னிமாத்துறை என்பது ஒரு மிகப்பெரிய கனவுத்தொழிற்சாலை. எல்லோராலும் அதில் 
நுழைந்து வெற்றி பெற முடியாது. இத்துறையில் வெற்றி பெற வேண்டுமாயின் 
கலைத்திறமையும் அவற்றின் நுணுக்கங்களும் பெற்றிருந்தால் மட்டுமே வெற்றி பெற
 முடியும். இத்துறையில் வெற்றி பெற சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய 
கிரகங்கள் வலுவுடன் அமைய வேண்டும். அந்த வகையில் சினிமாத்துறையில் பாடகராக 
பிரபலமாகும் யோகம் யாருக்கு? என்பதை பற்றி பார்ப்போம். 
 பாடகராக ஒருவர் கலைத்துறையில் செல்வமும், செல்வாக்கும் பெற வாக்கு ஸ்தானம்
 பலம் பெற வேண்டும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர கோணங்களில் பலம் 
பெற்றிருக்க வேண்டும்.
 சுக்கிரன் உச்சம், திரிகோணம், ஆட்சி பெற்று ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் 
இடத்திலோ அல்லது பத்துக்கு பத்தாம் வீடான ஏழாம் இடத்திலோ அமையப்பெற 
வேண்டும். வாக்கு ஸ்தானதிபதி தன் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் பலம் பெற 
வேண்டும்.
 இசைக்கு அதிபதியான சுக்கிரனும், நல்ல மன நிலை தரக்கூடிய சந்திரனும் ஜாதகத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.
 பாடகரில் சிலர் பக்திப்பாடல்கள் பாடுபவராக இருப்பர். அவர்களது ஜாதக 
கட்டத்தில் வாக்கு ஸ்தானத்தில் அங்காரகனும், சுக்கிரனும் பலம் பெற்றிருக்க 
வாய்ப்புண்டு.
 இதேபோல் ஒரு சிலர் மகிழ்ச்சியான பாடல்களை பாடி புகழ் பெறுவார்கள். 
இவர்களது ஜாதகத்தில் சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் நீச சுக்கிரன் 
இருந்தால் புகழ்பெறும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.
 சிலர் சங்கீத சாஸ்திரங்களில் உலகம் போற்றும் பாடகராக திகழ்வதற்கு 
ஜாதகத்தில் ராசிக்கு இரண்டாம் இடத்திலோ அல்லது பஞ்சம ஸ்தானத்திலோ 
சு+ரியனும், புதனும் அல்லது குருவும், சந்திரனும் இணைந்து இருப்பின் 
இவ்வாறு புகழ்பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
Namaskaram!!! Welcome to this ஆன்மிக தகவல்கள் Blog. This Blog is an online magazine that updates regularly about matters related to Hinduism (like festivals, astrology, temples, fasting, rituals, Slokas) ஆன்மிக தகவல்கள் I would be typing them myself, so kindly forgive me for any incorrect tamil and hindi / sanskrit transliterations and please keep visiting.
- 
Sankashti Chatu rthi (संकष्टी चतुर्थी) also known as Sankata Hara Chaturthi is an auspicious(?) day dedicated to Lord Ganesha. This da...
 - 
தினமும் ராமாயணம் படிக்க முடியாதவர்கள் இதைச் சொன்னால் போதும்! முழு பலன்..!! தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவ...
 - 
ஆன்மிக செய்திகள் | லட்சுமிகடாட்சம் அளிக்கும் ருத்ராட்சம் மனோபலமும் ஆரோக்கியமும் தரும் அரிய பொக்கிஷம் ருத்ராட்ச...