அபிஷேக பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில்...!
அதிசய கோவில்....!!ஒவ்வொரு கோவிலுக்கும் பொதுவாக மகிமை இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கையாகும். அதிலும் நமக்கு தெரிந்த கோவில்களில் நமக்கே தெரியாத அதிசயங்களும் இருக்கும். அவ்வாறு நாம் அனைவரும் அறிந்த திருநாகேஸ்வரம் தலத்தில் நிகழும் அதிசயங்கள்.....!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ராகு தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
நாக அரசனாகிய ராகு பு+ஜித்த காரணத்தால் இத்தலத்துக்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாகநாத சுவாமி, இறைவி பிறையணியம்மன், தீர்த்தம் சு+ரிய புஷ்கரணியாகும், தலவிருட்சம் செண்பக மரம் ஆகும்.

மேலும் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
இங்கு இராகுவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகல இராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர். ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து தலைக்குச் செல்லும் காட்சி அற்புதமாகும்.