சிவ விஷ்ணு தத்வம்
ம்ருத்யஞ்சய மந்த்ரம் ஜபிப்பதால் மரணம்
விலகுமா, அவ்வாறு விலகினால் அது ப்ரபஞ்சத்தின் தத்வத்திற்கு எதிர்மறை
ஆகிவிடுமே, அவ்வாறு இருக்க மார்கண்டேயருக்கு சிவன் எவ்வாறு அவரை காப்பாற்ற
முடியும்.
குருநாதரின் பதில் பின்வருமாறு.
மரணம் என்பதை யாராலும் தடுக்கமுடியாது, பரமேஸ்வரனாலும் தடுக்க
முடியாது, ஆனால் ஆயுளை நீட்டிப்பு செய்துகொள்ள முடியும், அது ஒவ்வொரு
மனிதனாலும் சாத்தியமானதுதான் என்றார்.
மார்க்கண்டேயரின் கதை எல்லோருக்கும் தெரியும், அவர்
ம்ருத்யஞ்ச ஜபம் இடைவிடாது செய்ததால் அவரது சரீரமே லிங்க ரூபமாகிவிட்டது.
நாம் கதைகளில் படித்ததுபோல மார்கண்டேயர் லிங்கத்தை ஆலிங்கனம்
செய்துகொண்டார் என்பது கதை ஆனால் இதன் உட்கருத்து இதுதான், அவரது சரீரமே
லிங்கஸ்வரூபமாகியது என்பதுதான் உண்மை.
லிங்க ஸ்வரூப மார்கண்டேயரை எம தூதர்கள் நெருங்க முடியவில்லை,
அதனால் எமனே அங்கு வர நேரிட்டது. எமன் வீசிய பாசக்கயிறு (NOOSE) அந்த லிங்க
சரீரத்தை தாக்கியதால் யமன் தூக்கி எறியப்பட்டான், ஆயினும் பரமேஸ்வரனே யமனை
எழுப்பி நான் இப்போது மார்கண்டேயரை காப்பாற்றி விட்டேன், அது நீடிக்காது,
நீ பின்னால் உனது
கடமையை செய்வாயாக என்றுகூறி யமனை அனுப்பிவிட்டு; மார்கண்டேயரை நோக்கி இப்போது அந்த ம்ருத்யஞ்சய மந்த்ரத்திற்க்கான பலனை உனக்கு நான் கொடுத்துவிட்டேன் இனி உனது ஆயுள் நீட்டிப்பை நீதான் தேட வேண்டும் என்று கூறி மறைந்தார்.
கடமையை செய்வாயாக என்றுகூறி யமனை அனுப்பிவிட்டு; மார்கண்டேயரை நோக்கி இப்போது அந்த ம்ருத்யஞ்சய மந்த்ரத்திற்க்கான பலனை உனக்கு நான் கொடுத்துவிட்டேன் இனி உனது ஆயுள் நீட்டிப்பை நீதான் தேட வேண்டும் என்று கூறி மறைந்தார்.
இனி வரும் கதை மார்கண்டேய புராணத்திலும் பாகவதத்திலும் வருவதாகும்.
பரமேஸ்வரனால் காப்பாற்றப்பட்ட மார்கண்டேய மஹரிஷி
ப்ரளயகாலத்தில் அகப்பட்டுக்கொண்டார். அந்த ப்ரளயத்தில் ஆலிலையில் ஒரு
குழந்தை மிதந்து வந்துகொண்டிருந்தது. இந்த ப்ரளயகாலத்தில் ஒரு குழந்தை
எவ்வாறு வரமுடியும் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும்போது அந்த
குழந்தையின் மூச்சுக்காற்றில் மகரிஷியே குழந்தையின் நாசிகாவின் வழியாக
உள்ளே சென்றுவிட்டார், உள்ளே ப்ரபஞ்சத்தையே கண்டுவிட்டார், மூச்சு
வெளிவரும்போது அவரும் வெளியே வந்தார். ஆம் இது சாதாரண குழ்ந்தை அல்ல
என்பதனை உணர்ந்த மார்கண்டேயரிடம் அந்த குழந்தையே பதில் கூறியது. நான் கால
தேவதை, ஸ்ருஷ்டியை துவக்க ஆயுத்தம் செய்கிறேன் என்று கூறி ஆதிஜகந்நாத
ரூபத்தைக் காண்பித்தார். அப்போது மார்கண்டேய மகரிஷி பாடியதுதான்
பாலமுகுந்தாஷ்டகம்.
முனிவரின் அஷ்டகத்தைக்கேட்ட மகிழ்ந்த மஹாவிஷ்ணு அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயுளாகக் கொடுத்தார்.
இந்த மார்கண்டேய முனிவர்தான் பின்னாளில் தனது புதல்வியான பூமி தேவியை ஒப்பிலியப்பனுக்கு மணமுடித்துக்கொடுத்தார்.
இவ்வாறாக பரமேஸ்வரனால் தடுத்தாளப்பட்டவர், விஷ்ணுவினால் ஆயுள்
நீட்டிப்பு செய்து கொண்டு சிவ விஷ்ணு தத்வத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக
அமைந்தார்.