Thursday, 5 May 2016

அக்கினி நட்சத்திரமும் பிரதோஷ பூஜையும்..!

அக்கினி நட்சத்திரமும் பிரதோஷ பூஜையும்..!  

வருடந்தோறும் கோடையில் வருகிற அக்கினி நட்சத்திரம் இன்று துவங்கி, இந்த மாதக் கடைசி வரை நீடிக்கிறது. 

ஆனால் நேற்றும் போன வாரமும் கூட கொளுத்தியெடுக்குது வெயில். 

அப்படியிருக்க,  அக்கினி நட்சத்திர வேளையில் அனல் கக்கப் போகிறது. 

அனல் தகிக்கும் இந்த பிரச்சாரமும் சுட்டெரிக்கும் அக்கினி நட்சத்திரமும் மத்தளம் போல் ரெண்டுபக்கமும் அடி பின்னிப் பெடலெடுக்கப் போகிறது.

 நல்லவேளையாக இன்று புதன்கிழமை 4-ம் தேதி பிரதோஷம். 

மாலையில், நமக்காகவும் நம் உறவுகளுக்காகவும் தோழமைகளுக்காகவும் நம்மூருக்காகவும் நம் தேசத்துக்காகவும் பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். 

பால், தயிர், சந்தனம், பன்னீர் முடிந்த அளவு நந்திதேவருக்கும் சிவனாருக்கும் குளிரக்குளிர அபிஷேகம் செய்யுங்கள்.

கோடை மழை பெய்யவேண்டும் என மனம் குவித்து வேண்டிக் கொள்ளுங்கள். பூமி குளிரட்டும்.

நிலத்தடி நீர்மட்டம் சற்றே உயரட்டும்.

தகிக்கும் வெயிலில் இருந்து சற்றே தப்பிப்போம். இந்த பொது பிரார்த்தனையை, இன்றைய பிரதோஷத்தில் சிவனாரிடம் வையுங்கள்.

தென்னாடுடைய சிவனே