat, is dedicated to Lord Hanuman and to Mangal Grah. In Hinduism, every fast has one or more story associated with it and those people observing the Vrat read or listen to the story on the fasting day. There are several stories associated with Tuesday fasting. This particular Mangalvar Vrat Katha is associated with Lord Hanuman.

Once there was an old lady who was an ardent devotee of Lord Hanuman. She used to observe Mangalvar Vrat. On Tuesday, the old lady used to break her fast at a Hanuman Temple. She used to share whatever food she had with Lord Hanuman.

The old lady was living with her daughter-in-law and she used to get four chappatis on Tuesday from her daughter-in-law. The old lady used to offer two chappatis to Lord Hanuman and eat the other two.



One day the daughter-in-law found out that the old lady was offering chappatis to Hanuman and not eating it fully and wasting them. Next Tuesday she only gave two chappatis. The old lady gave one to Lord Hanuman and ate the other one.

When the daughter-in-law came to know about this she was very angry and on next Tuesday she only gave one chappati.

The old lady split the chappati into two and gave a part to Lord Hanuman and ate the other part.


The daughter-in-law thought that there is no point in feeding the old lady as she was wasting food at her family’s expense. So on next Tuesday she did not give any food to the old lady.

The old lady reached the temple empty handed and started praying to Hanuman.

Soon a young boy appeared there and asked her why is not breaking the fast and sharing her food with Hanuman.

The old lady told what happened and that today she has nothing to share with Hanuman.

The young boy invited the old lay to his home and promised her that he will provide her daily with milk, chappati, sugar and butter and she can share it with Lord Hanuman.

The old lady was very happy and the young boy asked her to stay with him. The daughter-in-law never bothered about her as she considered the old lady to be a burden.

But soon things began to change at the daughter-in-law’s home. There were diseases, accidents and other misfortunes at her home and they became extremely poor that they could not afford even a single meal.
The daughter-in-law soon realized that all this was due to her denying food to the old lady. She then decided to bring back the old lady. She went to the young boy’s home and asked the old lady to pardon her for her mistakes.

The old lady pardoned her and told the young boy that it is time for her to leave. She wanted the young boy to come with her. The young boy said that whenever she wants to see him she can come to the Hanuman Temple.

That night the old lady had a dream in which she saw that the young boy was in reality Lord Hanuman. Tears trickled from the old lady’s eyes. She could not ask for more – It was Hanuman that was protecting her and feeding her.

Soon the old lady narrated the incident to the family members.

The daughter-in-law then started to observe Mangalvar vrat and the family was soon blessed with prosperity.

You may also like to read

How to observe Mangalvar Vrat?
Hindu Fasting Dates

Thursday, 13 October 2016

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். 

தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீரில்
நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.

அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.

இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.

தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். 

அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. 

நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். 

அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

 சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது. 

குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்

🙏🙏ஸ்வாமி சரணம் 🙏🙏

Wednesday, 5 October 2016

Anjan Dham at Gumla – Anjani Mandir at Gumla in Jharkhand – Temple Dedicated to Mother of Hanuman

Anjan Dham at Gumla – Anjani Mandir at Gumla in Jharkhand – Temple Dedicated to Mother of Hanuman

Anjan Dham, also known as Anjani Mandir, is a temple dedicated to Anjani or Anjana, mother of Hanuman. The murti or idol of Anjani worshiped in the temple is of Mother Anjani sitting with Bal Hanuman in her lap. The temple is located on the banks of Khatwa River amid the hills of Netarhat.

As per the legend in the area, Hanuman was born to Anjana, a female Vanara or monkey, and Kesari, a male monkey, in Anjana Giri mountains. Ma Anjana was an apsara who was born on earth due to a curse.

Ma Anjani did tapasya at Anjan Dham to get back her lost status. She then gave birth to Hanuman.
The main murti of Anjani worshipped in the shrine is 3 ft tall. On the left side of Ma Anjani is the statue of Radha Krishna. On the right side of Ma are the murtis of Ram, Sita and Lakshman.

The Shivling worshiped in the shrine is known as Chakradhari Linga.

There are two caves near the shrine known as Chandgupha and Kundari Bodagupha. The caves constantly emit fragrance of scented agarbatti.

Tuesday, 30 August 2016

அன்னை பராசக்தி

அன்னை பராசக்தி சில தலங்களில் வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அதில் சில....


அம்மனுக்கு மூல விக்ரகம் இல்லாமல் உற்சவ விக்ரமே மூலவராக வழிபடப் பெறும் தலம், காரைக்குடி, கொப்புடையம்மன் கோயில்.

வடக்கு நோக்கி சிவனை பூஜை செய்யும் அம்பிகை சன்னதி உள்ள தலம் தக்கோலம். அசாம் மாநிலம் கௌஹாத்திக்கு அருகில் உள்ள காமாக்யாதேவி கோயிலில் தேவியின் யோனிச்சின்னம் மட்டுமே உள்ளது.

கிடந்த கோல துர்க்கை சன்னதி உள்ள தலம், திருநெல்வேலி கங்கை கொண்டான் அருகில் உள்ள பராஞ்சேரி. இங்கே பள்ளிகொண்ட துர்க்கை தரிசனம் தருகிறாள்.

துர்க்கையம்மனுக்கென்று தனிக் கோயில், மயிலாடுதுறையை அடுத்துள்ள தருமபுரத்தில் உள்ளது.

அம்பாள் வில் வடிவில் சிவனை வழிபடும் உற்சவமூர்த்தம், திருமால் பேறில் உள்ளது.

பிரம்மனுக்கு ஞானம் அருளும் பிரம வித்யாம்பிகை உள்ள தலம்-திருவெண்காடு

திருவானைக்கா, திருஆமாத்தூர், அறையணி நல்லூர் போன்ற தலங்களில் சுவாமி, அம்மன் சன்னதிகள் எதிர் எதிராக அமைந்துள்ளன.

திருநாகேஸ்வரத்தில் உள்ள அம்பிகை திருமகளும், கலைமகளும் பணி செய்யும் அம்பிகையாகக் காட்சி தருகின்றனர்.

கொல்லூரில் மூகாம்பிகையே அதிகாலை மூன்றரை மணி முதல் 7 மணி வரை சோட்டானிக்கரை பகவதியாகக் காட்சி தந்தருளுவதாக ஐதிகம்.

அமர்ந்த நிலையில் எட்டுத் திருக்கரங்களுடன் அமைந்த துர்க்கை அம்மனை காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலில் தரிசிக்கலாம்.

குழந்தையுடன் அம்பிகை காட்சி தரும் தலங்கள்:

இசக்கியம்மன்-நெல்லை மாவட்டம், சிதம்பரபுரம் கிராமம்.

பிள்ளை இடுக்கி அம்மன் நாகைமாவட்டம், திருவெண்காடு.
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அம்மன் பெரியநாயகி சன்னதி கீழேயும், சிவன் கனககிரீஸ்வரர் சன்னதி மலைக்கு மேலேயும் அமைந்துள்ளது.

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் அம்மன் சயன கோலத்தில் உள்ளாள்.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நீலோத்பலாம்பாள் முருகனின் தலையை தடவிய கோலத்தில உள்ளாள். அன்னை கமலாம்பாள் கால் மேல் கால் போட்டு ராணி கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் அம்மன் பெரியநாயகி சம்பந்தரை இடுப்பில் தூக்கிய நிலையில் பிரகாரத்தில் உள்ளாள்.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி கோயிலில் லிங்கத்தின் பாணத்தில் அம்மனின் வடிவம் உள்ளது. இதை அர்த்தநாரீஸ்வர லிங்கம் என்கின்றனர்.

தஞ்சாவூர் திருச்சத்திமுற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்மன் சிவனை கட்டித்தழுவிய கோலத்தில் உள்ளார்.

பொதுவாக வலது கையில் அருள்பாலிக்கும் அம்மன் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலில் இடதுகையில் அருள்பாலிக்கிறாள்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியில் உள்ள கோகிலாம்பாள் இடது கையை ஊன்றி, வலது காலை குத்தவைத்தபடி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள காளி வலது காலை குத்துக்காலிட்டு இடது காலை தொங்கவிட்டு வலது கையில் சூலம் ஏந்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

சிதம்பரம் தில்லை காளி கோயிலில் அம்மன் நான்கு முகத்துடன் பிரம்மசாமுண்டீஸ்வரியாக அருள்பாலிக்கிறாள்.

கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் அம்மன் சிம்ம முகத்துடன் அருள்பாலிக்கிறாள்

Tuesday, 26 July 2016

நமச்சிவாய வாழ்க




நமச்சிவாய வாழ்க
"கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, உன் ஆசைகளை அடக்கி வாழச்சொல்வது புறச்சமயம்.
நீ அடைபட்டு கிடக்கும் கட்டிலிருந்து உன்னை விடுவிப்பதே சைவ சமயம்."
நீ விரும்புவதையெல்லாம் இழந்தால் தான் இறைவனை அடையலாம் என்று சொல்வது சமணம் பொளத்தம் போன்ற புறச்சமயம். இறைவனை அடைய எதையும் நீ இழக்க வேண்டியதில்லை. ஈசன் மேல் அன்பு கொண்டு இருத்தலே போதுமானது என்று போதிப்பது சைவ சமயம்.
இறைவனடி சேர வேண்டுமா!!!!!!!!
குடும்பத்தை மறந்து விடு. பிரம்மச்சரியம் கடைபிடி. நல்ல உடைகள் உடுத்தாதே. கோவணம் மட்டும் உடுத்து. அறுசுவை உணவு உண்ணாதே. பிச்சையெடுத்து சாப்பிடு. இது தான் புறச்சமய கோட்பாடு. இன்புர வாழ். இறைவனடி சேர் என்று போதிப்பதே சைவ சமய கோட்பாடு.
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெறலாம் என்பது புறச்சமய கோட்பாடு. எதையும் இழக்க வேண்டியதில்லை. சிவபெருமானை வணங்கினால், இழந்த யாவையும் மீட்கலாம் என்று எடுத்துறைப்பதே சைவ சமயம். அறுபத்து மூவர் வரலாறும் இதையே போதிக்கின்றன.
சுத்தபத்தமாக வாழ்ந்தான், பிரம்மச்சரியம் கடைபிடித்தான், புலால் உண்ணாமல், தாவர உணவு மட்டுமே உட்கொண்டான், நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தான் என்ற அற்ப காரணங்களுக்காக எவரும் நாயன்மார்களாக ஆனதில்லை.
சூதாடினாலும், மது அருந்தினாலும், புலால் உண்டாலும், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொண்டாலும், சிவனடியார்களை துன்புறுத்துவோரை வெட்டி கொன்றாலும், சிவனை நினைத்து எதையும் செய்தவரே, இன்று நாயன்மார்களாக திகழ்கிறார்கள்.
சிவபெருமான், உன்னை விரும்புபவர். நீ கடைபிடிக்கும் மறைகள், முறைகள், விரதம், கட்டுப்பாடுகள், சுத்தம் ஆகியவற்றை விரும்புபவர் அல்ல. சிவனை நினைத்து நீ வாழும் வாழ்க்கை தான் உன்னை சிவனடி சேர்க்கும். சுத்தபத்தம், ஆச்சாரம், கட்டுப்பாடுகள், விரதங்கள் ஆகியவை ஒருபோதும் உன்னை சிவனடி சேர்க்காது.
சிவனடி சேர......
சிவனை நினைப்போம்
சிவனை உரைப்போம்
சிவனடி சேரவே சீவித்திருப்போம்
வாழ்தலே வழிபாடு. நமச்சிவாய

Thursday, 30 June 2016

குட்டிக்கதை

குட்டிக்கதை


ஒரு நாள் துரியோதனன் கிருஷ்ணரிடம், "எல்லோரும் கர்ணனையே கொடையாளி என்கிறார்களே! அப்படி அவன் பிரமாதமாக என்ன கொடுத்து விட்டான்.? அப்படி அவன் கொடுத்திருந்தாலும், அவை யாவும் என்னுடைய பொருள் தானே." என்றான்.

"உண்மை தான் துரியோதனா.! உன்னைவிடக் கர்ணனைப் புகழ்வது முட்டாள் தனம் தான் என்ற கிருஷ்ணர், 

"ஆறு மாதங்களுக்குப் பின் நான் ஒரு யாகம் இயற்றப் போகிறேன். அதற்கு வேண்டிய எல்லாப் பொருட்களும் சேர்த்து விட்டேன். விறகு ஒன்று தான் பாக்கி.அதை நீ யாக காலத்தில் எனக்கு வழங்க முடியுமா.?என்று கேட்டார்.

கேவலம் விறகுக்காக,அதுவும் ஆறுமாதம் முன்னதாக சொல்ல வேண்டிய அவசியமென்ன என்று எண்ணிய துரியோதனன்," அந்த சமயம் சீட்டு கொடுத்தனுப்பு.அனுப்பி வைக்கிறேன் ,"என்றான்.
மழைக்காலம். வானமே பொத்துக் கொண்டு விட்டாற்போல் மழை நேரத்தில்,இருபது வண்டிகளில், யாகத்துக்கு விறகு அனுப்புமாறு துரியோதனனுக்கு சீட்டு கொடுத்தனுப்பினார் கிருஷ்ணர்.
அதைப் பார்த்த துரியோதனன் சமயம் தெரியாமல் விறகு கேட்கிறானே.! என்று திட்டியபடி இப்போது சௌகரியப்படாது என்று சொல்லி வண்டிகளைத் திருப்பி அனுப்பி விட்டான்.
திரும்பிப் போகும் வண்டிகளை விசாரித்த கர்ணன்,விபரமறிந்து,தன் நாட்டிலுள்ள பழைய வீடுகளை இடித்து,அதிலுள்ள உத்திரங்கள், மரங்களை அந்த இருபது வண்டிகளிலும் ஏற்றியனுப்பினான் கர்ணன்.
அதோடு தன் வண்டிகள் இரண்டையும் சேர்த்தனுப்பினான்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு கிருஷ்ணரைச் சந்தித்தான் ,துரியோதனன். "கண்ணா.!யாகத்தை எப்போது துவங்கப் போகிறாய்.?" என்று கேட்டான்.
"கர்ணனின் உதவியால் யாகம் குறித்த காலத்தில் பூர்த்தி அடைந்து விட்டதே," என்றார் கிருஷ்ணர்.

துரியோதனனுக்கு ஒன்றும் புரிய வில்லை. விபரத்தை விளக்கிய கிருஷ்ணர்,
"துரியோதனா.! இப்போதாவது புரிகிறதா.?கர்ணன் உன்னை விட கொடையில் உயர்ந்தவன் என்று?

கொடைக்கு பொருட்களும்,காலமும் ஒரு பொருட்டேயல்ல;மனம் தான் வேண்டும்," என்றார் கிருஷ்ணர்.

முடிந்தளவு உதவுவோம்;

உதவ இயலாவிட்டாலும்,உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தாலே போதும், எல்லாம் நன்மையே நடக்கும்.

Wednesday, 1 June 2016

Vishnu Sahasranamam

எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும்.

அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.


இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது.


Articles Related :) 

Ekadashi-june-2016

தர்ப்பணம்

தர்ப்பணம் பற்றிய ஒரு சிந்தனை

தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள். தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும் ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.

அதேசமயம், எதிர்மறை சொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.

இந்த அர்ரய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.

தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.

அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது. நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.

அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.

அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.

அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.

மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொளல்வேன் என்று சபதம் செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்துபுரிந்துகொள்ளலாம்.

அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம். ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது. நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.


ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம் கூறுகின்றது. இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.

உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம் செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின் மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.

சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.

சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள் சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.

நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு முக்கியமானதாக உள்ளது.

குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.

இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து போகின்றோம்

Food is about the body – Sadhguru

Food is about the body – Sadhguru
 
If you become worshipful towards the creation around you, if you worship the bird, the plant, the flower, the food that you eat, the earth that you walk on, the water that you drink, the very air that you breathe, your life will become utterly beautiful.

If you don’t make yourself receptive to the Grace around you, then your head will cook up hell. Every day it will manufacture a new hell.

When it comes to food, you must learn to ask the body, and listen to it. What your body wants, what you body is happy with, that is what you should eat.

Right now, your mind decides what you eat and the mind has nothing to do with food.
Food is about the body. If you learn to listen to the body, then you will naturally eat properly.

– Sadhguru Jaggi Vasudev