Showing posts with label சிவபுராணம்:. Show all posts
Showing posts with label சிவபுராணம்:. Show all posts

Thursday, 16 August 2018

சிவபுராணம்: அறுசுவையுடைய ஞானக்கனிக்கு ஆசைப்பட்ட விநாயகர்!

சிவபுராணம்: அறுசுவையுடைய ஞானக்கனிக்கு ஆசைப்பட்ட விநாயகர்!

சிவபுராணம்..!
  சிவபெருமான் இத்தனை பல வலிமைகளையும், அரிய ஆற்றலையும், ஞானத்தையும் உடைய இந்த கனியை நான் உண்பதை காட்டிலும் இந்த பிரபஞ்சத்திற்கே அன்னையாக விளங்கும் தேவி பார்வதி உண்பதே சரியானதாகும் என கூறினார்.
சிவனின் திருவிளையாடலை அறியாத அன்னையான பார்வதி தேவி நான் தங்களுடன் இருக்கும்போது கிடைக்கப் பெறாத ஞானம் எதுவும் இல்லை என்று கூறி இந்த ஞானக்கனியை வேண்டாம் என மறுத்தார்.
சிவபெருமானும், பார்வதி தேவியும் சாப்பிட மறுத்ததை கண்ட நாரதர் இன்று தனக்கான நாள் இல்லை என அறிந்து சோர்வடையும் தருவாயில் தனது கைகளில் ஏதோ ஊர்ந்து வந்து பழத்தை எடுப்பது போல் உணர்ந்தார்.
யார் என அறிவதற்குள், அங்கு கணபதி தனது துதிக்கையால் அக்கனியை எடுக்க முயற்சித்தார். கணபதியை கண்டதும் நாரதர் மிகவும் மகிழ்ந்தார். இன்றைய நாள் தன்னுடைய நாள் என்பதனை அறிந்தார்.
விநாயகர் நாரதர் கையில் இருந்த ஞானக்கனியை உண்ண விரும்பி அதை எடுக்கும் தருவாயில் நாரதர் கனியை எடுத்துக் கொண்டார். பின்பு கணபதியோ இந்த கனியானது மிகவும் சுவையுடன் இருக்குமா என்று கேட்டார். அதற்கு நாரதர் இது, அறுசுவைகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அற்புதமான கனியாகும். ஒரு முறை சுவைத்தால், அதன் சுவையானது நம்மை புதியதொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் என்றார்.
கணபதியோ நீங்கள் இதுவரை இக்கனியை உண்ணவில்லை என்கிறீர்கள். ஆனால், அதன் சுவையை பற்றி எப்படி இவ்வளவு தௌpவாக கூறுகின்றீர்கள் என்று கேட்டார். கணபதியின் இக்கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத நாரதர் என்ன சொல்வது என சிந்தித்து பின்பு எனக்கு இக்கனியை கொடுத்த முனிவர் இதன் சுவையையும், பலனையும் கூறினார். அதைக் கொண்டே நான் தங்களுக்கு விடையளித்தேன் என்றார்.
கணபதிக்கோ அதன் சுவையை கேட்டதில் இருந்து தான் அந்த கனியை உண்டு அதனுடைய சுவையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணி, நாரதரிடம் நான் இக்கனியை உண்ணலாமா? எனக் கேட்டார்.
ழூ சிவபுராணம் நாளையும் தொடரும்....