Monday 17 July 2017

ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ?

ஐந்து நிமிடங்கள் தான் இருக்கு. அதுக்குள்ள பகவத் கீதையை சொல்ல முடியுமா ?

 
தயங்கவே வேண்டாம், “ஐந்து நிமிடம் இருக்கா ? இரண்டே நிமிடம் போதுமே “ என்று சொல்லுங்கள். “விடு - பிடி. அல்லது பிடி - விடு. அவ்வளவுதான் “ என்று
சொல்லுங்கள். - என்று சொல்லி விட்டு சிரி்த்துக்கொணடே கூட்டத்தைப் பார்த்தார்.
 
கூட்டம் ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தது. பிறகு அவரே விளக்கினார்
 
இந்த உலக பந்தங்களையெல்லாம் உதறித் தள்ளுங்கள். 
 
பரந்தாமன் பாதங்களைப்பற்றுங்கள்.
 
ஆனால் சாமான்ய மக்களுக்கு இந்த உலக பந்தங்களை எல்லாம் உதறித் தள்ளுவதுசுலபத்தில் முடிகின்ற காரியமில்லை. 
 
பிறகு எவ்வாறு பரந்தாமன் பாதங்களைப்பற்றுவது ?
 
கவலை வேண்டாம். இன்னொரு வழி இருக்கின்றது. முதலில் பரந்தாமன் பாதங்களைப்பற்றுங்கள். 
 
அந்தப பிடி இறுக, இறுக, இந்த உலக பந்தங்களின் மேல் உங்களுக்குள்ள
பிடிப்பு தானாக தளர்ந்துவிடும்.
 
ஒரு உபமானம் சொல்லுகிறேன்.
 
சில விறகு குச்சிகள் ஒரு கயிற்றால் இறுக்கமாகக் கட்டபபட்டுள்ளன. அதனை அவிழ்க்க முடியவில்லை ( இது நம் உலக பந்தம் ) வேறு ஒரு கயிறு எடுத்து அதற்குப் பக்கத்திலேயே கட்டி, ஒரு குலுக்கு குலுக்கி இறுக்குங்கள்.
 
 ( இந்த புதிய கட்டு பகவானின் பாதம பற்றிய பிடி.) புதிய கயிற்றின் இறுக்கத்தில், பழைய கயிறு இறுக்கம் தளர்ந்து கழன்று விடும்.
 
உலக பந்தங்களை விட்டு, பரந்தாமன் பாதங்களைப் பற்றுவது ஞான மார்கம்.
ஞானிகளுக்கானது.
 
பரந்தாமன் பாதங்களைப் பற்றி, உலக பந்தங்களை விடுவது பக்தி மார்கம். சாமானியமக்களுக்கானது.
 
எவ்வளவு எளிமையான விளக்கம் !!!