சனிப் பிரதோஷம்...
சர்வ பாபவிமோசனம்!
சிவவழிபாட்டில், முக்கியமானது பிரதோஷம். எந்த நாளில் பிரதோஷம்
வந்தாலும், அப்போது சிவாலயம் செல்வது சிறப்பு. நந்திதேவருக்கு அபிஷேகம்
செய்வதைத் தரிசிப்பது இன்னும் விசேஷம்.
அப்போது அந்த அபிஷேகத்துக்குப்
பொருட்களும் வில்வமும் பூக்களும் வழங்குவது இன்னும் பலம் தரும்.
அப்படியிருக்க, சனிப்பிரதோஷம் நம் அனைத்துப் பாபங்களையும் போக்கி
அருளக்கூடியது என்கிறார்கள் சிவாச்சார்யர்கள்.
இன்று சனிக்கிழமை. பிரதோஷம். சனிப்பிரதோஷம். வருடத்துக்கு
மூன்று சனிக்கிழமைகளில், பிரதோஷம் வரும்.
இந்தநாளை மிஸ் பண்ணாதீங்க.
மாலையில் சிவாலயம் செல்லுங்கள். பிரதோஷ பூஜையைத் தரிசியுங்கள். பிரச்னைகள்
காணாது போகும். கவலைகள் மாயமாகும். பாவங்கள் விலகிவிடும்.
புண்ணியாபலன்களை கிடைக்கப் பெறுவீர்கள். இல்லம் சிறக்க,
இல்லறம் செழிக்க, சந்ததி பலம்பெற சத்தான வாழ்க்கை அமைவது உறுதி.
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
Related Articles :)