ஒருவரின் யோகத்தை தெரிந்து கொள்வது எப்படி?- ஜோதிடர் பதில்கள்!
1. ஒருவரின் யோகத்தை தெரிந்து கொள்வது எப்படி?
யோகங்கள் என்பது அவரவர் மனதின் நிலையைப் பொருத்தது.
நாம் செய்யும் கர்ம வினைக்கு ஏற்ப பிறக்கும் குழந்தைகளின் யோகங்கள் நமக்கு சாதகமாக அமையும்.
பிறக்கும் குழந்தைகளின் யோகமானது நாம் செய்யும் கர்ம வினைகளின்
தொடர்ச்சியே ஆகும். ஆகவே, திருமணமான தம்பதிகள் தங்களால் இயன்ற அளவு தானம்
மற்றும் தர்மங்களை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.
2. சந்திராஷ்டம தினத்தன்று எந்தெந்த இராசிக்கு, என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
அனைத்து இராசிக்காரர்களும் சந்திராஷ்டம தினத்தன்று புதிய முயற்சிகளை தவிர்த்து, தினமும் செய்யும் கடமைகளை மட்டும் செய்தால் நல்லது.
சந்திராஷ்டம தினத்தன்று மௌன விரதம் மேற்கொள்வது சிறந்த பரிகாரம் ஆகும்.
சந்திராஷ்டம தினத்தில் எல்லா விஷயங்களிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிக்கவும்.
இதுவே சந்திராஷ்டம தினத்தன்று மேற்கொள்ள வேண்டிய சிறந்த பரிகாரம் ஆகும்.
3. ஒரே குலத்தில் திருமணம் செய்யலாமா?
ஒரே குலத்தில் திருமணம் செய்யலாம்.
நெருங்கிய இரத்த உறவில் திருமணம் செய்வதை தவிர்ப்பது, எதிர்காலத்தில் ஊனமற்ற சந்ததியை உருவாக்கும்.
ஒரே குலத்தில் உள்ள ஒரே உட்பிரிவில் திருமணம் செய்யக்கூடாது.
ஒரே குலத்தில் உள்ள வெவ்வேறு உட்பிரிவில் திருமணம் செய்து கொள்ளலாம்.
4. பாதத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும்?
வலது அல்லது இடது பாதத்தில் பல்லி விழுவது, உடலில் ஏற்படக்கூடிய நோயை சுட்டிக் காட்டுகிறது.
அரசு சம்பந்தமான பயத்தைக் குறிக்கிறது.
5. வக்கிர குருவின் பலன்கள் என்ன?
வக்கிர குரு நினைவாற்றலை குறைக்கும்.
தன் குருவிற்கு துரோகம் செய்யும் நிலைக்கு கொண்டு செல்லும்.
பொய்யான ஆன்மிக வேடத்திற்கும் அழைத்துச் செல்வார்.
கோவில் சொத்துகளை அபகரிக்கும் நிலைக்கு அழைத்துச் செல்லும்.
1. ஒருவரின் யோகத்தை தெரிந்து கொள்வது எப்படி?
2. சந்திராஷ்டம தினத்தன்று எந்தெந்த இராசிக்கு, என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
3. ஒரே குலத்தில் திருமணம் செய்யலாமா?
4. பாதத்தில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும்?
5. வக்கிர குருவின் பலன்கள் என்ன?