Thursday, 30 June 2016

உபவாசம் - FASTING

உபவாசம்  -  FASTING

 
இந்து மதப் புராணத்தில்  27 வகையான உபவாச விரதங்கள்  குறிப்பிடப்பட்டுள்ளது

அவை,
1.உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2.தேன் அல்லது இளநீர்
ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3.பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4.எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5.காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6.பகல் நேர உணவை
மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7.இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8.மூன்று நாட்கள் தொடர்ந்து காலை நேர உணவை மட்டும்
சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9.மூன்று நாட்கள் தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும்
சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10.மூன்று நாட்கள் தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும்
சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11.கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12.மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13.இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14.ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15.ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.
16.ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17.ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18.ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19.ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20.தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21.ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே
அருந்தி உபவாசம் இருத்தல்.

22.ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.



23.ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24.இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25.முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26.மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27.வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா?
உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்.


Related Articles :)
Pradosham or Pradosh Vrat  
 
Sankashti Chaturthi July 2016 date – Ganesh Sankatahara Chaturti Monthly Fasting in July 2016

How to observe Muruga Shasthi Vratam?