Showing posts with label கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி சண்டியாகம். Show all posts
Showing posts with label கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி சண்டியாகம். Show all posts

Sunday, 29 October 2017

கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி சண்டியாகம்

கபிலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி சண்டியாகம்

திருமலை: கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் நவக்கிரக சாந்தி யாகம் நடந்தது. தொடர்ந்து, இன்று முதல்  9 நாட்களுக்கு சண்டி யாகம் நடக்கிறது.

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் சுவாமி கோயிலில் கார்த்திகை மாதத்தையொட்டி 3 நாட்கள் கணபதி யாகம், 2 நாட்கள் சுப்பிரமணிய சுவாமி யாகம், தட்சிணாமூர்த்தி யாகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று நவக்கிரக சாந்தி யாகம் நடந்தது. இதையொட்டி காலை 9 மணியளவில் யாக பூர்ணாஹுதி, கலச ஸ்தாபனம் நடந்தது.

இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று முதல் 9 நாட்களுக்கு காமாட்சி அம்மன் யாகம் (சண்டி யாகம்) நடைபெற உள்ளது.