Thursday, 1 December 2016

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்

இந்திரனையும் விட்டு வைக்காத சனீஸ்வரன்


ஒரு சமயம் தேவேந்திரன் தன்னை சனி பிடிக்கப் போகிறார் என்பதை அறிந்து, சனியைக் கூப்பிட்டு "நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன் என்னை எப்படி நீ பிடிக்கலாம்?'' என்று  கேட்டார். அதற்கு சனி பகவான் "என் பார்வையிலிருந்து எவருமே  தப்ப முடியாது'' எனப்பதிலளித்தார். "அப்படியானால் நீ என்னைப்பிடிக்கும் நேரத்தைச் சொல்லி விடு'' என்று தேவேந்திரன் கேட்டார்.

சனி பகவானும் அதைக் கூறினார். அந்நேரம் வந்ததும் இந்திரன் பெருச்சாளி உருவம் எடுத்து சாக்கடையில் ஒளிந்து கொண்டான். சனி அந்த இடத்தில் தேட மாட்டார்  என்று நினைத்தார். அவர் நினைத்தப்படியே குறிப்பிட்ட நேரம் கடந்தது. சனி பார்வை தன் மீது படவில்லை என்று இந்திரன் மகிழ்ந்தார்.

சிறிது நேரம் கழிந்ததும் இந்திரன் வெளியே வந்து சனி பகவானைக் கூப்பிட்டு, தான் தப்பித்துக் விட்டதாக பெருமையாக கூறினார். உடனே சனீஸ்வரன் சிரித்துக் கொண்டே நீங்கள் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் சில நாழிகை இருந்ததே என் பீடிப்பினால் தான்! என்றார் எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் சனியின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
 சனி பகவான் பூஜை

சனிக்கிழமை காலை குளித்து சுத்தமான ஆடை உடுத்திக் கொள்ளவும். எள்ளுசாதம், எள்கலந்த பலகாரம், பட்சணங்கள், கசப்பு பதார்த்தகங்கள் படைத்து பழம், தேங்காய் வெற்றிலைப் பாக்கு வைக்கவும். சனிக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.

எள்ளை ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது போட்டு கட்டி, திரி போல் திரித்து விளக்கில் போட்டு எள்ளு எண்ணை விட்டு தீபம் ஏற்றவும். பூஜை முடிந்ததும், எள்ளு சாதம் முதலியவற்றில் சிறிது எடுத்து ஓர் இலையில் வைத்து காக்கைக்கு சாப்பிட வைக்கவும்.