வேலை கிடைக்க எளிய பரிகாரங்கள்
வேலைதான் ஒருவரின் அந்தஸ்தைத் தீர்மானிக்கிறது. சமூகத்தில் அவருக்குக்
கிடைக்கும் மரியாதையைத் தீர்மானிப்பது. அவருக்கு அமையப்போகும் வாழ்க்கையைத்
தீர்மானிப்பது அவர்கள் செய்யும் வேலையை பார்த்துதான். எல்லோருக்கும் ஏதோ
ஒரு வேலை கிடைத்து விடும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை
கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வியாக அமைகிறது.
அரைக் காசு உத்தியோகமாக இருந்தாலும் அரண்மனையில் வேலை செய்ய வேண்டும்
என்று கூறுவார்கள். ஆனால் படித்து முடித்துவிட்ட அனைவருக்கும்
அரசாங்கத்தில் வேலை கிடைக்காது. ஜாதகத்தில் அரசாங்க வேலை பெறுவதற்குரிய
கிரக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே அது அமையும். அப்படிப்பட்ட ஜாதகர்கள்
ஏழை வீட்டில் பிறந்திருந்தாலும் கல்வியில் உயர்ந்து அரசு வேலையை
அடைவார்கள்.
பரிகாரம் :
நல்ல வேலை கிடைக்க, வேலையில் உள்ள பிரச்னைகள் விலக ஸ்ரீ பைரவரை
ஞாயிற்றுக்கிழமைதோறும் தொடர்ந்து ஒன்பது வாரம் வழிபட வேண்டும். கடைசி
வாரத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடிப் பலன் கிடைக்கும்.
அரியக்குடி தென் திருவேங்கட முடையானுக்கும், தாயாருக்கும் 12
வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிப்பட்டால் விரும்பிய வேலை கிடைக்கும்.
அருள்மிகு ராமநாதர் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்,
பிரகதீஸ்வரர் கோவில் பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோவில் ஆகிய கோவிலுக்கு
சென்று வழிபட வேலை கிடைக்கும்.
அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வந்தால் நினைத்த
வேலை கிடைக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு
27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணை அல்லது இலுப்பெண்ணை விட்டு
விளக்கேற்றினால் வேலை கிடைக்கும்.
காலை குளித்ததும் சிறுது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை
சுற்றி பின்பு அதை வாசலில் எறிந்து விட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறுது
கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்கவும். இது ஒரே
ஒரு முறை செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும் அந்த உப்பை தூர எறிந்து
விடலாம்.
புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சையை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு
அதை 4 துண்டாக வெட்டி நான்கு தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்றாக
எறிந்து விடவும். இது தொடர்ந்து 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை
இல்லாதவரின் எதிர்மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.
வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் :
ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹhச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹhலக்ஷ்மீச சுந்தரீ
இம்மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம் :
வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் :
ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹhச்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவதேவீ மஹhலக்ஷ்மீச சுந்தரீ