Friday, 13 October 2017

ஐஸ்வர்யம் பெருக ராசிப் பொருத்தம் அவசியமா! ராசிப் பொருத்தம்...!!

ஐஸ்வர்யம் பெருக ராசிப் பொருத்தம் அவசியமா!
ராசிப் பொருத்தம்...!!


ஒருவர் பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நின்ற இடத்தை நாம் ராசி என்று கூறுகிறோம். இதை சந்திர லக்னம் என்றும் கூறுவர். திருமணத்திற்கு பிறகு தம்பதியர்கள் உடல் ஆரோக்கியம், மக்கட்பேறு, நீண்ட ஆயுள் இவைகளைப் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைவது ராசிப் பொருத்தமாகும்.

ஆணின் ராசிக்கு பெண்ணின் ராசி அல்லது பெண்ணின் ராசிக்கு ஆணின் ராசி ஏழாவது ராசியாக இருந்தால் சம சப்தம ராசிப் பொருத்தம் உண்டு. இதிலும் சில விதி விலக்கு உண்டு. சம சப்தம் ராசிகளில் கடகம், மகர ராசிகள், சிம்மம், கும்பம் ராசிகள் சம சப்தமமாக வந்தால் ராசிப் பொருத்தம் இல்லை.

பெண் ராசிக்கும் ஆண் ராசிக்கும் 2, 3, 4, 6, 12 ஆக வரக்கூடாது.

பெண் ராசிக்கு ஆண் ராசி 2 வது ராசியாக வந்தால் மரணம் நிகழலாம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 3 வது ராசியாக வந்தால் துக்கம் ஏற்படலாம்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 4 வது ராசியாக வந்தால் ஏழ்மை உண்டாகும்.

பெண் ராசிக்கு ஆண் ராசி 5 வது ராசியாக வந்தால் வைதவ்யம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 7 வது ராசியாக வந்தால் உத்தமம், மாங்கல்ய விருத்தி

பெண் ராசிக்கு ஆண் ராசி 9 வது ராசியாக வந்தால் சௌமாங்கல்யம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 10 வது ராசியாக வந்தால் ஐஸ்வர்யம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 11 வது ராசியாக வந்தால் சுகம்

பெண் ராசிக்கு ஆண் ராசி 12 வது ராசியாக வந்தால் ஆயுள் விருத்தி

பெண்ணின் ராசிக்கு 6, 7, 8 ராசியாக வருவதில் ஒரு விலக்கு இருக்கிறது. மேஷம் 6 வது ராசியான கன்னியை இணைக்கலாம். தனுசு 6 வது ராசியான ரிஷபம் சேர்க்கலாம். துலாம் 6 வது ராசியான மீன ராசியை சேர்க்கலாம். கும்பம் கடகமும் மற்றும் சிம்மம் மகரமும் சேர்க்கலாம். அதேபோல மிதுனம், விருச்சிகமும் ஒத்துவரும். இவை சுப சஷ்டாஷ்டமம் எனப்படும்.

ஆண் பெண் இருவரும் ஒரே ராசியாக இருத்தல் நலம். இருவர் ராசிகளும் ஒன்றுக்கொன்று 7-ம் இராசியாக இருக்கலாம். ஆனால், இருவர் ராசிகளும், கடகம் மகரமாகவோ, அல்லது சிம்மம் கும்பமாகவோ இருக்கக் கூடாது.

பெண் ராசிக்கு 2ம் ராசியாக ஆண் ராசியாக வந்தால் வாழ்க்கை பாதிக்கும். பெண் ஒற்றை ராசிகளில் பிறந்திருந்தால் நல்லது.

3ம் இராசியில் ஆண் அமைந்தால் மகிழ்ச்சி இருக்காது. 4ல் இருந்தால் சோகமான வாழ்க்கை அமையும்.

5ம் இராசியில் ஆண் அமைந்தால் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நிகழும். ஆனால், பெண் மேஷம் அல்லது கடக ராசியில் பிறந்திருப்பது பரிகாரம் ஆகும்.

9, 10, 11 மற்றும் 12ம் ராசிகளில் ஆண் ராசி அமைதல் சிறப்பு.

மேஷத்துடன் கன்னிக்கும், தனுசுடன் ரிஷபத்திற்கும், துலாம் ராசியுடன் மீனத்திற்கும், கும்பத்துடன் கடகத்திற்கும், மிதுனத்துடன் விருச்சிகத்திற்கும் சஷ்டாஷ்டம் (6, 8) தோஷம் இல்லை.