நீண்ட நாள் வலிமையுடன் வாழ என்ன செய்ய வேண்டும்?
உடல் வலிமை !
உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும். உடலை பேணிப் பாதுகாத்தால் நோயின்றி நீண்டநாள் வாழலாம்.
இங்கு விவசாயி ஒருவர் தனது மகனின் உடல்நலத்தை பேணி காக்க கையாளும் யுக்தியை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஒரு சிறிய கிராமத்தின் வழியாக பெரியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே வயலில் ஒரு முதியவரும், இளைஞனும் உடல் முழுவதும் வியர்வை சொட்ட சொட்ட நிலத்திற்கு பாய்ச்சுவதற்காகத் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தனர்.
இதைப் பார்த்த பெரியவர் நேராக அந்த முதியவரிடம் சென்று, ஏன் இப்படித் துன்பப்படுகின்றீர்கள். நீங்கள் செய்யும் இந்த வேலையை நகரத்தில் வசிப்பவர்கள் மாடுகளைக் கொண்டு எளிதாகச் செய்கிறார்கள். இது பற்றி உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்.
உடனே அந்த முதியவர் மெதுவாகப் பேசுங்கள். என் மகன் காதில் விழுந்து விடப் போகிறது. அவன் இன்னும் சிறிது நேரத்தில் உணவு உண்பதற்காக வீட்டிற்குச் சென்று விடுவான். அதன் பிறகு வாருங்கள், பேசுவோம் என்றார்.
பெரியவர் இதைக் கேட்டு வியப்பு அடைந்தார். முதியவரின் மகன் சென்ற பிறகு அவரிடம் வந்து நான் சொன்னது உங்கள் மகனுக்கு தெரியக்கூடாது என்று ஏன் நினைக்கின்றீர்கள்? உங்கள் இருவரின் நன்மைக்காகத்தான் நான் இதைச் சொன்னேன் என்றார்.
அதற்கு அவர், ஐயா! எனக்கு இப்பொழுது வயது எழுபது ஆகிறது. இருந்தாலும் என் இருபது வயது மகனுக்குத் துணையாக வயலில் இறங்கி வேலை செய்ய என் உடலில் இன்னும் வலிமை இருக்கிறது. வயலில் மாடுகளைப் பயன்படுத்தி தண்ணீர் இறைக்கலாம் என்று எனக்கு முன்பே தெரியும்.
ஆனால் அப்படிச் செய்தால் என் மகனுக்கு எழுபது வயதாகும்போது அவன் என்னைப் போல் உடல் வலிமை உடையவனாக இருக்க மாட்டான். அதனால் உங்களை பணிவுடன் வேண்டுகிறேன். என் மகனின் முன்பாக தயவு செய்து இதைப் பற்றிப் பேசாதீர்கள். உலகில் உள்ள அனைத்தையும் விட அவன் உடல்நலம் எனக்கு மிக முக்கியமானது என்று விளக்கம் சொன்னார்.
இதைக் கேட்ட பெரியவர் என்னை மன்னியுங்கள் என்று சொல்லி விடை பெற்றார்.
தத்துவம் :
உடல்நலத்தை பேணி காப்பது இன்றியமையாத ஒன்று. நவீன உலகில் யாரும் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. நோயின்றி நீண்ட நாள் வாழ உடல்நலத்தை காப்பது அவசியம். இக்கதையில் கையாண்டு உள்ள யுக்தியை மனதில் கொண்டு நாமும் உடம்நலத்தில் அக்கறை கொண்டு நலமுடன் வாழ வழி செய்வோம்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.