எந்த ஹோரை நல்லவை? எந்த ஹோரை கெட்டவை?
ஹோரையில் நல்லவை கெட்டவை என்று உள்ளதா?
ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தை (அறுபது நாழிகைகள்) வாராதிபர்கள் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மணித்துளிகளையும் தங்கள் வசத்தில் வைத்துக்கொண்டு பலனளிப்பதே ஹோரை என்று சொல்லப்படுகிறது. மணி என்று இப்போது குறிப்பிடுவதை அக்காலத்தில் ஹோரை என்று அழைத்தனர்.
ஹோரைகளில் நல்லவை கெட்டவை என்று உள்ளதா?
ஹோரைகளில் சுபஹோரைகள், அசுபஹோரைகள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளது.
சுபஹோரைகள் :
சுக்கிரன், புதன், சந்திரன், குரு, ஆகிய நான்கு ஓரைகள் சுபஹோரைகள் எனப்படும்.
அசுபஹோரைகள் :
சனி, செவ்வாய், சூரியன் என்ற மூன்று ஓரைகள் அசுப ஹோரைகள் எனப்படும். இம்மூன்றும் பாபகிரகங்கள் ஆகையால் அசுப ஹோரைகள் எனப்பட்டுள்ளன.
இராகு கேதுக்களை ஏன் ஹோரையில் சேர்க்கவில்லை?
இராகு கேது என்ற இரண்டும் தினாதிபதிகள் அல்ல. மேலும் அவை சாயா கிரகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஆதலால் அவைகளை ஹோரையில் சேர்க்கவில்லை.
ஹோரை பார்க்கும் போது சூரியனின் உதய வித்தியாசத்தை கணக்கில் கொள்வதா?
சூரியனின் உதயத்தை அனுசரித்து அன்றைய வித்தியாசத்தை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 6 மணிக்கு சூரிய உதயம் என்பது பொதுவானது ஆகும். உதாரணமாக குளிர்காலத்தில் 06.30 வரை கூட சூரியோதயம் வித்தியாசப்படும். அப்போது 06.30 முதல் 07.30 வரை என்று கணக்கிட வேண்டும்.
ஒரே ஹோரை ஒரு நாளைக்கு எத்தனை முறை வருகிறது?
காலை 6 மணி முதல் 7 மணிவரை, மதியம் 1 மணி முதல் 2 மணிவரை, இரவு 8 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, என மூன்று முறை ஒரே ஹோரை ஒரு நாளில் வரும்.
இராகு காலம் மற்றும் எமகண்டம் வேளையில் வரும் ஹோரைக்கு என்ன பலன்?
அந்த காலங்கள் விஷமுடையவை மற்றும் தள்ளதக்கவை என்று கூறப்படும். அந்த சமயங்களில் நல்ல ஓரைகள் வந்தாலும் அதனால் உபயோகமில்லை.
குளிகை காலத்திய ஹோரைக்கு என்ன பலன்?
சூரியனின் மகன் சனிஸ்வரன். அவன் மகனே குளிகன். குளிகனை மலையாளத்தில் மாந்தி என்று அழைப்பர். குளிகனுடைய காலத்தில் வருகின்ற சுபஹோரைகள் மிக நல்லவை ஆகும். குளிகை காலத்தில் இழவு விசாரித்தல், பிண எடுப்பு ஆகியன செய்யக்கூடாது. குளிகை காலத்தில் எதை செய்கிறோமோ அது மீண்டும் நடந்துவிடும்.